இந்நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கினை இலக்காகக் கொண்டு 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், அதனூடாக இந்நாட்டின் சமூக, பொருளாதார மாற்றங்களை நோக்காகக் கொள்ளப்பட்ட இலக்குகள் பல நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன. எனினும் கடந்த சில ஆண்டுகளினுள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியினை முறையாகவும் மற்றும் பொறுப்புடனும் மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டிருந்த நெகிழ்வுத் தன்மை மற்றும் அமைப்பு முறையான அனைத்து ஏற்பாடுகளையும் அழித்து அப்பதவிக்குரிய கௌரவம் மற்றும் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளன. சனநாயக பெறுமதிகள் மற்றும் கோட்பாடுகள் என்பன பற்றியும், அடிப்படை மனித உரிமைகள் பற்றியும் எதுவித அச்சமுமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தி மற்றும் உறவினருக்கு தீவிர உபசரிப்புக்களை வழங்கி, ஊழலை அதிகரிக்க இடமளித்து ஏகாதிபத்திய அதிகாரம் ஒன்றினை கட்டியெழுப்பி ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட கௌரவ கம்பீரத் தன்மையினை இல்லாதொழித்து அது தற்போது மிகவும் அறுவறுக்கத்தக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது பலவந்தமாக பறித்துக் கொண்டுள்ள மக்களின் இறைமை மற்றும் காம்பீரத் தன்மை என்பவற்றினை மீண்டும் மக்களிடம் பெற்றுக் கொடுத்து புதியதோர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளதுடன், அதனூடாக் இன, மத, மொழி மற்றும் அரசியல் அபிப்பிராயம் என்பவற்றினை எதுவித பேதமுமின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன ; வாழக்கூடிய சூழலொன்றினை ஏற்படுத்தக் கூடிய நியாயமான மற்றும் நேர்மையான சமூகமொன்றினை உருவாக்குவதற்கும்,
கடந்த சில ஆண்டுகளாக முழுமையாகவே சேதப்படுத்தி வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு வருமான வழிகளை பிறப்பிக்கும் பொருட்டும் பொருத்தமான பொருளாதார பின்னணி ஒன்றினை உருவாக்குவதற்கும், கடந்த காலத்தினுள் வரலாற்றிலே ஒருபோதும் இடம்பெறாதவாறு மிகவும் மோசமானவாறு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நீதிச் துறையின் சுயாதீனத் தன்மை மற்றும் அமுலாக்கலை மீண்டும் நிலை நாட்டுவதற்கும்,
சர்வதேசத்திலே இலங்கையர்கள் முன்னர் அனுபவித்த கௌரவமான நிலையினை மீண்டும் ஏற்படுத்துவதற்கும்,
இலங்கையிலே வாழுகின்ற அனைத்தின மக்களுக்கும் இலங்கையின் ஆளடையாளத்தின் கீழ் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் மற்றும் சகவாழ்வுடனும் வாழ்வதற்கான புதியதோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கும், எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகள்
இலங்கை குடியரசின் இறைமையானது மக்களிடம் காணப்படுவதுடன் அதனை கைமாற்ற முடியாது. மக்களின் இறைமைமிக்க அதிகாரம் என்பதில், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை அடங்குவதுடன் வாக்குரிமை அதிகாரத்தை மக்கள் நேரடியாகவே பயன்படுத்துதல் வேண்டும். அதன் அடிப்படை உரிமைகளில்,
அ) கல்விக்கான நியாயமான மற்றும் சம வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை,
ஆ) பல்வேறு மொழிகளை பயன்படுத்தும் மற்றும் சமயங்களைப் பின்பற்றுகின்ற மக்களினால் கடைபிடிக்கின்ற கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த மொழிகளை பயன்படுத்துவதற்கும்,
அந்தந்த சமயங்களை பின்பற்றுவதற்கும் அந்தந்த சமூகங்களுடன் தொடர்புடைய மக்கள் வாழ்வதற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தல்,
இ) அரச நிருவாகத்தினுள் நல்லாட்சியினை பேணி வருவதற்குள்ள உரிமையினை உறுதிப்படுத்தல் என்பன அடங்கும்.
நிறைவேற்று பணிகள் மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய விடயங்களுக்காக பாராளுமன்ற மற்றும் அரசாங்கம் என்பன மக்களுக்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்.
01. மக்கள் இiறைமையை மீண்டும் மக்களிடமே கையளித்தல்
i) சனநாயக வட்டத்தினுள் அரசியலமைப்புச் சட்டதினூடாக சட்ட அதிகாரத்தை பேணி வருதல். ஆட்சி செய்யப்படுவோர் மாத்திரமன்றி ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு அடி பணிதல் வேண்டும்.
ii) பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச இணக்கப்பாட்டிற்கு (ஐஊஊPசு) ஏற்ப ஏனைய அனைத்து
சமயங்களது உரிமைகளையும் பாதுகாத்தல்.
iii) அனைத்து நபர்களுக்கும் இனம், மதம், மொழி, சாதி, பால் வேறுபாடு, அரசியல் கருத்துக்கள் அல்லது வேறு யாதேனும் ஒரு காரணத்தின் மீது வித்தியாசம் காட்டாது அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்.
iஎ) மக்களுக்கு சிறந்த சுகாதார தன்மையொன்றினை பேணி வருவதற்காகவும் மற்றும் பொருத்தமான தொழில் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், கல்விக்காக நியாயமான இடவசதியினை வழங்குதல், குடும்ப உரிமைகளை பாதுகாத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாத்தல்,
சிரேஷ்ட பிரஜைகளின் உடல் மற்றும் உளசார் பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளோர் ஆகியோரது உரிமைகளை பாதுகாத்தல், அரச கொள்கைகளை வழி நடாத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள் என்பனவும் இதில் உள்ளடக்கப்பட வேண்டியதுடன், உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பினை அரசாங்கம் வகிக்கும்.
எ) கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதுடன், தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையையும் அதில் உள்ளடக்கி மேற்கூறிய உரிமைகள் மேலும் பலப்படுத்தப்படும்.
02. சட்டவாக்கம்
i) ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவாகும் வகையில் மற்றும் தேர்தல்களின் போது அந்தந்த கட்சிகள் பெற்றுக் கொள்ளும் இறுதி பெறுபேறு பிரதிபலிக்கச் செய்யப்படும் வகையில் கலவை விகிதாசார முறைமை ஒன்றின் கீழ் பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல். இம்முறையின் கீழ் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கிற்கும் பெறுமதி கிடைக்கப் பெறும்.
ii) விருப்பு வாக்கு முறைமையினை இரத்துச் செய்தல்.
iii) பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
iஎ) பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் ஒரே நாளில் நடாத்தப்படுவதுடன், சில வேளை அரச தலைவர் மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அத்தேர்தலும் அதே நாளில் நடைபெறும்.
எ) யாதேனுமொரு அரசியல் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றின் உறுப்பினர் ஒருவர் அக்கட்சி அங்கத்துவம் இழக்கப்படும் பட்சத்தில் அவரது பாராளுமன்றம் உறுப்பினர் பதவி அல்லது மாகாண சபை உறுப்பினர் பதவி அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாகும்.
எi) அரசியல் கட்சி ஒன்றிலிருந்து தெரிவாகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உரிய தினத்திற்கு முன்ளர் தமது வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றினை வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அவரது உறுப்புரிமை இரத்தாகி விடும்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் தமது வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கையினை தற்போது காணப்படுவது போன்று நிறைவேற்று அதிகாரத்திடமன்றி சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.
எii) யாதேனும் உறுப்பினர் ஒருவர் குற்றச் செயலுக்காக குற்றவாளியாகும் பட்சத்தில் சிறை வைக்கப்படா விடினும் கூட அவரது உறுப்புரிமை இரத்தாகும்.
03. நிறைவேற்று அதிகாரம்
i) ஜனாதிபதி பதவி இரத்துச் செய்யப்படும்.
ii) ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அரச தலைவர், பிரதம அமைச்சர் மற்றும் சபாநாயகர் குழுவிடம் பகிர்ந்தளிக்கப்படும்.
மாற்றுத் திட்டம் 1
மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதம அமைச்சர் ஒருவர் அமைச்சரவையுடன் அரசாங்கத்தை நடாத்திச் செல்லல். பிரதம அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் வேண்டும்.
மாற்றுத் திட்டம் 2
நெகிழ்ச்சி மற்றும் மாற்றுத் தன்மை கொண்ட அரசியல் கொள்கைக்கு அப்பால் சென்ற நிறைவேற்று அதிகாரத்தை புதிய முறைமை ஒன்றின் கீழ் அமுல்படுத்தல்.
2.1 மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச தலைவரை மக்களினால் நேரடியாக தெரிவு செய்தல்.
2.2 அரச தலைவரின் தலைமையிலான அரச சபையொன்று நிறுவப்படுவதுடன்,
அதில் பிரதம அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அனைத்து அரசியற் கட்சிகளினதும் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஆகியோரை உள்ளடக்கிக் காணப்படுதல் வேண்டும். அரச தலைவர் அச்சபையின் ஆலோசனையின் மீது பணியாற்றுதல் வேண்டும்.
2.3 அரச சபையானது அனைத்து அரசியல் விடயங்கள் மற்றும் தேசிய முன்னுரிமை தேவைகள் பற்றி தீர்மானித்தல் வேண்டும். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மாகாண சபையின் அமைச்சரவை அரச சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துதல் வேண்டும்.
2.4 அரசசபை தீர்மானங்கள் அனைத்து அங்கத்துவர்களினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். இணக்கப்பாட்டிற்கு வர முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெரும்பான்மையான மக்களின் கருத்தின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும். அரச நிருவாக முறைமைகள் தொடர்பில் புத்த பெருமான் போதித்த ஒற்றுமையுடன் ஒன்றுகூடல், ஒற்றுமையுடன் கலந்துரையாடல் மற்றும் ஒற்றுமையுடன் பிரிந்து செல்லல் ஆகிய கோட்பாடுகள் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
மாற்றுத் திட்டம் 3
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு சமமான முறை ஒன்றினை பின்பற்றுதல்.
iii) பிரதமர் உட்பட அமைச்சரவையானது இருபத்து ஐந்திற்கு (25) கூடலாகாது.
iஎ) சாபாநாயகர், பிரதம அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சபாநாயகரின் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும். சபாநாயகர் அதில் தலைவராக இருப்பார்.
எ) அரச தலைவர் அரச சபையின் சிபாரிசின் பிரகாரம் மற்றும் சபாநாயகரின் குழுவின் அனுமதியுடன் சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என்பவற்றின் நீதிபதிகளை நியமித்தல் மற்றும் அரச தலைவரினால் சபாநாயகரின் குழுவின் சிபாரிசின் மீது அரச நிறுவனங்களின் தலைவரை நியமித்தல்.
04. அதிகார பகிர்வு
i) இலங்கையானது ஒற்றையாட்சி கொண்ட அரசாக காணப்படுவதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டு மாகாண அலகுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது,
அ) 2009 மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவித்தல்,
ஆ) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலினால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முன்மொழிவு,
இ) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றிற்கு இடையே பரிமாறிய கடிதங்கள் உட்பட திஸ்ஸ விதாரன அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள்,
ஈ) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்,
உ) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 மே மாதத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
ii) மாகாண ஆளுநர் பதவிகள் இரத்துச் செய்யப்படுவதுடன், அந்த அதிகாரங்களை அரச தலைவரினால் அமுல்படுத்தல்.
iii) மாகாண சபையொன்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய உறுப்பினர் முதலமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும்.
இரண்டாவதாக அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள கட்சியின் பிரதான பிரதிநிதித்துவ உறுப்பினரை பிரதி முதலமைச்சராக நியமித்தல்.
iஎ) மாகாண சபைக்கு போட்டியிட்டு அந்தந்த கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையின் வீதத்திற்கேற்ப மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமித்தல்.
05. நீதிமன்றம்
i) ஏனைய விடயங்களுக்கு இடையே பிரதானமாக அரசியலமைப்பை வரைவிலக்கணப்படுத்துவதற்காக மற்றும் சட்டமூலங்களின் சட்டத் தன்மையினை பரீட்சிப்பதற்காக தனியான மற்றும் சுயாதீன அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல். அதன் தீர்மானங்கள் இறுதி தீர்மானமாக அமைவதுடன் நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பன அதன் தீர்மானங்களை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது.
ii) அனைத்து நீதிவான்களினதும் பதவிக் காலம், சம்பளம், கொடுப்பனவு மற்றும் சலுகைகள் என்பன பாதுகாக்கப்படுவதுடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக குற்றப் பிரேரணை முன் வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதனுடன் தொடர்புடைய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக பரீட்சிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும். அந்த பரிசோதனைகளை நடாத்தும் பணியானது பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளின் பிரகாரம் நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும். அந்த பரிசோதனைகளை நடாத்தும் பணியானது பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளுக்கு (லெடிமர் ஹவுஸ் கூற்று) ஏற்ப மேற்கொள்ளல்.
iii) பாராளுமன்ற தேர்தல் மனுக்களை பரீட்சிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அவ்வாறான மனுக்களை பரீட்சித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு குறித்த காலப்பகுதியொன்றினை நிர்ணயித்தல் வேண்டும்.
06. நல்லாட்சி
i) சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, சுயாதீன நீதி சேவை ஆணைக்குழு மற்றும்
சுயாதீன இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு என்பவற்றினை முன்னுரிமை அடிப்படையின் மீது நிறுவுதல்.
ii) அனைத்து தேர்தல்களையும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடாத்துதல்
வேண்டும். மேலும் அரச மற்றும் தனியார் ஊடகங்களை உள்ளடக்கியதான தேர்தல்
செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களுக்கு மற்றும் நபர்களுக்கு உத்தரவு
பிரப்பிக்கும் அதிகாரம் அந்த ஆணைக்குழுவிடம் காணப்படும்.
iii) மோசடிகளைத் தடுத்தல் மற்றும் ஒழித்தல் என்பவற்றினை வலுப்படுத்துவதற்காக
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில் மற்றும் அதிகாரபூர்வமான முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டும். பொது சொத்துக்கள் மற்றும் அரச வளங்கள் முகாமைத்துவம் செய்யும் போது அரச
நிறுவனங்களினால் உரிய பொறுப்புடன் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மையுடன் நேர்மையான முறையில் மேற்கொள்ளல் வேண்டும்.
iஎ) ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான கொள்கையினை அமுல்படுத்தக் கூடியவாறு ஊழல் எதிர்ப்பு புதிய சட்டமொன்றினை விதித்தல்.
எ) சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சபை உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றத்தின், உச்ச நதீ pமன்றத்தின் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நீதிமன்றங்களின் நீதவான்களுக்கு நன்நெறி கோவை ஒன்றினை விதித்தல்.
எi) தனியார் துறையின் ஊழல்களை உள்ளடக்கும் வகையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி விசாரணைகள் செய்யும் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அச்சட்டத்தை கடந்த காலத்திற்கும் வலுப்பெறும் வகையில் அமுல்படுத்தல்.
எii) பொது தொழில் முயற்சிகள் குழு, அரச கணக்குகள் குழு, உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுக்களை பலப்படுத்தல் மற்றும் அக்குழுக்களினால் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பானது பாராளுமன்றத்திடம் காணப்படுதல் வேண்டும்.
எiii) அரச தொழில் முயற்சிகள் குழு மற்றும் அரச கணக்குகள் குழுவின்
நடவடிக்கைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு தகவல் (தரவு)
வங்கி ஒன்றுடன் கூடிய சுயாதீன செயலகம் ஒன்றினை நிறுவுதல் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவற்றிற்கான மதிப்பீடுகளை பரீட்சிப்பதற்கான அதிகாரம் அக்குழுவிடம் வழங்கப்படும்.
iஒ) நூறு மில்லியன் ரூபாவை விடவும் கூடுதலான பெறுமதியுடைய அரச தொழில் முயற்சிகள் அல்லது முதலீடுகள் அல்லது கணக்குகளை பரீட்சிப்பதற்காக விசேட
பாராளுமன்ற குழுவொன்றினை நியமித்தல்.
07. பங்கேற்பு சனநாயகம்
பெண்கள் உரிமைகள்
i) அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெண்களுக்கு
நூற்றிற்கு இருபத்தைந்து வீத (25மூ) பிரதிநிதித்துவத்தை வழங்குதல்.
ii) பெண்களின் உரிமைகள் பற்றி செயற்படும் பொருட்டு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் பிரதிநிதிப்படுத்தக் கூடியவாறு பெண்கள் சபையொன்றினை நிறுவுதல். அதனூடாக சனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாராளுமன்றத்தினால் ஒப்படைக்கப்படுகின்ற ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும். சமூக அபிவிருத்திச் சங்கங்கள்
iii) மக்கள் பங்கேற்பு சனநாயகத்தை நிறுவுதல் மற்றும் மக்கள் பிரிவினரிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சமூக அபிவிருத்தி சங்கங்கள் அமைக்கப்படுவதுடன், அது அரசியல் தலையீடற்ற அடிப்படையின் மீது அமுல்படுத்தப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றினை நிறுவியதன் பின்னர் ஆறு மாதங்களினுள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்ளும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றிற்கு விடப்படுவதுடன், இந்நாட்டு மக்களின் இணக்கப்பாட்டுடன் நிறுவப்படும் முதலாவது அரசியலமைப்புச் சட்டமாகவும் இது விளங்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire