samedi 4 mai 2013

வடமாகாணசபை தேர்தல் குறித்து அறிவித்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை

எனக்கு எதுவுமே தெரியாது வடமாகாணசபை தேர்தல் குறித்து அறிவித்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்சிகளின் செயலாளர்களை நேற்று தேர்தல் திணைக்களத்தில் சந்தித்து தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, உட்பட பதிவு செய்யப்பட்ட சகல கட்சிகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 15 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படவுள்ள 2013ஆம் திகதிக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது. கட்சி பெயர்மாற்றம், கட்சியின் சொத்து விபரங்களை சமர்ப்பித்தல், 2013 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புத் திருத்தம், மற்றும் நடைமுறைப்பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களான சுரேஷ்பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், ஆகியோர் வடமாகாணசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் வடமாகாணசபைத் தேர்தல் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அது குறித்த அறிவித்தல் எதுவும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ்பிரேமச்சந்திர எம்.பி. வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே சர்வதேச கண்காணிப்பாளர்களை வடக்கில் சேவையில் ஈடுபடுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire