samedi 4 août 2012

தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும் இலங்கைக்கு : ஐ.நா.


  இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கியநாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டு காலப்பகுதிக்குள் 440,000 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனவும் ஐக்கியநாடுகள் அமைப்பின் இணை நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னமும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு நிறுவன உயரதிகாரி ஜோன் கிங் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும், மீள் குடியேற்றப்பட்டமக்களின் எஞ்சியுள்ள மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ச்சியாக ஒத்துழைப்புவழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 __

Aucun commentaire:

Enregistrer un commentaire