lundi 30 septembre 2013

குண்டு வைக்க ரூ.24 கோடி திடுக்கிடும் தகவல்

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.
டெல்லி ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு போன்று நாடு முழுவதும் ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் டெல்லி, மங்களூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன. இதற்கு ஆகும் செலவு மற்றும் நாடு முழுவதும் சென்று தீவிரவாத திட்டங்களை வகுப்பது போன்றவற்றுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் இந்த அமைப்புக்கு பணம் வழங்கப்பட்டது.
இதற்கு இந்தியா, நேபாளம், சவுதி அரேபியா, துபாய் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் உதவியாக இருந்துள்ளன. இதற்காக யாசின் பெயரில் பாங்கியில் தனி கணக்கு தொடங்கப்பட்டது. இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பில் இருந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.24 கோடியை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெற்றுள்ளது. இந்த பணம் கராச்சியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பாகிஸ்தானில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இக்பால் பகத், ரசாக் பகத் மற்றும் அவர்களது குழுக்கள் மூலம் இந்தியா வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்...! - வாசு

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை மத்திய அரசாங்கம் முழுமையாக தன்வசம் வைத்திரு க்காது, மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக் கூடியதொரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம்முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துணிகர பேச்சு பொலிவியா ஜனாதிபதி .ஐ.நா. சபையை மாற்ற வேண்டும். அமெரிக்க மண்ணில் நின்று (வீடியோ)

அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

இதில் பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் புதன்கிழமை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-உலகில் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் அளித்து வருகிறது. ஊழலையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா உதவவில்லை. மேலும் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டியும், அகங்காரத்துடனும் நடந்து கொள்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதே போல் அமெரிக்கா வான் எல்லையில் மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது. அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் அமெரிக்காவில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை.முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். இது பற்றி நாம் கண்டிப்பாக மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் இந்த துணிகர பேச்சு ஐ.நா. சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டமைப்பு பதவிப்பிரமாணம் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம்


யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும்.

ஆனால் மாகாண அமைச்சர்கள், முதலமைச்சரின் முன்பாக பதவியேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

dimanche 29 septembre 2013

மகேந்தா ராஜபட்சா அல்சிரா விடியோ செய்தி

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. 

இதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

ஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது. 

ஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

எனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார். 

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார். 

தொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தமது பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

பாகிஸ்தானில் இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில்6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

mercredi 25 septembre 2013

திடீர் தீவு!பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில்


பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (24) ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற் கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியு ள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் திடீரென இத்தீவு அதிசயமாக தோன்றியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சித் திணைக்களத்தின் பொதுப்பணி ப்பாளர் ஆரிப் மஹ்மூத் கூறுகையில்,

'பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் அரேபியக் கடலில் ஒரு சிறிய தீவொன்று தோன்றியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 

சுமார் 9 மீற்றர் உயரமும் 100 மீற்றர் அகலமானதுமான இத்தீவினை பார்ப்பதற்கு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடுவதாக க்வதார் உயர் பொலிஸ் அதிகாரி உம்ரானி கூறியுள்ளார். 

நேற்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டது. இதில் இதுவரையில் 238 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது - காசி ஆனந்தன் (வீடியோ இணைப்பு)

தொடர்ந்து குறிவைப்பது ஏன் சிறிலங்காவை?ஐ.நா பொதுச்சபையில் மகிந்த

உள்நாட்டு விவகாரங்களில் சில வெளிநாடுகள் தலையிட முனைவது குறித்து, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “பாதுகாப்பு, மனிதஉரிமைகள் என்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. 

அனைத்துலக அனுமதியுடன், இந்தக் கடமைகளை ஆற்றுவதற்கு ஐ.நா பணிக்கப்பட்டிருக்கும் சூழலில், இதுபோல சில நாடுகள் அனைத்துலக அரங்கில் காவல்காரன் வேலை பார்ப்பது தேவையற்றது. 

வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற காரணங்களைக் காட்டி, சில நாடுகள் தலையிட்டு வருவது கவலையளிக்கிறது. 

பல்வேறு கலாசாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முனைவது பெருங்குழப்பத்தையே விளைவிக்கும். 

இத்தகைய தலையீடுகளால் இந்த நாடுகளில் மேலதிக  உறுதிப்பாடு ஏற்பட்டு விடவில்லை. 
தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவில் இப்போது நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

வடமாகாண மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று தெளிவாகத் தெரியும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், ஐ.நாவுடன் சிறிலங்கா இணக்கமாகச் செயற்படும் நிலையிலும், சிறிலங்காவை சில நாடுகள் அனைத்துலக அரங்கில், ஐ.நாவின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி, குறிவைப்பது சரியானதா? 

சிறிலங்காவுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய அழுத்தங்கள் பல நாடுகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 

இதுபோன்ற விவகாரங்களில் சமமற்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ஐ.நா விழிப்புடன் இருக்க வேண்டும். 

முப்பதாண்டு கால உள்நாட்டுப் போர் மற்றும் சுனாமி போன்றவற்றையும் தாண்டி, சிறிலங்கா, வளர்ச்சி இலக்குகளை எட்டியிருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

mardi 24 septembre 2013

வடக்கு மாகாண முதல்வர் பதவிக்கு வரும் முன்னரே.....? ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள்

அடுத்து ஆடப் போகிறார்ஓங்கி அடித்து!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்துதமிழ் தேசியக்கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின்பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன்வடக்கு மாகாணத்தின்முதல்வராக போகிறார். அடுத்து என்ன? இனித்தான் இருக்கிறது திருவிழா!தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டியஅரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது,கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டுஇருக்கப்போகிறதுஅதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்குபழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.சகித்துக்கொள்வது நல்லது. தேர்தலில் ஜெயித்து 24 மணி நேரம்முடிவதற்கு முன்னரே விக்னேஸ்வரன், “இலங்கை அரசுடன் இணக்கமாகமுறையில் செயல்பட்டு ஆட்சி செய்வோம்” என்றார்.
தமிழ் தேசிய அரசியலில் இது கெட்ட வார்த்தை!
போதும் போதாதற்குஇலங்கை அரசின் பொருளாதார அபிவிருத்திஅமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வடக்கில் வெற்றி பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயாராக இருக்கின்றது” என்றுதெரிவித்தார். “இலங்கை அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆட்சிசெய்வோம்” என்பதுதான்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்பாதையும்கூடடக்ளஸ் தேவானந்தா கூறியதற்கு காச்மூச் என்றுகூச்சலிட்டவர்களின் காதுகளில்இப்போது வந்து பாய்ந்திருக்கிறது,விக்கினேஸ்வரனின் ‘இணக்க அரசியல்’ ஸ்டேட்மென்ட்.விக்கினேஸ்வரனின் ‘இணக்க அரசியல்’ பாணியைஇதுவரை காலமும்தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால்சகித்துக் கொள்வது நல்லது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன்,யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்லகொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில்பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும்சிங்கள பகுதியானகுருணாகலவில் வசித்தவர். அதன்பின்வசித்ததுமற்றொரு சிங்களநகரமான அனுராதபுரகல்வி கற்றதுகொழும்பு ராயல் கல்லூரி.தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்களவி.ஐ.பி.களுடனும்அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணிவாழ்ந்தவர். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில்அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழாகொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர்,விக்கினேஸ்வரன்.
புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களே” எனதமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின்மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில்,விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லைஅப்போது ‘கண் சிவந்ததமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்கு ‘மண் சிவக்க’ சிவப்புகம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி. இதை எத்தனை பேர் கவனித்தார்கள்என்று தெரியவில்லை. இதையெல்லாம்இதுவரை காலமும் தமிழ் தேசியஅரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்றுதெரியவில்லை. ஆனால்சகித்துக்கொள்வது நல்லது.
கடந்த ஆண்டு, “இலங்கை கல்லூரி ஒன்றின் கால்பந்து டீம் வீரர்களுக்குதமிழகத்தில் விளையாட அனுமதி இல்லை. அவர்களை உடனேவெளியேற்ற வேண்டும்” என்று உத்தரவிட்ட தமிழக முதல்வர்ஜெயலலிதாஅவர்களுக்கு விளையாட அனுமதி அளித்த நேருவிளையாட்டரங்க அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார். அதற்குஎன்னகாரணமாம்? இலங்கை கல்லூரி கால்பந்து டீம் வீரர்கள் துப்பாக்கி எடுத்துதமிழர்களை சுட்டுக் கொன்றார்களா? அல்லது தமிழக அரசுக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? இல்லைஇலங்கையின் சிங்களபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து வந்த கால்பந்து அணியாம்அதுஆமா சார்.. புரட்சித் தலைவி புறமுதுகோட வைத்த இலங்கைமாணவர் கால்பந்து அணிஎந்தக் கல்லூரியை சேர்ந்த அணி என்பதுஎத்தனை பேருக்கு தெரியும்? கொழும்பு ராயல் கல்லூரிநாசமாப் போச்சு!விக்கினேஸ்வரன் கல்வி பயின்றஅதே ராயல் கல்லூரி!”
மிழகத்துக்கு புனித யாத்திரை வந்த சிங்களர்களைசீறும் சிங்கங்களாய்களத்தில் நின்று சிதறடித்துபெண்கள்குழந்தைகள் உட்பட ஓட ஓடவிரட்டிதமிழர் தன்மானம் காத்து சரித்திரத்தில் பெயர்பெற்றார்கள்சீமான்படையணிவைகோ படையணி உட்பட இன ஆர்வலர்கள். சிதறியோடியசிங்கள பெண்களும் குழந்தைகளும் யார்? இலங்கை யுத்தத்தில் துப்பாக்கிதுடைத்தார்களா? தோட்டா நிரப்பினார்களா? அல்லது அங்கு போர் புரிந்தசிங்கள ராணுவ வீரர்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தார்களா?இல்லையாம்அவர்கள் சிங்களர்களாம்அதனாலேயே விரட்டிஅடிக்கப்பட்டார்களாம்!
விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பதுஇருசிங்கள பெண்களை. ஒரு மருமகள்இலங்கை அரசின் தற்போதையஅமைச்சர்வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள்,முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும்பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள். ஆமாண்ணே..இலங்கை தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதல்வர்விக்கினேஸ்வரனின் இரு மருமகள்களும் தமிழகம் வந்தால்என்னாகும்?இதையெல்லாம்இதுவரை சிங்களர்களுக்கு எதிராக தமிழகத்தில்வாள்வீசி பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்றுதெரியவில்லை. ஆனால்சகித்துக்கொள்வது நல்லது.
வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றிஇலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷே என்ன சொல்கிறார்? “வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படிஇருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராகவிக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம்,என்னதான் தமிழராக இருந்தாலும் அவர்தென் பகுதியில் சிங்களர்களுடன்ஒன்றாகஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர். வடக்கு மாகாணத்தை ஆட்சிசெய்ய போகிற அவர்எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும்கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில்எனக்கும்அவர் தூரத்துச் சொந்தம்” என்கிறார்இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே.என்ன சோதனை இது சரவணா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே வீட்டில்விருந்துண்ண சென்றாலே, ‘ஒட்டுக்குழு’ என்று முழங்கும் தமிழ் தேசியஅரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால்இந்த ‘கூட்டுக் குடும்பத்தைசகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லைஆனால்,சகித்துக்கொள்வது நல்லது.
இலங்கையில், 1970களில் இருந்து நடந்த தமிழ் தேசிய அரசியல்,விக்கினேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம்,வரவேற்கத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது. இலங்கை அரசுடன் விரோதப்போக்கை வளர்த்துக்கொண்டு அரசியல் செய்துஓட்டு பெறுவதே 30ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த அரசியல் ட்ரென்ட்.விக்கினேஸ்வரன் அப்படிப்பட்ட அரசியல் செய்பவர் அல்ல என்று நாம்இப்போது சொன்னால்நீங்கள் நம்ப தயங்கலாம். ஆனால்அதைத்தான்விரைவில் காணப் போகிறீர்கள்.எதை எடுத்தாலும் இலங்கை அரசுடன்மோதிக் கொள்வது ட்ரென்ட்டில் இருந்து முதல் தடவையாக விலகிஅரசியல் செய்யும் ஒருவர்வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் ஆவது,வரவேற்கத்தக்க மாற்றம்.
தமது எண்ணங்களை பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லும் நபராகஉள்ளார் முதல்வர் விக்கினேஸ்வரன். இலங்கையில் நடைபெறும்காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும்” என்றுவெளிப்படையாக கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளகூடாது என்று கூறும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அது கசப்பாகஇருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலானபிரச்சனைஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனைபோன்றதுஅதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாதுநாங்கள்அடித்துக்கொள்வோம்பிறகு கூடிக்கொள்வோம்” என்றும் கூறினார்விக்னேஸ்வரன்.(இதே கூற்றைத்தான் தேசியத் தலைவர் பிரபாகரனும் பிரேமதாஸாவுடன் உறவு கொண்டபோது கூறினார் என்பது மேலதிக் தகவல்)
அந்த கூற்று பெரிதாக விமர்சிக்கப்படவேஅதற்கு விளக்கம் கொடுத்தவிக்கினேஸ்வரன், “தமிழ் – சிங்கள பிரச்சினையை கணவன் – மனைவிஉறவு என்று நான் சொல்லவில்லை. மாறாக தமிழீழம் தொடர்பாகதமிழகத்தில் இருந்து எழும் குரல்கள், ‘மணவிலக்கு’ செய்யும்படிநிர்ப்பந்திக்கின்றன என்றுதான் வர்ணித்தேன்” என்றார்.
ஆகா.. நம்ம எதிர்ப்பு கண்டு பயந்துகவிழ்ந்து விட்டார் விக்கினேஸ்வரன்என குதூகலித்தார்கள் சிலர்.
விக்னேஸ்வரன் யாரு? இலங்கையின் திறமைசாலி வக்கீல்களில் ஒருவர்.தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர்கள் எட்டடி பாய்ந்தால்அவர்பதினாறு அடி பாய மாட்டாரா? இவர்களுக்கு புரியாமலேயே அவர் பாய்ந்தேவிட்டார் என்பதே சிறப்பு.
தமிழ் – சிங்கள பிரச்சினை கணவன் – மனைவி உறவு என்றுசொல்லவில்லை” என்றவர், “மணவிலக்குக்கு நிர்ப்பந்திக்கிறார்கள்என்றுதான் சொன்னேன் என்றாரே..
அந்த வார்த்தை ஜாலம் எத்தனை பேருக்கு புரிந்தது?
மணவிலக்கு’ பெற வேண்டும் என்றால்இரு தரப்பும் எப்படி இருக்கவேண்டும்? ஆமாங்க.. கணவன் – மனைவியாக’ இருந்தால்தான், ‘மணவிலக்கு’ பெற முடியும். இப்படி சொன்னாலும்அப்படிச் சொன்னாலும்,ஒன்றுதான்.
அதை புரியாமல் குதூகலித்தவர்களை என்ன செய்வது?
சரியான நபர்தான்உரிய நேரத்தில் பதவிக்கு வந்திருக்கிறார். பதவிக்குவரும் முன்னரே ஆட்டத்தை தொடங்கியவர்பதவியில் அமர்ந்தபின்,அடித்து ஆடுவார்… பொறுத்திருந்து பாருங்கள். அடிக்கும் அடியில்தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே பலருக்குரத்த அழுத்தம் எகிறப்போகிறது!
(விறுவிறுப்பு)

முதல் தடவையாக பஸ்களில் பெண் நடத்துநர்கள் நியமிப்பு!

இலங்கையில் முதல் தடவையாக பஸ்களில் பெண்களை நடத்துநர்களாக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவ பொத்தனை வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக நியமிக்கப் பட்டுள்ளார்.சிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியு ள்ளது.

வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகார த்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநரை நியமிக்க வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

vasudevaவட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கான தெரிவித்துள்ளார். ''வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும், எதிர்க்கட்சின் அனைவரும் ஐக்கிய இலங்கையொன்றை உருவாக்குவதற்கான பின்புலத்தையும் அதற்கு தேவையான ஒத்துழைப்​பையும் வழங்க வேண்டும். இதன் போது அரசாங்கம் மற்றுமொரு விடயத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். வட மாகாண சபைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பெரும்பான்மை அதிகாரத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். எனினும் ஒன்றிணைந்த மத்திய அரசாங்கத்தின் இறைமைக்கு அமையவே இவை அனைத்தும் இடம்பெறும்''.

dimanche 22 septembre 2013

விக்கினேசா........... ஏன் அப்பா இந்த ஆப்பு ;தமிழர் பிரச்சினையில் அரசுடன் இணைந்து செயல்படுவோம்: விக்னேஸ்வரன்

Vigneswaran1தமிழர் பிரச்சினையில் ராஜபக்‌ஷே அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, இலங்கை வடக்கு மாகாணத்தில் முதல்வராக பதவியேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இலங்கை வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழர்கள் பெருமளவு நிறைந்த இந்த மாகாணத்தில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 38 இடங்களில் 30-ல் வென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதிபர் ராஜபக்‌ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தோற்கடித்தது. 38 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களில் வென்று இரண்டாம் இடம்பிடித்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓரிடம் கிடைத்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், “தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். இதற்கு அரசுடன் இணைந்துகொள்ளப் போகிறோம் என்பது அர்த்தமல்ல.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாக்குப்பதிவு பிரச்சினையுடன்தான் நடந்தது. இயன்றவரை, தேர்தலை நிறுத்திவிடலாம் என இலங்கை அரசு நினைத்தது. இந்தியாவின் நெருக்கடி காரணமாக வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது” என்றார் விக்னேஸ்வரன்.
13-வது அரசியல் சட்டத்திருத்தம்
இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “இந்தத் தேர்தலில் தெளிவாகவும் துணிச்சலாகவும் முடிவு அளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மக்கள் இருக்க விரும்புபவதையே காட்டுகிறது. இலங்கையில் பாதுகாப்பாகவும் சுயமரியாதையுடனும் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள். தமிழர்களின் கோரிக்கையை ஏற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.  ஆனால்  இனவாத வோட்டு சம்மந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் மக்கள் இருக்க விரும்புபவதையே காட்டுகிறது.என்று பேச்சு ஏன் அப்பா இந்த ஆப்பு 

போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வடக்கு மாகாண சபைத் தேர்தலில்

news
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் 
 வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் ஆறு ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.
வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது.
யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன.
வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது. 

போனஸ் ஆசனங்கள் இன்றி 34 ஆசனங்களுடன் வடமேல் மாகாணத்தில் 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு.மு.

போனஸ் ஆசனங்கள் இன்றிவடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.           மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் எவ்வித போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களை பெற்றுள்ளது.இதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.  

தமிழர் நள் ஆசியுடன் மூன்றாவது சக்தியாக பொன்சேகாவின் கட்சி

முன்னாளர் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் மூன்றாவது சக்தியாக உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக கூடுதலான வாக்குகளை பெற்று மூன்றாவது அணியாக உருவெடுத்த மக்கள் விடுதலை முன்னணியை நான்காம் அல்லது ஐந்தாம் இடத்திற்கு தள்ளியே மூன்றாவது சக்தியாக ஜனநாயக கட்சி உருவாகியுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு கூடுதலாக ஜனநாயக கட்சி வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆசனங்கள் சிலவற்றையும் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

samedi 21 septembre 2013

தொடரும் அப்புக்காத்து அரசியல். தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுத்தருமா....?;சிவா ஈஸ்வரமூர்த்தி

சேர். பொன். இராமநாதன் காலம் தொடக்கம் சம்மந்தன் தலைமையிலானதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் வரை பெரும்பான்மையானதமிழர்கள் அப்புக்காத்துகளிடம் தங்களின் தலைமையைஒப்படைத்துவிட்டு தமக்கு விடிவு வருமாஎன்று காத்திருக்கும் வரலாறுதொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமதுபாராளுமன்ற நாற்காலிகளை நிரப்புவதற்காக தமிழ் மக்களிடம் 'ஆணை'கேட்டுக் கொண்டு தேர்தலில் குதிப்பது இனவாத தமிழ்த் தலைமைகளின்வழமையாகிவிட்டதுதமிழ் மக்களும் தமது பெரும்பான்மையானவாக்குகளை இவர்களுக்கே அளித்து ஆணையை வழங்குவர். இவர்கள்'ஆணையைப் பெற்றுக் கொண்டு சென்று (ஐக்கிய தேசியக் கட்சி)ஆனையிடம்சரணடைந்தமையே வரலாறு. அரசியற் தீர்வுகள்தான்கிடைத்தபாடில்லை. 'ஆனை'யும் 'தமிழ் மக்களின் நண்பேன்டாஎன்றுகூறிக் கொண்டே தன்பாட்டிற்கு அவ்வப்போது கலவரங்களை நடத்திமுடித்ததுதான் கடந்த காலங்களில் நடந்தவை. கடந்த 15 வருடங்களுக்குமேலாக 'ஆனைதனது சவாரியை செய்ய முடியாவிட்டாலும்அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய குழாத்தின்அபிலாசைகளுக்கு தரகு ஏஜண்டுகளாக தமது கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர்.
இராணியின் நம்பிக்கைகுரிய அப்புக்காத்து இராமநாதன் கரங்களில்இருந்து இராணி அப்புக்காத்து பொன்னம்பலத்தார் கரத்திற்கு தமிழ்த்தலைமை மாறியது. பின்பு பொன்னம்பலத்தார் துரோகியாக்கப்பட்டுஅப்புக்காத்து செல்வநாயகம் கரத்திற்கு மாறியது தமிழ் மக்களின்தலைவிதி. இந்த மூன்று தலைமை அப்புக்காத்துக்களும் தமிழ் மக்களின்உரிமைகளை கூட்டுச்சேர்ந்து காட்டிக்கொடுத்தனர். இதனால் தமிழ்மக்களிடம் அம்பலப்பட்ட பெரும் புள்ளிகள் பலர் 1970 களில் பாராளுமன்றத்தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். இப்படியே போனால் எங்கள்யாபேரையும் மக்கள் காலி பண்ணிவிடுவார்கள் என்று அஞ்சிய இவர்கள்கூடிச்சேர்ந்து 'தனி நாடுஎன்று மக்களிடம் ஆணையைக் கேட்டு தேர்தலில்நின்றனர். அப்புக்காத்து அமிர்தலிங்கங்களும் அமோக வெற்றியைஈட்டினர்.
வழமை போல் 'ஆணை'யை மறந்து 'ஆனை'யிடம் மண்டியிட்டு மாவட்டசபையை ஏற்றனர். இவர்களின் வேகம் காணாது என்று இவர்களால்உசுப்பேத்தப்பட்ட இளைஞர்களும் ஆயுதத்தை தூக்கி இவர்களுக்குதுரோகிகள் பட்டத்தைச் சூட்டினர்;. தொடர்ந்து மக்களை நம்பி மக்களைஅணி திரட்டிய போராளிகள் பிரபாகரன் என்ற 'மேதகு'வினால்;துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து 'தேசியத் தலைவர்'என்று தனக்கு தானே பட்டத்தைச் சூட்டி தமிழ் மக்களை ஏதேச்சாதிகாரமாகசிறைப்பிடித்து போர் முனையின் முன்னரங்கத்தில் பலியிட்டார்.எஞ்சியவர்கள்முள்ளிவாய்கால் வரை சாய்த்துச் செல்லப்பட்டுபலிகொடுக்கப்பட்டு தானும் உடுக்க உடையின்றி அழிந்து போனார் 'மேதகு'பிரபாகரன். அழிவுடன் அது முடிவுற மீண்டும் எழுந்தது சம்மந்தன்,சுமந்திரன் என்ற அப்புக்காத்து அரசியல்.
இறுதியாக வடபகுதியின் மணம் கூடத் தெரியாத கொழும்பு கறுவாக்காட்டு அப்புக்காத்து தரகரை தேடிப்பிடித்துக்கொண்டு வந்து முதல்அமைச்சருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்அதற்குக் கூறுகிறகாரணம் அவர் 'பென்னம் பெரியநீதவானாக இருந்தவராம். ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனோடு பேசுமளவுக்கு ஆங்கிலம்தெரிந்தவராம். மாகாணசபையின் முதலமைச்சருக்கு அப்படியான படிப்புத்தகுதியும்ஆங்கிலப் புலமையும் உள்ளவர்தான் சரியென்றால் இந்தத்தீவிரத்தை இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது ஏன் காட்டவில்லை என்பதை இங்கு நாம்கவனத்திற் கொள்ளல் வேண்டும்கிழக்கு மாகாண மக்களின் சபைக்குவெறும் ஒரு வாத்தியார் அறிவு மட்டும் போதும் என்று கணக்குப்போட்டார்களா?.
இதேவேளை தமிழர்கள் மத்தியில் நிலவும் போலிவேடதாரித்தனங்களையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு பக்கத்தில் வந்து 'நல்லாத்தான்இருக்குது சரியாகத்தான் சொல்கிறீர்கள்என்று இரகசியமாகச்சொன்னாலும் பிறகு தேர்தல் என்று வந்தவுடன் நித்திரையால்எழும்பினாலும் விளிக்காமலே போய் பாழ் கிணற்றில் விழுபவனைப்போல 'போடு புள்ளடியை வீட்டுக்கு நேரேஎன்று தமது தேசியக்கடமையை நிறைவேற்றி மீண்டுமொரு ஆணையை கூட்டமைப்புக்குவழங்கவே செய்வர்இப்படித்தான் கண்மூடித்தனமாகப் போய்முள்ளிவாய்க்காலில் அவலப்பட வேண்டியேற்பட்டது என்பதைப்புலம்பினாலும் அந்த அனுபவங்களை விரைவாகவே மறந்து மீண்டும் ஒருமுள்ளிவாய்காலை நோக்கி அழைத்துச் செல்லும்கூட்டமைப்புக்காரர்களுக்கு நிபந்தனையற்ற ரீதியில் ஆதரவு வழங்கத்தயாராகவே உள்ளனர்.
தமிழர்களின் ஏமாளித்தனங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளகூட்டமைப்புக்காரர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகள் பரம்பரரைச்சொத்தாக ஆகிவிட்டது. வாரிசு அரசியலையும் தொடருகின்றனர். தமதுபெண்டிர்பிள்ளைகளை பணக்கார வெளிநாடுகளிலும்கறுவாக்காட்டிலும்சுகமாக வாழவைத்துக் கொள்கின்றனர். அதற்குத் தேவையானஉதவிகளையும்சலுகைகளையும் ஆட்சியில் இருக்கும்அமைச்சர்களையும்அதிகாரிகளையும் பின்கதவால் சென்று சந்தித்து எந்தவெட்கமுமில்லாமல் பெற்றுக் கொள்கின்றனர்.  வடக்கில் தமிழ் மக்கள்மத்தியில் மாவீரர்களாக அரசுக்கு எதிரான சவால்களை விட்டு புலிக் கொடிஏந்துவதிலும்தெற்கின் கொல்லைப் புறங்களில் தமது சுயநலதேவைகளுக்காக சிங்கக் கொடி பிடிப்பதலும் இவர்கள் மகாவல்லவர்.
இதேவேளை கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியில் விரட்டும் வல்லமைகொண்ட முற்போக்கான மாற்றுக் கருத்தாளர்களின் அணியையோ,அரசியல் இயக்கத்தையோ காணமுடியவில்லை. தமக்கிடையே ஜனநாயகஅடிப்படையில் ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கமொன்றைக்கட்டியமைப்பதில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள்மத்தியில் அரிதாகவே உள்ளனர். ஆங்காங்கே சபைகள் கிடைக்கையில்முற்போக்கானமாற்றுக் கருத்துக்களை முழங்கும் பல தமிழர்கள்உள்ளனர். இவர்களும் தேர்தல் பந்தயத்தில் வெல்லும் குதிரையில் காசுகட்டத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாமும் களத்தில்இறங்கி சரியான குதிரைகளை வலுவாக ஓட வைக்கும் கடமைக்குத்தயாராக இல்லை. அதற்கு நொண்டிச் சாட்டாக சேறுபடியாத புரட்சிக்குதிரைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இதனாற்தான்தமிழர்கள் மத்தியில் கடந்த 80 வருடகால தேர்தல் அரசியலானதுஉயர்சாதி வெள்ளாள அப்புக்காத்துகளின் தலைமைகளைக்கொண்டதாகவே சுழற்சியில் நடைபெற்றுவருகிறது. 1980க்கும் 1990க்கும்இடைப்பட்ட காலத்தில் அந்தப் போக்கை மாற்றி ஒரு முற்போக்கானஅரசியல் வளர்வதற்கான அத்திவாரததை இடும் நோக்கில் சிலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காமற் போனதேஉண்மை.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்
முப்பது வருடகாலத்து ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை அரசியல்வியாபாரம் ஆக்கும் கூட்டமைப்பை இன்று நிறைத்து நிற்பவர்கள் எந்தக்காலகட்டத்தில் தமிழர்களின் நலன்களுக்காக ஒரு சிறு கல்லைக்கூடநகர்த்தாத அல்லது தம்மை எந்தவகையிலும் அந்தப் போராட்டக்களங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளாதஅப்புக்காத்துக்களுக்கெல்லாம் அப்புக்காத்தான விக்னேஸ்வரனைதற்போது எமது புதிய 'தேசியத் தலைவராகதமிழ் மக்கள் மத்தியில்நிறுத்தியுள்ளனர்இலங்கை அரச துறையில் உயர்பதவி வகித்த இவர்தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுக்கான நீதி எதனையும் வழங்கமுயற்சிக்காதுஏன் இலங்கை மக்களுக்கு பொதுவாக என்று கூடநீதித்துறையில் எதனையும் சாதிக்காத இவர் மற்றொருஅப்புக்காத்துக்கெல்லாம் அப்புக்காத்தாக இருந்த சிவா பசுபதிஇளைப்பாறிய பின் தமிழீழம் பேசியது போலவே இன்று தமிழ் மக்களின்தலைவராக மாறியுள்ளார்அந்த சிவா பசுபதியானவர் இப்போதுஅவுஸ்திரேலியாவில் தமது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டுதமிழீழத்துக்கான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார். சிலவேளைஅவர் தற்போதும் கொழும்பில் வாழ்க்கையை தொடர்ந்திருப்பாரேயானால்அவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கும். யாராயிருந்தாலும்இப்படியான அரை முதுகெலும்பு கொண்ட அப்புக்காத்துகளின்தலைமைகளினால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும்ஏற்படப்போவது இல்லை. இவ்வாறானவர்களின் சட்ட அறிவும்ஆங்கிலப்புலமையும்சிங்களப் பாண்டித்தியமும் ஒடுக்கப்பட்ட மக்களின்நலன்களுக்குப் பயன்படப் போவதில்லை. அதிலும் இவர்கள் பதவியில்ஒட்டியிருந்தவரை இலங்கையை ஆண்ட பேரினவாத அரசுகளுக்குவிசுவாசமாக வால் பிடித்து வாழ்ந்துவிட்டு இப்போது மக்களின்மீட்போனாக தம்மைக் காட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள்தமிழ்மக்களின் தலைமைப் பொறுப்பை இப்படிப்பட்டவர்கள் தமது ஓய்வுகாலபொழுதுகளைப் போக்குவதற்கான களியாட்ட விடயமாக்கஅனுமதிக்கக்கூடாது. அது இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தைஇன்னுமொரு நூறு வருடகாலத்துக்கு பின்தள்ளிவிடும்.(இக்கட்டுரை செப்ரம்பர் மாதம் 15ம் திகதி வெளியானது.)