jeudi 31 mai 2012

தமிழர் யார்? சிங்களவர் யார்? இந்துக்கள் யார்? பவுத்தர்கள் யார்? பாப்பனன் யார்? பிக்குக்கள் யார்?சம்மந்தன் கூரிய காளி கதைக்கும் .எல்லாவெல மேதானந்த தேரர் புத்தர் கதைக்கும்.கூட்டமைப்பு செய்யவேண்டியது யார்? யார்?மேதானந்த தமிழ் வந்தேறு குடிகளாம்


இந்தியாவில் இருந்து வந்த, குடியேறிகளான தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? வடக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
எனவே இலங்கையின் வட பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது. 
நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். 
யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார். கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது. 
நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும். 
பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது. அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்? 
துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது. 
பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள், இலங்கையின் எந்தப் பகுதியையுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதையே நிரூபிக்கின்றன. என்று தெரிவித்துள்ளார்.தமிழர் யார்? சிங்களவர் யார்? இந்துக்கள் யார்? பவுத்தர்கள் யார்? பாப்பனன் யார்? பிக்குக்கள் யார்?சம்மந்தன் கூரிய காளி கதைக்கும் .எல்லாவெல மேதானந்வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையாம வரலாறு தெரியாது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர் ,நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.

ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள்த தேரர் புத்தர் கதைக்கும்.கூட்டமைப்பு செய்யவேண்டியது யார்? யார்?மேதானந்த தமிழ் வந்தேறு குடிகளாம் ....

mardi 29 mai 2012

மக்கள் ஆர்ப்பாட்டம் ..... அரசிகள் வாதிகள் ஆர்ப்பாட்டம்.தமிழ் கைதிகள் விடுதலை கோரி கொழும்பில்

சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜேவிபியினர் மேகொண்ட கிளர்ச்சியையடுத்து, கைது செய்யப்பட்டு பொது மன்னிப்பின் மூலம் சிங்கள அரசியல் கைதிகள் விடுதலை செய்தது போல இவர்களும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
தமிழ் சிங்கள் அரசியல் கட்சிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜ கட்சியின் தலைவர் கருணாரட்ன விக்கிரமபாகு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சி;வாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பலரும் அரசியல் கைதிகளாக இருந்த சிங்கள இளைஞர்கள், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள அரசு தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குவதற்கு முன்வராமலிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்கள்."http://www.youtube.com/embed/LrFj1S-1pFI"
தெரிந்த சிறைச்சாலைகளிலும், தகவல் எதுவும் தெரியாத வகையில் இரகசிய தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என குறிப்பிடாமல் அவர்களைத் தமிழ் அரசியல் கைதிகளாகவே குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறே அவர்களை நடத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஜப்பான், பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள்

ஜப்பானின் இரு கடற்படை கப்பல்களும் பாகிஸ்தானின் ஒரு கடற்படை கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.  இந்த கப்பல்கள் இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
ஜப்பானின் “ IKAZUCHI” என்ற கப்பல் 151 மீற்றர் நீலமும் 4,550 தொன் நிறை உடைய, 180 படையினரை தாங்கியதாகும். ஜப்பானின் “SAWAGIRI” என்ற மற்றைய கப்பல் 137 மீற்றர் நீலமுடையதுடன் 3,550 தொன் நிறையுடைய 190 படையினரை கொண்டதாகும்.
சீனாவில் இருந்து திரும்பும் வழியில் கொழும்பு வந்துள்ள “Azmat” என்ற பாகிஸ்தானில் கடற்படை கப்பல் 63 மீற்றர் நீலமுடையதுடன், 631 தொன் நிறை கொண்டதும், 77 படையினரை தாங்கியதுமாகும்.
இந்த இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுடனும் மேல் மாகாண கடற்படை தளபதி ரியர் அத்மிரால் டி.எஸ்.உடவத்த சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜப்பானிய கப்பல்கள் நாளை 29ம் திகதியும் பாகிஸ்தான் கப்பல் எதிர்வரும் 31ம் திகதியும் கொழும்பு துறைமுகத்தில் இருந்து தங்களது நாடுகளை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

தனிநாடு கோரி மேலும் இரு திபெத்தியர்கள் தீக்குளிப்பு

திபெத் தனிநாடு கோரிக்கையை வலுயுறுத்தி நேற்று இரண்டு திபெத்தியர்கள் மீண்டும் தீக்குளித்துள்ளனர்.
முதன்முறையாக திபெத்தின் டுயாயளய எனும் நகரில் தீக்குளித்த இவ்விருவரில் ஒருவர் இறந்த போதும் மற்றையவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திபெத்தினுள் நடைபெற்ற இரண்டாவது தீக்குளிப்பு சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.
சீனாவிடமிருந்து திபெத்தை தனிநாடாக பிரிக்க கோருவதே தீக்குளித்து தமது உயிரை மாய்ப்போரின் பிரதான நோக்கமாக இருப்பதாக திபெத்தின் கம்யூனிச கட்சியின் தலைவர் ஹாவோ பெங் தெரிவித்துள்ளார்.
லாஹாசாவின் மிக பிரபலமான ஆலயத்தின் முன்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என்பது போன்று சீன  பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த பிரதேசம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து திபெத்தை பிரிக்க கோரி கடந்த ஒரு வருடத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாய்ந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் பௌத்தமத துறவிகள் என்பதுடன் திபெத்துக்கு வெளியேயே பலர் தீக்குளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1950ம் ஆண்டு திபெத் மீது இராணுவ ஆக்கிரமைப்பை மேற்கொண்ட சீன அரசு 1959ம் ஆண்டு அந்நாட்டை தன்வசமாக்கியதுடன், சீனாவின் ஒரு அங்கமே திபெத் என அறிவித்தது. அதை தொடர்ந்து திபெத்திலிருந்து வெளியேறிய அந்நாட்டின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தா.ர்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?

பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள்
தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், வடயங்களையும் நாம் ஆராய வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது எனும் செய்தி வெளியாகிய நாள்முதல் இம் மாநாட்டுக்கு மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்பு இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இன்று சில இணையத்தளங்கள் பிள்ளையான் குழுவினர் மாநாட்டை குழப்ப சதி செய்தனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. இது முற்று முழுதான உண்மையல்ல என்பதனை மட்டக்களப்பு மக்கள் அறிவர்.
உண்மையில் இன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே முதலமைச்சர் பிள்ளையான் மீது நம்பிக்கையும் ஒரு பற்றும் இருக்கின்றது. காரணம் அவரது அயராத உழைப்பும் கிழக்கின் துரித அபிவிருத்தியுமாகும். இன்று எந்த ஒரு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றாலும் முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைத்து விடுவார்கள். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கின்றது.
மறு புறத்திலே கிழக்கில் ஒரு தனித்துவ கட்சி இருக்கின்றபோதுதான் கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனையும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய அதிருத்தியில் மட்டக்களப்பு மக்கள் இருந்தனர். பல அமைப்புக்கள் இம் மாநாட்டினை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்ததுடன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கறுப்பு கொடி போராட்டத்தினையும் நடாத்தி இருந்தனர்.
தமிழரசுக் கட்சியினர் தமது மாநாட்டை தேவநாயகம் மண்டபத்திலே நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மட்டக்களப்பு மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை படிப்படியாக உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சியினர். மாற்று வழிகளிலே தமக்கு ஆதரவு தேடவும் முன் வந்திருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் மாநாடு இடம்பெற இருந்த தேவநாயகம் மண்டபம் தீப்பிடித்து மேடைப்பகுதி எரிந்தது. இது மாநாட்டைக் குழப்ப சிலர் சதி செய்வதாக கூட்டமைப்பினர் கூறினர். சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம். பெரிதுபடுத்தி அறிக்கைகளைவிடும் கூட்டமைப்பினர் இத் தீப்பிடித்த விடயத்தினை சாதாரண விடயமாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிலர் சதி செய்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர்.
மட்டக்களப்பில் தமக்கு ஆதரவு இல்லை என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர். ஆதரவு தேடுவதற்கு தாம் மேற்கொண்ட யுக்தியே மண்டபத்தின் மேடைப்பகுதி எரிப்பு. இது கூட்டமைப்பினர் திட்டமிட்டு செய்த செயலாகும்.
உடனடியாக மாநாடு இடம்பெறும் இடம் மட்டக்களப்பு ஊறணி அமேரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 27ம் திகதி மாநாடு இடம்பெற்றது. இம் மாநாடு வெற்றியா? தோல்வியா? பாரிய வெற்றியாக கூட்டமைப்பினர் மார் தட்டிக் கொள்கின்றனர்.
உண்மையில் வெற்றியா? அமேரிக்க மிஷன் மண்டபத்தில் 300ர-400 பேர்தான் இருக்க முடியும். இம் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும், திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும், அம்பாறையிலிருந்து ஒரு பஸ்ஸிலும் கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் , திருகோணமலை, அம்பாறை மாவட்ட்ளிலிருந்து வருகை தந்தவர்கள் ஒரு பஸ்ஸில் 50 பேர் வீதம் பார்த்தால் 250 பேர். தனிப்பட்ட வாகன்களிலும் பலர் மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். அதனைவிட கொழும்பு மற்றும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அதனைவிட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் 50 மேற்பட்டவர்கள்.
மொத்தமாக மண்டபத்தில் 300-400 பேர் மட்டுமே இருக்க முடியும் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தாலே மண்டபம் நிநை்துவிடும். ஆனாலும் மாநாட்டை குழப்ப வந்ததாக கூட்டமைப்பினர் கூறும் மண்டபத்திற்குள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் 50 க்கும் குறைவானவர்களே எனது களுதாவளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை களுதாவளைக் கிராமத்திலிருந்து மாநாட்டுக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டுமே. கனகசபை மற்றும் இன்னொருவர். இந்த மாநாட்டின் உப தலைவரான கனகசபை தனது சொந்தக்காரர்களைக்கூட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு களுதாவளையில் இருந்து சென்றவர்கள் 374 பேர். இவர்களை யாரும் வற்புறுத்தி அழைக்கவில்லை தாமாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள்.
கறுப்புக் கொடிகள் கட்டியது துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டது பிள்ளையான் குழுவினர் என்று யோகேஸ்வரன் சொல்கின்றார். அப்படியானால் மட்டக்களப்பு மக்கள் ஏன் மாநாட்டுக்கு வரவில்லை. மாநாட்டை புறக்கணித்தனர். பிள்ளையான் சொல்வதனை கேட்கின்றனர். பிள்ளையானின் பக்கம் மட்டக்களப்பு மக்கள் நிக்கின்றார்கள் அல்லவா?
இந்த மாநாடு தோல்லியா வெற்றியா என்பதனை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்ததனை வைத்தே தீர்மானிக்கலாம். இம் மாநாடு மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்டுவிட்டனர் என்பதனை பறை சாற்றுகின்றன.
இறுதியாக யோகேஸ்வரனிடம் ஒரு கேள்வி உங்கள் ஊரிலிருந்து எத்தனைபேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர் என்று சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

ராகுல் மக்கள் சேவகர் பேரவை சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரிய பணியகத்துக்குப் பின்புறம்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

ராஜிவ்கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், மூவருக்கும் மரணதண்டனை விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

ஈழத்தமிழர் அவலத்தை எடுத்துரைத்த தோழர் சி.மகேந்திரன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக உறவுக்கான பொறுப்பாளர் ஜாக் பாத் [Jacques Fath National Council member, executive committee and national coordination of the PCF, responsible for international relations] அவர்களை நேற்று [27- 05-2012 ஞாயிறு] மதியம் சந்தித்து உரையாடினார். 

பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு உரையாடலின் போது ஈழத்தமிழர்களின் அவலம், மற்றும் அனைத்துலக அரசியல் நிலை, இந்தியாவின் சமூகப்பிரச்சனைகள், பிரெஞ் தேர்தல் என்பன முக்கியத்துவம் வகித்தன."ஈழத்தமிழர் அவலம், அரசியல் தீர்வு என்பவற்றை அறிவதில் ஆர்வம் காட்டிய பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகப் பொறுப்பாளர் ஜாக் பாத்தும் ஈழ நிலைமைகள் குறித்து விளக்கமான அறிவைக்கொண்டிருந்தார் என்பது தனக்கு ஆச்சரியமாகவும், திருப்தியாகவும் இருந்தது. அது தனது பணியை இலகாக்கியது" என 'புதினப்பலகை'யிடம் தெரிவித்தார் தோழர் சி.மகேந்திரன். 

மேலும் ஈழநிலைமைகள் குறித்து ஜாக் பாத்துக்கு விளக்கமளிக்கையில், 

"இன அழிப்பு என்பதனை இலங்கை அரசு சுதந்திரத்திற்கு பின் தொடர் நிகழ்வாக பின்பற்றி வந்திருக்கின்றது. இதற்கு உதாரணமாக இலங்கையின் மக்கள் தொகையை கணக்கிட்டு சொல்ல முடியும். 

சதவீத அடிப்படையில் தமிழினம் மிகப்பெரிய அளவில் அழிக்ப்பட்டுள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழ்மக்களுக்கு எதிரான ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை அரசியல் சட்டம் உருவாக்கி வைத்திருக்கின்றது. இலங்கை இதற்கேற்றவாறு சிங்கள பெளத்த தேசம் மாற்றிக்கொண்டது. இந்த பின்னணியில்தான இலங்கை பிரச்சனையை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான அரசைியல் இருப்பை முற்றாக நிராகாரித்து விட்டது. சட்டங்களை இயற்றி எந்த பயனையும் நாடாமன்றத்தின் மூலம் பெற முடியவில்லை. அதேபோல முழு இலங்கையின் இராணுவம் காவல்துறை என்பவற்றில் தமிழ் மக்கள் இடம் பெறுவதை இல்லாமல் தடுத்துவிட்டது. 

ஈழத்தமிழ் மக்கள் இதை எதிர்த்துதான் புதிய அரசிலையும் போராட்டத்தையும் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள. 

முள்ளி வாய்க்கால் படுகொலையின் பின் ஒரு புதிய தேவை எழுந்துள்ளதாக இந்திய கம்யுனிஸட் கட்சி உணர்ந்துள்ளது. தேசிய இன ஒடுக்குமுறை கொள்கைகளை முதலில் வலுவாக்கிய பெருமை கம்யுனிஸட் கட்சிகளுக்கு உண்டு. 

உலக மயமாக்க பின்னணியில் தொன்மையான மொழிகளும் கலாச்சாரங்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கம்யுனிஸட் கட்சிகள் உலக அளவில் ஒன்று பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பின்னணியில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை கம்யுனிஸட் கட்சிகள் கூர்ந்து ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்" எனத்தான் மேலும் விளக்கமாகத் தெரிவித்தாகவும் தோழர் சி.மகேந்திரன் 'புதினப்பலகை'யிடம் பகிர்ந்து கொண்டார். 

ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதிலும், ஐரோப்பிய இடதுசாரிகளை இடையே கருத்துருவாக்கம் ஏற்படுத்துவதிலும் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்தொற்றுமை இருந்ததாகவும் மகேந்திரன் தெரிவித்தார். 

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகம் மூடப்படும் வழமையை கொண்டிருந்த போதும் தோழர் சி.மகேந்திரன் வருகைக்காக செயலகம் திறக்கப்பட்டதும், சந்திப்பு உரையாடல் செயலகத்திலேயே இடம் பெற்றது என்பதும், பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் உரையாடலில் பங்கேற்றார் என்பதும் கம்யூனிஸ்ட்களின் தோழமையை எடுத்துக்காட்டியது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் துணைச் செயலர் தோழர்.சி.மகேந்திரன். 

பதினைந்து நாள் பயணமாக ஐரோப்பா வந்திருந்த தோழர் சி.மகேந்திரன் தனது பயணத்தின் இறுதி நாளில் ஒருநாள் பயணமாக பிரான்சிற்கு வருகை தந்திருந்தார். இந்த ஒருநாள் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியை சந்திக்கும் ஏற்பாட்டை குறுகியநாள் இடைவெளியில் ஏற்பாடு செய்வதில் President of Larmes de Paix [Tears of Peace] அமைப்பின் தலைவரும், பல்கலைகழக மாணவனுமான அன்ரன் ஜோனாஸ் கடுமையாக உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரினவாதி சரத் பொன்சேகாவுடனான தொடர்பு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லையாம் மண்டயன் பிரேமசந்திரன் .

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான தொடர்பு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

   சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

   அரசியலில் தமது வகிபங்கு குறித்து சரத் பொன்சேகா இன்னமும் தெளிவான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   சரத் பொன்சேகாவின் தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.

   கடந்த வாரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திலேயே கூட்டமைப்பு கூடுதல் கவனம் செலுத்தியதாகவும், சரத் பொன்சேகா விவகாரம் பற்றிய கவனிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசியல் உரிமை கேட்டு மக்கள் போராடும் காலம் மிகவிரைனவில் நடைபெற்றாலாம்

சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது.மஹிந்தவின் ஆட்சி

அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது. என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலிகள் இருந்த காலக் கட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம். ஐ. நா. வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடமையை அரசு பாதுகாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
யுத்தத்தின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. 

மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல் , தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம் பெற்றன. இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.

முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டது. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது.

அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது. உள் நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைபு காண்பிக்கப்படவில்லை.

நம் தாய் நாடு இதை விட கீழ் மட்டத்திற்கு மண்டியிட வேண்டுமா? எனவே தற்போதைய அரசே இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டும். அது மட்டுமன்றி அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

dimanche 27 mai 2012

சம்பந்தன் அன்று சிங்க கொடியுடன் வரவில்லை

மட்டக்களப்பில் இன்று தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டம்.  சம்பந்தன் கொடியை ஏற்றினார். சம்பந்தன் கொடியை ஏற்றுவது சிங்க கொடியா அல்லது தமிழரசுக்கட்சி கொடியா என பலரும் பார்த்தனர்.
ஏற்றிய கொடியை பார்த்த போது அது சிங்க கொடி போல இருந்தால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அது சிங்க கொடி அல்ல. தமிழரசுக்கட்சி கொடிதான் என பின்னர் தெரியவந்தது.
தமிழரசுக்கட்சி மாநாட்டிற்கும் சம்பந்தன் தனது விருப்பத்திற்குரிய சிங்க கொடியை கொண்டு வந்து ஏற்றுவாரோ என மட்டக்களப்பில் உள்ள ஏற்பாட்டாளர்கள் குலைநடுக்கத்தில் இருந்தனர்.
ஒருவாறு சம்பந்தன் இன்று சிங்க கொடியுடன் வரவில்லை என்பதால் ஏற்பாட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார் என சம்மந்தரைப்பார்த்து கிண்டல் செய்த்துள்ளனர்
  • யாழ்ப்பாணத்தில் யானைகளுடன் சேர்ந்து தான் மேதின ஊர்வலம் செய்வது என்று அறிக்கை விட்டவர்கள்யார்? 
  • யார் பின்னனியில் சிங்கக்கொடி திணிக்கப்பட்டது ? 
  • இன்று அரசு கொடுக்கும் பணத்தை சில பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பது யார்?http://www.youtube.com/embed/ACfJsvRYH14"

samedi 26 mai 2012

அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் குற்றச்சாட்டுகள்

சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
வொஷிங்டனில் நேற்று முன்தினம் காலை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 44 பக்க அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு 
இலங்கை பல கட்சி அரசமைப்பைக் கொண்ட குடியரசு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஜனவரியில் இரண்டாவது ஆறாண்டுப் பதவிக்காக மீளத் தெரிவு செய்யப்பட்டார். 
அரசமைப்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடாளுமன்றம் 2010 ஏப்ரலில் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை அரசில் ஜனாதிபதி குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. 
ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் பாதுகாப்புச் செயலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என முக்கியமான இரண்டு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர். மூன்றாவது சகோதரர் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கிறார். 
ஜனாதிபதியின் மகன் உள்ளிட்ட பெருந்தொகையான அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கின்றனர். 
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டுமே எல்லா பிரதான கட்சிகளாலும், தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட மோசடியானதாகவே இடம்பெற்றன. 
பெருமளவு அரச வளங்கள் ஆளும் கூட்டணியால் தேர்தல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது. 
அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் செயற்படுகின்றன. இந்தக் குழுக்களால் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன. குடியியல், சமூக செயற்பாட்டாளர்களும், விடுதலைப் புலிகளின் அனுதாபிகளெனக் கருதுவோரும் துன்புறுத்தப்படுகின்றனர்.
 ஊடகவியலாளர்கள் சுயதணிக்கையை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. 
இன்னொரு முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை காணாமற்போனவர்கள் விவகாரம்.
முன்னைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ள போதும் அதற்குப் பொறுப்புக் கூறப்படவில்லை. படையினர் தடுப்பிலுள்ளோரை சித்திரவதை செய்து துன்புறுத்துகின்றனர். சிறைச்சாலைகளின் மோசமான நிலை தொடரும் பிரச்சினையாகவே உள்ளது. 
அதிகாரிகளால் பொதுமக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். அரச படைகளாலோ பொலிஸ் துறையாலோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு எண்ணிக்கையிலானோர் விசாரணை சூழலில் மரணமாகியுள்ளனர். 
நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. உண்மையான நீதி மறுக்கப்படுவது ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
நீதித்துறைக்குள் நிறைவேற்று அதிகாரத் தலையீடுகள் உள்ளன. விதிகளை மீறும் வகையில் பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுகிறது. 
கருத்து வெளிப்பாட்டு _தந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, ஒன்றிணையும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
தீவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வரக்கூடிய நிலை உள்ளபோதும், வடக்கு, கிழக்கில் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் பரந்தளவில் உள்ளன. 
உயர்பாதுகாப்பு வலயங்களும் இருக்கின்றன. பொதுமக்கள் செல்வதற்கு தொடர்ந்தும் தடுக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றனர். சுயதணிக்கை பரவலாக உள்ளது.
18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் சுதந்திரமான ஆணைக்குழுக்கள் மற்றும் அரசமைப்பு சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியே பெற்றுள்ளார். 
இதற்கு நாடாளுமன்றத்தின் ஆலோசனை கேட்கலாமே தவிர, அனுமதி பெற வேண்டியதில்லை. 2010 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நீதியற்ற வகையில்  தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசு செல்வாக்குச் செலுத்தத்தக்க விதத்தில் நடந்ததாக சந்தேகங்கள் உள்ளன. 
வெளிப்படைத் தன்மையின்மை அரசின் முக்கியமான மோசமான பிரச்சினை.
வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாகுபாடும் பிரச்சினையாக உள்ளன. 
சிறார்கள் தவறாக நடத்தப்படுவதும், ஆட்கள் கடத்தப்படுவதும் பிரச்சினைகளாக உள்ளன.
உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு எதிரான சிறுபான்மைத் தமிழ்ச்சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட எண்ணிலடங்காத தமிழர்கள் உள்ளனர். 
தொழிலாளர் உரிமைகளும், சிறார் தொழிலாளர் பிரச்சினைகளும் உள்ளன. 
மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகக் குறைந்தளவிலான அதிகாரிகளையே அரசு சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.
ஆனால், மோதல்களின் போது அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறிய எவருமே பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. 
பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்கள், குறிப்பாக பொலிஸாரின் சித்திரவதைகள், ஊழல், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அதிகார பூர்வமாகத் தண்டிப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களே கொலைகள், தாக்குதல்கள் பொதுமக்கள் துன்புறுத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்துள்ளனர். 
அவர்களுக்கும் அரச படைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. இப்படி அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது