பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களின் போது இந்த உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் மதம் சார்ந்த கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போதே, இந்த மோதல்கள் ஏற்பட்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர், வெற்றுத் தோட்டாக்களைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தீ வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire