அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றி அதனைச் சிறப்பாகப் பிரயோகித்து எம் மக்கள் சார்ந்த நலன்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து போலி வாக்குறுதிகளை வழங்கி விட்டு பின்னர் ஒரு தடவையேனும் சிந்திக்க இயலா வண்ணம் கொழும்பிலோ அல்லது இந்தியாவிலோ இருந்து கொண்டு அறிக்கைகளை மட்டும் தாராளமாக அள்ளிவிடும் கும்பலை ஆசனங்களில் அமர வைத்தால் என்ன நடக்கும்? கடந்த 62 வருடங்களாக இக் கும்பல் என்ன நன்மைகளை எம் மக்களுக்குக் கையகப்படுத்தியது? என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மூதூர் முன்னம்போடி வெட்டை பிரதேசத்தில் இன்று(09.08.2012) இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது TMVP சார்பில் திருமலை மாவட்டத்தில் ருPகுயு இல் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களான திரு.நளினகாந்தன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் திரு.நவரெட்ணராஜா, கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் திரு.செந்தூரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கிராமவாசிகளின் வேண்டுகோளை அடுத்துப் பட்டித்திடல் வழிவிடு விநாயகர் ஆலயத்தின் அபிவிருத்திக்கென ஆரம்பக்கட்ட நன்கொடையாக ரூபா 100,000 இனை தனது கட்சி நிதியில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் வழங்கியிருந்தமையும், வருங்காலங்களில் நிச்சயமாக ரூபா 300,000 நிதியினை ஆலயத்திற்கு ஒதுக்குவேன் என்று உறுதி கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire