அரசில் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire