உலக வங்கியின் புதிய தலைவர் ஜிம் யாங்
உலகத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் இருபது சதவீதத்தை தற்சமயம் ஈர்த்து வருகின்ற வளர்ந்துவரும் நாடுகள் மூன்று மடங்காக அதிகரித்து 60 சதவீதத்தை ஈர்க்கும் நாள் வரும் என்று புதிய அறிக்கை ஒன்றில் உலக வங்கி கூறுகிறது.
சீனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியமான சக்திகளாக விளங்குவர் என்று அது தெரிவித்துள்ளது.
சுகாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற்றங்கள் ஏற்படுவதாலும், தகவல் தொழில்நுட்பம் பரவி வருவதாலும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
ஏழை மக்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று அது கூறுகிறது.
ஆனால் 2030 ஆண்டு வாக்கில் பார்க்கையிலும் செல்வந்த நாடுகளில் உள்ள மக்களின் சராசரி வருமானத்தில் இருபது சதவீதம்தான் வளர்ந்துவரும் நாடுகளுடைய மக்களின் சராசரி வருமானமாக இருக்கும் என்று அது கணித்துள்ளது.
தற்சமயம் செல்வந்த நாடுகளின் சராசரி தனி மனித வருமானத்தில் பத்து சதவீதமே வளர்ந்துவரும் நாடுகளில் மக்களின் சராசரி வருமானமாக உள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire