ஆதாரங்கள் இல்லாமல் எமது ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாக டெல்றுக்ஷனின் உயிரிழப்பு தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்
சிறிலங்கா சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சிறைக் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை செய்ய வேண்டும் என்று பலமுறை கோரியும், உண்ணாவிரதமும் இருந்து வந்தனர். இது அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே கடைசியில் போய் முடிகின்றது.
அந்த வகையில் இலங்கை வரலாற்றில் அன்று முதல் அதாவது குட்டி மணி தங்கத்துரை தொடக்கம் இன்று டெல்றொக்சன் வரை சிறைச்சாலையில் உயிர் பறிக்கும் புதிய கலாச்சாரம் ஒன்றை இந்த சிங்கள அரசு அரங்கேற்றி வருகின்றது.
இவ்வாறு சிறைச்சாலைகளில் உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கு காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசு வழமை போலவே விசாரணைகள் இடம் பெறும் அல்லது மாரடைப்பு வந்து இறந்து விட்டார் என்று எல்லாம் கூறிவருகின்றது.
இன்னும் எத்தனையோ எமது உறவுகள் தமது மண்ணை இழந்து கட்டிய மனையாள் பிள்ளை சுற்றம் எல்லாவற்றையும் இழந்து எப்போதாவது விடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் சிறைகளில் வாடுகின்றார்கள் இவர்களுக்கும் நாளை என்ன நடக்குமே என்று சிங்கள அரசைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
முன்னதாக வவுனியாவை சேர்ந்த நிமலரூபன் உயிரிழந்திருந்து ஒரு மாதம் நிறைவடையாத நிலையில் நேற்று முந்தினம் இரவு கோமாவிலிருந்த மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார்.
இந்த கைதிகளின் மரணங்கள் சாதாரணமாக நடக்கவில்லை சிறைச்சாலையில் உள்ள சிங்கள சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் அடித்து எழும்புகள் நெருக்கப்பட்டு, நரம்புகள் செயலிழக்கப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டார்கள்.
முள்ளிவாக்காலில் கொத்துக் கொத்தாக கொத்துக் கொல்லப்பட்ட போதும் கயங்களுடன் கிடந்த எமது உறவுகளை அந்த இடத்திலே வைத்து உயிருடன் கனரக வாகனங்களை கொண்டு புதைத்த சிங்கள அரசுக்கு இது ஒன்றும் புதிய விடயங்களல்ல.
இலங்கை மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். இன ஒற்றுமை கட்டி எழுப்ப வேண்டும் என்றேல்லாம் கூறிவருகின்ற ஒரு அமைச்சர் கைதியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளபடும் இதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என குறியுள்ளார்.
ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் உயிர்களை பறிப்பது என்பது இந்த சிங்கள ஆதிக்க வாதிகளுக்கும் அரசுக்கும் கொள்ளை ஆசையில் தான் இருக்கின்றன என்றுதான் கருத வேண்டும்.
போதையில் இருந்ததற்காவும் அவர்கள் தப்பித்துச்செல்வதற்கு உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு ஐந்து கவல்துறை அதிகாரிகளை வேலை நிறுத்தம் செய்த கடமை தவறாத கவல்துறை பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதி தாக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கும் அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் என்னெ நடவடிக்கை எடுக்கப் போகிறது............?
இல்லை என்றால் இதனை கண்டு பிடிப்பதற்கு இஸ்கொட்லான் பொலிசாரையா அழைக்கப் போகிறார்களா? எமது இனத்திற்கு சாவு என்பது தொடர்கதையாகவே எம்மை துரத்தியும் வருகின்றது.
இலங்கையில் காலங்காலமாக காரணமின்றி சிங்கள சகோதர்களால் கொலை செய்யப்பட்டுவரும் எமது உறவுகளைப் பற்றி இந்த சர்வதேச சமூகம் என்ன சொல்லப் போகிறது என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
|
dimanche 12 août 2012
ஆதாரங்கள் இல்லாமல் அழிக்கப்படும் எம் ஈழத்தமிழினம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire