dimanche 26 août 2012

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இலங்கையின் 7 முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்



இந்திய அக்னி ஏவுகணைகள் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இலங்கையின் 7 முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்காவின் க்ளேமன்ட் இன்சிடியூட் நிறுவனத்தின்  மிசையில் திரேட் என்ற இணையத்தளம் வெளியிட்ட தகவல் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.
 
இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, இந்தியாவின் றோ புலனாய்வு முகவர்கள் சிக்கியுள்ளனர். இந்த ரகசிய தகவல் வெளியானத்தை அடுத்து இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய போர் தளப்பாடம் மற்றும் வேறு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைமையகத்தை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
 
 
சீனாவின் இந்த பாரிய நிறுவனம் கொள்வனவு செய்ய இணங்கியுள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் காணி தொடர்பாக, இந்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அழைத்து தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக உயர் மட்டத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வன்னியில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, குறித்த சீன நிறுவனமே இலங்கை இராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்கியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் ஊடான சீனாவின் விநியோக பாதையை சீர்குலைக்க இந்திய - அமெரிக்க ரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி ரகசிய தகவலை வெளியிட்டிருந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.
 
 
 
 
சீனா அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை அமைக்க உதவியதை அடுத்து, இந்திய அங்கு தூதரக பிரதிநிதியின் அலுவலகம் ஒன்றை திறந்தமை குறிப்பிடதக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire