எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவுதி அரேபியா பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். ராஹா முஹாராக் எனப்படும் 25 வயதான பெண்ணே நேபாளத்திலுள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து , தனது இலக்கை நிறைவுசெய்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து, அந்நாட்டிலிருந்து முதலாவது பெண், சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளமைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ராஹா, எவரெஸ்ட் சிகரத்துடன், உலகின் 7 மலைச்சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தனது சாதனையால், தனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், சிறந்த கௌரவத்தை வழங்கியுள்ளதாக ராஹா கருத்து வெளியிட்டுள்ளார்.
ராஹாவுடன், மேலும் 3 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக பீ பீ சீ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை அண்மையில் சவுதியில் பெண்கள் , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire