samedi 11 mai 2013

அசாத் சாலி ஆயுதம்தாங்கிய பயங்கரவாத குழு ஒன்றின் நிறுவனராக, தலைவராக, அங்கத்தவராக, ஆதரவாளராக அல்லது அனுதாபியாக இருந்தாரா? ஆயுதம் இல்லாத பயங்கரவாத குழுக்கள் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஆயுதம் வைத்திருக்காவிட்டால், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை அல்லது இன்னமும் பயங்கரவாதிகளாக மாறவில்லை. குழு ஒன்றை நிறுவுவதை பரிசோதிக்க அவர் திட்டமிட்டிருந்தாரா? அப்படியானால் எது, எப்போ, எங்கே?;கலாநிதி. தயான் ஜயதிலக


azathபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்கூட்டியே தடுப்புக்காவலில் வைப்பதற்கு வழியேற்படுத்தும் ஒரு பயங்கரவாதியாக அசாத் சாலி இருப்பாராகில், அவர் வெறிபிடித்த அடிப்படைவாத இன மத வெறுப்புகளை, உருவாக்குபவராகவோ அல்லது அதை முன்னேற்றும் ஒருவராகவோ இருந்திருப்பார், மாறாக வித்தியாசமான சுய விபரங்களை அவர் வெளிப்படுத்துகிறார்.
சாலி குரூரமாக தூக்கியெறியப்பட்டுள்ளார்
பிற்படுத்தப்பட்ட, அடிப்படைவாத, மதவெறிபிடித்து, உயர்ந்து நிற்கும் பின்னணிக்கு வெகு தொலைவில் அவர் பிறந்து வளர்ந்தவர், அவரது தந்தை ஒரு கம்யுனிசவாதி (தோழர் டியு.குணசேகர இதை உறுதிப்படுத்த முடியும்), பின்னாளில் அவர் ஒரு மாவோயிஸ்ட்டாக (அல்லது மார்க்சிச - லெனினிச) மாறினார். கம்யுனிஸ்ட் சாலி என்று அவர் அறியப்பட்டார், அவரது உடலில் இன மத வெறி கொண்ட எலும்பு எதுவும் இருந்ததாக தோன்றவில்லை.
அசாத்தின் தந்தை ஒரு கம்யுனிஸவாதியாக மட்டும் இருக்கவில்லை, அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட, மற்றும் அவர் சவூதி அடிப்படைவாத வஹாப்பிய பத்திரிகைத்தாளின் ஊடகவியலாளராகப் பணி புரியவில்லை. அவர் ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நீண்டகால பணியாளர் ஆவார். ரொயிட்டர்ஸில் தொலை அச்சுப் பதிவாளராக கடமையாற்றிய எனது தந்தை மேர்வின் டீ சில்வா, என்னை, மெலிதாய் கண்ணாடியணிந்த தோற்றத்துடன் காட்சிதந்த கமியுனிஸ்ட் சாலிக்கு அறிமுகப்படுத்தினார். எனது தந்தை தனது வகுப்புத் தோழரும் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கடமையாற்றிய ஜோர்ஜ் ராஜபக்ஸ அவர்களையும் பின்னவரின் பிளவர் வீதி வீட்டில் வைத்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.
உண்மையில் ஜோர்ஜ் ராஜபக்ஸ அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர்களுடைய மாமனார் ஆவார். எனது தந்தையால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அந்த இடதுசாரி ஆட்களில் ஒருவருடைய மகனை, மற்றொருவருடைய நன்கு பிரபலமான நிலையிலிருக்கும் மருமகனின் நிருவாகத்தின் கீழ் ,சந்தேகமில்லாமல் அதே நபரின் மற்றொரு மருமகனால் தடுப்புக்காவலில் வைக்கும்படி நேர்ந்தது, இது ஸ்ரீலங்காவில் நடக்கும் அபத்தமான போக்குடைய முரண்பாடான விடயங்கள் பற்றிய ஒரு வேதனையான கதை.
தீப்பொறி கிளப்பும் அரசியல்வாதி
முன்னாள் மேயர் சிறிசேன குரேயின் வீட்டில் வைத்து, நானும் அசாத்தும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தது. அப்போது அசாத் துடிப்பும், உற்சாகமும், வேடிக்கை பேச்சும் கொண்ட ஒரு இளம் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாக இருந்தார், அவர் நான் கலந்து கொண்ட பிரேமதாஸவின் ஒவ்வொரு நினைவு நிகழ்விலும் தவறாது சமூகமளித்திருந்தார், கடைசியாக அது 1999ல் நடந்தது. அதன்பின் எங்கள் ஒவ்வொருவருடைய பாதையும் மாறி சந்திப்பது நின்றுவிட்டது, ஆனால் அவர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர் பொதுபலசேனாவின் பேச்சாளருடன் தொலைக்காட்சியில் சிங்களத்தில் விவாதம் நடத்தினார் எனக் கேள்விப்பட்டபோதும் கூட நான் பெரிதாக ஆச்சரியப்படவில்லை, அது சிறந்ததொரு விவாதப் பரிமாற்றமாக இருக்கும் என அதைப்பற்றி நான் தீhமானித்தேன். மகிந்த ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தங்கள் அரசியல் மேடைகளில் அந்த வயதில் நடத்திய பேச்சுக்களை  ஒத்த, தீப்பொறி பறக்கும் ஒரு பேச்சாளர் சாலி. அவரது சொல்லாட்சி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் போர்க்குணத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல.azath-salley
இஸ்லாம் பற்றிய அச்ச நோய் சமீபத்தில் எமது பொதுக் களத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அசாத் தனது சொல்லாட்சி மூலம் அதை திருப்பியடித்தார். அவர் துடிப்பும் உற்சாகமும் மிக்க ஒரு இளைஞர், தம்மை நன்கு நிலைநிறுத்திக்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கோழைத்தனமாய் வெளிப்படையாக தெரியும் விதத்தில் மௌனம் காத்தபோது, தான் பேசவேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். இந்த தருணத்தில் எம்.எச்.எம். அஸ்ரப், அவர்கள் இல்லாமல் போனதை அவர் மிக நன்றாக உணர்ந்திருக்கலாம். இது பற்றிய ஒரு அரசியல் விழிப்பை அசாத் சாலி  சுட்டிக்காட்டியிருக்கலாம். இருந்தும் எப்போது அது குற்றமானது? தூண்டுதலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அசாத் கைது செய்யப்பட வேண்டுமாயின், பௌத்த நிறுவனங்களால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும்  இன்னும் மோசமான வெளிப்படையான விரோதமான, பொது பேரணிகளில் நடத்தப்பட்ட குரோத உணர்வுடைய வெறுக்கத்தக்க பேச்சுக்கள், மற்றும் வீதிப் போராட்டங்கள் பற்றி என்ன சொல்வது, அவை அனைத்தும் யு ரியுப் இணையத்தின் வழியாக உலகமெங்கும் சென்றிருக்கிறதே? வன்முறை, மற்றும் அச்சுறுத்தலான வாட்களின் மற்றும் வாட்களுடன் பாயும் வாளேந்திய வீரர்களின் படங்கள,;  என்பனவற்றைக் கொண்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களைப்பற்றி யார் விசாரணை செய்வது, மற்றும் அவை வெளிப்படையாக விளம்பரப்படுத்துவது கிளர்ச்சிகளையா அல்லது எழுச்சிகளையா?
நீதி மற்றும் நியாயமான நடவடிக்கை எங்கே
நிச்சயமாக சிறுபான்மையினரிடத்தில் இருந்து வெளிப்படும் அடிப்படைவாத தூண்டுதல் பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்வதைப்போல, பல்வேறுவிதமான அடிப்படைவாத தூண்டுதல்களை மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தவர்களிடமும் பாரபட்சமற்ற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும். பாரபட்சமற்ற, மற்றும் நீதியான தன்மைகள் உள்ள ஒரு சமநிலை இல்லாதபோது, அசாத் சாலியின் கைது மற்றும் அவரது தடுப்புக்காவலுக்கான நிபந்தனைகள், என்பனவற்றை கவனத்தில் கொள்ளும் உலகத்தின் கண்கள், இந்த அரசாங்கத்தை மற்றும் மிகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா தேசத்தை எந்த விதமாக பார்க்கும்? அசாத்தை கைது செய்தது எதற்காக, அவர் துணிவுடன் திருப்பி பேசி, விவாதித்தபடியாலா? அவர் வீறாப்பாக பேசும் ஒரு விடுதலை வீரராக இருக்கிறபடியால் அவருக்கு ஒரு பாடம் புகட்டவேண்டிய தேவையினாலா? பல விடயங்களை தெளிவாக மற்றும் வெளிப்படையாக பேசும் ஒரு இளம் முஸ்லிமாக அவர் இருப்பதால், சிறுபான்மை இனத்தவருக்கு ஒரு உதாரணமாக இருக்கும்படியும், சிங்கள மேலாதிக்கத்தின் வாயை அடைப்பதற்கான இலஞ்சமாக சிங்கள மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் அவர் பலி கொடுக்கப்படுகிறாரா?
நான் ஒரு மனித உரிமை ஆர்வலராகவோ அல்லது ஸ்ரீலங்கா பற்றி ஜெனிவாவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு இராஜதந்திரியாகவோ இருக்கும் பட்சத்தில் அசாத் சாலியின் கைது எனக்கு வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்ததை போல இருந்திருக்கும். மாறாக நான் இன்னமும் ஸ்ரீலங்காவின் தூதுவராக அல்லது ஜெனிவாவில் உள்ள ஐநா நிரந்தரப் பிரதிநிதியாக இருப்பின், கடுமையான இராஜதந்திர முயற்சி மற்றும் தார்மீக நெறிமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்திருக்கும். இந்த வருடம் ஜெனிவாவில் எங்களுக்காக வாக்களித்த 13 அங்கத்துவ நாடுகளில், ஏழு நாடுகள் இஸ்லாமிய கூட்டு அமைப்பை (ஓ.ஐ.சி) சேர்ந்தவைகள். அந்த முஸ்லிம் பல சேனாக்கள்தான் (இதை நான் ஹலால் என்றுதான் சொல்லவேண்டும்) ஸ்ரீலங்காவை காப்பாற்றின, சிங்களவாகள் மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு  இந்தமுறை இது ஒரு அவமானகரமான தோல்வியாக இருந்தது. அந்த ஆதரவு இல்லாவிட்டால் எங்களுக்கு வெறும் 6 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும், இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிரியாவுக்கும் மற்றும் தலையீட்டுக்கு முன்னர் லிபியாவுக்கு கிடைத்ததை விடவும் குறைவான வாக்குகளாக இருந்திருக்கும். எங்களுக்கு சார்பாக வாக்களித்த அதேவேளை, ஸ்ரீலங்காவில் நடைபெறும் முஸ்லிம்கள் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள், மற்றும் நிர்ப்பந்தங்கள் பற்றி ஓ.ஐ.சி ஜெட்டாவில் ஒரு அரசியல் நடவடிக்கைகூட நடத்தியது, அதேவேளை கொழும்பிலிருந்து இயங்கும் ஓ.ஐ.சி யின்தூதுவர்கள் ஜனாதிபதியையும் சந்தித்திருந்தார்கள். மார்ச் 2014ல் ஓ.ஐ.சி வாக்குகள் எப்படி அளிக்கப்படும்?
சிக்கவைப்பது அத்தனை எளிதானது அல்ல
இதற்கிடையில் அசாத் சாலி  இங்கு பிரதான நீரோட்டத்தில் உள்ள ஒரazath salley-1ு அரசியல்வாதி, ஒரு முன்னாள் கொழும்பு உதவி மேயர், ஜனாதிபதி ராஜபக்ஸவுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஜனாதிபதியுடன் பரஸ்பர நெருக்கமும், அரவணைப்பும், உள்ள ஒரு மனிதர் அவர், என்பதைக் காட்டுகிறது. அவருக்கு அருகில்கூட ஒரு துப்பாக்கி ரவையோ அல்லது ஒரு ஆயுதமோ கூட இல்லாமல் அல்லது வன்முறைக்குத் துணைபோகும் ஒரு நடவடிக்கையை கூட அவர் மேற்கொள்ளாதபோது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் வெகு துல்லியமாக கூறுவது, துல்லியமாக பயங்கரவாதத்தை தடுப்பது என்று.
அசாத் சாலி ஆயுதம்தாங்கிய பயங்கரவாத குழு ஒன்றின் நிறுவனராக,  தலைவராக, அங்கத்தவராக, ஆதரவாளராக அல்லது அனுதாபியாக இருந்தாரா? ஆயுதம் இல்லாத பயங்கரவாத குழுக்கள் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஆயுதம் வைத்திருக்காவிட்டால், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை அல்லது இன்னமும் பயங்கரவாதிகளாக மாறவில்லை. குழு ஒன்றை நிறுவுவதை பரிசோதிக்க அவர் திட்டமிட்டிருந்தாரா? அப்படியானால் எது, எப்போ, எங்கே?
அசாத்சாலி சொன்னவற்றாலோ அல்லது செய்ததின் விளைவாக ஏதாவது வன்முறை நடவடிக்கைகள் இடம்பெற்றனவா? அப்படியானால் என்ன, எது, எப்போ, எங்கே? சாலியினால் ஏதாவது குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது ஏன் பொதுக்களத்தில் வைக்கப்படவில்லை? ஏன் அது இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது? நாட்டிலுள்ள சாதாரண சட்டங்களால் ஏன் சாலி குற்றம் சாட்டப்படவில்லை? அவரது குடும்பத்தினர், வருகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை சந்திப்பதற்கு தடங்கலற்ற வழிமுறைகள் அவருக்கு ஏன் வழங்கப்படவில்லை? ஆயுதம் ஏந்தாது ,தேர்தலில் போட்டியிட்ட ஒரு அரசியல்வாதிக்கு சமாதான காலத்தில் இத்தகைய உபசரிப்பு வழங்கப்படுமாயின் வெலிக்கடையில் என்ன நடந்திருக்கும்? யுத்த காலத்தில் எண்ணற்ற ஏனைய நபர்களுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும்? கொழும்புக்கு வெளியே முன்னைய யுத்த வலயங்களில் உள்ள தமிழர்களுக்கு இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? தர்க்கரீதியாக இத்தகைய கேள்விகள் யாருக்கும் எழக்கூடும், மற்றும் ஜெனிவாவிலும் மற்றும் வேறு இடங்களிலும் சட்டப+ர்வமாக இவை எழுப்பப்படலாம்.
காலநிலைக்கு அச்சம் ஊட்டப்படுகிறது
சென்னையிலுள்ள ஒரு பிரசுரத்துக்கு (ஆனந்தவிகடன்), ஏன் ஆர்வலர்கள் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் அசாத் சாலி மட்டு மீறி விவேகமற்ற சில குறிப்புகளைக் கூறினார், என்று வைத்துக் கொள்வோம், பிரச்சினைக்குரிய பிரசுரமான ஜூனியர் விகடன் மொழிபெயர்ப்பில் சில தவறுகளை விட்டிருந்தாலும்கூட, அதைப்பற்றி கவலையில்லை. அசாத்சாலி சொன்னது எதுவாயிருப்பினும் அதற்கு வெகுஜன ஊடகங்கள் மூலம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கவேண்டும், மற்றும் அது தொடர்பான விமர்சனமும் திறந்த விவாதமும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தவறான அல்லது சமாதானம் சொல்லமுடியாத ஒரு கருத்தை நிச்சயம் மற்றொரு கருத்தினால் மட்டுமே எதிர்க்க முடியும், கைது செய்து 90 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதின் மூலம் அல்ல. அது நீங்கள் சாதாரண ஜனநாயக மதிப்புகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றப்படும்போது செய்யப்படுபவை.
எனினும் ஒரு அரசாங்கம் அல்லது தேசம், தவறான ஒரு கருத்து வெளிப்படுத்தலை அல்லது பரிமாற்றத்தை தண்டிக்க அதன் ஆயுதங்களில் ஒன்றாக ஒரு கடுமையான சட்டத்தை பயன்படுத்துவதை தெரிவு செய்யும்போது, அந்த அரசாங்கம் அல்லது தேசம் ஜனநாயகமற்ற ஏதேச்சதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்வதாக விமர்சகர்களினால் விமர்சிக்கப்படும் ஆபத்துக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறது. அசாத்சாலி சொல்லியவை காரணமாக ஸ்ரீலங்காவுக்கு ஏதாவது இழிவு ஏற்படுவதைக் காட்டிலும், ஆட்சியினரின்  அடக்குமுறை செயற்பாடுகள் அதிக சேதம் விளைவிப்பதுடன், சர்வதேச விசாரணையை தேடுபவர்களுக்கு ஆயுதம் வழங்கி உதவுவது போலவும் ஆகிவிடும்.
சமூகத்தினுள் கோபம் கொந்தளிக்கிறது
அசாத் சாலியின் தடுப்புக்காவல் பயங்கரவாதத்தை தடை செய்ய உதவியதா, அல்லது தீவிரமாதலை எதிர்ப்பதற்கு அது ஏதாவது பங்களிப்பினை நல்கியதா? இந்தக் கேள்விக்கான விடை ஒரு சமூகமாக நாம் வாழும் அனுபவத்தில்தான் தங்கியுள்ளது. 1972ல் டசின் கணக்கான சில இளம் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள், ஏனெனில்  தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைவர்களுக்கு தலைமைதாங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரார்த்தனை செய்யும்படி விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்து, நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு பிரகடனத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர்கள் கறுப்புக் கொடிகளைக் காட்டினார்கள்.
இந்த இளைஞர்கள் எந்த வன்முறைச் செயல்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர்கள் ஐந்து வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட நேரம் யாழ்ப்பாணத்தில் எந்த ஆயுத இயக்கமும் இருக்கவில்லை. அவர்கள் விடுதலை செய்யப்பட்ட 1977ல், புலிகள் ஆயுத நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள், அதேவேளை ஈரோஸ் அல்லது  கெஸ் என்கிற இயக்கம், லண்டனில் ஆரம்பிக்கப்பட்டு  லெபனானில் ஆயுதப்பயிற்சியும் பெற்றது. இதைப்பற்றி யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின் அவர்கள் கருணா, கேபி,சுரேஸ், சித்தார்த்தன், மற்றும் டக்ளஸ் உடன் இதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
உண்மையில் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் இந்த ஆயுத இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை என்பது வெளிப்படை, ஏனெனில் அந்தச் சமயம் அவர்கள் கம்பிகளுக்கு பின்னால் இருந்ததால் அவர்களால் அதை செய்யமுடியவில்லை. வன்முறையற்ற செயற்பாட்டுக்காக சிறையிருந்த அவர்களது நிலை, இளவயது வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற நிழல் மனிதர்களின், ஆயுத போராட்டத்தை தவிர வேறு எந்தவிடயத்துக்கான இடமோ அல்லது அர்த்தமோ கிடையாது என்கிற வாதத்துக்கு வலுவூட்டியது.
இதன்படி நிராயுதபாணியான அரசியல் ஆர்வலர்களை தடுப்புக்காவலில் வைப்பதன்மூலம், ஆயுத வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான எந்த வழியும் பிறக்கவில்லை, ஆனால் உண்மையில் தந்திரோபாயங்கள் மூலம் தமிழ் சிறுபான்மையினரின் அரசியல் மூலோபாயங்கள் தன்னை  தீவிரமயமாக்கிக் கொண்டது. அசாத்துக்கு நடந்துள்ள இந்த உபசரிப்பு, கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய மனக்குறையுள்ள இளைஞர்கள், மற்றும் நிழல் குழுக்களுக்கு அனுப்பும் சமிக்ஞை என்ன? தமிழர்களைப்போலவே ஒருவேளை  முஸ்லிம்களுக்கும் கூட நடக்கலாம், ஆனால் அதன் நயவஞ்சக நோக்கம் இதுதானா?
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி: சிலோன் ருடே

Aucun commentaire:

Enregistrer un commentaire