vendredi 10 mai 2013

ஈழத்தை நினைத்து தேர்தலில் பங்குகொள்ள பின்வாங்கும் அமைச்சர் விமல்


வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழிகோலும் செயற்பாடாக அமையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றமையானது நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏறபடுத்தும். இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம்.
நாட்டில் மீண்டும் தமிழீழம் ஏற்படுவதற்காகவா இராணுவ வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்தார்கள்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமானால் அது நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.
எனவே, இதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வடமாகாணசபை தேர்தல் இடம்பெறாது தடுத்து நிறுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire