mardi 7 mai 2013

தயாளு அம்மாள் மனு மீது; இன்று விசாரணை 2ஜி ஊழல் வழக்கு


2ஜி ஊழல் வழக்கில் தில்லி பாட்டியாலா வளாக சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இன்று மதியம் 2 மணிக்கு தயாளு அம்மாளின் மனு மீது விசாரணை நடத்துகிறார்.  2ஜி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் மே 6ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், 2ஜி வழக்கு தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டிருந்தது.
முன்னதாக திங்கள்கிழமை அவர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 80 வயதாகும் தயாளு அம்மாள் மிகவும் தளர்ந்து இருப்பதாகவும், உடல்நலம் குன்றி படுத்தபடுக்கையாக இருப்பதால், அவரால் வீட்டை விட்டு எழுந்துவந்து நீதிமன்றத்துக்கு வர இயலாது என்றும் கூறப்பட்டது. அவரது மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளில் அவர் அல்ஸாய்மர்ஸ் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கடந்த ஒரு வருட காலமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய உடல் நிலை மற்றும் மன நிலையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. 
இன்று இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு ஓபி சைனி உத்தரவிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire