புத்த பிரானின் புனித எச்சங்களை இந்திய அமைச்சரிடம் இருந்து கையேற்கிறார் ஜனாதிபதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்த பிரானின் புனித எச்சங்களை பக்தர்கள் பலர் பார்வையிட்டுவருகின்றனர்.
விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட இந்தப் புனித எச்சங்கள் தற்போது கெலனிய மானில்வத்த விகாரையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புத்த பிரானின் எச்சங்களை இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா தலைமையிலான குழுவினரால் இலங்கை எடுத்துவரப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இந்த எச்சங்களை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபவரீதியாக கையேற்றிருந்தார்.
கபிலவஸ்து நகரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புத்த பிரானின் புனித எச்சங்கள் வெளிநாடுகளில் வாழும் பௌத்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பப்பட்ட முதல் நாடாக 1978லேயே இலங்கை வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புனித எச்சங்களைப் பார்வையிடுவதற்கு இலங்கை பக்தர்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதிவரை அவகாசம் இருப்பதாக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire