சென்னை, ஆக.12- ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வெறுமனே பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்களாக இல்லாமல் அவர்களின் வாழ்க்கையில் லட்சியத்தை விதைக்கக் கூடியவர் களாகவும் இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம் பாக்கம் வேல்ஸ் பிலபாங்க் சர்வதேச பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று கலந்துரை யாடினார். இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாம் பேசும்போது கூறியதாவது:-
சென்னையை அடுத்த ஈஞ்சம் பாக்கம் வேல்ஸ் பிலபாங்க் சர்வதேச பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று கலந்துரை யாடினார். இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாம் பேசும்போது கூறியதாவது:-
வாழ்க்கையில், ஓர் உயர்ந்த லட்சியம், அந்த லட்சியத்தை அடைய தேவையான அறிவை வளர்த்துக் கொள்வது, கடின உழைப்பு, விடா முயற்சி-இந்த நான்கு பண்புகளும் ஒருவருக்கு இருந்தால் நிச்சயம் அவர் சாதனை படைப்பார். கல்வி, அதிகாரத் தையும் கொடுக்கும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை தரும்.
படைப்பாற்றலும், நேர்மையும் இணைந்ததுதான் அறிவு. இந்த பண்பு களை குழந்தைகளின் பெற்றோர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகி யோர் மட்டுமே ஏற்படுத்த முடியும். ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு வெறு மனே பாடம் சொல்லிக்கொடுக்க கூடியவர்களாக இல்லாமல் அவர் களின் வாழ்க்கையில் லட்சியத்தை விதைக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
வகுப்பில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை மேலும் மேலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்களாக மாற்றக் கூடிய ஆசிரியர்கள் தேவை இல்லை. படிப்பில் சுமாரான, சராசரிக்கும் கீழ்நிலையில் உள்ள மாணவர்களை யும் அதிக மதிப்பெண் எடுக்கக்கூடிய வர்களாக மாற்றக்கூடிய ஆசிரியர்கள் தான் தேவை.
இந்தியா 2020ஆம் ஆண்டு வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். வறுமை இல்லாத இந்தியாவை, சமூக, பொருளாதார காரணங்களினால் கல்வி மறுக்கப் படாமல் அனைவருக்கும் கல்வி படிக் கும் வாய்ப்பு நிறைந்த இந்தியாவை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் இல்லாத இந்தியாவை, கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற வித்தியாசம் இல்லாத இந்தி யாவை, விவசாயம் செழித்து விளங்கும் இந்தியாவை, உலகத்திலேயே வாழ் வதற்கு ஒரு அற்புதமான இடம் என்று எல்லோரும் நினைக்கக்கூடிய இந்தி யாவைக் காண விரும்புகிறேன்.
கலாச்சார வேறுபாடு, மத வேறு பாடு, இனவேறுபாடு என உள்ள வேறுபாடுகள் மீது வெறுப்பு காட்டாமல் அவற்றை மதிக்க வேண் டும். வேறுபாடுகளை கொண்டாட வேண்டும். கருத்து வேறுபாடு களையும், விமர்சனங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். நேர்மை யையும், ஒற்றுமையையும் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் அவற்றை செயல்படுத்தவும் செய்ய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண் டியது அவசியம். எப்படி மின்விளக்கை பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசன் நினைவுக்கு வருகிறாரோ, தொலைபேசியை ஒலியை கேட்கும் போது அலெக்சாண்டர் கிரஹாம் பெல் நினைவுக்கு வருகிறாரோ, விமானத்தை பார்க்கையில் ரைட் சகோதரர்கள் நினைவுக்கு வருகிறார் களோ அதேபோல் நாமும் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மேதைகள் எல்லாம் தங்களிடம் இருந்த தனித்து வத்தினால்தான் சாதனை நிகழ்த்தி னார்கள்.
- இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire