mercredi 8 mai 2013

இந்தியாவில் உள்ள 14மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சி


கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளையடுத்து, இந்தியாவின் 14 மாநிலங்களை ஆளும் தேசிய கட்சி என்ற தகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 13 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா, கேரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பீகாரில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களும், அவற்றின் முதல் மந்திரிகளின் பெயர்களும் வருமாறு:
1. ஆந்திரபிரதேசம் - கிரண்குமார் ரெட்டி
2. அருணாசல பிரதேசம் - நபம் டுக்கி
3. அசாம் - தருண் கோகாய்
4. டெல்லி - ஷீலா தீட்சித்
5. அரியானா - புபிந்தர் சிங் ஹுடா
6. இமாச்சல பிரதேசம் - வீர்பத்ர சிங்
7. கேரளா - உம்மன் சாண்டி
8. மகாராஷ்டிரா - பிரித்விராஜ் சவான்
9. மணிப்பூர் - ஒக்ரம் இபோபி சிங்
10. மேகாலயா - முகுல் சங்மா
11. மிஜோரம் - பு லால்தன்ஹாவ்லா
12. ராஜஸ்தான் - அசோக் கெலாட்
13. உத்தரகாண்ட் - விஜய் பகுகுணா
தற்போது கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire