சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது.
ஆனால் இது செயற்கை கோளை வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்தியது ராணுவ வளர்ச்சிக்கு தான் என்று தெரிவித்தது.
ஆனால் இது குறித்து சீனாவில் தேசிய விண்வெளி மைய அதிகாரிகள் கூறுகையில், பூமியின் மேற்பரப்பில் பாறை அடுக்குகளில் உள்ள சக்தி வாய்ந்த துகள்கள் மற்றும் காந்த வயல்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மாறுபட்ட கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire