lundi 28 avril 2014

முன்னைநாள் முதல் அமைச்சர் ஜரேப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் 117 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கடந்த கால யுத்தத்தினால் பெரிதும்  பாதிக்கப்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு   ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.ஜரேப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 117 புதிய வீடுகளும் புனரமைக்கப்பட்ட  57 வீடுகளுமாக மொத்தமாக 174 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடமொன்றுக்கு 02 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம், புகைப்பிடித்தலால் மாத்திரம் நாளொன்றுக்கு 65 பேர் உயிரிழப்பதாகவும், அது வருடமொன்றுக்கு 21 ஆயிரம் ஆக விளங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தின் கிராமமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புகைப்பிடிப்பதற்காக வருடமொன்றுக்கு 136 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிய வந்திருக்கின்றது.இவ்வாறான நிலையில் போதையற்ற சமூகம் 2014 என்ற தேசிய வேலைத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் கீழ் புகைப்பிடித்தல் மற்றும் மதுபாவனை தொடர்பாக கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் அண்மையில் அறிவூட்டப்பட்டனர். பாடசாலைப் பிள்ளைகள் புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை பழக்கங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் வகையில் சுகாதார அமைச்சும். கல்வி அமைச்சும் இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்தவகையில் ரோயல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. மதுப்பாவனை அற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வருடமாக இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டைப் போன்று உலகின் பல நாடுகளும் முகம் கொடுக்கின்ற பிரதான பிரச்சினையாக இது விளங்குகின்றது.
எமது நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 1200 பேர் பிறக்கின்றார்கள். சுமார் 1000 பேர் உயிரிழக்கின்றார்கள். உயிரிழப்பவர்களில் 60 வீதமானோர் அல்லது சுமார் 600 பேர் தொற்றா நோய்களாலேயே உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் உயிரிழப்பவர்களில் 70 வீதமானோரின் மரணத்திற்கு புகைப்பிடித்தலும், மதுப்பாவனையுமே காரணமாக அமைந்துள்ளது.
இன்று எமது நாட்டில் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்று புற்றுநோய் காணப்படுகின்றது.
அதற்குப் பிரதான காரணமாக புகைப்பிடித்தலும், மதுப்பாவனையுமே அமைந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

dimanche 27 avril 2014

அரசியள் பிளைப்புவாதி tna சம்ந்தரின் சொந்த மண் சம்பூர் மக்களின் அவளம்

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேச மக்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய 9வது ஆண்டை இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்த அதேவேளை சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாகவே அந்த பகுதியிலுள்ள குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த 2005-ம் ஆண்டில் இராணுவ தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா மீது கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து சம்பூர் பிரதேசத்தில் விமானத் தாக்குதல்களும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.சம்பூரில் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தற்போது உயர் பாதுகாப்பு வலயம், பொருளாதர முதலீட்டு வலயம் மற்றும் இந்திய அனல் மின் நிலையம் என்று அரசாங்கத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதால் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.9 ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்விடங்களையும் பிரதேசத்தையும் விட்டு வெளியேறிய சுமார் 900 குடும்பங்கள் கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், பட்டித்திடல் உட்பட மூதூர் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் தங்கியுள்ளன.தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த 9 வது ஆண்டை பிபிசியிடம் நினைவுகூர்ந்த மக்கள், மீள்குடியேற்ற விவகாரத்தில் அரசாங்கத்தினாலும் வெளிநாடுகளினாலும் பல்வேறு அமைப்புகளினாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமது கவலையை வெளிப்படுத்தினார்கள் ......   இதே கால கட்டத்தில்  மகேந்தாவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி கடல் நீர் உள்வாங்கும் இந்த ஓடையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் எதிரொலியாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பின்னர்  பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.கிழக்குப்பகுதி மக்கள் அவல‌த்துக்கு tna முக்கிய காரணம் என்பது மக்கள் முனுமுனுக்க தொடங்கிவிட்டார்கள்

அரசுடன் ஒத்துழைக்க உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்க மாட்டோம் உறுதிபடத் தெரிவிப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வடமாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கத்துடன்  இயங்க நாங்கள் பின் நிற்கமாட்டோம். சகல விடயங்களிலும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது இணைத்தலைவராக பங்குகொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இரண்டிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப் படுவதை நாங்கள் ஏற் றுக்கொள்ள வேண்டி யுள்ளது.
எமது மாகாண மக் கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானவையுமாகும். எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன்.
வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட் டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது.
எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம் என்றார்.

யாழ் மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு 600 தமிழ் பெண்கள்

600 தமிழ் பெண்களை யாழ் மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு இணைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்து ள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பொலிஸ் சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் பற்றக்குறையாக உள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் பொலிஸ் சேவைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே யாழ். மாவட்டத்திலும் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
யாழ். மாவட்டத்திற்கு தேவையான 500 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் 100 பெண் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களையும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வால் அரசுகள் ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு

G7 staat
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்முயற்சியாக அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளன.
இது குறித்து, ஜி-7 அமைப்பில் இடம்பெற்றுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உக்ரைனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷியாவின் தலையீடு மேலும் அதிகரித்தால் பொருளாதாரத் தடையின் இலக்கையும் விரிவுபடுத்தும் முனைப்புடன் உள்ளோம்.
அதே வேளையில், உக்ரைன், அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை
ஜெனீவாவில் கடந்த 17ஆம் தேதி மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி உக்ரைனில் அரசியலமைப்புச் சீர்திருத்தம், அரசு கட்டடங்களைக் கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயலாற்றுவது போன்றவற்றில் உக்ரைன் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
ஆனால், ஜெனீவா ஒப்பந்தத்தை மதித்து உறுதியான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளவில்லை.
உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு நேரடியாக உதவாவிட்டாலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு ரஷியா மறைமுக ஆதரவு அளித்து வருவதுடன், அந்நாட்டு எல்லையில் படைகளை குவித்து போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
கிரீமியா மற்றும் செவஸ்டோபோல் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பாக ரஷியா இணைத்துக் கொண்டதை ஜி-7 நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா ஆலோசனை: இதனிடையே அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மாத்யூ ரென்ஸி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோருடன் கிழக்கு உக்ரைன் பகுதியில் போர் மேகம் நிலவுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அந்தப் பகுதியில் ரஷியாவின் தற்போதைய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார்' என்று கூறப்பட்டுள்ளது.

போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சு

அவுஸ்ரேலியாவில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அங்குள்ள போலி அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து உயர்அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். 
அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Operation Sovereign Borders என்ற பெயரில் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது. 
கடந்த செவ்வாய்க்கிழமை கன்பராவில் உள்ள ஹயாட் விடுதியில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான அவுஸ்ரேலிய - சிறிலங்கா கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான குழு சிறிலங்கா தரப்பில் கலந்து கொண்டது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், முன்னைய ஆட்சிக்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏனைய நாடுகள் வழியாக சட்டவரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை எந்தச் சூழ்நிலையிலுவும் அவுஸ்ரேலியா ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் மொறிசன் தெரிவித்துள்ளார். 

அவுஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவுஸ்ரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நடந்து கொண்டிருந்கும் இந்த நடவடிக்கையால், அவுஸ்ரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்ரேலியப் பயணத்தின் போது கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். 

அவுஸ்ரேலியாவுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்டு முதல் பயணம் இதுவாகும்.



samedi 26 avril 2014

நிறைவான இல்லம் வளமான தாயகம் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2014 சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டலின்

மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் எனும் தொணிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் இன்று (25.04.2014) ஈரளக்குள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. நடமாடும்சேவை ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றபட்டதை தொடர்ந்து நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை அதனால் பொதுமக்கள் அடையவிருக்கும் நன்மைகள் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன. நடைபெற்ற நடமாடும்சேவையினூடாக பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள் திருமணப்பதிவு மற்றும் தேசிய அடையாளட்டை போன்ற பதிவுகளுக்காக ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்துடன் காலம் கடந்த திருமணப்பதிவுகளும் உடன்பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களின் சேவையை வழங்கியிருந்தனர். அத்துடன் சமூகசேவை திணைக்களம், காணி அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், கால்நடை திணைக்களம், கமநல திணைக்களம்,பெண்கள் சிறுவர் அபிவிருத்தி திணைக்களங்கள் வருகைதந்து சேவையை வழங்கினர். மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் யானையிலிந்து மக்களை பாதுகாத்துகொள்வதற்காக யானைவெடிகளையும் வழங்கினர். மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற நடமாடும்சேவை ஊடாக ஈரளக்குள கிராம சேவகர் பிரிவிலுள்ள பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களின் தேவைகளை காலடியில் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து வசதிகள் குறைந்த இப்பிரதேசத்தில் நடமாடும் சேவைக்கு என பொதுமக்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு திரு.இரா.நெடும்செழியன் ஆகியோரினால் காலம்கடந்த திருமணப்பதிவு காணி உறுதிப்பத்திரங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் ஆயர் தேசத்துரோகக் குற்றச்சாட்டை நிராகரித்தார்

மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார். "பொதுபலசேனா எல்லா விடயங்களிலும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாடு என்று சொன்னால், அது மக்களுக்கு, நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் சொந்தமானது. அதைவிடுத்து, சிங்களம் பேசுபவர்களுக்கு மாத்திரம்தான் அது சொந்தம், பௌத்தர்களுக்குத்தான் அது இன்னும் கூட சொந்தம் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியமாகும்" என மன்னார் ஆயர் பி.பி.சி. தமிழோசைக்குத் தெரிவித்தார். தங்களைப் பொறுத்த வரையில் தாங்கள் மக்களுக்குத் தலைவர்களாக இருப்பதுடன், கத்தோலிக்க சமயத்தில் சமயம் வேறு, சமூகம் வேறு என்று பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் என்பது மக்களுடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றது எனவே அரசியலில் மக்களுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகாட்ட வேண்டியது தமது கடமையென்றும் அவர் குறிப்பிட்டார். "இருப்பினும் நாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவோமே தவிர, கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டோம். சமயம் சமூகம் என்ற வகையில் நாங்கள் எங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார். -

தயாளு அம்மாள் ராசா, கனிமொழி, மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி வழக்கில் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து 200 கோடி ரூபாய் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறியது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வந்தது.
விசாரணை முடிந்துள்ள நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யது.
இந்த குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் பெயரும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை குறித்து ஏப்ரல் 30ம் திகதி பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

28 பேர் பலி ஈராக்கில் தேர்தல் பிரசார கூட்டத்தில்

ஈராக்கில் வரும் புதன்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. கிழக்கு மற்றும் தெற்கு பாக்தாத்தின் இடையே அமைந்துள்ள சாடிகுன் தொகுதியில் அசைப் அஹெல் அல் ஹக் கட்சித் தலைவர் குவைஸ் அல் கஸ்ஸாலி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு மனித வெடி குண்டும், பின்னர் ஒரு கார் குண்டும் வெடித்ததில் 28 பேர் உடல் சிதறி பலியாகினர். சுமார் 30 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

jeudi 24 avril 2014

இளம் வாக்காளர்களின் வருகை


வாக்குரிமையும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. அரசியல்ரீதியாக எது சரி, எது தவறு என்பதற்கான அளவுகோல்’ என்ற வாசகத்தைப் போல தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ள வாசகம் வேறெதுவும் இல்லை.” மக்கள்தொகையின் வெவ்வேறு பிரிவினரை விட புதிய வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் தேர்தல் இது. எனவே, எண்ணிக்கையில் அவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலும் அவர்களுடைய வாக்குகள் அடுத்த மக்களவையை வடிவமைப்பதில் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கப்போகின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருப்பது இளம் வாக்காளர்களின் வருகை

பாரிஸ் லாச்சப்பலில் வங்கி அட்டைகளின் விபரங்கள் திருடப்படுகின்றன

வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துபவர்களில் விபரங்கள் கமரா மற்றும் விபரத்திரட்டு இயந்திரங்கள் மூலம் கேகரிக்கப்படுகின்றன. பின்னர் குறித்த பெயர் விபரங்களில் போலி வங்கி அட்டைகள் தயாரிக்கப்பட்டு குறித்த நபர்களின் வங்கிளிலிருந்து பணம் களவாடப்படுகின்றது.
பாரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழர் வணிக நிலையங்களில் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடுகளையும் செய்துள்ளார்கள்.
எனவே பாரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள உணவகங்கள், புடவைக் கடைகள், விமானச்சீட்டு வாங்கும் முகவராலயங்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவோர் அவதானமாக இருப்பது நல்லது. குறிப்பாக பணம் செலுத்தும் பகுதியில் கமரா பொருத்தப்பட்டிருக்குமானால் அவ்விடத்தில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டில் 27 வயது முதல் 65 வயது வரையிலான தமிழர்கள் இவ்வாறான கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.
.

mercredi 23 avril 2014

எதனையும் பிளான் பண்ணி செய்யவேண்டும் லண்டனில் ஸ்டார் விஜய் இரவை” ஏற்பாடு செய்தவர்கள்

Share

jhலண்டனில் (ஞாயிற்றுக்கிழமை) 02 அரீனாவில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு படு சொதப்பலில் முடிவடைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்த வியஜ் TV, இந்தியாவில் இருந்து சில சினிமா நட்சத்திரங்களையும் அறிவிப்பாளர்களையும் லண்டனுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இதற்கு பின்னணியில் “லிபரா” மோபைல் நிறுவனம் இருந்துள்ளது. லிபரா மோபைல் நிறுவனம் மற்றும் விஜய் TV இரண்டும் இணைந்தே, இந்த “ஸ்டார் விஜய் இரவை” ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் பிரபல இளைய இசையமைப்பாளர் “அனிருத்” கலந்துகொள்வதாக பெரும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதேபோல, வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் வருவதாக அறிவிக்கப்பட்டது அவரும் வரவே இல்லை. இதேவேளை ஈழத் தமிழ் இணையங்களை புறம்தள்ளி, “லங்கா ஸ்ரீ” இணையத்தால் நடாத்தப்படும் சினி உலகம் என்னும் சினிமா இணையமே இந்த நிகழ்சியின் ஊடக அணுசரனையாளராக இருந்துள்ளார்கள். இதில் பெரும் பகிடி(வேடிக்கை) என்னவென்றால் யாருமே பார்காத(வாசகர்கள் மிகக் குறைந்த) இந்த லங்கா ஸ்ரீயின் இணையம், ஊடக அணுசரணையாளராக செயல்பட்டது தான் !
!cid_ii_hu8q82eg1_145809b5dd9ce989கீழ் உள்ள யூரியூப்(வீடியோ) நேர்காணலைப் பாருங்கள். சியான் விக்கிரமின் பேட்டியை சுமார் 2,700 பேர் மட்டுமே பார்த்துள்ளார்கள். இதேவேளை சுப்பர் சிங்கரின் பேட்டியை வெறும் 165 பேர் மட்டுமே பார்த்துள்ளார்கள்.

!cid_ii_hu8ql4ts3_14580a4ad6f6e737லண்டனில் யாராவது நிகழ்சிகளை நடத்துகிறார்கள் என்றால், அவர்களிடம் சென்று நாம் ஊடக சப்போர்ட் செய்கிறோம் என்று லங்கா ஸ்ரீ இணையம் தற்போது கேட்டு வருகிறது. ஆனால் இந்த இணையத்தின் பார்வையாளர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. லண்டனில் விஜய் TV நிகழ்சி இப்படி சொதப்பலில் முடிவடைய காரணம் சரியான ஊடகங்களை அவர்கள் அணுகவில்லை. குறிப்பிட்ட ஒரு ஊடகத்திடம், தமது நிகழ்சி பற்றி விளம்பரத்தை கொடுத்தது. மேலும் ஈஸ்டர் விடுமுறையில் இதனை வைத்தது. பல ஆயிரம் தமிழர்கள் லண்டனில் இல்லை, அவர்கள் ஹாலிடே சென்றுவிட்டார்கள்.சினிமா மோகத்தை ஈழத் தமிழ் மக்களிடையே விதைத்து, அவர்களை திசை திருப்ப சில சக்திகள் முனைப்பு காட்டி வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களை குறிவைத்து, அவர்களின் செல்வங்களை அபகரிக்கவும் சில இந்திய கம்பெனிகள் முணைப்பு காட்டி வருகிறது. இதற்கு சில ஈழத் தமிழ் இணையங்களும் காசுக்காக ஆதரவு தெரிவித்து வருகிறது. இவர்கள் அனைவரும் இன்றோடு நல்ல பாடத்தினைக் கற்றுக்கொண்டுள்ளார்கள். சுமார் 20,000 ஆயிரம் மக்களை உள்ளடக்க கூடிய 02 அரீனாவில், இன்று நடந்த விஜய் TV இன் நிகழ்வில் சுமார் 1,500 பேர் அளவில் தான் கலந்துகொண்டுள்ளார்கள். மண்டபத்தின் 85% வீதமான ஆசனங்கள் காலியாகத் தான் இருந்துள்ளது. “எதனையும் பிளான் பண்ணி செய்யவேண்டும்” பிளான் பண்ணி செய்யவில்லை என்றால் இப்படி தான் முடியும் ! என்று அடிக்கடி நகைச்சுவை தென்றல் வடிவேல் சொல்லுவார். அதுபோல பிழையான மீடியா பாட்னரை பிடித்து, நிகழ்சியை சொதப்பி, மூக்கு உடைந்த நிலையில் உள்ளார்கள் விஜய் TV யினர். இந்த தோல்வியின் பங்குதாரரான லங்கா ஸ்ரீ மற்றும் “லிபரா” மோபைல் நிறுவனத்தினர் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளார்கள்.02 அரீனாவில் நிகழ்வு ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் என்ற மாதிரி புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதன் கீழ், இன்று லங்கா ஸ்ரீ இணையத்தின் ஊடக ஆதரவோடு ஒரு நிகழ்வு லண்டனில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற படமும் இணைக்கப்பட்டுள்ளது.
!cid_ii_hu8quswl4_14580ab8f39812aa
ஈழத் தமிழர்கள் மத்தியில் தாம் பெரும் செல்வா
க்கோடு இருக்கிறோம் என்று இதுவரை காலமும் நினைத்து வந்த விஜய் TV , ஈழத் தமிழர்களுக்கு சினிமா மோகத்தை காட்டி போராட்டத்தை திசை திருப்பலாம் என்று கனவு கண்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள் என்பதற்கு, இதுவே நல்ல உதாரணம் ஆகும். ஆதாரங்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ள இவர்கள், ஈழத்தில் கை கால்களை இழந்த , மற்றும் விதவைகள், அப்பா அம்மாவை இழந்த சிறுவர்களுக்கு உதவி இருக்கலாமே ?

lundi 21 avril 2014

இலங்கை மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை!முன்னைநாள் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

இலங்கையிலுள்ள மாகாண சபைகளை ஏற்று அதில் மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை!

மற்றது, தமது ஆதரவான கட்சி - கூட்டமைப்பைப் சேர்ந்தவர்கள் இந்த மாகாண சபைகளைக் கைப்பற்ற வேண்டும் - ஆள வேண்டும் என்று கருதி செயற்பட்ட - வாக்களித்த – மக்களை வாக்களிக்குமபடி கேட்டுக் கொண்ட சமூகப் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் ஊடகவாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் போன்றேரை நோக்கியவை!

மேலும், இலங்கையில் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண சபைகளைத் தவிர இப்போதைக்கு வேறெதுவும் தமிழர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறுகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இப்போதைக்குக் கையிலிருக்கும் மாகாண சபைகளை பயனுள்ளதாக்க முடியவே முடியாதா? - இந்த மாகாண சபைகள் இயங்குவதில் இருக்கும் சிரமங்கள் எதனால் ஏற்படுகின்றன?. அந்தச் சிரமங்களை நீக்க எனனென்ன முயற்சிகளை எடுத்துப் பார்க்கலாம்? என ஆர்வம் கொண்டிருப்போரின் சிந்தனைக்கு சில விடயங்களைக் கொண்டு செலுத்தவுமே இங்கு முயற்சிக்கிறேன்.

தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளுக்குச் சார்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதாயினும் அது எவ்வளவு சிரமமானது என்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றீர்கள். அதற்காக இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பேராசையால் இந்த தமிழ்ச் சமூகம் நழுவ விட்டது. இது பஸ் அல்ல ஓடிப் பிடிப்பதற்கு. அது வரலாறாகிவிட்டது. அது மீண்டும் எப்போது எப்படி சுழன்று வரும் என்று சொல்ல முடியாது. அதிலும் இங்கே கடைசித் தமிழனும் கப்பலேறி மேலைத் தேச நாடொன்றைச்; சென்றடையும் வரை ஓய மாட்டான் என்ற போக்கைக் கொண்டிருக்கின்றது.   

இப்போதிருக்கும் மாகாண சபைகள் தமிழர்களின் இன்றைய கால கட்ட நிலைமையில் குறைந்த பட்சமாயினும் அவை அவற்றின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்;தின் அபிவிருத்திக்கும் அப்பிரதேசத்தில் இருக்கும் மக்களில் வாழ்வில் முன்னேற்றங்களை ஆக்குவதற்கும் உரிய அதிகாரங்கள் கொண்ட நிறுவன அமைப்பாக இருக்க முடியாத ஒரு அமைப்பா? அல்லது அவை எந்தவகையிலும் பயனற்றவையாக இருக்கும் வகையிற்தான் அதன்  சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனவா?

அல்லது, சட்டப்படி அவை குறைந்த பட்ச அதிகாரங்கள் கொண்டவையாயினும் இவை முன்னர் எக்காலத்திலும் இருந்த மாவட்ட மாகாண அமைப்புக்கள் எதனையும் விட ஒரு முன்னேற்றகரமான பயன்பாட்டைத் தரக் கூடியனவாக இருந்தும் இலங்கை அரசாங்கத்தினாற்தான் அது பயனற்றதொரு நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கிறதா? 

அல்லது, இந்த மாகாண சபைகளுக்கு மக்களால் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கட்சிக்காரர்கள் அல்லது கூட்டமைப்புக்காரர்கள் தங்களை நம்பிக்கைகளோடு தெரிவு செய்த மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்வதற்குத் தேவையான திறமை ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றனரா? அல்லது அறவே விருப்பம் அற்றவர்களாக இருக்கின்றனரா?

அல்லது, மாகாண சபைகள் பயனுடையவோ அல்லவோ, இப்போதிருக்கும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு எப்பாடுபட்டாயினும் இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் பயனற்றவையே என்று உலகத்துக்கு நிரூபிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா?

ஏனைய மாகாண சபைகளைப் பற்றி இங்கே பேசவில்லை. வடக்கு மாகாண சபையை மையமாக வைத்தே இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன். ஏனைய மாகாண சபையின் ஆளுங்கட்சிக்காரர்கள் மாகாண சபையிருந்தாலென்ன அல்லத கட்சிக்hhதியாலயத்தில் இருந்தாலென்ன தமக்கு வேண்டியவற்றை இருந்த இடத்தில் இருந்தே அவர்களாற் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமது மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வடக்கு மற்றும் மாகாண சபைகளுக்க அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்றும் நாம் கருதிக்கொள்ள இங்கு இடமுண்டு.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான மாகாண அரசாங்கங்கள் வௌ;வேறு பெயர்களில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன. இலங்கையின் சட்டங்களும் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளும் பிரித்தானிய பாரம்பரியத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாகி அமைந்தவை - வளர்ந்தவைதான். 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இப்போதும் இலங்கையின் நாடாளுமன்றம், சட்டவாக்க முறைகள், நிறைவேற்று நிர்வாக அமைப்புகள், நீதித்துறை போன்ற எல்லாம் பிரித்தானியப் பாரம்பரியத்திலிருந்து விலகாமலேயே இன்னமும் உள்ளன. பிரதமரைத் தலைiமாகக் கொண்ட அமைச்சரவைக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு வெளியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே அமைச்சரவைக்குத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர அடிப்படையில் இங்கு வேறு எந்த வேறுபாடும் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால் இலங்கையின் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் பிரித்தானியப் பாராளுமன்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயெ உருவாக்கப்பட்டுள்ளன.  அந்த வழியாகவே இநதியாவின் அரச கட்டமைப்பும் உள்ளது. மத்திய அரச அமைப்பின் ஒரு பிராந்திய வடிவமாகவே இந்தியாவிலுள்ள மாநில அரச அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. அதே வகையான மாகாண அரச வடிவ அமைப்புகளையே அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளும் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் ஆடசியமைப்பு முறைகளோடு இலங்கையின் மாகாண சபைகளையும்  ஒப்பிட்டுப்பார்த்து ஒற்றமைகளையும் வேற்றுமைகளையும் காண்பதோடு, இந்தியா கனடா மற்றும் அவுஸ்த’;திரேலியா ஆகிய நாடுகளில் மாகாண ஆட்சிமுறை வெற்றிகரமாக செயற்படுவதற்கும் இலங்கையில் அது முடங்கிப்போய் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருப்பதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். நான் இங்கே நாடுகளுக்கிடையில் அதிகாரப் பகிர்வில் உள்ள அளவுகளைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மத்திய் மாநில அரச அமைப்புகளுக்கிடையிலான உறவுமுறைகளை - தொடர்புகளைப் பற்றி புரிந்து கொள்வதையே குறிப்பிடுகிறேன்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்க இந்தியத் தலைவர்கள் இடையாட்களாக செயற்பட்டமை அனைவரும் அறிந்ததே. 13வது திருத்த அரசியல் யாப்பு இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் தன்மையை ஒத்தே உருவாக்கப்பட்டன. எனவே இநதியாவின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் இலங்கையின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இங்கு பிரதானமாகும். இந்தியாவில் வெற்றிகரமாக உள்ள ஓர் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு  இலங்கையில் மட்டுமல்ல தோல்வியடைந்து போவதற்கு – செயற்பட முடியாதபடி குழப்பங்களுக்கு உள்ளாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் பலநூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மத்திய ஆட்சிக்கும் மாநில ஆட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்றன, அதேபோல, மத்திய மாநில அரசுகளுக்கிடையான சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தனிநபர்கள்  தொடுத்த பல நூற்றுக்கணக்கான வழக்குகளும் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்டன. அவைகள் அனைத்தும் இந்திய உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அவ்வாறான அனுபவங்களிலிருந்து எதையாவது கற்று, பெற்று இலங்கையின் மாகாண சபைகளை வலுவுள்ளதாக – பயனுள்ளதாக ஆக்குவதற்கு முயற்சிக்கலாமா என்று பார்ப்பதுவும் பொருத்தமானதே.
எனது கேள்விகள் அடுத்ததிலும் தொடரும்
இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

dimanche 20 avril 2014

ஈஸ்டர் திருநாள் - இயேசு உயிர்த்தெழுந்தாரா?மனித வாழ்க்கையில் கடவுள் தலையிட உரிமை இல்லை


இயேசு கி.பி 33-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இறந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கணிக்கின்றனர். வேறு சிலர் இதற்கு மாற்றாக கி.பி 34-ஆம் ஆண்டு இயேசு இறந்திருக்கக்கூடும் என்கிறார்கள். வரலாற்று குழப்பம் ஒருபுறம் இருக்க...

"மத்தேயு, மார்க், லூக்கா, யோவான்" என்னும் நால்வரும் இயேசுவின் வரலாற்றையும், போதனைகளையும் எழுதி நூல்களாக வெளியிடுகிறார்கள். இதில் 'யோவான்' இயேசுவின் வாழ்க்கையில் இறுதியில் நடந்த நிகழ்வுகளை விரிவாக எழுதி இருக்கிறார்.

இந்நூல்கள் கிபி 65-முதல் 110-க்குள் உட்பட்ட காலகட்டங்களில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இந்நால்வர் எழுதிய நூல்களிலும் பல்வேறு தகவல்களில் குழப்பங்களும், மாற்று கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இருப்பினும் கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை உட்பட முக்கியத்துவமான அங்கத்தவர்களால் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் சிறப்பு பெற்றன.

இந்நூல்களை முன்வைத்து பின்னாளில் அறிஞர்கள் பல ஆய்வுகளும் பல திருத்தங்களும் செய்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இனி, இயேசு கடவுளாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுக்கு செல்வோம்.

உலக வரலாற்றில் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பாரசீக கிரேக்க அரசுக்களின் ஆட்சிக்குப் பின் ரோம் அரசு கி.மு 168 முதல் கி.பி 476 வரையில் ஆட்சி செய்தது. ரோம் ஆட்சியில் கி.பி 34-இல் (அல்லது கி.பி 33-இல்) இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர் பெற்றார் என்று இயேசுவின் சீடர்களையும் அதை நம்பிய மக்களையும் ரோம் அரசு கொடுமைப்படுத்தியது.

பலருக்கு மரண தண்டனை கொடுத்தது. கிட்டத்தட்ட 300-ஆண்டுகள் இயேசு கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கி.பி 306-இல் ரோம் மன்னன் 'கான்ஸ்டன்டைன்' ஸ்பெயின் நாட்டின் மீது போருக்கு செல்லும் இடத்தில் சிலுவையை கண்டார். 'வெற்றி பெறுவாய்' என்று அருள்வாக்கும் கிடைத்தது. போரில் வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்திருந்த கான்ஸ்டன்டைனுக்கு பெரும் வெற்றி கிடைத்தது.

தனது நாட்டுக்கு திரும்பிய பின் சிலுவை குறித்து ஆராய்ச்சிகள் செய்யும்படி அறிஞர்களிடம் கோரினார். மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் எழுதிய நூல்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயேசு உயிர்த்தெழுந்த வரலாறுகள் வரை ரோம் மன்னன் கான்ஸ்டன்டைனுக்கு போதிக்கப்பட்டது.

கி.பி 313-இல் ரோம் நாட்டு மன்னன் 'கான்ஸ்டன்டைன்' இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டார். இயேசு கடவுளின் அவதாரம் என்று அறிவித்தார். மக்களையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி பரப்புரை செய்தார்.

'இயேசு பிறப்பதற்கு முன்', 'இயேசு பிறப்பிற்கு பின்' என்று வரலாறுகளை கணிக்கும்படியும் ஆணையிட்டார். 'கி.மு - கி.பி' வரலாற்று கணக்கிடுகள் இன்றைய காலம் வரையில் இப்படியே கணிக்கப்படுகின்றது. அதேப்போல் ´சிலுவை குறி´ புனிமாகவும், கிறிஸ்துவ மதத்தின் சின்னமாகவும் இருக்கிறது.

'கான்ஸ்டன்டைன்' காலத்திற்கு பிறகும் ரோம் மற்றும் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இயேசுவின் வரலாறுகளும், போதனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீவிரம் அடைந்தன.

கி.பி 391-இல் பண்டைக்கால நாகரிகத்தின் சின்னங்களான 'சிரபிஸ்' (Serapis) கோயில்கள் அனைத்தும் கிறிஸ்துவ மதகுருமார்கள் பாதிரியார்களால் அழிக்கப்பட்டன.

கி.பி 590- 604 இல் ரோம் போப்பாண்டவராக இருந்த 'கிரிகோரி1' கொடுங்கோலனாக இருந்தார். கடவுள் மறுப்பாளர்கள் விஞ்ஞானிகள் உட்பட பலரை கொடூரமாய் தண்டித்தார். அறிவியல் நூல்களை முற்றாக அழிக்கும்படி கட்டளையிட்டார்.

17-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கொள்கைகளை எதிர்ப்போர்களைத் தண்டிக்க ரோம் போப்பாண்டவர் சமயத்துறை சார்ந்த உயர்மன்றம் ஓன்றை ஏற்படுத்தினார். இந்த உயர் மன்றத்தின் மூலமாகத்தான் தத்துவஞானியும், விஞ்ஞானியுமான 'புருனோ' (Bruno) வுக்கு, 'வான நூலை' எழுதியதற்காக உயிரோடு கொளுத்தி கொல்லும்படி கட்டளை இட்டு நிறைவேற்றப்பட்டது.

'கலிலியோ'வின் (Galileo) பூமி உருண்டை என்னும் கருத்தை வாபஸ் வாங்கும்படி சமயம் மிரட்டியது.

17-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானத்திற்கும், சமயத்திற்கும் பெரும் போராட்டமே நடந்தது.

'மனிதனில் இருந்து மனிதன் தான் தோன்ற முடியும்' என்ற பைபிளின் வாதத்தை 'டார்வின்' கூற்று மறுத்தது. 'மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்' என்னும் டார்வின் ஆய்வு சர்ச்சையை கிளப்பியது.

கிறிஸ்துவத மதத்திற்குள் உட்பிரிவுகள் சில ஏற்பட மதகுருக்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தினர். கிறிஸ்துவமதக் கோட்பாடுகளை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்புகளும் நடந்தன. பல்வேறு குழுக்களான இருந்த மக்களிடம் கிறிஸ்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளும்படி தூண்டப்பட்டனர். அல்லது கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கடவுள்களும், மதங்களும் ஏற்பட்ட காலங்களிலேயே கடவுள் இல்லை மதங்கள் இல்லை என்று கூறுவோர்களும் இருந்தனர். இவர்களை பொருள் முதல்வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தாங்கள் காண்பவைகளை மட்டும் ஏற்பவர்களாகவும் உலக யதார்த்தத்தோடு வாழ்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் வெளிப்படையாக கடவுள் மறுப்பு கருத்துக்களை பேச முடியவில்லை. அப்படி பேசுபவர்கள் அரசாங்கத்தினரால் கடுமையான தண்டனைக்குள்ளானார்கள்.

சில வரலாற்று ஆதாரங்களை பார்ப்போம்.

கிரேக்க பொருள் முதல்வாதியான 'அனக்ஸகோரஸ்' (Anaxagoras) நாத்திகர் என்று 'ஏதென்ஸ்' மாநகரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

"உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை" என்ற பைபிள் வாக்கியத்திற்கு எதிராக 'டெமோக்கிரடஸ்' (Democritus), "மனித சமுதாயத்தின் வாழ்க்கையிலும், உலகில் இருக்கும் இயற்கையின் செயல்களிலும் கடவுள் கண்காணிப்புகள் எதுவும் இல்லை" என்று கூறியதோடு, "இல்லாத கடவுளை தேடி ஆராய்ச்சி" என்ற நூலையும், "மனித வாழ்க்கையில் கடவுள் தலையிட உரிமை இல்லை" என்ற நூல் உட்பட வேறு பல நூல்களும் எழுதினார். மேலும் தனது ஆராய்ச்சியில், "பொருளின் சிறு துளி அணு என்றும், பொருட்கள் அணுக்களால் ஆனது" என்றும் தனது ஆய்வின் முடிவு குறித்து கூறிய போது கிறிஸ்தவ சமயவாதிகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. ´டெமோக்கிரடஸ்´ நூல்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. இன்றைய சந்ததியினருக்கு ´டெமோக்கிரடஸ்´ சிந்தனைகள் எதுவும் கிடைக்காவண்ணம் முற்றாக அழிக்கப்பட்டன. மெமோக்கிரடஸ் இறப்பு குறித்தும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

எபிக்கூரஸ் (Epicurus ) இவர் டெமோக்கிரடசின் சீடர். "மனிதன் கடவுள் நம்பிக்கையில் இருந்து விடுபட்டு பகுத்தறிவையும், விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்" என்று மக்களிடம் தொடர்ச்சியாய் பிரச்சாரம் செய்தவர். இவரையும் கிறிஸ்துவ சமயம் விட்டுவைக்கவில்லை.

ஐரோப்பாவில் மதத்திற்காக நடைப்பெற்ற போர்களை "கிறிஸ்தவப் போர்" என்று அறிவித்தனர். இப்படி பல உதாரணங்கள் இருந்தாலும் ஈஸ்டர் திருநாள் தொடர்புடைய தகவல் ஒன்றை பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி வானினி (Vanini) 1619-இல் பைபிளில் இருக்கும் வாசகங்களையும், இயேசுவின் வரலாறுகளையும், அதில் இருக்கும் முரண்களையும் கேள்விக்குட்படுத்தி சமயவாதிகளிடம் விவாதித்தார். வானினியின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் தடுமாறிய சமயவாதிகள், "பைபிள் கருத்தை ஆய்வுகள் இன்றி ஏற்க வேண்டும்" என்று பிற்போக்குத்தனமாய் பேசியது.

வானினி தொடர்ச்சியாய் பைபிள் வாக்கியங்கள் குறித்து விமர்சனங்ளை முன்வைத்துக் கொண்டே இருந்தார்.

"இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்த பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்" என்னும் வாதத்தை ஏற்க மறுத்தார் வானினி.

இவ்விவாதம் பெரும் சர்ச்சையை கிளப்ப, கிறிஸ்தவ மதகுரு வானினியை உயிரோடு நெருப்பில் எரித்து கொல்லும்படி ஆணையிட்டது.

பிரான்ஸ் நாட்டில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த துளுஸ் நகரத்தில் முக்கிய சாலை ஒன்றில் பொது மக்களுக்கு முன்பு தண்டனை நிறைவேற்றப்படும் தருணம்.

நெருப்பில் தள்ளப்படும் முன் வானினி மதகுருவை பார்த்து கூறுகிறார்:

"உங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த போது பிதாவே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்கள் அறியாமையில் தான் இக்காரியத்தை செய்கிறார்கள் என்று இயேசு கூறியதை போல் நான் கூறமாட்டேன். நீங்கள் செய்யும் குற்றத்தை நீங்கள் உணர்ந்தே செய்கிறீர்கள்" என்று ஆவேசமாய் முழங்கினார்.

வானினியின் வார்த்தைகளில் மேலும் கோபம் அடைந்த மதகுரு, "இவனை நெருப்பில் தள்ளும்முன் நாக்கை பிடுங்கி எறிந்துவிட்டு தள்ளுங்கள்" என்று கூறுகிறார்.

வானினியை சுற்றி இருந்த கிறிஸ்தவ பாதிரிகள் வானினியின் நாக்கில் இரும்பினால் ஆன கொக்கியை சொருகி நாக்கை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டு வானினியை நெருப்பில் எறித்து கொன்றனர்.

"இயேசு மரணித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரா?" என்று விவாத்தித்ததற்காக வானினி படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், அவர் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை...

இன்று 21-ஆம் நூற்றாண்டு.

2014-இல் ஈஸ்டர் திருநாள் என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதகுருக்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை பரிமாறுகிறார்கள்.

எல்லாம் சரி...

தத்துவஞானி ´வானினி´ எழுப்பிய கேள்வியை ஒரே ஒருமுறை உங்கள் மதகுருக்களிடம் கேளுங்கள். அல்லது ´வானினி´க்கு நடந்த கொடூரத்தை நினைவுப்படுத்துங்கள்.

"மதங்கள் அன்பை மட்டுமா போதிக்கிறது?"

வன்முறைகளை செலுத்தி மக்களை முட்டாள்களாக வைத்திருக்க ´பைபிள்´ சொல்லும் கதைகளை இந்நாள் மனிதனும் கேள்விகளின்றி ஏற்க வேண்டுமா?

உங்களிடம் முன்வைத்திருக்கும் கேள்வி இதுதான்:

"ஈஸ்டர் திருநாள் - இயேசு உயிர்த்தெழுந்தாரா?"



தமிழச்சி

samedi 19 avril 2014

இலங்கையின் முதலாவது வாகன உற்பத்தி தொழிற்சாலை

micro-8வாகனங்கள் உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது மைக்ரோ தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொல்கஹவல தொழில் பேட்டையில் திறந்துவைத்தார்.
அத்துடன் தொழிற்சாலையையும் ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டார். மைக்ரோ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லோரன்ஸ் பெரேரா தமது நிறுவனத்தின் புதிய உற்பத்தியான ‘டுவர் வெகன்’ வாகனத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள மைக்ரோ வாகனங்கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

vendredi 18 avril 2014

ராஜிவ் தமிழ் மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா?– சோனியா

sonia_CIஇலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. என தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்தில் பேசியுள்ள சோனியா காந்தி மேலும் பேசுகையில் இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல்
ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.  மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்’;. காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து மக்களிடம் வேண்டுகோள்.சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்படவுள்ளதாம்.

உள்நாட்டிலும் இதுபோன்ற நபர்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமாம்! 

எல்ரிரிஈ அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் அண்மையில் படையினரின் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருதாகவும் பாதுகாப்பு தரப்பினர்தெரிவித்துள்ளனர். 

விசேடமாக மேற்படி நாசகாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் குறித்து, விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நாட்டில் மீண்டுமொரு வன்முறைகள் இடம்பெறுவதை தடுப்பதை நோக்காக கொண்டே, இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு உதவி வருவோர் தொடர்பாக கண்டறியப்பட்டால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் மீண்டும் தாய்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு துணைபோக வேண்டாமென, நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும் மூவின மக்களும் நாட்டில் ஐக்கியமாக வாழ வேண்டும் என்றும் இதை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும், இராணுவத்தினருக்கும் மாத்திரம் இச்செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றும் பொது மக்களின் உதவி இன்றியமையாது தேவைப்படுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

mercredi 16 avril 2014

தென் கொரியாவின் தென் கடற்கரைக்கு அருகே 470 பேருடன் கப்பல் கவிழ்ந்தது

தென் கொரியாவின் தென் கடற்கரைக்கு அருகே 470 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதை மீட்கும் பணியில் டஜன் கணக்கான கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுவருகின்றன.
இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் அந்த கப்பலின் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டுவருகின்றனர். மேலும் சிலர் கப்பலிலிருந்து கடலில் குதித்துள்ளனர்.
ஆனால் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் கதி குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.
பயணித்தவர்களில் பெரும்பாலானோர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். ஜெஜு என்ற ஒரு சுற்றுலா தீவுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
மோசமான காலநிலை நிலவுவதாக செய்திகள் இருந்த நிலையில்,ஏன் கப்பல் பயணிக்க அனுமதி தரப்பட்டது என்று பெற்றோர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பொது பல சேனா பயங்கரவாத அமைப்பாக பெயர்பெற்றுவிட்டது...!

இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பொது பல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ Terrorism Research & Analysis Consortium (TRAC) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

TRAC – Terrorism Research & Analysis Consortium -’ பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ என்பது உலக நாடுகளில் அரசியல் வன்முறை தொடர்பில் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு செய்யும் சர்வதேச நிபுணர்களை கொண்ட ஒரு ஆய்வு மையமாகும்.

பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைகான காரணத்தை விளக்கியுள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் TRAC என்ற அமைப்பு “அவர்களின் நடவடிக்கைகள் மென்
த்துள்ளது.
மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக இருக்கிறது என தெரிவி
பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களையும் TRAC என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Terrorism Research & Analysis Consortium (TRAC) இன் அறிவிப்பு (AD) 

திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது.இது தொடர்பில் தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, மத்திய ,மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பின்னர் அவர்கள் ஆறு மாதகாலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கோரியுள்ளது.
மேலும் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் உரிய உரிமையை பெறுவதற்கு தேவையான
வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய சட்ட உதவி மையத்தின் உறுதுணையுடன் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு இன்று தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக திருநங்கைகளின் ஆதரவு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

lundi 14 avril 2014

தமிழர் புத்தாண்டு - தையா? சித்திரையா?

ஆதியிலிருந்து தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபு கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியது. இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

இன்று உலகில் தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி. ஆனால் தமிழர்கள் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடுகிறோம்? தை மாதம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினம் என்று ஒரு சாரரும், சித்திரை கொண்டாட்டம் தான் பழக்கத்தில் இருந்தது என்றும் விவாதம் தொடருகின்றன.

சித்திரையில் தமிழர் புத்தாண்டு தினத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள் வகைப்படுத்திய 60 ஆண்டுகளையும், அதன் புராண கதைகளையும் ஆராய வேண்டுகிறோம்.

தமிழ்மொழியில் கூட பெயரற்ற மாதத்தை சார்ந்து அதுவே தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இதைவிட பெரிய அறியாமை இருக்க முடியுமா?

60 ஆண்டுகளின் பெயர்கள் எதுவும் தமிழ் இல்லை. அனைத்தும் சமஸ்கிருதம். இதில் 60 ஆண்டுகளை மூன்று பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள் ஆரியர்கள். உத்தம வருஷங்கள் - மத்திம வருஷங்கள் - அதம வருஷங்கள்.

1. உத்தம வருஷங்கள்:

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய

2. மத்திம வருஷங்கள்:

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ

3. அதம வருஷங்கள்:

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய

பிரபவ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடியும் 60 பெயர்களுக்கான புராணக் கதையையும் என்னவென்று பாருங்கள்.

அறுபதினாயிரம் பெண்களுடன் கிருஷ்ண பகவான் இருப்பதைக் கண்ட நாரதர் கிருஷ்ணனிடம், "60.000 பெண்களை வைத்திருக்கிறாயே. இதில் ஒரு பெண்ணை எனக்கு தரக்கூடாதா?" என்று கேட்கிறார்.

கிருஷ்ண பகவான், "நான் இல்லாத வீட்டில் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக் கொள்" என்று கூறுகிறார்.

நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்று பார்க்கிறார். 60.000 பெண்கள் வீட்டிலும் கிருஷ்ணன் இருக்கிறார்.

என்ன செய்வது? நாரதருக்கு மோகம் கொள்ள பெண் இல்லை. மீண்டும் கிருஷ்ண பகவானிடமே வருகிறார் நாரதர். "எங்கு நோக்கியும் தனியான பெண்ணை காணவில்லை என்று கூறிவிட்டு, கிருஷ்ணனிடம் நான் பெண்ணாக மாறி உங்களோடு உறவு கொள்ள விரும்புகிறேன்" என்று விருப்பத்தை நாரதர் தெரிவிக்கிறார்.

அதற்கு இணங்கிய கிருஷ்ணன், "நாரதா யமுனை நதியில் குளித்தால் நீ பெண்ணாக மாறுவாய். பின் உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.

நாரதரும் யமுனையில் குளிக்க, அழகிய பெண்ணாக மாறுகிறார். நாரதரின் அழகில் மயங்கிய கிருஷ்ணன் உறவு கொள்கிறார். தொடர்ந்து 60 வருடங்களாக உடல்உறவு கொள்ள 60 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கும், நாரதருக்கும் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை உறவில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் தான் ´பிரபவ´ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடிகின்றன.

*[இந்த புராண கதையை அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் காணலாம்]

கதையின் ஆபாசத்தை பாருங்கள். இந்த ஆபாசத்திற்கு பிறந்த மாதங்களின் பெயர்களை பாருங்கள். ஆரியனின் உளறலுக்கும், தமிழனுக்கும் என்ன தொடர்பு?

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகின்றனர். ஆரியனோ கலவியிலும், புரளியிலும் வருடங்களை கணக்கிடுகிறான்.

இந்தக் கணக்கில் நமது வயதை கூட கணக்கிட முடியாதே? முட்டாள் புலம்பலில் அறிவுத்தனத்தை தேட முடியுமா?

இதே கேள்வியை பெரியார் எழுப்பினார். புலவர் மறைமலை அடிகளார் எழுப்பினார்.

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கென்று காலங்கள் இருந்தன. நேரத்தை நாழிகையில் தொடங்கி பருவ காலங்களை 6 வகைக்குள் உட்படுத்தி இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி - என்று வகைப்படுத்தி உழவுத் தொழிலில் பருவ காலத்திற்கேற்ப தானியங்களை பயிர் செய்த தமிழனம் இந்து அடையாளத்தை ஏற்கும் முன் இயற்கையை வணங்கி பூஜித்து தை திருநாளில் தமிழர் பண்டிகையாக கொண்டாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, ஆரியர்கள் தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி தமிழினத்தின் அடையாளத்திற்கான குறியீடுகளை அழித்தொழித்தது.

தமிழர்களுக்கு இது அவமானமில்லையா?

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும், மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21ஸ்ரீ202

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

ஆனால், ஆரியம் இன்னமும் விடுவதாயில்லை. சித்திரை தான் தமிழர்களின் புத்தாண்டு என்கிறது.

சரி, ஆரியத்தின் வழிக்கே வருவோம்....

தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால் ஆரிய ஆபாசக்கதைகளை கூட ஒதுக்கி விடுவோம். 60 ஆண்டுகளுக்கு ஆரிய மொழியில் பெயர்களை வைத்து அதை தமிழன் ஏற்க வேண்டுமென்றால் என்ன காரணம்?

சித்திரை புத்தாண்டை ஏற்கும் தமிழர்கள் சிந்தித்தால் போதும்.
ஆரியர்களின் சூழ்ச்சி புரியும்.
தமிழச்சி

samedi 12 avril 2014

அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே பொதுபலசேனாவும் ஞானசார தேரரும் இயங்குகின்றனர்; வாசு தெரிவிப்பு!

பொதுபலசேனாவும் அதன் ஞானசார தேரரும்  இந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே அவரது செயற்பாடுகளைச் செய்து வருகின்றமையே எனக்கு புலானாகின்றது.
அவர்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு நெறுப்பை வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். என அமைச்சர் வாசுதேவநாணயக்கார நேற்று இரவு பீ.பி.சி சிங்கள சேவையான சந்தேசிய வானொலிச் செய்தியில்  தெரிவித்தார்.
கொழும்பு நிப்போண் ஹோட்டலில் பொலிசார் பாத்திருக்க அவர் செய்கின்ற செயல்களையும், சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுகின்ற பொலிசார் வாய்மூடி கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்க தேரரின்  நடவடிக்கைகளை செய்து கொண்டு போகின்றார்.
ஆகவே தான் முதலில் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக இந்த ஞானசார தேரர் ஏனைய மதங்களையும் மத நிலையங்களை தாக்குவது அல்லது விமர்ச்சிப்பதற்கு எந்த அரசாங்கம் இவருக்கு அனுமதி அளித்தது. இந்த நாட்டில் அந்னியோண்னியமாக வாழ்ந்து வரும் சகோதரத்துவ இனங்கள் மீது இவர் நகரக்கு நகர் சென்று கூட்டங்களை நடாத்தி  இனங்களுக்கிடையே விரிசலையும் மோதலையும் ஏற்படுத்தி வருகின்றார்.
பௌத்த மதத்திற்கு இந்த நாட்டில் ஏதும் இடைஞ்சல்கள் அல்லது அச்சுருத்தல்கள் ஏற்பட்டால் அதனை கவணிப்பதற்கென்று பௌhத்த சாசன அமைச்சு ஒன்று இருக்கின்றது.
அவ்வாறு பௌத்த மதத்திற்கு பங்கம் விளைவித்தால் இவர் அந்த அமைச்சிடம் சென்று முறையிடலாம்.  அதற்காக சட்டத்தையும் நீதியையும் தணிநபர்கள் எடுத்துக்கொண்டு இந்த நாட்டில்  செயல்பட முடியாது.

இவர் ஏற்கனவே ஒரு மத நிலையத்தை தாக்கியதாக நீதிமன்றத்தில்கூட வழக்கு ஒன்று இருந்தது. அதிலும் அவர் விடுபட்டுள்ளதாக அறிகின்றேன். என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சந்தேசிய ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.முஸ்லிம் மக்களுடன் மல்லுக்கட்டும் அதிர்ச்சி வீடியோ; பொதுபல சேனா அமைப்பின் மன்னார் மரிச்சக்கட்டு விஜயம்..!!

வெலிகடை படுகொலை போல ஒரு வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களை- விட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும். பிள்ளையான்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்த கிழக்கின் இளைஞர்களை நினைவு கூரும் நிகழ்வு நாள் வழமை போல் இவ்வருடமும் நேற்று நடைபெற்றபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில், வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல ஒரு குமுதினிப்படகு படுகொலை போல ஒரு கந்தன் கருணை படுகொலை போல ஒரு வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கிழக்கு மாகாண மக்களின் வரலாற்றில் இரத்தகறை படிந்த தினமான சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த வெருகல் மலை பூங்காவில் நாம் கூடியிருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் அறிந்ததுபோல் இந்த மண்ணிலே நடந்தேறிய என்றுமே மன்னிக்க முடியாத அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.ஆம் வெருகல் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

எமது இலங்கை திருநாட்டில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல ஒரு குமுதினிப்படகு படுகொலை போல ஒரு கந்தன் கருணை படுகொலை போல ஒரு வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும்.அதனால்தான் இந்த படுகொலை நினைவுகளை நாம் வருடம்தோறும் இதே நாளில் நினைவு கூர்ந்து வருகின்றோம்.ஆம் நாம் மட்டுமே இந்த வெருகல் படுகொலையை நினைவுகூர்ந்து வருகின்றோம்.தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மட்டுமே இந்த வெருகல் படுகொலையில் உயிர் நீர்த்த மாவீரர்களை வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.அவர்களின் உறவுகளை கெளரவித்து வருகின்றார்கள்.

ஆனால் ஏனைய படுகொலை நினைவுகளை பேசுவது போலவோ, அதையிட்டு எழுதுவதுபோலவோ, அத்தினங்களை நினைவுகூருவது போலவோ இந்த வெருகல் படுகொலை பற்றி தமிழ் கூறும் இந்த நல்லுலகம் கண்டுகொள்வதில்லை. அது ஏன் என்றும் எமது மக்கள் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை.கேள்வி எழுப்புவதுமில்லை.எமது மக்கள் இன்னும் வளர்ச்சி காணாதிருப்பதற்கும் முன்னேறமுடியாதிருப்பதற்கும் இந்த மேத்தனபோக்கே காரணமாகும்.ஆம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஏன் தமிழ் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இந்த வெருகல் படுகொலையையிட்டு இன்றுவரை கள்ளமெளனம் காக்கின்றன? இந்த வெருகல் படுகொலை நடந்த போது மூடிக்கொண்ட இந்த இந்த தமிழ் பத்திரிகைகளின் கண்கள் இன்றுவரை ஏன் திறக்கப்படவில்லை?

இந்த படுகொலை நிகழ்ந்த வரலாறு உங்களுக்கு மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.ஆம் தமிழனை தமிழனே வெட்டிவீழ்த்திய, சுட்டு வீசிய வரலாற்றையிட்டு இன்றைய இளம் சமூகம் கேள்வியெழுப்ப வேண்டும். நாங்கள் என்னகுற்றம் செய்தோம்? போராட்டத்தில் இணைந்தது குற்றமா? உண்ணாமலும் உறங்காமலும் இங்கே எங்கள் உறவுகள் ஏங்கிக்கிடக்க வடக்கு வரை நடந்து சென்று அந்த மண்ணைக்காக்க போராடியது குற்றமா? வடக்கு போர்முனைகளில் ஆயிரக்கணக்கில் எமது சகோதர சகோதரிகளை இழந்து நின்றது குற்றமா? ஏன் இந்த அநீதி எமக்கு இழக்கப்பட்டது? நாம் என்ன கேட்டோம்? எமது மக்களுக்கான உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும்.என்றுதானே கேட்டோம். 

தமிழீழ விடுதலைபுலிகளில் பாதிக்குமேல் எமது போராளிகளே இருந்தார்கள்.இறந்த மாவீரர்களில் கிழக்குமாகாண போராளிகளே அதிகளவில் இருந்தார்கள்."அவர்களெல்லாம்" வெளிநாடுகளுக்கு ஓட நாமோ வடக்கு நோக்கி ஓடினோம்.அந்த மண்ணைக்காத்தோம்.ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின் தமிழீழ விடுதலைபுலிகளின் வெற்றிவரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும். 

ஆனால் 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.அதை தட்டிகேட்டது குற்றமா? எமதுமக்களின் உரிமைகளை கேட்டது எந்த வகையில் குற்றமாகும்? நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள், மட்டக்களப்பு வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்.ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்கின்றோம் என்றோம். படையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

ஆம் இதே மண்ணில் அதோ அந்த வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது. சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐயோ அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று பெண்போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.எமது பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டார்கள்.சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது. சித்திரை வெயிலில் வெம்பி வெடித்து கதிரவெளி கடற்கரை மணலெங்கும் எமது போராளிகளின் உடலங்கள் நாற்றமெடுத்துகிடந்தன.அவற்றை அடக்கம்செய்ய கூடாதென்ற கட்டளை வன்னிபுலிகளால் விடுக்கப்பட்டிருந்தது.

எமது மக்களே இது எதிரி செய்த படுகொலையல்ல.நாம் யாரை சொந்த தமிழர்கள் என்று நம்பினோமோ, எமது தலைவர்கள் என்றோமோ, எம்மை வழிநடாத்துவார்கள், எமக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களால் நடாத்தப்பட்ட படுகொலைதான் இது. படைகொண்டு தீர்வுக்கான வடக்கும் கிழக்கும் என்ன அந்நிய தேசங்களா? யார் இந்த அநியாயத்தை பற்றி கேள்விஎழுப்பினார்கள்? 

2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றேன். அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.

வன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிபுலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர்? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார்? இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.இன்று யுத்தகுற்றம் யுத்தகுற்றம் என்கின்றார்களே? இது யுத்தநிறுத்தத்தின் பொது நடந்த படுகொலை அல்லவா? இது அதைவிட குற்றமாகாதா? ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலை ஒரு மாபெரும் மனித உரிமை மீறல் என்று இங்கே பிரசன்னமாகியிருக்கும் அந்த மாவீரர்களின் அன்னையர்கள் சாட்சியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் பிரகடனம் செய்கின்றேன்.

ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்தநிறுத்த மீறல் தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலையேயாகும் என சர்வதேசத்துக்கு பறை சாற்றுன்றேன்.

இந்த படுகொலை நடந்த போது தமிழ் மக்களின் காவலர்கள் என்று இன்று வலம் வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் மெளனம் காத்தார்கள்? இன்று ஜெனிவாவுக்கு படையெடுக்கும் இந்த கூட்டமைப்பினரும் புகலிடத்தமிழர்களும் இந்த வெருகல் படுகொலைக்கு ஏன் நீதி கேட்பதில்லை? மட்டக்களப்பானுக்கு என்ன நீதி? என்கின்ற அலட்சியமா? 

எனது அன்பார்ந்த மக்களே இன்னும் சொல்கின்றேன் இந்த படுகொலையின் உள்நோக்கங்கள் பற்றி நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக சொல்கின்றேன். எமது மக்களின் விடுதலை என்கின்ற பெயரில் கிழக்கு மாகாணத்தை அடாத்தாக பிடித்து ஆளுவதே யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டமாகும்.இங்கே நான் இப்படி கூறுவதை திரித்து பிரித்து பிள்ளையான் வெருகலில் பிரதேசவாதம் பேசினார் என்று நாளை சில பத்திரிகைகள் செய்தி வெளியிடகூடும்.அவர்களுக்காக மிக தெளிவாக சொல்கின்றேன். நாங்கள் ஒருபோதும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

கிழக்கு மாகாணம் வரலாற்றில் ஒருதடவையேனும் பிறிதொரு பிரதேசத்தின் மீது படையெடுத்ததோ ஆட்சிசெலுத்தியதோ இல்லை.அதற்கான அவசியம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை.ஏனெனில் இயற்கை எமக்கு வஞ்சனை செய்யவில்லை. எமது மாகாணம் எல்லை கடந்த இயற்கை வளங்களின் வரபிரசாதங்கள் நிறைந்தது.இதனை வேறு யாரும் வந்து ஆட்சி செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.நாங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல.வடக்கு மக்கள் மீது அவர்களின் வாழ்வு மீதும் அவர்களின் மண்மீதும் கொண்டிருந்த பற்று காரணமாகவே அங்கே சென்று வருடக்கணக்கில் போரிட்டோம். அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும்.

ஆனால் தமிழ் மக்களின் விடுதலை என்கிற பெயரில் வடக்கிலிருந்து வரும் புதிய எசமானர்கள் எங்கள் வாழ்வை தீர்மானிக்க நாம் அனுமதிக்க போவதில்லை.என்று சொன்னதற்காக எங்களை படுகொலை செய்தார்கள். எமது கல்விமான்களை கொன்றழித்தார்கள்.இராஜன் சத்தியமூர்த்தியை சுட்டார்கள்.கிங்ஸ்லி இராஜநாயகத்தை கட்டிவைத்து அவரது எம்பி பதவியை இராஜினாமா செய்ய வைத்தார்கள்.பின்னர் அந்த பதவியைத்தான் யாழ்-மேலாதிக்கத்தின் துதிபாடியான அரியநேந்திரனுக்கு பரிசாக கொடுத்தார்கள்.

அத்தோடு விட்டார்களா? அதன்பின்னர் எதற்காக கிங்ஸ்லி இராஜநாயகத்தைகொல்ல வேண்டும்? மட்டக்களப்பு சிறைக்குள் இருந்த எமது போராளி சச்சுமாஸ்டரை அங்கே புகுந்து சுட்டார்கள்.அக்கரைப்பற்று நீதிமன்றுக்குள்புகுந்து எமது போராளியை சுட்டார்கள்.கொட்டாவைவரை சென்று மறைந்திருந்த குகநேசனையும் நண்பர்களையும் நஞ்சூட்டி கொன்றார்கள். நித்திரை பாயிலே எங்கள் ரெஜியண்ணனை கொன்றார்கள்.

தில்லைநாயகம் அதிபரை சோற்றுகோப்பையோடு வைத்து சுட்டார்கள்.அன்று தலை விரித்தாடிய கொலைத்தாண்டவமே எங்களை பிரிந்து செல்ல தூண்டியது.இந்த படுகொலைகளையிட்டு எந்த தமிழ் தேசிய வாதியும் குரல்கொடுக்கவில்லை.எந்த புத்திஜீவியும் கேள்விகேட்கவில்லை.எந்த மனித உரிமைவாதிகளும் நீதி கோரவில்லை.ஏன் இன்று மனித உரிமை பேசும் மத போதகர்களில் யார் அன்று எங்களின் உயிர் காக்க சித்தம்கொண்டனர்? ஏனிந்த பாரபட்சம்? ஆனால் இன்று இவர்களுக்கெல்லாம் வடக்கு-கிழக்கு இணைப்பு ஒருகேடு!

இந்த வெருகல் படுகொலை எவ்வளவு அகோரமாக இருந்ததோ அதைவிட அகோரமாக நாங்கள் வடக்கிலிருந்து கிழக்கை துண்டிக்க வேண்டும் என்கின்ற வேணவா எங்களை ஆட்கொண்டது.அதனால்தான் அந்த சித்திரை மாதம் எமக்கு கிழக்கின் தனித்துவம் நோக்கிய ஒரு புரட்சி தீயை எங்களுக்குள் மூட்டியது.எனவேதான் அதனை சிவப்புசித்திரை என விழிக்கின்றோம்.

இத்தனைக்கும் பின்னர்தான் நாம் பிரிந்து சென்றோம்.எமக்கான மாகாண சபையை நாமே உருவாக்கினோம்.ஆனால் அதிலும் சதிசெய்தார்கள்.தங்களுக்கு கீழ் இல்லையென்றால் மட்டக்களப்பான் எக்கேடுகேட்டுபோனாலும் போகட்டும் என்று ஒற்றுமை வேசம்போட்டு எமது வாக்குகளை கொள்ளையிட வந்தார்கள்.சம்பந்தர் வந்தார்.சித்தார்த்தர் வந்தார்.ஆனந்த சங்கரி வந்தார்.அடைக்கலநாதன் வந்தார்.சுரேஷ் பிரேமச்சந்திரன் வந்தார்.வரலாற்றில் முதல்தடவையாக.கிழக்குமாகாணத்து மேடைகளே இவர்களை ஒற்றுமையாக்கியது.அந்த வேஷத்தில் எமது மக்கள் ஏமாந்ததன் பலனை கிழக்கு தமிழர்கள் இன்று அனுபவிக்கின்றனர்.அவர்கள் தமது சதித்திட்டத்தில் வெற்றியடைந்தனர்.

எனவேதான் யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டங்களையிட்டு எமதுமக்கள் மிகவிழிப்பாக இருக்கவேண்டும்.நாம் இந்த மண்ணில் வாழும் மூவீன மக்களோடும் சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.இனவாதம் பேசி இங்கே அமைதியை நாங்கள் குலைக்க முடியாது.கறைபிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கதைகளில் சிக்குண்டு இந்த மண்ணின் அதிகாரத்தை இழந்து நிற்கின்றோம்.கடந்த "தமிழர் ஒற்றுமை" என்று உங்களை ஏமாற்றிய தலைவர்கள் வடக்கில் என்னசெய்தார்கள், என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

எனதருமை மக்களே!அங்கே வட மாகாண சபையில் ஒருமித்து சத்திய பிரமாணம் எடுக்ககூட அவர்களால் முடியவில்லை.அத்தனை பதவிபோட்டி.அத்தனை குழிபறிப்பு.உலகிலேயே ஒரேகட்சி ஆறு வெவ்வேறு இடங்களில் சத்தியபிரமாணம் எடுத்த வரலாற்றுக்கு நமது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்மட்டுமே சொந்தக்காரர்களாயிருக்க முடியும்.

வடமாகாண சபை அமைச்சுபதவிக்காக தொடங்கிய சண்டை மாகாண சபையை இயங்க முடியாமல் சேணம் இழுக்க வைத்திருக்கிறது.ஆனால் அதைப்பற்றி அவர்களில் யாரும் கவலைப்பட்டதாக காணவில்லை.அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் கிழக்குமாகாண ஆட்சியை பிள்ளையானிடமிருந்து பறித்துவிட்டோமேன்பதே.பறித்தெடுத்து என்ன செய்ய முடிந்தது? தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பழிவாங்கும் உணர்வு இன்று கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கியிருக்கிறது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எமதுமக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் எமதுமக்கள் தமக்கு தாமே தலையில் மண்ணையள்ளி போட்டு கொண்டதற்கு சமனானதாகும்.இறுதியாக இந்த வெருகல்மலைபூங்காவில் நின்று ஒன்று மட்டும் சொல்ல விளைகின்றேன்.வெருகல்படுகொலையில் தம் இன்னுயிரை ஈந்த கிழக்கில் மைந்தர்களுக்கு நாம் செய்கின்ற அஞ்சலி என்பது யாழ்-மேலாதிக்க தலைமைகளையும் அதன் அரிவருடிகளையும் இந்த கிழக்கு மண்ணிலிருந்து நிராகரிப்பதேயாகும்.



சிவனேசதுரை சந்திரகாந்தன்

தலைவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி