வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது நடந்த கொடுமைகளை கோர்ட்டுக்கு வந்து விதவை பெண்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு முகமது கமாருஷ மானுக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதற்கிடையே தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கமாருஷ மான் மறுத்துள்ளார். அரசியல் ரீதியாக என் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire