mercredi 29 mai 2013

பலாங்கொடை மனிதனின் வியப்பூட்டும் தகவல்கள்

BalangodaBalangoda 1
பலாங்கொடை மனிதன் எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையில் காணப்பட்ட மனித இனத்தினன் ஆவான்.இற்றைக்கு சுமார் 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளன.
இலங்கையிற் காணக்கிடைத்துள்ள அக்கால மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் காலத்திற்குரிய அஃதாவது பொதுக்காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக் குரியனவாகும்.

இந்த இடைக் கற்காலப் பண்பாடு ‘பலாங்கொடை நாகரிகம்’ எனப்பட்டது
.
நன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செ.மீ. எனவும் பெண்ணின் உயரம் 166 செ.மீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன.
பலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும் கிட்டத் தட்ட 4 செ.மீ. அளவான கூரிய படிகங்களால் ஆன்வையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்டபடி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப் பட்டவையாகும்.ஐரோப்பாவில் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் அதற்கும் முற்பட்டதாகும். பட்டதொம்பலென என்னுமிடத்தில் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெல்லென குகையில் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.
பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஹோட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஹோட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்ட 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானென கருதச் செய்கின்றன.
நில்கலகுகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களில் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக் கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன.இலங்கையின் நாயினங்கள் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைளும் இடங்களும்
பெலிலென – கித்துல்கல
வவுலா பனே – இரத்தினபுரி
பட்டதொம்ப குகை – குருவிற்றை
பாஃகியன் குகை – களுத்துறை
பெல்லன்பந்தி பலசுச – பன்சந்திரசேனைஇ பலாங் கொடை
ஹோட்டன் சமவெளி
தொரவக்க குகை – கேகாலை

Aucun commentaire:

Enregistrer un commentaire