இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகளுக்கு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய் லாமா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையிலும் மியன்மாரிலும் முஸ்லிம்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகலவிதமான கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மதங்களையும் மதிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire