lundi 20 août 2012

தமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண்டும் - சி.சந்திரகாந்தன்




களுவாஞ்சிக்குடி பட்டிப்பளை பிரதேசத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கல்வெட்டு ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பார்வையிட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பட்டிப்பளைக்கு விஜயம் செய்த அவர் குறித்த கல்வெட்டினைப் பார்வை செய்ததுடன், இது தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினார்.
நிறைகும்பக் கலசமொன்றின் இலட்சினையுடன் காணப்படும் இக் கல்வெட்டானது 1919களில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire