jeudi 16 mai 2013

நாவலர் வீதி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால்



தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கருவேப்பங்கேணி நாவலர் வீதி சுமார் 400 மீற்றர் கொங்கிறிட் இடுவதற்கான வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ் வீதியானது பல ஆண்டு காலம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட ஓர் வீதி ஆகம் இது தொடர்பில் கருவேப்பங்கேணி கிராம அபிவிருத்தி மற்றும் மாதர் அபிவிருத்தி சங்கங்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வீதி முன்னாள் மதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களது ஏற்பாட்டில் தேசத்திற்கு மகுடம் வேலைத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமை கறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டு மாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, மட்டு மாநகர சபையின் ஆணையாளர் சிவநாதன், பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவர் யோகவேள் மற்றும் பிரதி செயலாளர் ஜெ.ஜெயராஜ்; மாதர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவி மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதகளும் கலந்து கொண்டார்கள்.

மட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம்.

மட்டு மாநகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை தெரிவு படுத்தி அது தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் அபிப்பிராயங்களை பங்குதாரர்களிடம் கேட்டறியும் விசேட கலந்துரையாடல் நேற்று(14.05.2013) மட்டு மாநகர சபை மண்டபத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
2030ம் ஆண்டளவில் முழுஅளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி திட்டமானது மட்டு மாநகரில் அமையப்பெறவேண்டிய சகல நிருவாக மற்றும் முக்கிய கட்டிடங்கள் ,விளையாட்டு திடல்கள்,வர்த்தக கட்டிங்கள், நூலகம், அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா,கலாசார கலைநிகழ்வுகளை மேற்கொள்வதற்கான திறந்த வெளி அரங்கு. இலகு போக்குவரத்து, வாவியை அழகுபடுத்தல், மட்டு நகரிலுள்ள டச்கோட்டையை அழகுபடுத்தல், மட்டக்களப்பிற்கே உரித்தான முக்கிய கலைஅம்சங்களை பாதுகப்பதற்கா அமைவிடம், பாடசாலை விளையாட்டு மைதானம், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குகளை மேற்கொளவதற்கான ஏற்பாடுகள்,வைத்தியசாலை, சிறைச்சாலை உள்டங்கலாக பல முக்கிய விடங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்தகின்ற முக்கிய பங்கு தாரர்களிடம் அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறியும் முகமாக மேற்படி இக் கலந்துரைடால் சுமார் 4 மணிநேரம் இடம் பெற்றது. குறித்த மாஸ்டர் பிளானை நகர அபிவிருத்தி அதிகார சபையும் மொறட்டுவ பல்கலை கழகமும் இணைந்து நடாத்தி இருந்தமை குறிப்;பிடத்தக்கது.
இக் கலந்துரையடாலில் முன்னாள் முதலமைச்சரும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி ஆணையாளர், மட்டு மாகர ஆணையாளர் சிவநாதன், வர்த்தக சங்க தலைவர்,மற்றும் கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசியர் மற்றும் விரிவுரையாளர்கள் மட்டக்களப்பு நகரின் முக்கியஸ்த்தர்கள் எனக் கலந்து கொண்டு தங்களது உயர்வான கருத்துக்களை முன்வைத்தார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire