பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. விரைவில் அவர் பிரதமர் பதவியை ஏற்க இருக்கிறார். இதை யொட்டி அவரை பாராட்டி, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நல்லுறவு மேம்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும்படி நவாஸ் செரீப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்த போது பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அழைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் வரலாம் அல்லது வராமலும் போகலாம் அது வேறுவிஷயம். ஆனால் அவர் விரைவில் பாகிஸ்தான் வருவார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘என்னுடன் நேற்று முன்தினம் அவர்(மன்மோகன்சிங்) டெலிபோனில் பேசினார். இருவரும் நீண்டநேரம் பேசினோம். அவர் என்னை அழைத்தது போலவே நானும் அவரை பாகிஸ்தானுக்கு வரும்படி அழைத்தேன்’ என்றும் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire