dimanche 27 septembre 2015

டே.. மச்சி ஜெயலலிதா .சிம்பு .பிரபு தேவா .ஆரியாவா இல்லடா மச்சி நயன்தார.

சேலத்தில் ஜவுளிக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஜவுளிக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள்
பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வயது பையன்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது....வாழ்க தமிழ் நாடு.வழர்க பண்பாடு

samedi 26 septembre 2015

இலங்கையில் மண் சரிவு 5000 குடும்பங்கள் அரசாங்க பாடசாலையில்

நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர்.
மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்தை மலை நாட்டு புதிய கிராம உடகட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மலையகத்தில் சுமார் 5000 குடும்பங்கள் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய குடியிருப்புகளிலே தற்போது வசிப்பதாகவும் அமைச்சர் திகாம்பரம் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு விரைவாக மாற்று வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறுகிறது. bbc

செல்வந்தர்களிடம் இருந்தே இலங்கைக்கு எதிராக யோசனை ! மகிந்த ராஜபக்ச

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 
நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எனது அரசாங்கத்தின் எவ்வித ஒத்துழைப்புகளும் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்ததுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவையின் நடைமுறைகளுக்கு புறம்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டமை இதில் பிரதான காரணமாகும்.
சம்பந்தப்பட்ட யோசனை ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பேரவையின் தலைவரால் விசாரணை நடத்த மூன்று பேரை கொண்ட சுயாதீன குழுவை நியமிப்பதே இது சம்பந்தமான வழமையான நடைமுறையாகும்.
எனினும் இலங்கை தொடர்பில் அப்படியான சுயாதீன குழுவினால் விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இந்த விசாரணையை நடத்தியது. இவ்வாறான முறை நடந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் சுயாதீனம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.
இந்த அலுவலகத்தை நடத்தி செல்வதற்கான நிதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது நிதியில் இருந்து வழங்கப்படுவதில்லை. பல்வேறு மேற்குலக நாடுகளிடம் இருந்த கிடைக்கும் நன்கொடைகள் மூலமே அலுவலகம் நடத்தி செல்லப்படுகிறது.
இந்த மேற்குலக நாடுகளே இலங்கைக்கு எதிரான யோசனையை மனித உரிமை பேரவையில் முன்வைத்தன. அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பெரும்பாலான முக்கிய பதவிகளில் மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் வகித்து வருகின்றனர். அத்துடன் அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மேற்குலக நாடுகளின் பிரஜைகளாவர்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அனைத்து கூட்டத் தொடர்களிலும் ஆணையாளர் அலுவலகத்தின் பதவிகள் உலகின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்ற யோசனைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அந்த நிறுவனத்திற்குள் காணப்படும் மேற்குலக ஆதிக்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இந்த நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக சுயாதீனமான விசாரணையை எந்த விதத்திலும் எதிர்பார்க்க முடியாது.
2014 ஆம் ஆண்டு இந்த விசாரணை நடத்த கொண்டு வரப்பட்ட யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரம், “ஆத்ம கௌரவம் இருக்கும் எந்த நாடும்” இந்த யோசனையில் கூறப்பட்டுள்ள “தலையீடுகளுக்கு” இணங்காது என கூறியிருந்தார்.
மனித உரிமை சம்பந்தமான ஆணையாளரின் அலுவலகத்திற்கு நிதி கிடைக்கும் விதம் பற்றி கேள்வி எழுப்பிய அவர்,
இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றிய நாடுகளின் செல்வந்தர்களிடம் இருந்தே விசாரணைகளுக்கான நிதி கிடைக்குமாயின் அதன் ஆரம்பமே சந்தேகத்திற்கிடமானது என அக்ரம் மேலும் கூறியிருந்தார். 
அதேவேளை தேசிய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என மனித உரிமை பேரவைக்கான இந்திய பிரதிநிதி திலிப் சிங்ஹா கூறியிருந்துடன் பேச்சுவார்த்தை மற்றும் இணக்க நடைமுறையே இங்கு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவும் இந்த விசாரணையை எதிர்த்தது. இந்த யோசனைக்கு பின்னால் இருந்த பலமிக்க மேற்குலக நாடுகள் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்த போதிலும் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 23 நாடுகளே யோசனைக்கு ஆதரவு வழங்கின. இவ்வாறான பின்னணியிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதன் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் “காரம் குறைக்கப்பட்டு”ள்ளது என சிலர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2014 ஆம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி அக்ரம்,
“ இந்த யோசனை மனித உரிமை தொடர்பான பிரச்சினையல்ல அரசியல் தொடர்பான பிரச்சினை” என சுட்டிக்காட்டியமையாது நாம் கேட்கும் இந்த பிரசாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
எவ்வாறாயின் அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதாக எனக்கு புலப்படவில்லை. இவ்வாறான விசாரணை மூலம் போர் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு யோசனை முன்வைக்க மாத்திரமே முடியும்.
அறிக்கையில் அவ்வாறான யோசனையை முன்வைத்துள்ளதன் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய தூரத்திற்கு சென்றுள்ளதை காணமுடிகிறது.
ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஸ்தாபிக்க முடியாது. ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரம் பிரச்சினையாக அமையலாம். நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பெயரில் நிரந்தர போர்க்குற்ற நீதிமன்றம் இருந்த போதிலும் அந்த நீதிமன்றம் தொடர்பான ரோம் இணக்கப்பாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால், அந்த நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இறுதியுமான முறை, சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த இணங்குவதாகும்.
இதனடிப்படையிலேயே போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ஒரே ஒரு செயற்பாட்டு ரீதியான முறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது அறிக்கையில் அவ்வாறான நீதிமன்றத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இந்த அறிக்கையில் காரம் குறைக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாகியுள்ளது.
அறிக்கையில் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரது பெயரும் குறிப்பிடப்படாததன் மூலம் அதன் காரம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை சாட்சியமாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடந்ததாக கூறப்படும் சம்பவங்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினாலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரது பெயரையும் குறிப்பிட முடியாது போயுள்ளது.
அறிக்கையில் சரியான சம்பவங்கள் தொடர்பில் எவரது பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று உணர்த்தும் விதமாக அறிக்கையில் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரிவுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை எண்ணியதை விட கெடுதியானது அல்ல என சிலர் கூறினாலும் அது குறித்து நான் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளேன்.
அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதால், நாட்டின் படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படும் ஆபத்து இல்லை என சில அமைச்சர்கள் கூறினாலும் உண்மை நிலைமை இதற்கு மாறானது.
இலங்கை படையினரை வெளிநாடுகளில் கைது செய்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை அறிக்கையின் 252 பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அறிக்கை தொடர்பான உண்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது முக்கியமானது.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிட்டால், அறிக்கையை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. அப்படியான அதிகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே உள்ளது.
உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படக் கூடிய பாரதூரமான நிலைமையின் போது அல்லாமல்,பாதுகாப்புச் சபை எந்த நாட்டுக்கு எதிராகவும் பொருளாதார தடைகளை விதிக்காது.
எந்த நாட்டுடன் தொடர்புகளை வைத்து கொள்ள வேண்டும் என்று சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமை நாடுகளுக்கு உள்ளது. இதனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எமக்கு எதிராக எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு தலைப்பட்சமான பொருளாதார தடைகளை விதிக்க முடியும்.
அதற்காக அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் நாட்டு மக்களுக்கும் பொருளாதார தடைகளை விதிக்கும் நாடுகளும் இடையில் நிரந்தர பகை ஏற்படும் என்பதால்,
அப்படியான தீர்மானத்தை எடுப்பதில் எப்படியான பலமிக்க நாடாக இருந்தாலும் தீர்மானத்தை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக தன்னிச்சையாக தடைகள் குறித்து எவ்வித அச்சுறுத்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டதில்லை என்பதை கூறவேண்டும்.
எனது அரசாங்கத்துக்கும் சில மேற்குலக நாடுகளுக்கும் இடையில், ஓரளவு முரண்பாடுகள் இருந்தது என்பது உண்மையே. எனினும் எமது பிரச்சினையை புரிந்து கொண்ட முக்கியமான தலைவர்களும் மேற்குலக நாடுகளில் இருந்தனர்.
ஜோன் கெரி அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார தொடர்புகள் சம்பந்தமான குழுவின் தலைவராக இருந்த போது, ஒபாமாவின் அரசாங்கம், மனித உரிமை பிரச்சினைகளுக்கு மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது,
அதற்கு மேல் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களை முன்னிலைப்படுத்தி, இலங்கையுடன் உறவுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஜோன் கெரி,
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், “இலங்கையின் போருக்கு பின் அமெரிக்காவின் வழிமுறைகளை மாற்றுதல்” என்ற தலைப்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் விசேட அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவும் இலங்கையும் மிகவும் நட்புறவுடன் பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக்கொண்டன. அமெரிக்க குடியரசு கட்சியின் அரசாங்கம், இலங்கை தொடர்பில் ஓரளவு மாறுப்பாடான கொள்கையை கொண்டிருந்தது.
சர்வதேச உறவுகள் என்பது மனித உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவதல்ல. அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்வனவுகள், வழங்கும் ஒப்பந்தங்கள், முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்கள் மனித உரிமை பிரச்சினைகளை விட சர்வதேச உறவுகளுக்கு வழிவகுக்கும்.
இதனால், எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்தால், அறிக்கை வெளியிடப்பட்டதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறும் கதையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் ஆட்சியில் இருந்த காலத்தில், பங்குச் சந்தையிலும் இலங்கையின் நீண்டகால திறைசேரி முறிகளிலும் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே அதிகளவில் முதலீடு செய்தது. நான் ஆட்சியை இழந்த பின்னரே, இந்த முதலீட்டாளர்களை தமது பணத்தை திரும்ப எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சியாளர்கள் சில சந்தர்ப்பங்களில், பலமிக்க நாடுகள் கூறுவதற்கு எதிராக செல்ல நேரிடும்.
1952 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுடன் இறப்பர் – அரிசி உடன்படிக்கையை கையெழுத்திட்ட சந்தர்ப்பத்தில், அமெரிக்கா, சீனா கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருந்ததுடன் தடைசெய்யப்பட்டவற்றில் இறப்பரும் அடங்கியது.
எனினும் இலங்கை மக்களுக்கு அரிசி தேவை என்பதால், அமெரிக்காவின் தடையை மீறி, பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தார். இதே விதமாக பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வருவதற்காக சில நாடுகள் கூறுவதை செவிமடுக்காது செயற்பட நேரிட்டது.
ஏதோ ஒரு விதத்தில் எனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இலங்கைக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக பொருளாதார தடைகளை விதித்திருந்தால், அதனை எனது அரசாங்கம் எதிர்நோக்க நடவடிக்கை எடுத்திருக்கும்.
ஐரோப்பாவில் உள்ள பலமிக்க தமிழீழ குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்திய போதிலும் வருடந்தோறும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திகள் அதிகரித்தனவே அன்றி குறையவில்லை.
1930 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், உலகில் கடும் பொருளாதார நெருக்கடி 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
எனினும் இலங்கையில் அவ்வாறான பிரச்சினை இருப்பதாக மக்கள் உணராதபடி எனது அரசாங்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனது அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் குறித்து நான் உண்மையாக பெறுமையடைகிறேன்.
இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் அடங்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்குரியது.
நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளின், சட்ட வல்லுநர்கள், விசாரணை அதிகாரிகளின் பங்களிப்புடன் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
பாதுகாப்பு படைகளின் சில உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அந்த குற்றச்சாட்டுக்கள், இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டம், நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் எமது நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மாத்திரமே விசாரிக்கப்பட வேண்டும்.
எமது வீர தீர படையினர் தமது உயிர்களை பணயம் வைத்து நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க செய்த அர்ப்பணிப்பை நாம் நினைவுக்கூறவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்திர பிரதிநிதியை நியமித்து மனித உரிமை நிலைமையை கண்காணிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனை அர்த்தமற்றது என்பதே எனது உணர்வாகும்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தி 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத சூழ்நிலையில், இலங்கையில் இவ்வாறான அர்த்தமற்றது என்பது எனது நிலைப்பாடு.
இலங்கையில் வழக்காடி தீர்ப்பு வழங்கக் கூடிய வகையில், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய விதத்தில், இலங்கையின் உயர்நீதிமன்றத்தை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்கும் யோசனையும் உள்ளது.
இலங்கை பிரித்தானிய முடியாட்சியின் கீழ் டொமினிக்கன் குடியரசாக இருந்த போது, பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையில் வழக்காடுவதற்கான இவ்வாறான உரிமை இருந்தது. இலங்கை தற்போது சுதந்திரமான நாடு என்பதால், அப்படியான வேலைத்திட்டம் ஒன்றினால், பிரயோசனம் இல்லை.
மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படை அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் அறிக்கையில், 250 பக்கத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டு அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் பதவிகளில் இருந்து நீக்கக் கூடாது.
போர் இறுதிக்கட்ட நடவடிக்கை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்த தரப்பினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டளைச் சட்டங்களை முற்றாக இரத்துச் செய்து விட்டு, சர்வதேச சட்டத்திற்கு இணங்க புதிய பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால், இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது போகும். அத்துடன் சுதந்திரமான நாடு ஒன்று தனக்குள்ள அச்சுறுத்தல்களுக்கு அமையவே பாதுகாப்பு சம்பந்தமான சட்டத்தை உருவாக்க வேண்டுமே அன்றி,
பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சம்பந்தமில்லாத சர்வதேச அமைப்புகளின் பரிந்துரைகளுக்கு அமைய அல்ல.
எனது அரசாங்கத்தினால், நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ், ரொட்னி டிக்சன், டேவிட் கிரோன் மற்றும் போல் நிவ்டன் ஆகிய சர்வதேச சட்ட அறிஞர்கள் போர் சட்டம் தொடர்பில் வழங்கிய சட்ட ஆலோசனைகள் பற்றிய கடிதங்களை ஆராய்ந்து அவற்றை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
சேர் டொஸ்மன் டி சில்வா, அண்மையில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய விபரமான அறிக்கை இங்கு முக்கியமானது.
அத்துடன் அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பும் பதில் அறிக்கையில் அனைத்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
நடைபெற்று வரும் சகல விடயங்களையும் நான், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் இணங்கிய விடயங்கள் எனக் கூறி,
இந்த வேலைத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதை காணமுடிகிறது. சர்வதேச சக்திகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோர் தமது செயல்களை நியாயப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையே அன்றி இது வேறு ஒன்றுமில்லை.
ஐ.நா செயலாளருடன் நான் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், போர்க்குற்ற விசாரணை மற்றும் போர் குற்ற நீதிமன்றம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
துயரங்களை கண்டறியவது தொடர்பான விடயத்தை மாத்திரமே இலங்கை அரசாங்கம், அந்த கூட்டறிக்கையின் ஊடாக ஏற்றுக்கொண்டிருந்தது.
வடக்கில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தலை நடத்துவது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவது,
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது ஆகியன துயரங்களை போக்குவதற்கான நாங்கள் எடுத்த நடவடிக்கையாகும்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விசாரணைக்கு வழிவகுத்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை பேரவையில் உரையாற்றிய இந்திய, கியூபா, பாகிஸ்தான் பிரதிநிதிகள், அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த யோசனையானது,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன் ஏற்பாடாக அமைந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை,
முற்றாக கவனத்தில் கொள்ள தவறியுள்ளதாக கூறியிருந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் விசாரணைகளை இந்த நாடுகள் எதிர்க்க இது காரணமாக அமைந்தது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கின்றேன்.

jeudi 24 septembre 2015

ஐ.நா முன்றலில் இந்தப்படை போதுமா,‘பனைமரத்தில வவ்வாலா, தலைவருக்கே சவ்வாலா’

ஐ.நா முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அடிப்படை வாதத்தால் உள்வாங்கப்பட்டு உறக்க நிலையிருக்கும் அப்பாவிகள் பலர் தமது எஜமானர்களின் வழியைப் பின்பற்றுவது வழமை. அப்பாவிகளைப் பொறுத்தவரை தம்மை வழி நடத்துபவர்கள் என்ன கூறினாலும் அது வேத வாக்கு. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏவலாளிகள் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்தி தமது பிழைப்பை நடத்திக்கொள்வார்கள், அப்பாவிகளை போதை கலந்த உறக்க நிலையில் பேணுவதே இவர்களின் வெற்றி.

 ஐ.நா முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் இவ்வாறான அப்பாவிகளையும் அவர்களை ஏவியவர்களையுமே நினைவிற்குக் கொண்டுவருகின்றன. ஜெனீவாவிற்கு போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜெனீவாவில் முழங்கும் சுலோகங்களில் சில இவை:

'இந்தப்படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா'

'பனைமரத்தில வவ்வாலா, தலைவருக்கே சவ்வாலா'

புலிக் கொடிகளுடன் செந்தமிழில் முழங்கிய காட்சி 'கண்கொள்ளாக் நாடகக் காட்சி'! இனி வரும் காலங்களில் காத்தவராயன் கூத்து, சூரன் போர், அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற கலைகளையும் ஐ.நா முன்றலில் அரங்கேற்றுவார்கள்.

தமிழில் முழங்கும் இச் சுலோகங்களுடன் ஆங்கில முழக்கங்கள் மேலும் 'விஞ்ஞானபூர்வமானவை'.

'எங்கள் நிலம் தமிழீழ, எங்கள் தலைவர் பிரபாகரன்'

பல்வேறு இழப்புக்களையும் விலைமதிக்க முடியாத தியாகங்களையும் தன்னகத்தே கொண்ட ஈழப் போராட்டத்தை கொச்சப்படுத்துவதற்கு என்றே இவர்கள் செயற்படுகிறார்கள். ஐ.நா முன்றலைக் கேலிக்கூத்தாக்கிய பெருமை இவர்களைச் சாரும்.

தமிழர்களால் நடத்தப்படும் சொகுசு பஸ்களில் பணம்கொடுத்து ஜெனீவா செல்லும் அப்பாவிகளை அவர்களது ஏவலாளிகள் போதை கலந்த உறக்க நிலையில் வைத்திருக்கிறார்கள். ஏவலாளிகளில் பலர் கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதில்லை. பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டியே புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்.

ஜெனிவாத் தெருக்களில் உலாவவிடப்ப்பட்டுள்ள அப்பாவிகளை மேலும் உறக்க நிலையில் வைத்திருந்து உணர்ச்சிவயப்படுத்த சினிமாப் பிடித்து தோல்வியடைந்த இயக்குனர்கள் உட்படப் பலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், இந்து அடிப்படைவாதிகளுக்கும் இணையான ஒரு குழுவை தம்மோடு இணைத்துவைத்திருக்கும் இந்த பிழைப்புவாத ஏவலாளிகளின் ஒரே நோக்கம் வியாபாரம் மட்டுமே.

அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு, வன்முறை, அடிப்படைவாதம், புலிகளின் அடையாளங்கள், பிரபாகரன் ஆகியவற்றின் ஊடாக ஏனைய போராடும் உலக மக்களிடமிருந்து தமிழர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்திய இந்த ஏவலாளிகளிடமிருந்து போர்க்குணமுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அர்த்தமுள்ள போராட்டங்களை நோக்கி மக்கள் வழிநடத்தப்பட வேண்டும்.                                                                                                                               ...இனியோரு...

ஐ.நா. அறிக்கையில் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை

ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள்.  இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்   இனப்படுகொலை பற்றி நிரூப்பிக்க வேண்டுமானால், 1958 முதல் 1983 வரையில் நடந்த கலவரங்களை, இனப்படுகொலை என்று காட்ட வேண்டும். “இனக் கலவரம்” என்று சொல்லப் படுவது உண்மையில் இனப்படுகொலை தான். அது தான், இலங்கையின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தியது.
இந்த இடத்தில், மற்ற நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இலகுவாகப் புரியும். ஜெர்மனியில் ஒரு காலத்தில், யூதர்கள் எந்த இடத்திலும் வசிக்க முடியாமல் தேடித் தேடி அழிக்கப் பட்டனர். துருக்கியில் வாழ்ந்த ஆர்மேனிய மக்களின் நிலைமையும் அதுவே. ருவாண்டாவில் ஹூட்டு இனத்தவர்கள், துட்சி இனத்தவர் ஒருவர் விடாமல் தேடிக் கொன்றார்கள்.
அது தான் இனப்படுகொலை. தென்னிலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரம் மட்டுமல்ல, குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்றனவும், இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. ஈழப்போரின் முடிவில் நடந்த படுகொலைகளை, 1958 முதல் நடந்து வரும் இனப்படுகொலையின் தொடர்ச்ச்சியாக கருத வேண்டும்.
ஆனால், தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், மேற்படி உண்மையை கவனத்தில் எடுக்காமல் பேசுவது ஆச்சரியத்திற்குரியது. பெரும்பாலானவர்கள், புலிகளின் அழிவுக்கு பழிவாங்குவதற்காக, அல்லது ஈழத் தாயகக் கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காக அப்படிப் பேசுவதாக நினைக்க வேண்டியுள்ளது. தமிழ் தேசியம் என்பது ஒரு அரசியல் கொள்கை மட்டுமே. அதுவே உண்மையாகி விடாது.
ஐ.நா. இனப்படுகொலை என்ற சொல்லைப் பாவித்தால் கூட, அது தமிழர்களை தனியான இனமாக அங்கீகரித்ததாக அர்த்தம் அல்ல. கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது. ஆனால், கம்போடியாவில் இனப்படுகொலையால் கொல்லப் பட்டவர்களும், கொலை செய்தவர்களும் ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த கம்போடிய மக்கள் தான்.
ஜெர்மனியில் யூதர்களை தனியான இனம் என்று ஹிட்லர் சொன்னான். அனால், அங்கு யூதர்கள் ஒரே ஜெர்மன் மொழி பேசும் வேற்று மதச் சமூகமாகவே இருந்தனர். ஐ.நா. தமிழரை இனமாக அங்கீகரித்தாலும், அது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் அல்ல. துருக்கியில் நடந்த இனப்படுகொலைக்கு ஆர்மேனியார்கள் நீதி கோருவதற்கும், துருக்கியில் ஆர்மேனியத் தாயகம் கோருவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. (உண்மையிலேயே வட கிழக்கு துருக்கியில், ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.)
ருவாண்டாவில் துட்சிகள் ஹூட்டுகளால் இனப்படுகொலை செய்யப் பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதே துட்சிகள் ருவாண்டாவின் ஆட்சிப் பொறுப்பேற்று, ஹூட்டுக்களை ஒடுக்கியது மட்டுமல்லாது, அயல் நாடான கொங்கோவில் தஞ்சம் கோரியிருந்த ஹூட்டு அகதிகளையும் படுகொலை செய்தனர். அது குறித்து ஐ.நா. பின்னர் வெளியிட்ட “கொங்கோ படுகொலைகள்” பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ஆகையினால், இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொண்டு விட்டால், அது தமிழரை தனி நாடாக அங்கீகரித்து விட்டதாகவோ, அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாகவோ அர்த்தம் அல்ல. இனம், சுயநிர்ணயம் என்பது முற்றிலும் மாறுபட்ட விடயங்கள். உலகில் குறைந்தது ஓராயிரம் மொழிகளைப் பேசும், தனித்துவமான இன மக்கள் வாழ்கின்றனர். ஐ.நா. அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்க முன்வரப் போவதில்லை.
அப்படியானால், எதற்காக ஐ.நா. இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்தது? தமிழர்கள் எப்போதும் இனம், தேசியம் என்று, குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துப் பழகி விட்டார்கள். ஆனால், இருநூறு நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐ.நா. விசாலமான பார்வை கொண்டிருக்க வேண்டும்.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களை மட்டுமே, ஐ.நா. கவனத்தில் எடுத்துள்ளது. அப்போது நடந்த படுகொலை ஏற்றுக் கொண்டாலும், அவற்றை போர்க்குற்றங்கள் என்று வகைப் படுத்தி உள்ளது. ஏன்?
2009 ம் ஆண்டு, பாகிஸ்தானிலும் போர் நடந்தது. தாலிபான் அழிப்பு என்ற பெயரில், பாகிஸ்தான் ஆயிரக் கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது. அதுவும் வேறு மொழி பேசும் வேற்றின மக்கள் தான். ஐ.நா. அதையும் இனப்படுகொலை என்று அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.
அது மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசை வீழ்த்துவதற்கு, அமெரிக்கா படையெடுத்தது. அப்போதும் பல்லாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதே மாதிரி, ஈராக்கில் சதாம் ஆட்சியை அகற்றுவதற்கு அமெரிக்கா படையெடுத்த நேரத்தில், பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப் பட்டனர். ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த இனப்படுகொலைகளையும் ஐ.நா. அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.
இனிமேலும், தமிழர்கள் இனம், தமிழ் தேசியம் என்று குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அது எமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம் ஆகும். இனப்படுகொலையை மறைக்க விரும்பும் சக்திகளுக்கு, நாங்களே துணை போகக் கூடாது. தமிழர்களுக்கு, உலகமயப் பட்ட, விசாலமான மனப்பான்மை அவசியம். அப்போது தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும்.
(கலையரசன்)

இன்றைய நவீன உலகத்தின் அகதி

அகதி……… இன்றைய நவீன உலகத்தின் புதிய பிரச்சனை. ஆதி மனிதன் வறுமை, வறட்சி, வளம் இன்மை காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து தமது வாழ்வை உறுதிப்படுத்தினான். அன்றெல்லாம் நாடுகள் என்ற எல்லைகள் இருக்கவில்லை. எனவே வாழ்வைத் தேடி தடையின்றி? நகரக் கூடியதாக இருந்தது. இன்று நாடுகள், தேசங்கள் என்று எல்லை வகுத்திருப்பதினால் இலகுவில் இடம் பெயர முடியவில்லை. அகதி வாழ்விற்கு பல காரணங்கள் இருந்தாலும் போர்… யுத்தம் என்பனவே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. மக்கள் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து அகதியாகும் போது பாதுகாப்பிற்கு சம அளவில் தமது பொருளாதார நிலைப்படுத்தலைக் கவனித்தில் கொள்கின்றனர். நாடுகளும் தமக்கு குறைந்த கூலியில் ‘பிரச்சனைகள் அற்ற” மனித வளம் தேவைப்படுவதைக் கருத்தில்; கொண்டே அகதிகளை எற்கின்றனர். ஆனால் நாடுகள் மனிதாபிமானம், உதவுதல் போன்ற கோஷங்களையே முன்னிலையில் வைக்கின்றனர் இலங்கைத் தமிழரான நாங்களும் எமது மொழி, காலச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றுடன் ஒத்திசையும் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம் பெயருவதை விட மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை சீர்தூக்கிப் பார்த்து அகதிகளாக இடம்பெயர விரும்புகின்றனர். இல்லாவிடின் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அதிகம் இடம்பெயர்ந்து இருந்திருப்போம். இதுவே இன்று சிரியா போன்ற நாட்டிலும் நடைபெறுகின்றது. போர்கள் நிறுத்தப்படாத வரைக்கும் அகதிகள் உருவாதல் நிறுதப்பட முடியாது. குறைந்த கூலியில் மனித வளம் தேவைப்படும் வரை யுத்தங்களும், அகதிகள் பிரச்சனைகளையும் முதலாளித்துவ நாடுகள் தக்க வைத்துக்கொண்டே இருக்கும்                                                                          (சாகரன்)

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்த போதிலும் உதவியவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது :

1188தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்த போதிலும் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன், பொட்டு அம்மான் உயிரிழந்தாலும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள்ஆயுதங்களை வழங்கியவர்கள்,வாகனங்களை வழங்கியவர்கள்ஆலோசனை வழங்கியவர்கள்  குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
tna-ltte
பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்: ஓர் அதிசய கிராமம் (வீடியோ)


டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒன்று, 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில், மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒன்று,  12 வயதில் ஆணாக மாறுகின்றன. பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண், 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு, பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது.

தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோன்களில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மேலும், 12 வயதுக்கு முன் வரை சிறுமிகளாக வாழும் இவர்கள், பின்னர் ஆண்களாக மாறியவுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

மரணங்களை விற்றும் பிழைப்பு நடாத்திய லங்காசிறி இப்போது கிழக்கில் நேரடியாக


கடந்த காலங்களில் பொய்களையும் புரட்டுகளையும் மூலதனமாக கொண்டும் மக்களின் மரணங்களை விற்றும்  பிழைப்பு நடாத்திய லங்காசிறி இப்போது கிழக்கில் நேரடியாக களமிறங்குகின்றது. 
Résultat de recherche d'images pour "லங்காசிறி"
லங்காசிறி கிழக்கு பிரிவின் போது படுகொலைகளை ஊக்குவித்து செய்திகள் வெளியிட்டதில் முன்னணி வகித்தது.
2004 ஆம் ஆண்டு கிழக்கு பிளவு நடந்த போது ஜனநாயக பாதைக்கு திரும்பிய 210கிழக்கு போராளிகள் படுகொலை செய்யப்படவும் அவர்களில் பல பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு நிர்வாணமாகாகப்பட்டு கொன்று வீச படவும் காரணமாக இருந்த வெருகல் படுகொலை நிகழ்ந்தபோது "கத்தியின்றி இரத்தமின்றி தேசிய தலைவர் கிழக்கை மீட்டார்" என்று பிணவாடைகளின் மீது வெற்றி களிப்பை கொண்டாடி செய்தி வெளியிட்டது.

மட்டக்களப்பின் தமிழ் புத்திஜீவிகளான சத்தியமூர்த்தியும்  கிங்ஸ்லி இராசநாயகமும் தில்லை நாதனும் கொன்று வீசப்படும் போது துரோகிகள் ஒழிந்தார்கள் என்று சங்கநாதம் எழுப்பியது இந்த லங்கா சிறிதான் அகோர சுனாமிக்கு நிகராக படுகொலைகளை உருவாக்குவதில் முன்னணி வகித்ததமிழ் இணையத்தளங்களில் முதன்மையானதாகும்.இது இப்போது முதன் முறையாக மட்டகளப்பில் அலுவலகத்தை முதன் முறையாக திறந்துள்ளது. இத்தோடு ஐயகோ  அழிந்தது எஞ்சிக்கிடக்கும் தமிழினமும். 

இலக்கு வைத்தே ஐ.நா. அறிக்கை : விமல்

கலப்பு நீதிமன்ற விசாரணை உள்ளக விசாரணையென்பது உண்மையல்ல. இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளையாகும் எனக் குற்றம் சாட்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல்வீரவன்ச.இலங்கையின் யுத்தத்தை முடித்த தலைவர்களையும் படையினரையும் இலக்கு வைத்தே ஐ.நா. இவ் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னனியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

dimanche 20 septembre 2015

இது திருடர்களின் கூட்டணி தேசிய அரசாங்கம் அல்ல; பிமல் ரத்நாயக்க

jvpநல்லாட்சி அரசாங்கத்தை புதிய தேசிய அரசாங்கம் என்பதற்குப் பதிலாக புதிய திருடர்களின் கூட்டணி என்றே அழைக்கவேண்டியுள்ளதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய அரசாங்கம் பெயரளவுக்குத்தான் தேசிய அரசாங்கம். மற்றபடி இது திருடர்களின் கூட்டணி அரசாங்கம். திருடர்களைப் பாதுகாப்பதற்காக கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்படுகின்றவர்களே அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறைகேடு, எவன்காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சிய முறைகேடுபோன்ற பாரிய முறைகேட்டுச் சம்பவங்கள் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
எனினும் நாங்கள் இதுபோன்ற முறைகேடுகளை மூடிமறைக்க இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் பாரியமுறைகேடுகள் தொடர்பில் குரல் எழுப்பவும், பொதுமக்களை தெளிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
நல்லாட்சி குறித்த எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு ஆளும் கூட்டணி துரோகம் செய்தாலும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிமல் ரத்நாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

போதி தர்மர் பற்றிய வெளிவராத சில உண்மைகள்

போதிதர்மாவைப்பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக்கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக்கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.
போதி தர்மா குகை :போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப்புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர் ’வூ-டி’யைச்சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக்கடந்து ஹெனான் பகுதியின் மலைச்சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப்பார்த்த போது அவருக்குப்பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.
நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக்கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது.
போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச்சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப்பார்த்த படி அமர்ந்து தியானம் செய்ததாகச்சொல்லப்படுகிறது.
9 வருடங்கள் தியானம் இருந்த போதி தர்மாவின் நிழல் குகையின் பாறையில இருப்பதாக நம்பப்படுகிறது. ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பிய போது அந்த இடத்தில் இரும்புப்பெட்டி ஒன்றை விட்டுச்சென்றுள்ளார். பிட்சுக்கள் அதைத்திறந்து பார்த்த போது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார்.
இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார்.
மஜ்ஜை என்பது அகத்தைக்குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப்போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்.
இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச்சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச்சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம்.
போதிதர்மா ஓஷோவைக்கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார்.
ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி. அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச்செல்லும் படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன.
கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச்சூழலில் தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப்பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப்புரட்சி.
புத்தரைப்போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக்கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது.
புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத்துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். அரச வாழ்வைத்துறந்து ஆன்மத்தேடலில் நாடோடியாகக்கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத்தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத்தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால் தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப்புறப்பட்டவர் தான் போதிதர்மா.
தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு – வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.
ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத்தொடுவது.
மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக்கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச்சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக்கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச்சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில் தான் விழுவீர்கள்.” இந்த விடையைக்கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது.
போதிதர்மா ஏன் அப்படிச்சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும் தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப்பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார்.
போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும். சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.
போதிதர்மாவைப் பற்றிப்பேசும் போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விசயம் தேநீர். குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் போற்றப்படுவது போலவே தேநீரைக்கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார்.
போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித்தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத்தன்மீதே கோபம் வந்தது.
ஒரு நாள் அவர் தன் இமைகளைப்பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக்கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக்குடித்த போது சோம்பலை நீக்கிப்புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக்கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப்பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும்.
முண்டு முடிச்சு உள்ள அந்தத்தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப்பிடித்துக்கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத்தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக்காட்டுவார்.
இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர் வழியாக நமக்குத்தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத்தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!
போதிதர்மா தன் கடைசிக்காலத்தில் இமயமலைப் பகுதிக்குச்செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத்தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒரு சில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப்புதைத்துவிட்டார்கள்.
இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக்காவல்காரன் ஒருவன் பார்த்துள்ளான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத்தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்க விட்டிருப்பதைக்கண்டு அதற்கான காரணத்தை கேட்டான். “மடாலயத்திற்குப்போய் என்னை நீ இந்தக்கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக்கடந்து இமயமலைக்குச்சென்றுவிட்டார். அந்தக்காவலன் மடாலயத்திற்குச்சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச்சொன்னான். அவர்கள் அவரின் கல்லறையைத்திறந்து பார்த்த போது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
மனம் என்பது ஆறாம் அறிவாகச்சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும் போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத்தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

mardi 15 septembre 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமைகள் விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டன என்று

mahinda-rajapaksha (1)உலகின் மனித உரிமை விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி 
மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு மனித உரிமை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டி யுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒரு கட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை கள் கோரி வந்த அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசார ணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இருந்தால் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் சர்வதேச சுயாதீன விசார ணையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறையை தற்போது ஆதரிக்கும் தரப்புக்கள் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் அணுகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

lundi 14 septembre 2015

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடம்

"சிரிய குழந்தைக்காக உலகமே அழுகிறது, ஈழக் குழந்தைக்காக யாரும் அழவில்லை..." என்று, இப்போது சிலர் பிரச்சாரம் செய்யக் கிளம்பி உள்ளனர். இவர்கள் உண்மையில் தமிழ் உணர்வாளர்களும் அல்ல, ஈழக் குழந்தை மீது கரிசனை கொண்டவர்களும் அல்ல.

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடத்தை மூடி மறைப்பது மட்டும் அவர்களது நோக்கம் அல்ல. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களை தனிமைப் படுத்தி, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள் நோக்கில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது. 

முதலில் நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் போன்ற, மூன்றாமுலகை சேர்ந்த, மத்திய கிழக்கு மக்களின் பிரச்சினை ஊடகங்களின் கவனத்தைப் பெறும் நேரத்தில் "மட்டும்" தான், இவர்கள் இது போன்ற வாதங்களை அடுக்குவார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பிரச்சினை என்றால் இவர்களும் சேர்ந்து அழுவார்கள். உதாரணத்திற்கு, கொசோவோவுக்காக உலகமே அழுத நேரம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அப்போது யாருக்கும் ஈழப்போரில் இறந்து கொண்டிருந்த குழந்தைகள் நினைவுக்கு வரவில்லை!

2000 ம் ஆண்டு, அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு சம்பவம் நடந்தது. எலியான் என்ற ஐந்து வயது கியூபா நாட்டுக் குழந்தை, தாயுடன் அகதியாக அமெரிக்காவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக, படகு கடலில் மூழ்கியதால், தாய் உட்பட பல அகதிகள் இறந்து விட்டனர். எப்படியோ குழந்தை எலியான் உயிர் தப்பிப் பிழைத்து மியாமிக் கரையை வந்து சேர்ந்து விட்டான். 

மியாமியில் வசிக்கும் தாய் மாமன், எலியானை பராமரித்து வந்தாலும், கியூபாவில் வசிக்கும் தந்தை, மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினர். அதனால் அமெரிக்க அரசு தலையிட்டு, குழந்தையை தாய் மாமனிடம் இருந்து பிரித்து, கியூபாவுக்கு அனுப்பி விட்டது. (Elián González affair;https://en.wikipedia.org/wiki/Eli%C3%A1n_Gonz%C3%A1lez_affair)

அமெரிக்கா - கியூபா முரண்பாடு காரணமாக, ஒரு குடும்பப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையாகி, அன்று "உலகமே ஒரு கியூபக் குழந்தைக்காக அழுது கொண்டிருந்தது". அப்போது நமது போலித் தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள்? "ஒரு கியூபக் குழந்தைக்காக" அவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அந்த நேரத்தில் ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பல ஈழக் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். அப்போது யாருக்கும் கியூபக் குழந்தையையும், ஈழக் குழந்தையையும் ஒப்பிடத் தோன்றவில்லையே? அது ஏன்?

ஈழக் குழந்தைகள் குறித்து அக்கறைப் படாமல், மேற்கத்திய நாடுகள் பாராமுகமாக இருந்தமையை காட்டுவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒரு தடவை, ஈழப் போர் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 2007 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலமான அல்கார்வே பகுதியில், மடலின் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை காணாமல் போனது. அன்று அது பிரதானமான செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பேசப் பட்டது. (Disappearance of Madeleine McCann;https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann)

ஈழப் போரில் இறந்து கொண்டிருந்த ஈழக் குழந்தைகளை பற்றி, ஒரு வார்த்தை பேசாத மேற்கத்திய ஊடகங்கள், காணாமல்போன ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுதன. உலகம் முழுவதையும் அழ வைத்தன. ஏனென்றால், அது ஒரு மேலைத்தேய பணக்கார நாட்டில் பிறந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை! 

அப்போது நமது "தமிழ் உணர்வாளர்" யாரும் பொங்கியெழுந்து, "பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுகிறீர்களே! ஈழக் குழந்தைக்காக அழுதீர்களா?" என்று கேட்கவில்லை! எப்படிக் கேட்பார்கள்? அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வெள்ளை எஜமானுக்கு கோபம் வராதா?

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை கடலுக்குள் தள்ளி விட்ட மிருக காருண்யம் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய கவனமெடுத்து தகவல் தெரிவிக்கும். ஆனால், விலங்குகள் மீது காட்டும் அன்பு, பாசத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, மேற்கத்திய நாட்டவர்கள் போரில் கொல்லப் பட்ட ஈழக் குழந்தைகள் விடயத்தில் காட்டவில்லை.

துருக்கிக் கடற்கரையில், சிரிய அகதிக் குழந்தை இறந்து ஒதுங்கிய சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு சிங்கத்திற்காக அழுது வடித்தார்கள். (https://en.wikipedia.org/wiki/Cecil_(lion))

சிம்பாப்வே வன விலங்கு சரணாலயத்தில், ஒரு அமெரிக்க பல் வைத்தியர் சிசில் என்ற சிங்கத்தை சுட்டுக் கொன்ற சம்பவம், அமெரிக்கர்களை கிளர்ந்தெழ வைத்தது. "சிங்கத்தை கொன்ற படுபாவி! இரக்கமற்ற கொலைகாரன்!" என்றெல்லாம் அந்த வைத்தியரை திட்டித் தீர்த்தார்கள். நேரில் கண்டால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. 


இதே அமெரிக்கர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா வந்திருந்த நேரம் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. 

"தமிழர்களை கொன்ற படுபாவிகள்! இரக்கமற்ற கொலைகாரர்கள்!" என்று எந்தவொரு அமெரிக்கரும் முணுமுணுக்கக் கூட இல்லை! அது சரி, நமது "தமிழ் உணர்வாளர்கள்" அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?"அமெரிக்கர்களுடன் நாங்களும் சேர்ந்து, அந்த சிங்கத்திற்காக அழுவோம் வாருங்கள்!" என்று அமெரிக்காவுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து காட்டினார்கள்.


முதலில் "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" அடிப்படையிலேயே தவறானது. உலகில் யாரும் "சிரியக்  குழந்தைகளுக்காக," அல்லது "சிரியாவுக்காக" அழவில்லை! இப்போதும் கூட சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அகப்பட்டு குழந்தைகள் மரணிக்கின்றன. உலகில் யாருக்குமே அதைப் பற்றிக் கவலையில்லை! "சிரியாவில் இன்றைக்கு நடந்த குண்டுவீச்சில், இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டனர்...." என்று எந்த ஊடகமாவது அறிவித்திருக்கிறதா? மேற்கத்திய நாடுகளின் இதே கள்ள மௌனம் தான், ஈழக் குழந்தைகள் விடயத்திலும் பாராமுகமாக இருந்துள்ளது.

அப்படியானால், எதற்காக "அந்த சிரியக் குழந்தை" பற்றிய தகவல் முக்கியத்துவம் பெற்றது? முதலில், அது ஒரு "சிரியக்" குழந்தை என்பதற்காக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அது ஓர் அகதிக் குழந்தை என்பதற்காக எல்லோரும் அழுதார்கள். ஐரோப்பியரின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு பரபரப்பான தகவல்கள் தான். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், ஐரோப்பிய அரசியல் நிலவரம் பற்றி ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

தற்போது அகதிகளின் நெருக்கடி ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓர் ஐரோப்பிய நாட்டில் வசித்தால் அந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில், தினந்தோறும் அகதிகள் தான் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்கள், ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட, அகதிகள் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கில் ஐரோப்பாவுக்குள் வந்து குவியும் அகதிகள் பிரச்சினை, ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அய்லான் என்ற அகதிக் குழந்தை கடலில் மூழ்கி இறந்தது.

ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரு முனைப்பாக அகதிகள் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், "சிரியக் குழந்தையின்" மரணம் ஐரோப்பியரின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர்,  பெரும்பான்மையான ஐரோப்பியர்கள், பொதுவாக அனைத்து அகதிகளுக்கும் எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
"கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன். 

இந்த உண்மை தெரியாமல், "சிரியக் குழந்தைக்காக உலகமே அழுகிறது. ஈழக் குழந்தைக்காக எவன் அழுதான்?" என்று சிலர் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று உங்களது "தமிழினப் பற்றை" விளம்பரப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே சிரியக் குழந்தை, சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தால், "உலகம் அழுதிருக்குமா"? 

அய்லான் என்ற அந்தக் குழந்தை, சிரியாவில் கொபானி என்ற இடத்தில் பிறந்தது. அது பிறக்கும் பொழுதே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அய்லான் குர்டியின் குடும்பத்தினர், குர்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள குர்து சிறுபான்மை இனம், இலங்கையில் தமிழருடன் ஒப்பிடத் தக்கது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது அய்லான் பிறந்த நேரம், குர்து மக்களின் பிரதேசமான கொபானியை (சிரிய- முள்ளிவாய்க்கால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கைப்பற்றுவதற்காக ISIS படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அப்போது பெருந்தொகையான கொபானி வாசிகள் அகதிகளாக வெளியேறி துருக்கியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அங்கிருந்து ஐரோப்பா செல்வதற்காக கிளம்பிய பொழுது தான், கிரேக்க கடல் எல்லையில் அய்லானின் மரணம் நிகழ்ந்தது.

போலித் தமிழ் உணர்வாளர்களே! இப்போது சொல்லுங்கள். ஒரு "தமிழ் அய்லானும்" அவனது குடும்பமும், முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு அகதியாக செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, படகில் பயணம் செய்த பொழுது, அந்தத் தமிழ்க் குழந்தை கிரேக்க கடல் எல்லையில் மூழ்கி இறந்து விடுகின்றது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்து, அது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றால், "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" சரியாக இருந்திருக்கும். இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஈழப் போர்க் களத்தில் இறந்த குழந்தையை, ஐரோப்பிய கடலில் இறந்த அகதிக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றீர்கள். ஈழக் குழந்தைகளும், ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றன என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள்.

ஐரோப்பிய நாடுகள் எதுவும், அகதித் தஞ்சம் கோருவோருக்கு இலகுவான வழி வகைகளை செய்து கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கோரலாம் என்று சட்டம் எழுதி வைத்திருகிறார்கள். ஆனால், நடைமுறையில் எதுவுமே நடப்பதில்லை.

எந்தவொரு ஈழத் தமிழ் அகதியும், கொழுப்பு அல்லது புது டில்லியில் உள்ள ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில், அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து விட்டு, ஐரோப்பாவுக்கு செல்லவில்லை. அது சாத்தியமல்ல என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதிகம் பேசுவானேன். சம்பந்தப் பட்ட சிரிய குழந்தையின் குடும்பமும், கனடாவில் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கனடிய குடிவரவு அமைச்சு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் தான், சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்டு மரணம் சம்பவித்தது.

ஆகவே, இங்கே முக்கியமான பிரச்சினை ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத கோட்டை மதில்கள். வறிய நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா கொடுக்க மறுக்கும் பாகுபாடு. ஏன் எந்தவொரு "தமிழ் உணர்வாளரும்"(?) இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இருக்கும் ஒரே வழி, சட்டவிரோதமாக விசா இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைவது தான். அதைச் செய்ய முயன்ற பொழுது தான், சிரியக் குழந்தையான அய்லானும் அவனது குடும்பமும் கடலில் மூழ்கி இறந்துள்ளன. ஈழம், சிரியா எங்கிருந்து வந்தாலும்,   ஐரோப்பாவில் அவர்கள் அகதிகள் தான். 

ஆகவே, "தமிழ் உணர்வாளர்களே"! நீங்கள் உண்மையிலேயே ஈழக் குழந்தைகளில் கரிசனை கொண்டவர்கள் என்றால், "ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாராள மனதுடன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுங்கள். அது தான் உங்களது தமிழ் உணர்வு நேர்மையானது என்பதை எடுத்துக் காட்டும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைத்துக் கொண்டு, "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" செய்து கொண்டிருந்தால், அது உங்களுடைய "தமிழ் உணர்வு" போலியானது என்பதைத் தான் நிரூபிக்கும்.
                                                                      ......கலையகம்

mardi 8 septembre 2015

காந்தியை சுட்டு கொள்ள எப்படி இத்தாலி துப்பாக்கி கிடைத்தது;சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் மகாத்மா காந்தியை கோட்சே சுட்டு கொன்ற போது, அவன் பயன்படுத்தியது இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெரட்டா பிஸ்டல் ஆகும். இதை பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ரக துப்பாக்கி ஆகும்.
 
அப்படியானால், அந்த துப்பாக்கியை கோட்சேவுக்கு கொடுத்தது யார்? அதை கோட்சே எப்படி பெற்றார்? இந்த விவகாரம் மர்மாக உள்ளது. இது குறித்து இன்னும் விசாரணை நடத்தவில்லை.
 
காந்திமீது கோட்சே 3 குண்டுகள் மூலம் சுட்டார். ஆனால் 4 குண்டுகள் இருப்பதாக ஒரு சில செய்தி ஏஜென்ஸிகள் கூறுகின்றன. ஆனால், விசாரணையில் 3 குண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. 4 வது குண்டு எப்படி வந்தது? காந்தியின் இதய பகுதியை துளைத்த குண்டு எது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
மேலும், காந்தியை கொல்லும் நோக்கத்தில், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி நாட்டு குண்டு வைத்திருந்ததாக கேட்சே கைது செய்யப்பட்டார். பின்பு ஜனவரி 22 ஆம் தேதி மவுன்ட்பேட்டனால் விடுதலை செய்யப்பட்டார்.
 
எனவே, இது போன்ற சந்தேகங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சரியான நேரத்தில், சரியான இடத்தில் கோரிக்கை வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

இலங்கையில் எல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ராஜா சுபாஸ்கரன்!

unnamed (2)இலங்கையில் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. கடந்த 25 வருடங்களாக சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படும் தமிழ்மக்களுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல பல தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.
அதில் குறிப்பிடத்தக்க ஒரு தொண்டு நிறுவனம் தான் லைக்கா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் ஞானம் பவுண்டேஷன்.
கடந்த சில வருடங்களாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி வரும் ஞானம் பவுண்டேஷன் கடந்த மாதம் வீடுகள் இல்லாமல் தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்கும் மகத்தான பணியை ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் இலங்கை பூந்தோட்ட அகதி முகாமில் வசித்து வரும் 104 குடும்பங்கள் உட்பட 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில், வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரந்தர லைக்கா குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
‘லைக்கா கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் என்ற ரீதியில் வீடு வழங்கப்பட்டதுடன் அவர்களுடையை பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு விவசாய நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
லைக்கா மொபைல்ஸ் நிறுவனத் தலைவரும், ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஞானம் அறக்கட்டளையின் இணை ஸ்தாபகர் ஞானாம்பிகை அல்லிராஜா பங்கேற்றதுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லைக்கா கிராமத்திற்கான நினைவுச் சின்னத்தை திறந்து வைத்ததுடன், லைக்கா கிராமத்திற்கான பெயர் பலகையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக சந்திரிக்கா குமாரதுங்க முதலாவது அடிக்கல்லை நாட்ட அவரைத் தொடர்ந்து, துமிந்த திஸாநாயக்க, லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானாம்பிகை அல்லிராஜா உட்பட பலரும் அடிக்கல்லினை நாட்டினர்.
இவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, லைக்காவின் முதன்மைத் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரியும் ஞானம் அறக்கட்டளையின் முக்கிய செயற்பாடுகளுக்கான தலைவருமான பாலசிங்கம் ராஜ்சங்கர், லைக்கா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரி ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இந்நாள் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் தமது கைகளை அசைத்து அவர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தனர். தொடர்ந்து மக்களுக்கான வீட்டுத் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தமது சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுக்கு உதவி செய்வதில் தன்னிகரற்ற மனிதராக சுபாஸ்கரன் அல்லிராஜா திகழ்வதாக பெருமையுடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சந்திரிக்கா அம்மையார், லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா உதவி செய்வதில் ஒப்பற்றவர் எனவும், அவரிடம் பேசிய போது யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி வழங்குவதாகவும் உத்தரவாதம் தந்ததாகக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்த, தமது உரையை ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், சுபாஸ்கரன் அல்லிராஜா போன்று உதவி செய்ய பலர் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கான வீடுகளுக்காக உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதைப்பெற்றுக்கொண்ட மக்கள் லைக்கா நிறுவனத் தலைவருக்கு தங்களது சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஊழியர்களுடன் உரையாற்றிய திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா மக்களின் வாழ்த்துக்களுடன் அங்கிருந்து விடைபெற்றார்.
தொடர்ந்து ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முன்னணியின் இருக்கும் லைக்கா நிறுவனம் தமிழகத்தின் திரைப்படத்துறையிலும் சரித்திர சாதனை படைத்து வருகிறது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் கத்தி படத்தை தயாரித்த லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தின் தமிழக உரிமையையும், விசாரணை உலக உரிமையையும் சமீபத்தில் வாங்கியிருக்கிறது.
இப்படி எல்லையில்லாமல் தனது தொழிலை விஸ்தரித்து வரும் லைக்கா நிறுவனம் உதவிகளையும் எல்லையில்லாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

dimanche 6 septembre 2015

ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம்.

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அமெரிக்காவைத் தவிர்த்து ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம். மேலும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்புக்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டமைப்பு நாடுகளும் கொடுத்த தண்டனை இது. தற்போதைய சிரிய அதிபர் பசீர் இன் தந்தை அசாத் காலத்திலிருந்து மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளுக்கு சிரியாவில் முகாங்கள் அமைத்து தமது வாழ்வைத் தொடர அனுமதித்தது தான் இவர் செய்த குற்றம். சிறப்பாக பாலஸ்தீன மக்களுக்கு இவர் செய்த, செய்து வரும் அளப்பரிய மனித நேயச் செயற்பாட்டிற்கு இஸ்ரேலும், இஸ்ரேலை தமது செல்லப் பிள்ளையாக கொண்டிருக்கும் நாடுகளும் இணைந்து கொடுக்கும் பரிசுகள் இவை.

உள்நாட்டுக் கலவரம் ஒன்றை வலிந்து எற்படுத்துவதன் மூலமே சிரிய அரசை வீழ்த்தலாம், நாசப்படுத்தலாம் என்ற இவர்களின் செயற்பாடு இன்று ஐ.எஸ் வரை தமது கட்டுக்குள் அடங்காத மதத்தை முன்னிறுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இன்று முடியும் நாளை முடியும் என்று காத்திருந்த சிரிய மக்கள் தாங்க முடியாத சூழலில் யுத்தம் அற்ற ஆனால் யுத்த்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஐரோபிய யூனியனின் நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர் தற்போது. போர் குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்க சார்பு அற்ற அயல் நாடுகளுக்கு அகதிகளாக முதலில் இடம் பெயரந்தனர் சிரிய மக்கள். இதில் சிரியாவுடன் தரைத் தொடர்புடைய அமெரிக் சார்பு மத்தி கிழக்கு நாடுகள் சிரிய அகதிகள் யாரையும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும்.
தரை மார்க்க இடம் பெயர்வுகள் நீண்டகால அகதி வாழ்வுக்கு ஒத்துவரவில்லை என்ற சூழலில் கடல் மார்க்க இடம் பெயர்வுகளுக்கு தம்மை ஆள்படுத்திக் கொண்டனர் இந்த அப்பாவி மக்கள். குடல் மார்க்கமாக ஒப்பீட்டளவில் அருகில் உள்ள கறீஸ் நாடடை அடைந்து பின்பு தரை மார்க்கமாக ஹங்கேரியூடாக ஜேர்மன் போன்ற வசதி படைத்த நாடுகளில் தஞ்சம் புகுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருந்தது. கூடவே ஒரு பகுதியனர் சற்றுத் தொலைவில் இருக்கும் இத்தாலியிற்கு கடல் மார்க்கமாக செல்லவும் முயன்றனர்.
யுத்தம் நடைபெறும் துருக்கியூடாக செல்வதைத் தவிர்த்து கடல் மார்க்கமாக கிறீஸ் ஐ அடைந்து இதனூடாக ஏனைய ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்லுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

இவர்களை ஏற்றுக் கொள்ள அனேக ஐரோப்பிய யூனியன் மனிதாபிமானிகள் தயார் இல்லை.
தற்போது ஒன்றில் போரை நிறுத்தியே ஆகவேண்டும் அன்றேல் அகதிகளை நிறுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இழப்பதற்கு உயிரைத் தவிர ஏதும் அற்ற நிலையில் இடம் பெயரும் மக்களை தமது நாடுகளில் உயிரை இழக்காமல் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தும் எல்லை நிலையை நோக்கி ஐரோப்பிய யூனியன் தன்னை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. இந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படச் செய்தி உலகம் எங்கும் ஏற்படுதப் போகும் அதிர்வலைகள் இதனை ஏறப்படுத்திவிடுமானால் மனித குலம் இந்த குழந்தையின் மரணத்தை கொணடாடியே தீர வேண்டும்.

ஆனால் இந்த அகதிச் சிக்கலில் அமெரிக்கா தற்போது இல்லை. எனவே இந்த யுத்தங்களை(இதற்கு ஆகாயப் பிரச்சாரம் என்று பெயர் வேறு) தலமை தாங்கும் அமெரிக்கா தனக்கு இந்த அகதிகள் பிரச்சனை நேரடியாக இல்லாதவரைக்கும் தொடர்ந்து யுத்தங்களை நடாத்திக் கொண்டே இருக்கும். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை எனவே யுத்தத்தை நிறுத்தும் ஒரு பொறி முறையை இவர்கள் கண்டாகவேண்டி சூழலுக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலமை மேலும் மேலும் வளர்ந்து வருகையில் ஐரோப்பி யூனியன் நர்டுகள் வேறு வழியின்றி யுத்தத்தை நிறுத்தும் ஒரு செயற்பாட்டில் இறங்கியே ஆகவேண்டியே வரும்.
வியட்நாம் போரின் போதும். சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் அமெரிக்காவிற்கு அமெரிக்க மக்களாலேயே எற்பட்ட அழுத்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்தது போல் இன்றைய நிலையிலும் ஏற்பட்டால் ஒழிய சிரியாவில் மையம் கொண்ட மத்திய கிழக்கு யுத்தங்களை நிறுத்துதல் என்பது கடினமானதாகும். இதற்கான சூழல் ஒன்று உருவாகியுள்ளது போல் தோன்றுகின்றது. இதற்கு அமெரிக்க மக்களின் மனிதாபிமானப் பங்களிபு மிகவும் அவசியமானதாகும்
யுத்தங்கள் நிறுதப்படும் நிலை ஏற்படும் போது யுத்தங்களால் எற்பட்ட மன வடுக்களும், ரணங்களும், பௌதீக அழிவுகளும் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தியே வரும். வியட்நாம் போன்ற புரட்சிக்குத் தலமை தாங்கிய முற்போக்கு கட்சிகளின் ஒழுங்குபடுத்தல்கள் இந்த எண்ணை உலக நாடுகளில் பலமான நிலையில் இல்லாததினால் தொடரும் அவலங்களுக்கு மீண்டும் அந்தந்த நாடுகளின் அரசை மீண்டும் இந்த அமெரிக்காவும் இதன் அடிவருடிகளும் குறை கூற வாய்ப்புக்கள் எற்படுத்திவிடும். முழுமையாக இல்லாவிட்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய, எகித்து, துனீசியா போன்ற நாடுகளில் நடைபெறுவது இதுதான். இதற்கு மாறாக வறுமையான தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டைமைப்பின் வலிந்த யுத்தங்கள், உள்ளுர் கலவரங்களில் இருந்து மீண்டு இதன் பின்பு முன்னொக்கி இன்று நடைபோடுவதற்கு அங்கிருந்த பலமான முற்போக்கு தலமைகளே காரணம் இதனை கியூபா, நிகரகுவா, உருகுவே. போலிவியா, வெனிசுலா போன்ற நாடுகளில் காண முடியும் இது போன்றதொரு நிலை இந்த மத்திய தரைக் கடல் நாடுகளில் எற்பட வேண்டும்.
இன்று ஏற்பட்டிருக்கும் தரையால் இணைக்கப்பட்ட இந்த நாடுகளுக்கு இடையே கடல் மார்க்கமாக நடைபெறும் மனித நகர்வு இந்த பிஞ்சு குழந்தையை தாயின் மடியில் உறங்குவதற்கு பதிலாக தண்ணீரின் மேல் நிரந்தரமாக உறங்கச் செய்த செயல் இந்த யுத்தத்தை நடாத்தும் அமெரிக்க கூட்டுப்படை கொடுத்த தண்டனையாகவே பார்க்க முடியும். ஒருபுறம் சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுகள், இன்னொரு புறம் ஐஎஸ் எற்ற மதத்தை முன்னிறுத்தும் தீவிரவாதக் குழுகள். தமது மக்களை காப்பாற்ற முயலும் பசீர் அரசின் செயற்பாடுகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த போரை தொடங்கி வைத்து இன்று கூட்டுப்படை செயற்பாடு என்று ஆகாய மார்க்கத் தாக்குதலை நேரடியாகச் செய்யும் அமெரிக்க கூட்டமைப்பு இராணுவங்கள் என்ற பல்முனைத் தாக்குதலுக்கு பலியானதே இந்த பச்சிளம் குழந்தை.
இவற்றிற்கு அப்பால் பாலஸ்தீனத்தின் நிரந்தர அகதிகளை சிரியாவில் குறிவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து கடல் பரப்பில் மிதக்க விட்டிருக்கின்றது இந்த மூன்று வயது குழந்தையை. இந்த போரை நடாத்திக் கொண்டிருக்கும் யாவரும் இந்த குழந்தையின் கொலைக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.
கடல் வாழ் மீன்களுக்கு இரக்கம் இருந்திருக்க வேண்டும். இப்பிரதேசத்தில் கடலில் அமிழ்ந்து காணாமல் போன ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு மத்தியில் இந்த சிறிய குழந்தையை கரை ஒதுங்க வைத்ததற்காக. ஒரு குழந்தை ஜீவனை சர்வதேச மனித குலத்தின் முன்வைத்து இந்தப் பிரச்சனைகளை இத்தோடு நிறுத்திக் கொள்வதற்கு முன்னெடுப்பாக இது அமைய வைக்கலாம் என்ற சிந்தித்து செயற்பட்டிருப்பார்களோ? இந்த மீன் இனங்கள் என்று எண்ணத் தோன்றும் மனதைப் பிழிய வைக்கு நிகழ்வு இது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி குரங்கில் இருந்துதான் ஏற்பட்டது என்றும் ஒருசாரரரும், இன்னொரு சாரர் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி மீன்களில் இருந்து ஆரம்பித்தது என்றும் விஞ்ஞான பூர்வமாக சொல்லி வருகின்றனர். தனது பரிணாம வளர்சியினால் உருவான மனித இனத்தின் குழந்தையின் உடலத்தை இந்த மீன்கள் காப்பாற்றி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றும் பேதை நிலமைக்கு என்னை தள்ளியுள்ளது. இது விஞ்ஞானபூர்வமான எனது நம்பிக்கைக்கு முரணானது என்ற போதிலும் இந்தக் கொடூரங்கள் நிறுப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இவ்வாறு என்னை எழுதத் தூண்டியிருக்கின்றது. இந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் எங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் பார்த்த பின்பாவது இந்த யுத்தங்களை நடத்தும் கொடூரர்கள் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளமாட்டார்களா? என்ற ஆதங்கம் ஏற்படுவது இயல்பானதுதானே.
இன்றைய அவசரமாக செயற்பாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளல் என்பதற்குள் மட்டுப்படுத்தி தப்பிக்கொள்ள மனிதகுலம் முயற்சி செய்யுமாயின் இன்னும் ஆயிரம் குழந்தைகள் இந்த கடல் பரப்பின் தம்மை இழந்து தரையில் முத்தமிடும் அவலத்தை ஏற்படுத்தியே தீரும். அப்போது நாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கவேண்டிவரும். அகதிகள் இல்லா நிலமை ஏற்படுத்தும் யுத்தம் அற்ற சூழலை உருவாக்குவதே உடனடித் தீர்வு ஆகும். எனவே யுத்தத்தை நிறுத்தி யுத்தத்தை தவிர்க்கும் முயற்சியில் நாம் எல்லோரும் இணைந்தே செயற்படுவோம். இதுவே இந்த மழலையை நேசிக்கும் யாவரும் செய்யக் கூடிய சரியான விடயம் ஆகும்
                                                                                              (சாகரன்)