samedi 4 mai 2013

விமல் வீரவன்ச அழும் குழந்தை போன்றவர். தனது வங்குரோந்து அரசியலின்;ரவி

கட்டுமான, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நடத்திய தனது மே தின கூட்டம், அவரது பேச்சு ஆகியவை குறித்து கருத்துக்கூறிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விமல் வீரவன்ச சொன்னதை செய்து காட்டட்டுமென சவால் விடுத்துள்ளார். 

மே தின கூட்டத்தில் பேசிய விமல் வீரவன்ச தனக்கு அமைச்சுப் பதவி பெரிய விடயமல்ல எனவும் அரசாங்கம் தனது மனசாட்சிக்கு எதிராக நடக்குமாயின் தான் எந்த நேரத்திலும் பதவி துறப்பேன் எனவும் கூறியிருந்தார். 

அமைச்சர் வீரவன்ச இது போல பல அறிக்கைகளை முன்னரும் விடுத்துள்ளார். ஆனால், அவர் அவற்றை செயற்படுத்தியதில்லை. இவர் வேலை வாய்ப்புக்களை உருவாக்கப்போவதாகவும் வாழ்க்கைச் செலவை குறைக்கப்போவதாகவும் கூறி 2005இல் பதவிக்கு வந்தார். 

பான் கீ மூன் தனது நிபுணர் குழுவை கலைக்காதுவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியவரும் இவர் தான். ஆனால், நடந்தது ஒன்றுமில்லை என ரவி கருணாநாயக்க கூறினார். 

அமைச்சர் வீரவன்ச நகைச்சுவையாக அறிக்கைகளை விடுவதில் வல்லவர். இவர் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டுப் போகமாட்டார். பொதுமக்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு கூத்துக்களை காட்ட வேண்டிய தேவை அமைச்சர் வீரவன்சவுக்கு உண்டு. 

இவர் கவனத்தை ஈர்ப்பதற்காக அழும் குழந்தை போன்றவர். இவர் தனது வங்குரோந்து அரசியலின் நிர்வாணத்தை மறைக்க தாய்நாடு என்ற பதத்தை பயன்படுத்துகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire