இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த ஊடகவியலளார் சந்திப்பு நடைபெற்றது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அசாத் சாலி மட்டுமன்றி நாட்டின் எவரையும் பாதுகாப்புத் தரப்பினர் அழைத்து விசாரணை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் அதனை நிரூபித்து விடுதலையாக முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மறுபுறத்தில் முஸ்லிம் சமூகம் தாங்கள் விசேடமானவர்கள் எனக் கருதினால் அது பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கூறினாலும் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.மருந்து வகைகள், கருத்தடை மாத்திரைகள், ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஏனைய சட்டவிரோதப் பொருட்களை அதிகளவில் நாட்டுக்குள் முஸ்லிம்களே கொண்டு வருவதாகவும், ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலனாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ அல்லது ஏனைய எதிர்க்கட்சிகளோ கருத்து வெளியிடுவதில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire