jeudi 30 août 2012

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது.


(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட'மரணங்களின் நினைவு கூர்த்தல்என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)
"One day some gun will silence me and it will not be held by an outsider but by theson born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.
இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்துநிற்பது வெளிப்படுகின்றது.

1986 டிசம்பர் தொடக்கம் 1987 ஜுலை வரையிலான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில்புலிகள் தமது ஏகபோக முடியாட்சியை நடத்தினர். இக்காலகட்டத்தில் புலிகள் தவிர்ந்த வேறுஎந்த அமைப்புக்களும் வடக்கு கிழக்கில் செயற்பட முடியவில்லை. விதிவிலக்காக தீப்பொறிக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு போன்ற அமைப்புக்கள் தனதுமட்டுப்படுத்திய புலிகளை கோபத்திற்குள் உள்ளாக்காத செயற்பாட்டை மட்டும்கொண்டிருந்தனர்.

வடமராட்சியில் ஆரம்பித்து யாழ்பாணத்தை கைப்பற்றுதல் என்ற இலங்கை அரசின் இராணுவநடவடிக்கையை தடுத்து நிறுத்த 1987 ஜுன் 2ம் திகதி ஒப்பரேசன் பூமாலை என்றமனிதாபிமான சாப்பாட்டு பொதிகளை ஆகாயத்திலிருந்து வீசுதல் என்ற நடவடிக்கையைஇந்திய அரசு மேற்கொண்டதுஇதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தனது வழிக்கு ஜேஆர்ஜெயவர்தனாவை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து ஜேஆர் ஜெயவர்தனவுடன் ராஜீவ்காந்தி வடக்கு கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தம்கைசாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படையின் வடக்குகிழக்கிற்கான வருகையும் நடைபெற்றன. பூரண கும்பம் மாலை ஆரத்தி கூடவே இந்தியஅமைதிகாக்கும் படையின் இராணுவ வாகனத்தில் இந்தியக் கொடியுடன் கூடியபுலிக்கொடியுடன் இருவரும் ஒன்றாக பவனி வருதல் என்று தேன்நிலவுடன் புலிகள் இந்தியஅமைதிகாக்கும் படை உறவுகள் வடக்கு கிழக்கு எங்கும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய விடுதலை அமைப்புக்கள் மீண்டும் வடக்கு கிழக்கில் தமதுஅரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க தொடங்கினபோர் நிறுத்தம் சமாதானம் என்றுஆரம்பித்த இந்த ஜனநாயக இடைவெளியை பாவித்து ராஜினி போன்றவர்களால்உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பும் தனது செயற்பாட்டைவிஸ்தரித்தது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன்நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்குமுக்கிய காரணம் ஏனைய விடுதலைஅமைப்புக்களின் செயற்பாடுகள் தமதுஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும்என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம்பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப்பள்ளி வைக்ககடலில் ஆயுதக் கப்பலுடன்இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமதுஉறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையைஇந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லைஎன்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர்.இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்துசெயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.

இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான சண்டை ஆரம்பிப்பதற்கு சிலதினங்களுக்கு முன்பு தான் மட்டக்களப்பில் புளொட் ஈபிஆர்எவ்எவ் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் புலிகளின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்தியஇராணுவத்தின் கண்முன்பே மட்டக்களபு மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர்இதனைத்
திசை திருப்புவதற்கான தருணமாகவும் வலிந்த சண்டை நிகழ்வுக்கு திகதி குறித்திருந்தனர்புலிகள்.
புலிகள் இந்திய அமைதி காக்கும் படையேயான யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மனிதஉரிமை மீறல்களை செய்தனர். இவ்விடயங்களை ராஜினி பல்கலைக்கழக ஆசிரியர் மனிதஉரிமை அமைப்பு ஊடாக அறிகை வெளியீடுகள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார்.பல்கலைக்கழகம் என்ற தளத்திற்கு அப்பால் இவ் செயற்பாட்டை விரிவு செய்திருந்தால்இன்னும் பல வெற்றிகளை இவர்கள் கண்டிருக்க முடியும். இவர்களிடம் இருந்த மத்தியதரபுத்திஜீவித் தன்மை இதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
(தொடரும்......)

Aucun commentaire:

Enregistrer un commentaire