mardi 21 février 2017

தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி:

சிங்கமில்லாக் காடு
செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

– கமல்ஹாசன் கமல்ஹாசன் அளித்த பேட்டி: நான் அரசியலில் இல்லை. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான், குற்றப் பின்னணி கொண்ட கும்பல் என்று சொன்னபோது, அது அரசியல் சார்பில்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சசிகலா மட்டுமின்றி, ஜெயலலிதாவும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.


சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, பரிசோதிக்கக் கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம், தற்சமயம் கவுன்சிலர்கள் மூலமும், எம்எல்ஏக்கள் மூலமும் பேச வேண்டியிருக்கிறது. மறுதேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது? தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. காரணம், நாம் வேறுவிதமான சிந்தனை கொண்ட மக்கள். இந்தியாவுக்கு இப்போதுள்ள அரசியல் தேவையில்லை. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என்னைப் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். சமநிலை கொண்ட மனிதர்கள்தான் அரசியலுக்கு தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதுபோலவே மக்களும் இருக்கிறார்கள். நல்ல அரசியல்வாதிகளை தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ காண முடியாது.

சில நேரம் வீதியில் கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். மெரினாவில் நடந்ததைப் போல் இன்னொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளிப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டாம் என்றார்.

ப்ளஸ்: ஒரு மாநில சட்டசபையை நடத்த முடியாத சூழலில் கவர்னர் அவையை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கலாம். முடக்குவதால் பயனில்லை என்ற சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது விதியின் கீழ் அரசை கலைக்கலாம் என்று கவர்னர் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கலாம். அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவார்

வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய அறிமுகம்

வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செஞ்சிருக்குது.

இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , ஜிப் மற்றும் வீடியோக்களை வைக்க முடியும். அது மட்டுமில்லாம இந்த ஸ்டேட்டஸ்களை 24 மணி நேரத்தில் தானாக மறையுமாறு செய்ய முடியும் . மேலும் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட் நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில் மாற்றிக்கொள்ளவும் இயலும்.

இந்த புதிய வசதியானது ஜரோப்பாவில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் உலகெங்கிலும் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படுமாம்

lundi 20 février 2017

.மக்களின் உன்மைக்கு முன்னால் மதங்களும் திருட்டுப்பூனைகள்


கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்துள்ள தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மக்களின் பிரச்சினையை தென் பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய பத்தேக சமித்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே பத்தேக சமித்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்ததோடு, கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண தம்மாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள மக்கள் தனியாகவும், தமிழர்கள் தனியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவரவர் தனித்தனியாக வாழ்ந்தனர்.
எனினும் எங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிணைந்து பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
தனித்தனியாக இனவாத அடிப்படையில் செயற்படுவதால் பிர்ச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. கடந்த காலங்களில் இந்த தவறுகளே நடந்தேறின. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை இனவாத அடிப்படையில் நோக்கக்கூடாது.
30 வருட யுத்தத்தின்போது அனைவரும் பாதிக்கப்பட்டோம். அனைவரும் தோல்வியடைந்தோம். வெற்றிபெற்றவரென்று யாருமில்லை. இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்க முடியாது. வடக்கில் ஒரு கருத்தையும் தெற்கில் ஒரு கருத்தையும் வெளியிட என்னால் முடியாது.
இந்த மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பதை நான் அறிவேன். எனினும் தகவல் பரிமாற்றத்தில் தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
இனவாதத்தை இரண்டு பக்கங்களிலும் நிராகரித்து மக்களோடு இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு தெளிவுபடுத்த நான் முயற்சிக்கின்றேன். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பிரஜைகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற தவறு எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் செயற்பட வேண்டும்.
சில இனவாத அரசியல்வாதிகளைப் போல் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. நடுநிலையாக தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இந்த பிரச்சினையை நாம் நிச்சயம் தெற்கிற்கு எடுத்துச்செல்வோம். எங்களால் முடியுமான உதவிகளை நாம் செய்வோம். அனைவருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைதியாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்

பெண் என்பவள் வெறும் சதையா


பெண் என்பவள் வெறும் சதையா..???💠
🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை…..!
🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.
🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
👉 பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.
🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.
🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.
🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
👉 பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.
 அப்போ எங்கு தான் பிரச்சனை..???
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.
சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்.
ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.
பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.
இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்ப்பணம்.
சிந்தியுங்கள்… செயல்படுங்கள்.

dimanche 19 février 2017

இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள்,:கலையரசன்



இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் வாழும் தமிழர் மத்தியில் தமது மதப் பாசிச விஷக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. ஏற்கனவே மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியாவில் இருந்து சிவசேனையை இறக்குமதி செய்து மத வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். இலங்கையில் ஏற்கனவே இயங்கி வந்த கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ், தனது உகரம் இணையத் தளத்தில் வர்ணாச்சிரமத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

ஜெயராஜ் பற்றி விக்கிபீடியா வழங்கும் தகவல்: //இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.// (இ. ஜெயராஜ்)

இலங்கைத் தமிழ் மேட்டுக்குடியினரின் இலக்கிய அறிவுப் பசியை தீர்த்து வைக்கும் கம்பன் கழகம், அவர்களது நன்கொடைகளால் ஒரு பணக்கார கழகமாக உள்ளது. அதன் சொத்து மதிப்புகள் பல கோடி இருக்கலாம். மூளை உழைப்பாளிகளான உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள், தமக்கும் இலக்கிய தாகம் இருப்பதைக் காட்டுவதற்காக கம்பன் கழகத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு படுத்திக் காட்டிக் கொள்வார்கள்.

அது ஒருபுறமிருக்கட்டும். ஜெயராஜின் வர்ணாச்சிரம பிரச்சாரத்திற்கு வருவோம். ஜெயராஜ் தனது "வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா?" (வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? கட்டுரைகளில், வர்ணாச்சிரமம் எத்தகைய "உயர்ந்த தர்மம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

தொடக்கத்திலேயே "தான் ஒரு பிராமணன் அல்ல" என்று ஜெயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி விடுகிறார். பிராமணீயம் என்பது ஒரு அரசியல்- சமூகக் கட்டமைப்பாக மாறி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், வர்ணாச்சிரம ஆதரவாளர்கள் பிராமணர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

இது ஓர் அரசியல் தத்துவார்த்த கொள்கை. இன்று ஜெயராஜ் போன்ற பலர் எதற்காக வர்ணாச்சிரமத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல. சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்தவர்களுக்கும், இந்தியாவில் வர்ணாச்சிரம தேசம் அமைக்க விரும்புவோருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

நூறு வருடங்களுக்கு முன்னரே, கல்வியாளர் அம்பேத்காரும், சிந்தனையாளர் பெரியாரும் தத்தமது அறிவுப்புலத்தில் நின்று வர்ணாச்சிரமத்தை அலசி ஆராய்ந்துள்ளனர். வேதங்கள், மனுநீதி, புராணக் கதைகளை மேற்கோள் காட்டி தமது மறுப்புரைகளை முன்வைத்தனர். அவற்றை இன்றைக்கும் நாம் வாசிக்கும் வகையில், பெரியார், அம்பேத்கார் எழுதிய நூல்கள் திரும்பத் திரும்ப பதிப்பிக்கப் படுகின்றன.

ஜெயராஜ் அவற்றை மேற்கோள் காட்டி தனது எதிர்க்கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே. இதுவரையில் ஐந்து பாகங்களாக வந்துள்ள கட்டுரைகளில் எந்த ஒரு இடத்திலாவது, அம்பேத்கார், பெரியார் கூற்றுக்களில் ஒன்றைக் கூடக் காணவில்லை. ஒருவேளை அவற்றில் உள்ள நியாயத்தன்மை ஜெயராஜை மிரட்டி இருக்கலாம். ஆதாரபூர்வமாக எதிர்க்க முடியாது என்பதால் அவர்களது கூற்றுக்களை மேற்கோள் காட்டுவதை தவிர்த்து விடுகிறார். அதற்குப் பதிலாக பொத்தாம்பொதுவாக "புரட்சியாளர்கள்" என்று சாடுகிறார்.

யார் அந்தப் "புரட்சியாளர்கள்"? அம்பேத்கார், பெரியார், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை ஜெயராஜ் ஒரே பக்கத்திற்கு தள்ளி விடுகிறார். இவர்களுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார். அவரது ஒரே பிரச்சினை "இவர்கள் எல்லோருமே வர்ணாச்சிரம எதிர்ப்பாளர்கள்" என்பது மட்டும் தான்.

சரி, ஒரு பேச்சுக்கு அப்படியே இருக்கட்டும். "அந்தணர்கள் தவறு செய்தார்கள், புரட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தார்களா?" என்று ஜெயராஜ் எதிர்க் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்த தர்க்கீகத்தில் குறிப்பிடப் படும் அந்தப் "புரட்சியாளர்கள்" அண்ணாத்துரை தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். இதை அவர் வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அது தான் உண்மை.

ஜெயராஜின் கட்டுரையில்இருந்து:
//ஒரு காலத்தில் பிராமணர்களைக் குற்றம் சாட்டினர். பின்னர் இனத்தையும் மொழியையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,அந்தணர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா? நம் இனம் மீதும் மொழிமீதும் பற்றை வளர்த்திருக்கிறார்களா? ஒழுக்க நிலையில் நம் சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்களா? மற்றைய இனத்தார் நம்மை மதிக்கும்படி நம் சமூகத்தை வளர்ந்திருக்கிறார்களா? ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை,பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் என்பவற்றை,முன்பை விடக் குறைத்துவிட்டார்களா?//(ஜெயராஜ்)

முதலில் நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சீர்திருத்தவாத இயக்கம், அது ஒரு புரட்சிகர இயக்கம் அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசு அதிகாரத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ- தாராளவாத அரசமைப்பில், பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.அதற்காக இனத்துவ, சாதிய முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன.

தற்போதுள்ள முதலாளித்துவ- தாராளவாத கட்டமைப்பினுள், ஒரு அமைதியான சமூகப் புரட்சி நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கு முதலில் அதிகாரக் கட்டமைப்பு தூக்கி எறியப் பட வேண்டும். ஆனால், ஒரு சில மறுசீரமைப்புகள், சீர்திருத்தங்கள் சாத்தியமாகலாம். 

அந்த வகையில், அனைவருக்குமான பொதுக் கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவை தான் திராவிட கட்சியினரால் சாதிக்க முடிந்தது. அத்துடன், வணிகத்துறை முதலீடுகள் பெருகியதால் இடைத்தர சாதிகளும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். இவை எல்லாம் முதலாளித்துவ- பொருளாதார  நலன்களை எந்த வகையிலும் பாதிக்காதவை. அதனால் சாத்தியமானது.

இந்துத்துவாவாத பாஜக, அல்லது ஆர்எஸ்எஸ், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தாலும் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. தற்போது இந்தியாவில் பாஜக பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி நடக்கிறது. மோடி  கம்பவாரிதி ஜெயராஜை விட மிகவும் தீவிரமான வர்ணாச்சிரம ஆதரவாளர். அவரது ஆட்சிக் காலத்தில் தேனாறும், பாலாறும் ஓடவில்லை. 

ஜெயராஜ் திராவிட கட்சியினரிடம் கேட்ட அதே கேள்வியை பாஜக வை  நோக்கியும் கேட்கலாம்: "ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தினரை குற்றம் சாட்டினார்கள். பின்னர் வர்ணாச்சிரமத்தையும், மதத்தையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,திராவிடர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் (இந்து) சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா?...." இப்படி கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் கேட்க மாட்டார்.

கம்பவாரிதி ஜெயராஜ் பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்த மாற்றமும் நடக்காது என்பது தான் உண்மை. ஏனென்று கேட்டால் முதலாளித்துவ - தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பு சொத்துடமை வர்க்கத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே உருவாக்கப் பட்டது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை, இவையெல்லாம் இருக்கவே செய்யும். உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கு இவையெல்லாம் ஆளும்வர்க்கத்திற்கு உதவுகின்றன. பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் போன்றன இல்லாமல் முதலாளித்துவ பொருளாதாரம் இயங்குவதில்லை. பொய், களவு, சூது, இல்லாமல் உலகில் எந்த முதலாளியும் செல்வம் சேர்க்க முடியாது.

இந்திய உபகண்டத்தில் ஆரிய இனத்தவர் மேலாதிக்கம் பெற்றது எப்படி என்பதை மானிடவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பல நூல்களில் எழுதி இருக்கிறார்கள். அது எதையும் வாசித்திராத ஜெயராஜ், அடக்கப் பட்ட மக்கள் மீது பழி போடுகின்றார். இது "Blame the Victim" என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போன்று, பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நயவஞ்சகத்தனம்.

ஜெயராஜின் கட்டுரையில் இருந்து: 
//நமது வீழ்ச்சிக்கும் நம் இனத்தின் வீழ்ச்சிக்கும் மற்றவர்கள் காரணரல்லர். நாமேதான் காரணர்களாய் இருந்திருக்கிறோம். பெரும்பான்மை இனமொன்று சிறுபான்மை இனத்தை ஆள்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையை ஆண்டிருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாயிற்று? நம் பலவீனம் தான் அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறது. இன்றும் நம் பலத்தை வளர்க்காமல் மற்றவர்கள் பலவீனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏதிலார் குற்றத்தை அகழ்ந்து அகழ்ந்து காணுகிற நாங்கள், நம் குற்றம் காணத் தயங்கி நிற்கிறோம்.// (ஜெயராஜ்)

இதற்கு அண்மைய காலனிய வரலாற்றில் இருந்து பதிலளிக்கலாம். சிறுபான்மை இனமான ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற பெயரில் உலகில் அரைவாசியை ஆண்டது எப்படி? உள்நாட்டு இனங்களின் பலவீனம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன போர்க்கருவிகள் காரணமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சூழ்ச்சிகள், துரோகங்கள் காரணமாக இருந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்கள் செவ்விந்திய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். செவ்விந்திய பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்கள். வணிகம் செய்து சமாதானமாக வாழ்ந்தார்கள். ஆனால், பிற்காலத்தில் அவர்களது பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். யுத்தம் நடந்தது. இனப்படுகொலை நடந்தது. சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். பின்னர் அதை கிழித்தெறிந்து விட்டு யுத்தம் செய்தனர். அவ்வாறு தான் அமெரிக்கா முழுவதும் ஆங்கிலேய மயமாகியது.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆக்கிரமிப்புக் கதை, ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய இந்தியாவில் நடந்திருக்கலாம் அல்லவா? அதற்கான ஆதாரம் வேதங்களில் இருக்கிறது. குறிப்பாக ரிக் வேதத்தில், அன்று நடந்த இனப்படுகொலைகள் பற்றி வெளிப்படையாகவே எழுதப் பட்டுள்ளது.

ஆரிய குலத் தலைவனான இந்திரன், எத்தனை ஆயிரம் கிராமங்களை கொளுத்தினான், எத்தனை ஆயிரம் பேரை படுகொலை செய்தான், எத்தனை ஆயிரம் கால்நடைகளை கொள்ளையடித்தான் என்பன போன்ற விபரங்கள் விலாவாரியாக எழுதப் பட்டுள்ளன. இந்திரனால் ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அடிமைகளாக்கப் பட்டனர். ரிக் வேதம் அவர்களை தாசர்கள், அதாவது அடிமைகள் என்று குறிப்பிடுகின்றது.

பிராமணர்கள் (அந்தணர்கள்) தமது "தவறுகளை" உணர்ந்து திருந்தி விட்டார்களாம். அது என்ன "தவறு"? ஜெயராஜ் ஒரு நகைப்புக்குரிய விளக்கம் தருகிறார்: 
//தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட,இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள். இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று. அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து, வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும், பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர்.... அதுவரை தன் சுயதர்மத்தை விடாத பிராமணன்,வெள்ளைக்காரனின் புரட்டை நம்பி அதனைக் கைவிட்டான். வெள்ளைக்காரனைப் போலவே ‘டிப்டொப்பாக டிறஸ்’செய்துகொண்டு,சிகரட் குடிக்கவும் ‘டான்ஸ்’ ஆடவும் பழகிக்கொண்டான். தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட, இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள்.// (ஜெயராஜ்)

கம்ப இராமாயண சொற்பொழிவாற்றும் "அறிஞர்"ஜெயராஜ், இந்தளவு பாமரத்தனமாக எழுதுவது ஏமாற்றத்தை தருகின்றது. நுனிப்புல் மேயும் செம்மறி ஆடுகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா என்ற ஆயாசம் ஏற்படுகின்றது. வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னர், இந்தியாவில் பல நூறாண்டுகளாக இஸ்லாமிய மொகலாயரின் ஆட்சி நடந்தது. அப்போது இந்த பிராமணர்கள் சீரழியவில்லையா? தமது சுயதர்மத்தை கைவிடவில்லையா? ஆரம்ப கால இஸ்லாமிய படையெடுப்புகளின் பொழுது இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட பிராமணர்கள், இன்றைக்கும் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். அங்கேயும் அவர்கள் தான் உயர்ந்த ஆதிக்க சாதி.

உண்மையில் வெள்ளையரின் வருகை, இந்து- பிராமணர்களுக்கு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியது. மொகலாயர் காலத்திலும் பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கப் பட்டன. சில பிராமணர்கள் அரசவை உத்தியோகங்களிலும் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அரசியல், பொருளாதாரம் முழுவதும் முஸ்லிம் மேட்டுக்குடியினரின் கைகளில் இருந்தது. அரசு நிர்வாகங்களில், உள்நாட்டு/சர்வதேச வணிகத்தில் பாரசீக மொழி பேசிய முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆங்கிலேய காலனிய காலத்தில், பிராமணர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தார்கள். ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளுக்கு விசுவாசமாக நடந்து பதவிகளை பெற்றுக் கொண்டனர். இது தக்கன பிழைக்கும் தந்திரம். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடுவதன் மூலம், தன்னலம் சார்ந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளும் தந்திரம். இது கலாச்சார சீரழிவு அல்ல. மாறாக காட்டிக்கொடுக்கும் கபட அரசியல்.

மொகலாயர் காலத்தில், பிராமணர்கள் அவர்களைப் போன்றே நடை, உடை, பாவனைகளை பின்பற்றினார்கள். ஒரு சில விதிவிலக்குகளை தவிர, பெரும்பாலான பிராமணர்கள் மதம் மாறவில்லை. உண்மையில் அதற்கு தேவை இருக்கவில்லை. மொகலாயர்கள் இந்தியா முழுவதும் தீவிரமான இஸ்லாமியமயமாக்கலை நடைமுறைப் படுத்தவில்லை. இந்துக்கள் வரி கட்டி விட்டு தம் பாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டது. இஸ்லாமியர் அல்லாதவர்களை "இந்திய மதத்தவர்" என்ற அர்த்தத்தில், இந்துக்கள் என்ற பெயர் சூட்டியதே மொகலாயர் தான்.

ஆகவே, மொகலாயர் காலத்தில் மொகலாயர் மாதிரி வாழ்ந்த பிராமணர்கள், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் மாதிரி வாழத் தலைப்பட்டதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்து தானே பாவனை செய்து கொள்கிறார்கள்? அதைத் தானே "நாகரிகம்" என்கிறார்கள்? அது வழமை தானே?

நமது "கம்பவாரிதி" ஜெயராஜ், ஆங்கிலேயர் கொண்டு வந்த வாழ்க்கை வசதிகளை பின்பற்றவில்லையா? வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்திற்கு வெள்ளைக்காரன் அறிமுகப் படுத்திய காரில் வந்து பேசி விட்டுப் போகிறார். வர்ணாச்சிரம தர்மப் படி மாட்டு வண்டிலில் வராத படியால், ஜெயராஜ் சீரழிந்து விட்டார், தவறிழைத்து விட்டார் என்று அர்த்தமா?

இந்தியாவில் மன்னராட்சி அல்லது நிலப்பிரபுத்துவம் இருந்த காலத்தில் வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள், எப்போதும் அப்படியே இருந்திருக்க வேண்டுமா? அவர்களும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? கோவணம் மட்டும் கட்டியிருந்த காட்டுவாசிகள், சட்டை, காற்சட்டை போட்டால் அதை நாகரிகம் என்கிறீர்கள். அதே மாதிரி, பிராமணர்களும் நாகரிகம் அடைந்தார்கள். அதிலென்ன தவறு?

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். பிராமணர்கள் வெள்ளையரை பின்பற்றி தம்மை மாற்றிக் கொண்டிரா விட்டால், அவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்திருப்பார்கள். முன்பு கீழே இருந்த சாதிகள், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார்கள். இந்த உண்மை தெரிந்த படியால் தான், "வெள்ளைக்காரன் மாதிரி டான்ஸ் ஆடப் பழகிய" பிராமணர்கள், இன்றைக்கும் மேன் நிலையில் இருக்கிறார்கள். இது கலாச்சார சீரழிவு அல்ல, சமூக அரசியல் மாற்றம்.

(தொடரும்)

samedi 18 février 2017

ஏரியில் வீசப்பட்ட குலந்தை தாயா பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி



மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரி ஒருவர் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். குறித்த குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.

எனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து கொள்ள, பிரதேச அதிகாரிகளால் பாலியல் இலஞ்சமாக பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த பாலியல் வன்கொடுமைகள் இன்னும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கிராமசேவக அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை செய்கின்றனர். ஒரு ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்கு கூட பாலியலை இலஞச்சமாக கேட்கின்றனர். இதில் இராணுவத்தினரும் உள்ளடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படாது.

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு குறித்த பெண்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை. ஆனால் உளவியல் சிகிச்சையளிக்க நாட்டில் போதுமான நிபுணர்கள் இல்லை.

வெளிநாட்டில் இருந்து உளவியல் சிகிச்சை தொடர்பான நிபுணர்களை வரவழைத்தாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படும் என்றார்.

"ஹியு நெவில்" (அறிந்தவர்களும் அறியாதவையும்) என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயர்களுக்கு பெரும் பங்குண்டு. தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிப் பாதுகாப்பது குறித்த பிரக்ஞையையும், ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்து விட்டு சென்றதில் அவர்களுக்கு இருக்கும் வகிபாகத்தை நாம் மறுக்க முடியாது.

இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாக நிறுவும் இனவாத போக்கிற்குக் கூட ஆதாரங்களை பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடித்தந்துவிட்டுச் சென்ற ஆதாரங்களில் இருந்து தான் புனைகின்றனர் என்பதை கவனித்தல் அவசியம். அந்த வரிசையில் ஹியு நெவில் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவை. புராதனம், அரசியல், வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்களுக்கு அவை அதி முக்கியமானவை.

1848 ஜூன் 19இல் பிறந்த ஹியு நெவில் (Hugh Nevill) 17வயதில் பிரதம நீதிபதியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்ற இலங்கைக்கு வந்து சேர்ந்தவர். பணிபுரிந்த காலப்பகுதியில் இலங்கை நிர்வாக சேவையில் லிகிதராகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதவானாகவும், திருகோணமலை அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருக்கிறார். 1865 – 1897 க்கு இடைப்பட்ட 35 வருட காலத்திற்குள் அவர் இலங்கை முழுவதும் தேடி கண்டு பிடித்த பல ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்தார். மொத்தம் 2227 ஓலைச்சுவடிகள் அதில் அடங்கும். சிங்களம், தமிழ், பாளி மொழிகளில் அவை உள்ளன. இலங்கையின் வரலாறு பற்றி அதுவரை அறியப்படாத அரிய பல உண்மைகள் அதன்பின்னர் ஸ்தூலமானது.

சிங்களவர்களின் வரலாறு மட்டுமல்ல மருத்துவம், கலை இலக்கியம் குறித்தும் பல குறிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக அவர் இந்த ஓலைகளை நம் நாட்டவர்களுக்கு விட்டுச் செல்லவில்லை. அவர் அத்தனையையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பிரான்சுக்கு கொண்டு சென்றார்.

10.04.1897 இல் அவர் பிரான்சில் மரணமானார். 1904 ஆம் ஆண்டு அவர் தொகுத்த ஓலைச்சுவடிகளை பிரிட்டிஷ் நூதனசாலை விலைக்கு கொள்வனவு செய்தது. அவை சிங்களவர்களின் ஓலைச்சுவடித் தொகுப்பு (Catalogue of the Hugh Nevill Collection of Sinhalese Manuscripts in the British Library) எனும் பேரில் அல்லது “Hugh Nevill collection” எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. Or. 6606 (54) and Or. 6606 (139) ஆகிய இலக்கங்களின் கீழ் அவற்றை அங்கு காண முடியும். இவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான அனுசரணையை பிரிட்டிஷ் நூலகம் வழங்கி வருகிறது. ஓலைச்சுவடிகளை பட்டியல்படுத்தி விளக்கும் இரண்டு தொகுதி நூல்களை அவர் எழுதியிருந்தார். ஆனால் அது வெளிவருவதற்குள் அவர் மரணமானார். பின்னர் கே.டி.சோமதாச அவற்றைக் கொண்டு ஏழு தொகுதிகளாக பாளி எழுத்துச் சங்கத்தின் மூலம் (Påli Text Society) வெளியிட்டார்.

அண்மையில் பிரபல சிங்களத் தேசியவாதியான நளின் த சில்வா “நெவில் கொண்டுபோய் சேர்த்த நமது ஓலைச்சுவடிகளை பிரித்தானிய மகாராணியிடம் பேசி மீளப் பெற்றுத் தருவாரா ஜனாதிபதி மைத்திரி” என்று வினவியிருந்தார் அவரது இணையத்தளத்தில். (09.09.2016)

இலங்கை பற்றி மட்டுமல்ல, இந்தியா பற்றியும், சிங்களவர்கள், தமிழர்கள் பற்றியும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்ததில் அவரது பாத்திரம் முக்கியமானது. இவற்றைக் கொண்டு நெவில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இன்றும் வரலாற்றாளர்கள் பலர் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையில் இந்த ஆதாரங்களை அவரவர் தத்தமகேற்றாற் போல் பயன்படுத்தி வருவதை பல நூல்களின் வாயிலாகவும், கட்டுரைகளின் வாயிலாகவும் அறிய முடிகிறது. குறிப்பாக இது சிங்கள பௌத்த நாடு தான் என்பதைப் புனையவும் கூட நெவில் கண்டெடுத்த இந்த ஆதாரங்களில் உள்ள தமக்கு வசதியான பகுதிகளை மாத்திரம் திரித்துப் பரப்புவதை நிறையவே காண முடிகிறது. அதுமட்டுமன்றி மத்திய கால சாதிகள் பற்றியும், காப்பிலி இனத்தவர், பறங்கியர், வன்னி மக்களின் அரசு (பனையோலைச் சுவடிகள்) மற்றும் அம்மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்தும், வேடுவர்கள் பற்றியும் எழுதும் பலரும் கூட நெவிலின் தொகுப்புகளை கையாள்வது வழக்கம்.

அவர் கண்டெடுத்த ஒலைச்சுவடிகளில் 931 சுவடிகள் கவிதை வடிவத்திலானவை. அவற்றை பிற்காலத்தில் பீ.ஈ.பீ.தெரணியகல “சிங்கள கவி” என்கிற பெயரில் வெளியிட்டார்.

இவற்றில் “இலங்கையில் போர்த்துக்கீச கிரியோல் மொழி சுவடிகள்” என்கிற ஆய்வு (the Sri Lanka Portuguese Creole Manuscript) முக்கியமானவற்றுள் ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலத்திலும் அதற்குப் பின்னரும்  (16-19 நூற்றாண்டுகள்) சுமார் 350 வருடங்கள் இந்த கிரியோல் மொழி இலங்கையின் மூன்றாவது மொழியாக இருந்து வந்திருக்கிறது. பறங்கி மொழி என்றும் அழைப்பார்கள். இந்த சுவடிகளில் 1,049 சுவடிகளை மொழிபெயர்த்த ஷிஹான் டீ சில்வா அவற்றை மூன்று பகுதிகளாக வகுத்தார்.

1. மட்டக்களப்பு போர்த்துகீச பாடல்கள்
2. போர்த்துகீச கப்ரிங்கா பாடல்கள் (நீக்ரோ பாடல்கள்)
3. ஓர்சோன், வேலன்டீனா கதை

இவை இன்றும் கலை வடிவங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பாடாசலைகளில் வரலாற்று பாடநூல்களில் நெவில் மற்றும் அவரது வகிபாகம் பற்றியா விபரங்களும் கற்பிக்கப்படுகின்றன. க.பொ.த பரீட்சை வினாத்தாள்களிலும் அவர் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றன.

அனுராதபுரத்தில் எல்லாளனின் சமாதிக்கு நேர்ந்த கதி என்ன என்பது குறித்து தொல்பொருள் -வரலாற்றாசியர்கள் பலருக்கு இடையில் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்களில் நெவிலின் ஆவணங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. 

இவற்றிலுள்ள உண்மைகளை காய்தல் உவத்தலின்றி வெளிக்கொணரவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ் அறிஞர்களுக்கு உண்டு.

மகாவம்சத்தில் வரும் எல்லாளன் – துட்டகைமுனு போரில் எல்லாளனைக் கொன்று ஆட்சிபுரிந்து பின்னர் இறந்த துட்டகைமுனுவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த சர்ச்சை இன்றும் பல விவாதங்களுக்குள் சிக்கியுள்ளது. அந்த சர்ச்சைகளுக்கு ஒரு காரணம் நெவிலின் கண்டுபிடிப்பும் கூட. நெவில் கண்டுபிடித்தவற்றில் சிங்கள நாட்டுப்புற பாடல்களில் இது பற்றி அறியக் கிடைக்கின்றன. 

துட்டகைமுனு நான்கு நாகக்கன்னிகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் அதனால் திசாவெவ பகுதியில் நாகம் தீண்டி விஷமேறி துட்டகைமுனு இறந்ததாகவும் மரபுவழி வந்த நாட்டுப்புற சிங்களப் பாடல் ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டுள்ளது. சிங்களவர்களின் புனிதக் காவியத் தலைவனாக போற்றப்படும் துட்டகைமுனுவின் இறப்புக் காரணத்தை ஒழித்து மறைத்து விட்டு ஏனைய இனங்களுக்கு எதிரான கருத்துகளை மட்டும் கையாளும் போக்கே இன்று எஞ்சியுள்ளது.

இலங்கை குறித்து ஆய்வு செய்தவர்களிலேயே ஒரு பல்துறை சார்ந்த ஆய்வாளராக ஹியு நெவில்  ஒருவரையே குறிப்பட முடியும். மானுடவியல், தொல்லியல், தாவரவியல், இனப்பண்பாட்டியல், நாட்டுப்புறக் கதைகள், புவியியல், நிலவியல், வரலாறு, புராணம், பாளிச்சுவடித்துறை, வரலாற்றாய்வின், மற்றும் விலங்கியல் என அனைத்து துறையிலும் அவர் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். எனவே தான் அவரது கண்டுபிடிப்புகளும் இத்தனை ஆளுமையையும் உள்ளடக்கிய பலமான மூலமாக இன்று நம்மிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது

vendredi 17 février 2017

ரஐனிகாந் சசிகலாவிற்கு உதவி

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவுக்கு கைதி எண் 9,234 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 9,235 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.
இப்படித் தானே நமக்கு செய்திகள் வந்தது   ஆனால் சசி தரப்பு ரஜினி செல்வாக்கை பயன் படுத்தி அத்தனை வசதிகளும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.
சசிக்கும் இளவரசிக்கும் ஒரே அறை, தியானம் செய்ய தனி இடம், குளிர்சாதன வசதி, அசைவ உணவுகள் என ஹோட்டலில் தங்குவது போன்ற எல்லா வசதிகளையும் ரஜினி சிபாரிசு மூலம் கிடைத்து விட்டது என்கிறார்கள்.
நாம் தான் முட்டாளாக இருக்கிறோம்

jeudi 16 février 2017

கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி


தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி அவ்வப்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய அவரது டுவிட்டர் பதிவில்,
“திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும்
நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால்
ஜனமாவது நாயகமாவது” என்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் இவ்வாறு பதிவு செய்திருப்பது சரியாக மக்களுக்கு தெரியாத வகையில் இருப்பதை தொடர்ந்து மக்களுக்கு புரியும் வகையில் டுவிட் செய்கிறேன் என்று மீண்டும் அந்த கருத்தை சென்னை வழக்கு சொல்லால் பதிவிட்டிருந்தார்.
“திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானம
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?”
கமலின் ட்விட் புரியாததால் ட்வீட் பக்கத்தில் அவரை பின்தொடரும் வாசகர்களே அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளனர். “திருடின்னு தீர்ப்பு வந்ததும் துரத்திருக்க வேண்டாமா, நின்னு நிதானமா சபதம்லாம் போட்டு மெல்ல கௌம்புதுனு ஆதங்க படுறார் தலைவர்..” என்று கமலின் டுவிட்டை விளக்கி தெரிவித்துள்ளார்கள்.

5.7 கோடி சொத்து ஊழள் வழக்கில் உள்ளே இருக்கும் எடப்பாடி மகன்

சுமார் 5.7 கோடி  இந்திய ரூபாய் மற்றும்  போலி ஆவணங்கள்  மூலம்  சொத்து குவிப்பு  வழக்கு,  இந்தியாவில் பல்வேறு  பகுதிகளில்  கட்டட  ஒப்பந்த நிறுவனங்களின்  பங்குதாரராக  உள்ள எடப்பாடி  பழனிச்சாமியின்  மகன்  நிதி  மோசடி  வழக்கில்  உள்ளே இருக்கிறார், அதைவிட  ஜாதி வெறியர்  என வர்ணிக்கப்படும்  எடப்பாடி  ஹரிஜன  மக்களை  பல இடங்களில்  துன்புறுத்தி  அவர்களை அடக்கி ஒடுக்கிய  குற்றச்சாட்டுகள்  பரவலாக  உள்ள நிலையில், தமிழ் நாட்டில் மீண்டும்  வேதாளம் முருங்கை மரம் ஏற இருக்கிறது, இனி  எத்தனை விக்கிரமாதித்தர்கள்  வந்தாலும்  முருங்கை மரமும்  வேதாளமும்  இருந்து கொண்டேதான்  இருக்கும்?
    நன்றி.வரதன் கிருஸ்ணன்

ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்துவோம்

குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதுவரை தர்ம யுத்தம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசி குரூப் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
We should stop the party and the ruling going to settle in a family : OPS
அப்போது மக்கள் விரும்பும் ஆட்சி தொடரும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றார். ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.

ஈழத்தினுடனான இரு பெரும் நாடுகளான இந்தியா சீனாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள ஆதிக்கம்

தென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது,  இந்தியாவை அதன் கொலனியான சிறிலங்காவை விட்டு விலகியிருக்குமாறு கூறுவதன் மூலம், இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை சீனா நிலைநிறுத்தி வருகிறது.
ஆசியாவின் இரு பெரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாட்டை தென்கிழக்காசிய சந்தைகளின் முதலீட்டாளர்கள் தமது கவனத்திற் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. ஏனெனில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் பூகோள அரசியல் ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால் இது தொடர்பில் முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தமிழ்ப் புலிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக 2007ல் இராணுவ மற்றும் இராஜதந்திர சார் உதவிகளை வழங்கியதிலிருந்து சிறிலங்கா மீதான சீனாவின் கொலனித்துவம் ஆரம்பமாகியது.
இதனைத் தொடர்ந்து சிறிலங்காவில் பல்வேறு பாரிய கட்டுமாணத் திட்டங்களை மேற்கொள்வதற்கு உயர் வட்டி வீதத்துடன் கூடிய கடன்கள் சீனாவினால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டன. இக்கடனை சிறிலங்காவினால் திருப்பிச் செலுத்த முடியாததால் தனது துறைமுகம் ஒன்றை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இத்துறைமுகமானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய மையமாக உள்ளது.
இந்தியாவைச் சீனா சுற்றிவளைக்கின்றது என்பது இந்தியாவிற்கு ஒரு கெட்ட செய்தியாகும். ‘இந்தியாவிற்கருகிலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகங்களில் சீனா கால் பதிப்பதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என அமெரிக்காவின் வெளிவிவகார இராஜதந்திரியான ஜெப் எம் ஸ்மித் எழுதியுள்ளார்.
சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகத்தைத் தனது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான எவ்வித திட்டமுமில்லை என சீனா மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளது.
ஆனால் கடந்த கால நிகழ்வுகள் இதனை உறுதி செய்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சில தடவைகள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன. இதனை இந்தியா பலமாக எதிர்த்தது.
‘இந்தியாவைப் பொறுத்தளவில், சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் திடீரெனத் தரித்து நின்ற சம்பவம் தாங்கிக்  கொள்ள முடியாததாகக் காணப்படுகிறது.
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல்களில் 70 சதவீதம் இந்தியாவிற்குச் சொந்தமானதாகும். இந்நிலையில் சீனா சிறிலங்காவில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக புதுடில்லி மிகவும் அதிருப்தியுற்றுள்ளது’ என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நின்று ஒரு சில வாரங்களின் பின்னர் ராஜபக்சவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது, கடல் சார் உடன்படிக்கையின் கீழ் இவ்வாறு வேற்று நாட்டுக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பாக சிறிலங்கா தனது அயல்நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக நினைவுபடுத்தினார்.
ஆனால் அதே நீர்மூழ்கிக்கப்பல் மீண்டும் நவம்பர் 2014ல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது இந்தியா மேலும் அதிர்ச்சியுற்றது.
தனது கொலனித்துவமான சிறிலங்கா தொடர்பில் தான் எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளேன் என சீனா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. அதாவது சீனா, சிறிலங்காவில் இரு வேறுபட்ட விடயங்களை மேற்கொள்ளவுள்ளது.
ஆகவே இந்தியா, சீனாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது சீனாவின் திட்டத்திற்கு ஏற்ப இந்தியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வழிமூலம்       – Forbes
ஆங்கிலத்தில்  – Panos Mourdoukoutas
மொழியாக்கம் – நித்தியபாரதி

கருனா தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று உதயம்.

இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ணபுதிய அரசியல் கட்சி தொடங்கிய கருணா அம்மான்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது
தனது கட்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய கருணா அம்மான் ''தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும் '' என்கின்றார். 

''13 வது அரசியல் யாப்பு திருத்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவே பிரிக்கப்பட்டமை தூரதிர்ஷ்டமானது. எனவே தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு இணைந்ததாகவே இருக்க வேண்டும் '' என்றும் வலியுறுத்தி கூறுகின்றார்.
''தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இணக்கப்பாட்டுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமது கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் '' என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் 10 வருடங்களுக்கு முன்னதாக அந்த அமைப்பிலிருந்து வெளியேறியிருந்தார்.
வடக்கு - கிழக்கு இணைந்த தலைமை வேண்டாம் . கிழக்குக்கு தனித் தலைமை வேண்டுமென அவ் வேளை தெரிவித்திருந்த அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார் .
சில வருடங்களின் பின் அக் கட்சியின் தலைமை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வசமானது.
கருணா அம்மான் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார். அக் கட்சியில் உப தலைவர் பதவியும் தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு கிடைத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்த அவர் தற்போது ஆட்சி மாறிய நிலையில் மகிந்த ராஜபக்ஸவுடனே தொடர்புகளை கொண்டிருந்தார் .
சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

mercredi 15 février 2017

புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதற வைப்பவை.

தமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்:
குறிப்பாக நினைத்த ஹீரோயின் நினைத்த இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள்.
ஒரு புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதற வைப்பவை.
படம் எடுக்க பினாமிகள் மூலம் பணம் கொடுப்பதும் பணம் கொடுக்க தாமதமானால் அந்த குடும்பத்துப் பெண்களைப் படுத்தும் பாடும் பகீர் ரகம்.
தமிழ் சினிமாத்துறையினர் சசிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் பட்டக்கஷ்டங்களை மனம்குமுறி  இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர்.
திருமண மிரட்டல், சொத்துக்காக மிரட்டல் என்பதையும் தாண்டி, சசியின் குடும்பத்தின் ஆண் பொறுக்கிகள் பெண்கள் விஷயத்தில் செய்த பொறுக்கித்தனம் ஏராளம்.
தினகரன், வெங்கடேஷ், திவாகரன் தொடங்கி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரை நடிகைகளுக்கும், இளம் பெண்களுக்கும் கொடுத்த டார்ச்சர் ஏராளம்.
‘கில்லி’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜை போல, ஒரு பெண்ணை (நடிகையை) தனக்கு பிடித்து விட்டால் அவரை ஒரு முறையாவது அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவர் இளவரசியின் மகன் விவேக்.
பல முன்னணி நடிகைகளே  இந்த பொறுக்கிகளால் பாதிக்கப்பட்டனர் என்றால் மற்ற சாமானிய பெண்களின் பட்டியலை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு தொடைஅழகி சொந்தப் படம் எடுத்தார். படம் எடுக்க அந்த மதுரை பினாமி மூலம் பல லட்சங்கள் கடன் வாங்கினாராம்.
படம் முடிய கொஞ்சம் காலதாமதம். அதற்குள் வட்டி எகிறியது. படம் வெளியாகி படு தோல்வி. நடிகை கலங்கிப் போனார். பினாமியிடம் இருந்து அழைப்பு.
பயந்து நடுங்கியபடி போனார் நடிகை. இழுத்து ஒரு அறையில் தள்ளி உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி உட்காரவைத்து விட்டது அடியாள் கும்பல்.
அவரது வீட்டிற்கு  தகவலும் போனது. பணம் பைசல் பண்ணிட்டு கூட்டிப் போங்க என்று.
தாய்க்குலம் அலறியபடி எங்கெங்கோ கையேந்தி பிச்சை எடுத்து பணம் புரட்டி கொண்டுபோய் கொடுத்து மகளுக்கு ஆடை கட்டிக் கூட்டிக்கொண்டு போனார்.
அத்தோடு அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டு ஓடியே போனார்.
இன்னொரு குடும்பப் பாங்கான ஹீரோயினும் தனது காதல் கணவர் சொந்தபடம் எடுப்பதற்கு மன்னார் அன்ட் கம்பெனியில் வட்டிக்கு வாங்கி படம் படுத்துக் கொள்ள, அதே நிர்வாணக் கோலம்.
கணவர் கதறி அழுதும் பயனில்லை. அதன் பின் புலன்களை விற்று பணம் புரட்டிக் கொண்டு போய் கொடுத்து ஆடை உடுத்தச் சொல்லி மனைவியை கூட்டி போனார்.
அந்த நடிகையும் இப்போது சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு ஓடிப் போனார்.  இப்படி நிறைய சொல்கிறார்கள்.
இத்தனை நாட்களும் வெளிய சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது திரு.ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான சசி எதிர்ப்பு செயல்களால் நேரிடையாகவும், வெளிப்படையாகவும் தங்களது பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

mardi 14 février 2017

கர்நாடக அரசு மேல் முறையீடு செய்து தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


சசிகலாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா நடராஜன் மற்றும் அவரது மைத்துனி இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹாவால் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.லிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டில் 2015ம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தார்.


ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாயக் சந்திர கோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் , இன்று செவ்வாய்க்கிழமை, அளித்த தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ச்சிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
மேலும், அவர்கள் அனைவரும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட நான்காண்டு கால சிறைத்தண்டனையையும், 10 கோடி ரூபாய் அபராதத் தொகையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


சசிகலா மற்றும் இளவரசிபடத்தின் காப்புரிமைKASHIF MASOOD
Image captionநீதிமன்றத்திற்கு செல்லும் சசிகலா (வலது) மற்றும் இளவரசி (இடது) - கோப்புப்படம்

ஜெயலலிதாவுக்கு என்ன தீர்ப்பு ?
ஜெயலலிதாவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டவராக இருந்தும், அவர் இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு நின்று போகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ஆனால் அவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூபாய் 100 கோடியை அவரது சொத்துக்களிலிருந்து எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக செய்திகள் கூறுகின்றன.
தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி




தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி
நன்றி..பிபிசி