காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்யாது, வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம் என்பதால், அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் தமிழ் மக்களுக்கு அதனை விட பிரச்சினைகள் இருப்பதாகவும் வடக்கிற்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை இரத்துச் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த அதிகாரங்கள் இரத்துச் செய்யப்படுவதை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். இதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த அதிகார பரவலாக்கம் போதுமானதல்ல.
எனினும் நாட்டின் சட்டத்தில் உள்ள அதிகாரங்களையாவது பாதுகாக்க வேண்டும். அதிகாரத்தை பரவலாக்குவதே பிரச்சினைக்காக சிறந்த தீர்வு. சிங்கள மக்கள் பெருபான்மையின மக்கள். அவர்களை விட அதிகளவான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உள்ளன. அவர்கள் சகல பக்கங்களில் இருந்து அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire