
அத்துடன், தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் நலனுக்காக எவ்வித உதவியும் செய்யாதவர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவது வேடிக்கையானது என இந்திய மத்திய அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும் காங்கிரஸ் கட்சி மாத்திரமே தமிழர்களின் நலன்கருதி செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக ரோந்து கப்பலொன்று இந்திய கடலோர காவல் படையும் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கப்பல் கச்சதீவு உட்பட இலங்கைக்கு சொந்தமான கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire