இஸ்லாமியவாதிகள் நடத்திய ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிசார் மூர்ச்சையடையச் செய்யும் கையெறிகுண்டுகளை வீசியும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் உள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நகரின் மையத்திலுள்ள வர்த்தக வட்டகையின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துவிட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
ஆனால் துப்பாக்கி வேட்டுக்களும், வெடிச் சத்தமும் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளன.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் யாரும் அருகிலுள்ள கட்டிடங்களில் பதுங்கியுள்ளார்களா என்று பொலிசார் தேடிவருகின்றனர்.
வங்கதேசத்தில் இஸ்லாமிய விழுமியங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய ஆர்ப்பாட்டம் இது.
வங்கதேசம் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று வர்ணிக்கும் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire