ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் மேற்குப்பகுதியிலுள்ள கரோய்டான் என்ற இடத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகளான கல்லூரி மாணவி தோஷா தாக்கர்(19) கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பக்கத்து வீட்டில் வசித்த வாலிபரால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலைகாரன் அவளுடைய பிணத்தை மூட்டையில் அடைத்து காரில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசி விட்டான். இந்த கொலை தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் ஸ்டானி(24) என்ற வாலிபரை கைது செய்தனர். இவன் மாணவி தோஷாவுடன் படித்தவன். இந்த கொலை வழக்கை நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டெரீக் பிரின்ஸ் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட டேனியல் ஸ்டானிக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அது மட்டுமின்றி அவனை குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதிக்கூடாது என்றும் உத்தாவிட்டார். எனவே அவன் 2041–ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் வெளியே வர முடியாது. சிறையிலேயே அவன் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire