இலங்கைக்கு அதன் முதலாவது தொடர்பாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் கையொப்பமிட்டுள்ளது. உலக சந்தையில் வர்த்தக செய்மதிகளை ஏவுவதற்கான சேவையை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரேயொரு நிறுவனமாக கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் உள்ளது.
இந்த ஒப்பந்தம் இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை மேலும் அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
ஆயினும் இந்த உடன்படிக்கை தொடர்பாக நிதி மற்றும் வேறு விடயங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த செய்மதி இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒலி, ஒளிபரப்புச் சேவைகளை வழங்கும். பல நாடுகள் இலங்கையிடமிருந்து இந்த சேவைகளை வாங்குவதற்கு விருப்பம் கொண்டுள்ளன என ‘சைனா டெய்லி’ கூறியுள்ளது.
இதுவரையில் 18 நாடுகளுக்கு 43 செய்மதிகளை ஏவிக்கொடுத்துள்ளதாக இந்த சீன கம்பனி கூறியுள்ளது. 2015ஆம் ஆண்டளவில் உலக செய்மதி சந்தையில் 10 சதவீதத்தை பிடிக்க சீனா எண்ணியுள்ளது என இந்தக் கம்பனி கூறியுள்ளது.கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளது.
ஏற்கனவே வடக்கின் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு - கண்டி, குருணாகலை மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கவும் இந்த உடன்படிக்கையில் இணக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire