lundi 13 août 2012

த.ம.வி.பு. கட்சி ஆரையம்பதி வேட்பாளர் காரியாலயம் மீது த.தே.கூ. ஆதரவாளர்கள் தாக்குதல்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு-மாவட்ட கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான பூ.பிரசாந்தனின் ஆரையம்பதி காரியாலயத்திலுள்ள பொருட்கள் நேற்று மாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்பவம் நடக்கும் வேளையில் காரியாலயத்திலிருந்த தியாகராஜா பிரபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;,
சுமார் 4.30மணியளவில் நான் காரியாலயத்திலிருந்த வேளையில் திடீரென மூன்று பேர் காரியாலயத்துக்குள் நுழைந்து நீங்கள் எங்களுக்கு அடிப்பதாகக் கூறியுள்ளீர்கள் எனக் கூறிய போது நாங்கள் அவ்வாறு கூறவில்லை.

கூறியவர்களை அழைத்து வாருங்கள் என நான் கூறியதுதான் தாமதம் காரியாலயத்திலிருந்த தளபாடங்களைச் சேதமாக்கியதுடன் எமது வேட்பாளர் பிரசாந்தனின் அறைக்குச் செல்ல முற்பட்ட போது நான் அவர்களைத் தடுக்க என்னைத் தாக்கி விட்டு உள்ளே நுழைந்து பொருட்களை சேதமாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.வந்தவர்கள் போதையிலிருந்ததாகவும் சம்பவம் நடக்கும் வேளையில் காரியாலயத்திலிருந்த தியாகராஜா பிரபாகரன் தெரிவித்தார்.

இதனை த.தே.கூ ஆரையம்பதி வேட்பாளர் ஒருவரின் ஆதவாளர்களே மேற்கொண்டுள்ளதாகவும் என் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான தியாகராஜா பிரபாகரன் மேலும் தெரிவித்தார்.

அருகிலுள்ள பொலிஸார் இராணுவத்துக்குக் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்ததை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் தாழங்குடா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire