சீன அரசாங்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ தங்குமிடங்களைஅமைக்கத் தீர்மானித்துள்ளது. இராணுவ நலன்புரித் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புஅமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நல்ன்புரி; திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்கடொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உட்கட்டுமான வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றைஏற்படுத்திக் கொடுப்பதற்காக நஇ;தப் பணம் செலவிடப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
மன்னார், பலாலி, ஆணையிறவு, பூணகரி, தல்லாடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இராணுவ முகாம்களின் உட்கட்டுமான மற்றும் தங்குமிடவசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்கில் எதிர்வரும் 29ம் திகதிஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் இந்த உதவிகள்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியை நவீனமயப்படுத்த1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கவுள்ளது.
படைத்தரப்பு மற்றும் காவல்துறை சேவையில் ஈடுபட்டுள்ள நபர்களின்பிள்ளைகள் கல்வி பயில்வதற்காக இந்தக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire