dimanche 31 janvier 2016

இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம்

இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழனன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழுவினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனரட்ன தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

ராஜபட்சவின் மகன் உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது

 மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் அதிபர் ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபட்சவையும், அவருடன் 4 பேரையும் சனிக்கிழமை காலை நிதி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்' என்றார்.
இலங்கையில் விளையாட்டுகளை ஒளிபரப்பிவரும் சிஎஸ்என் தொலைக்காட்சியுடன் ராஜபட்ச மகன்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து யோஷிதவிடம் போலீஸார் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. கடற்படை அதிகாரியான யோஷித ராஜபட்ச உள்பட கைது செய்யப்பட்ட 5 பேரும் கதுவெலா நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் யோஷித ஆஜர்படுத்தப்பட்டபோது மஹிந்த ராஜபட்சவும் உடன் இருந்தார்.
முன்னதாக, இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியான நிஷாந்தா ரணதுங்க, யோஷித உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபட்சவுக்கு யோஷித, நமல், ரோஹித் என 3 மகன்கள் உள்ளனர்.

samedi 30 janvier 2016

500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட மாநாடு கிழக்கு மாகாணத்தில்

கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இந்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் நமது கிழக்கிலங்கைச் செய்தியாளர் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனமொன்று கேரளாவில் உள்ளது போல் கிழக்கு மாகாணத்தின் கடலேரிகளில் சொகுசு படகு வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது எனவும் ஹாஃபீஸ் நசீர் அகமட் கூறுகிறார்.
உத்தேச முதலீடுகள் செயல்வடிவம் பெறும்போது கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி அங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை மேம்படும் என தாங்கள் நம்புவதாகவும் மாகாண முதலமைச்சர் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இந்தியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.bbc

jeudi 28 janvier 2016

இலங்கை யோஷித்த ராஜபக்ஷவின் கடற்படை பயிற்சிகளுக்காக கடந்த அரசு எவ்வளவு செலவிட்டது தெரியுமா?

yogithaயோஷித்த ராஜபக்ஷவின் வௌிநாட்டு கடற்படை புலமைப் பரிசில் மற்றும் பயிற்சிகளுக்காக கடந்த அரசாங்கத்தால் இரண்டு கோடிக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நலிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இளம் அதிகாரிகளுக்கான பாடத்திட்டம் - பிரித்தானியா - 6,284,219.25 ரூபா,  கப்பல் தொடர்பான கடற் பயிற்சிகள் - பிரித்தானியா - 7,031,614.75 ரூபா  உபலுத்தினல் தொழிநுட்ப பயிற்சிகள் - பிரித்தானியா 5,333,667.07 ரூபா  விஷேட கல்விப் பயிற்சி - தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் - உக்ரைன் - 357,331,06 ரூபா, என கடந்த ஆட்சிக் காலத்தில் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிகா தொடர்ந்தும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்தும் கட்சியை உடைய விடாமல் ஒன்றுபட்டு பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முகம் கொடுத்தாலே வெற்றியீட்ட முடியும் என சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் ஐ. ம. சு. மு. கூட்டுக் கட்சியினரும் கூறி வருகின்றனர்.
ஆனால் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே தேர்தலுக்கு தலைமை வகித்து செயற்பட வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் தலைமை வகித்து கட்சியை வழிநடத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் அவர் தலைமையில் போட்டியிட்டால் கட்சி படுதோல்வியடையும் என சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி சபை முன்னாள் தலைவர்கள் பலரும் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தில் இணையாத ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ. ம. சு. மு. வில் இணைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, இடதுசாரி கட்சிகள், மக்கள் ஐக்கிய முன்னணி என்பன முன்னாள் ஜனாதிபதியை இணைத்து தனியான கட்சியொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்து வருகின்றன. அவர் இதற்கு உடன்படாவிட்டால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதாபய ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இதன் மூலம் கட்சி பிளவுபட்டு அதனால் ஐ. தே. க.வுக்கே நன்மை ஏற்படும் என சு. க. சிரேஷ்ட தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி, உள்ளூராட்சி தேர்தல் குறித்தும் கட்சியை பிளவுபடாமல் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுப்பதன் மூலம் கட்சி பிளவுபடுவதை தடுக்க முடியும் என சிரேஷ்ட சு. க. தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை இணைத்து செயற்படுவதற்கு ஜனாதிபதியின் உடன்பாடு இருப்பதாகவும் அமைச்சர் பெளஸி தெரிவித்தார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைத்து செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. இதன் மூலம், சிறுபான்மையினரதும் இனவாதத்திற்கு எதிரான தரப்பினரதும் ஆதரவு கிடைக்காது என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவதற்கும் பிரசாரத்திற்கு பொறுப்பாக நியமிப்பதற்கும் சந்திரிகா குமாரதுங்க எதிர்ப்பு வெளியிட்டு வந்தது தெரிந்ததே.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க

உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும்.
siri_fஇலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டிவிட்டீர்கள்.

சாதித்துவிட்டீர்கள்
காலம்காலமாக அரசியல் களத்தில் எதிரும்புதிருமாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த அரசில் இணைந்துள்ளன; அதிலும் ஒரு கட்சி தனது முன்னாள் அதிபருக்கு எதிராக, இந்நாள் அதிபரையே துணிவுடன் நிறுத்தி தேர்தலில் வெற்றிபெற வைத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது. நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லை என்று கூறத்தக்க ஒன்றை சாத்தியம்தான், இது நடைமுறைக்கு உட்பட்டதுதான் என்று சாதித்துக் காட்டிவிட்டீர்கள்.
பழிவாங்குவதற்குப் பதிலாக சமரசத்தையும், பிரிவினைக்குப் பதிலாக பேச்சுவார்த்தையையும், போருக்குப் பதிலாக சமாதானத்தையும், சாவுக்குப் பதிலாக வாழ்வையும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். போரும் சமாதானமும், வாழ்வும் சாவும் என்ற இரண்டு முனைகளுக்கிடையே ஊசலாடும் நாடு என்று கூறினால் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு நினைவுக்கு வந்தது இலங்கையாகத்தான் இருந்தது. ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மரணத்தின் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்திருக்கிறார்கள், அதன் சில்லிட்ட கொடுங்கரங்களில் சிக்கியிருக்கிறார்கள், அந்தப் போர்களின்போது பட்ட தழும்புகளை இன்னும் ஆறாத நினைவுகளோடு தடவிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது பாய்ந்த குண்டுச் சிதறல்கள் சதையில் புதைந்த நிலையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பொதுவாழ்வில் இருக்கின்றனர்; அப்படிப்பட்டவர்கள் இங்கேயும் இருக்கின்றனர். நேரிய சிந்தனையுடனும் துணிச்சலுடனும், அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்ட இலங்கையை மீட்டு நேர் பாதைக்குத் திருப்பிய இந்தத் தலைவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கூட்டணி என்றாலே சுயநலம்
அரசியலில் கூட்டணி என்றாலே அது சுயநல நோக்கிலான சந்தர்ப்பவாதம்தான். அரசியல் கூட்டணிகள் எப்போதும் சூழ்ச்சிகள் நிறைந்த தந்திர வியூகங்கள்தான். எல்லா நாடுகளிலும் எல்லா தலைமுறைகளிலும் அவசரத்தில் செய்துகொள்ளப்படும் அரசியல் கூட்டணிகள், ஆதாயத்தைப் பங்குபோட்டுக்கொள்ளும்போது உடைந்து நொறுங்கிவிடும்.
இப்போது இங்கே கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது, அது சாதாரணமானதல்ல. பரஸ்பர நம்பிக்கைக் குறைவாக இருந்தால் கூட்டரசு செயல்படத் தொடங்குவதற்கு முன்னாலேயே அது நொறுங்கிவிடும்; அதிக நம்பிக்கை வைத்து, நம்பிக்கைத் துரோகம் அரங்கேறிவிட்டால் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல அதைவிட மிகப் பெரிய இழப்புகளைச் சந்திக்கநேரும். அதிபர் சிறிசேனாவும் பிரதமர் விக்ரமசிங்கவும் இப்பாதையில் இணைந்து செல்ல முடிவு செய்தபோது முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகவின் முதிர்ச்சியான ஆதரவும் துணை நின்றது. அதே சமயம் இந்த முயற்சி பலன் தராமல் தோல்வியுற்றால் அதைத் தாங்கவும் தயாராக இருவரும் தயாராக இருந்திருப்பார்கள். அது வெறும் தோல்வியாக மட்டும் இருக்காது. இன்று லசந்த விக்ரமசிங்கவின் முதலாவது நினைவு நாள். இதற்கும் மேல் நான் இதை விவரிக்க வேண்டுமா?
யாராவது சொல்வார்களா?
இவ்விரு தலைவர்களும் அசாத்தியமான அரசியல் துணிச்சல் உள்ளவர்கள். பாதுகாப்பான அரசியல் வழிமுறைகளைக் கைவிட்டு பாதுகாப்பில்லாத பாதையில் பயணப்பட்டிருக்கின்றனர். ஒரு தேர்தலை எதிர்கொள்ளப் போகும் பெரிய தலைவர் உலகில் எங்காவது சொல்லியிருக்கிறாரா ‘நான் வெற்றி பெற்றால் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள அதிபர் என்ற பதவியைக் கைவிடுவேன்’ என்று? தன்னுடைய அதிகாரத்தையும் அந்தஸ்தையும் குறைத்துக்கொள்ளும் சட்டத்திருத்தத்துக்கும் விதிகளின் திருத்தத்துக்கும் எந்தத் தலைவராவது இணக்கமாக இருப்பாரா? அரசியலில் எதிர் அணியில் இருப்பவர் தங்களுக்கு எதிராகப் பேசியதையும் செயல்பட்டதையும் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் நலன் கருதி ஒரே அரசில் சேர்ந்து செயல்பட எந்த நாட்டின் தலைவர்களாவது இதைப்போல துணிவார்களா?
இலங்கையைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய மத, மொழி, இன, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தங்களுடைய நாட்டை நேசிப்பதை ஓராண்டுக்கு முன்னால் உணர்த்தியிருந்தனர். எதேச்சாதிகாரத்தை அவர்கள் தூக்கி அப்பால் எறிந்தனர். கடந்த காலத்தை அவர்கள் மறக்கவில்லை, ஆனால் அதன் விஷத்தை நீக்கிவிட்டனர். தங்களுக்கிடையே வேற்றுமை இருப்பதை மறுக்கவில்லை ஆனால் சந்தேகத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. அழிவின் விளிம்பிலிருந்து நாட்டை மீட்டுவிட்டனர். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதை உணர்ந்த மக்கள், முள்ளை எடுத்த பிறகு முள் தைத்த இடத்தில் மருந்து போடவேண்டும் என்று முடிவெடுத்தனர். மோதலால் விளையும் முள்ளா, சமரசத்தால் கிடைக்கும் அறுவடையா எது வேண்டும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பின்னதுதான் வேண்டும் என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.
நாடு என்பது எது?
அரசியல் என்பது நாட்டை அடிப்படையாகக் கொண்டது, அரசியல் கட்சிகளை அல்ல. நாடு என்பது அதன் மக்களுடைய நாகரிகத்தைத்தான் குறிக்குமே தவிர அதன் அரசியல் அமைப்பைப் பற்றியல்ல. இலங்கை மக்களின் புத்திசாலித்தனமான தேர்தல் முடிவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், இதுதான் நாட்டின் நாகரிகம் என்று.
தேசிய அரசு ஓராண்டை நிறைவு செய்ததற்காக அல்ல இந்த கொண்டாட்டம்; அதிகார ஏகாதிபத்தியத்தையும் அரசியல் மனமாச்சரியங்களையும் பரஸ்பர சந்தேகங் களையும் பேராசைகளையும் கைவிடுவதுதான் தேசிய அரசின் அடையாளம். இந்தியாவும் ஏன், ஆசியாவும் இலங்கையிடமிருந்து படிக்க வேண்டிய பாடம் இதுதான்.
நாளை என்ன?
நாளை என்ன? இதற்கான பதில், இன்று இலங்கை எப்படி என்பதுதான். இந்தியர்கள் எப்போதுமே அடுத்தவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதைத் தங்களுடைய பிறப்புரிமையாகக் கருதுபவர்கள்; அதைத் தனது கடமையாகவும், சீரிய பணியாகவும்கூட நினைப்பவர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயதாகிவிட்டாலும் இளைஞர்களானாலும், உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாடு சென்றாலும், யாரும் கேட்காவிட்டாலும்கூட ஆலோசனைகளை வழங்கத் தயங்கமாட்டார்கள். நானும் அவ்வாறே இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் என்னுடைய அரசுக்கும் அறிவுரையாகக் கூற விரும்புவது இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
இலங்கை மக்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்துவிட்டார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது தலைவர்களின் கடமை. இலங்கையின் தேசிய அரசுக்கு ஆயிரம் கடமைகள் காத்துக்கிடக்கின்றன. பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பு, குடியரசின் விடுதலை உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்குப் பழைய நிலையை மீட்டளிப்பது என்பவை அவற்றில் முக்கியமானவை. இதற்கு அரசு உரிய கவனத்தைச் செலுத்தும்.
ஆனால் பிரதானமான, முன்னுரிமை தேவைப்படும் கடமை எதுவென்றால் நாட்டின் பிரதான சமூகங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை தக்கவைத்து வலுப்படுத்துவதுதான். தங்களிடம் அரசு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எல்லா சமூகத்தவருக்கும் ஏற்பட வேண்டும். ஜனநாயகவாதிகள் பதவியில் இருக்கும்போது தங்களுடைய செயலில் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் பிடிவாதமாக இருக்கக்கூடாது. நிர்வாகத்தை நடத்திச் செல்ல உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். தவறு நிகழ்ந்திருந்தால் அதைத் திருத்த வேண்டும், மாறாக தவறு செய்தவர்கள் அதைத் தொடர விட்டுவிடக்கூடாது. தங்களை ஆளும் தலைவர்கள் நல்லவர்களாக மட்டுமல்ல வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு.
ராஜபட்சவுக்கு ஓரிடம்
இந்த விழாவில், இதற்கு முன்னால் ஆட்சி செய்தவரைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல. எனினும் இங்கு நடந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலைக்குக் காரணமாக இருந்ததால் ஒரு பயங்கரவாதத்துக்குப் பதிலாக நடந்த பழிவாங்கலாகவே அந்த ரத்தக்களரி பார்க்கப்படும். பால்மணம் மாறாப் பாலகனை, அவனுடைய தந்தையின் காரணமாகவே கொன்றதை உலகமே பார்த்து அச்சத்தில் உறைந்தது. எனவேதான் கசப்பான அந்த சகோதர யுத்தம் முடிவுக்கு வந்த பிறகும்கூட அமைதி என்பது கண்ணில்படாமலே இருந்தது. பீரங்கிகளின் சத்தம் மட்டும் ஓயவில்லை, பேச்சுவார்த்தைக்கான குரலும் ஓசையின்றி ஒடுங்கியது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறானார், அவருடைய இலக்கு என்ன? அதுவும் வரலாறாகிவிட்டதா? அல்லது பின்னாளில் மீண்டும் தலைதூக்குவதற்காக எங்காவது மறைந்து நிற்கிறதா? இப்போதைக்கு தனிநாடு கோரிக்கை விவாதப்பட்டியலிலிருந்து விலகியிருக்கலாம், உணர்வுபூர்மாக இருக்கும்வரை அது நீங்கவே நீங்காது. மக்களுடைய உற்சாகமான ஆதரவு என்பது மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே தொடரும். லட்சியங்களைத் திட்டங்களாகவும், திட்டங்களைச் செயல்களாகவும், செயல்களைப் பலன்களாகவும் மாற்றுவதென்பது ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும்கூட வழிவகுக்கும். மனப்புண்களை ஆற்றுவதற்கான செயலை மேற்கொள்ள தொடர் முயற்சிகளும் பொறுமையும் அவசியம். ஆட்சியின் தொடக்கத்துக்குப் பிறகு மறுமலர்ச்சிக் காலம் என்றால் அதுவே பழிவாங்கத் துடிக்கும் சக்திகளுக்கும் முளைவிடும் காலமாகும். எந்த ஒரு தீர்வும் ஏற்படவிடாமல் சீர்குலைப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். முடிவெடுக்க முடியாத நிலை, குழப்பம் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள். தேச ஒற்றுமை என்பது பயனில்லாதது, அசௌகரியமானது என்று உணர்ந்தவர்கள். சிறுபான்மையினருக்கு அரசு அதிகமாகச் செய்கிறது, விரைந்து செய்கிறது என்று குற்றஞ்சாட்டுவார்கள். அரசின் நடவடிக்கைகளுக்கு இதுவரை தடையாக இல்லாதவர்களையும் தடைகளாக்குவார்கள். இந்தியாவில் அவர்கள் கட்சி மாறலைக்கூட ஊக்குவிப்பார்கள். கட்சி மாறுவதைத் தடுக்கச் சட்டம் வந்தபிறகு அவர்களுடைய வாழ்க்கை சற்றே கடினமானதே தவிர நடத்தவே முடியாத அளவுக்குப் போய்விடவில்லை. பணம் இருந்தால் இப்போது சாதிக்க முடியாத செயல்களே இல்லை.
இலங்கை அரசு இவர்களால் தனது கவனம் சிதற அனுமதிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைப் பொறுத்தவரையில் கொடுத்தது போதும் என்ற திருப்தி அரசுக்கு வரக்கூடாது, அது தமிழர்களிடமிருந்து வர வேண்டும். பொன்னம்பலங்கள், செல்வநாயகம்கள் ஏமாற்றப்படாமல், நிராகரிக்கப்படாமல், சிறுமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. அத்தகைய பெரிய தலைவர்கள் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பயங்கரவாதத்தின் கோர விளைவுகளை நேரில் அனுபவித்த பலர் இன்றும் நம்முடனே வாழ்கின்றனர். ஐக்கிய இலங்கைக்காகப் பாடுபட்ட ஒவ்வொருவருமே தியாகிதான். ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளே தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பிய எல்லா தமிழர்களும் அதிசயமானவர்கள்தான். ஐக்கிய இலங்கையில் நம்பிக்கை வைத்தத் தமிழர்கள் ஏமாற்றப்படக்கூடாது. பழைய விஷச் சக்கரங்களை மீண்டும் சுற்றவிடக்கூடாது. வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலரின் மனங்களில் இன்றும் கனிந்துகொண்டிருக்கும் தமிழ் ஈழம் என்ற ஆசைக்குத் தூபம் போடக்கூடாது. பழிவாங்கும் எண்ணத்தோடு வன்முறை மீண்டும் ஏற்பட்டால் அதனால் எதிர்வினையாக வரக்கூடிய அடக்குமுறைகளும் பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடும்.
இந்திய- இலங்கை உடன்பாடு
புதிய அரசியல் சட்டத்தை இயற்ற இலங்கை முற்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் உள்ள பலவீனமான பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். 1987-ல் ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டைப் பலரும் பல கோணங்களில் கடுமையாக எதிர்த்திருந்தாலும் அதன் பரிந்துரைகள் நீண்ட கால நோக்கில் பயன் தருபவை. இந்தியாவைவிட இலங்கைக்கு நல்லதொரு நண்பன் இருக்க முடியாது.
அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய அமைப்பு, அதிகாரப் பகிர்வு ஆகியவையே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும். சிறுபான்மையினருக்கு உரிமைகளைத் தரும் பெரும்பான்மை எப்போதுமே சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும். மாறாக அவர்களுடைய உரிமைகளை மதித்து, அவர்களுடைய பங்களிப்பை ஏற்று, அவர்களுடைய பெருமையில் பங்கேற்றுச் செயல்படுவதே நாகரிகமான கலாச்சாரமாக இருக்கும்.
மகாத்மா காந்தி சொல்லும்வரை காத்திருக்காமல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முகம்மது அலி ஜின்னாவை பிரதமராக்கியிருந்தால், அம்பேத்கரை குடியரசுத் தலைவராக நியமித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே மாறியிருக்கும். இலங்கையின் அதிபராகவோ பிரதமராகவோ தமிழர் நியமிக்கப்பட்டிருந்தாலும் இனப் போர் நடந்திருக்கும். ஆனாலும் அது சில பாதுகாப்புகளை இலங்கைக்கு அளித்திருக்கும். இந்தியனாக இல்லாமல், பாதி தமிழனாக இல்லாமல் சொல்கிறேன், இலங்கையின் உயர் பதவியில் அமர ஒரு தமிழர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் காலத்துக்காகக் காத்திருக்கிறேன்.
நெல்சன் மண்டேலாவின் முதல் அரசில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏராளமான இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய மக்கள் தொகைக்கும் அதிகமான விகிதத்தில் ஏன் அவர்களுக்குப் பதவி கொடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அல்ல, நாட்டின் சுதந்திர விடுதலைக்காக அவர்கள் போரிட்ட விகிதத்துக்கு ஏற்பவே பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.
இலங்கைத் தமிழர்களில் பலர் சரளமாக சிங்களம் பேசுகின்றனர், ஆனால் சிங்களர்களால் தமிழைப் பேச முடிவதில்லையே ஏன்? “ஒரே மொழி என்றால் நாடு இரண்டாகிவிடும், இரண்டு மொழிகளும் என்றால் நாடு ஒன்றாகிவிடும்” என்று காலின் டிசில்வா கூறியதை மறந்தது ஏன்? இன உணர்வில்லாமல் நடப்பது என்பது ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது. சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் தமிழர்கள், தமிழ் இனவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலையகத் தமிழர்கள் என்று எல்லோருமே தங்களையும் நாட்டு மக்களில் ஒரு தரப்பினராகக் கருத வேண்டும் என்றே கோரி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்கும் முறை நோக்கி இலங்கை செல்கிறது. இப்போதுள்ளதைப்போல பெரிய கட்சிகள் இரண்டு சேர்ந்தால் பெரும்பான்மை கிடைத்துவிடுகிறது. பெரும்பான்மை வலுவைக் கொண்டாடலாம், பெரும்பான்மையினவாதத்தைக் கொண்டாட முடியாது. பெரும்பான்மை என்பது ஜனநாயக மரத்தில் காய்க்கும் பழம் போன்றது. பெரும்பான்மையினவாதம் என்பது பழத்தை அழுகச் செய்யும் பூச்சி போன்றது. பெரும்பான்மையினவாதம் எப்படி ஜனநாயகத்துக்கு முரணாகவும் போகுமோ அப்படியே சிறுபான்மையினவாதமும் குடியரசுத் தன்மை யைக் கெடுத்துவிடக்கூடும். ஒவ்வொரு வடக்கும் நாட்டில் ஒரு தெற்கும் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கான நீதி என்பது அவர்களுடைய எண்ணிக்கைக்கான நீதி அல்ல அவர்களுடைய இருப்புக்கான நீதி என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
அவர்கள் கேட்கும் உரிமை என்பது எண்ணிக்கைகளுக்கான உரிமை அல்ல அடிப்படை மனித உரிமைகளுக்கான உரிமை என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிறுபான்மையின மக்கள் யாரும் தங்களுடைய எண்ணிக்கையைப் பார்த்து மருண்டு உரிமைகளைக் கேட்கக்கூடாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்தான் அவர்கள் சிறுபான்மையினர். மற்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் முழுக் குடியுரிமை பெற்ற நாட்டு மக்கள். இந்திய பட்டியல் இனத்தவர், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர் ஆகிய அனைத்துப் பிரிவினரும் தங்களுடைய முழுத் தன்மையை உணர்ந்து சிறுபான்மை என்ற கூட்டிலிருந்து விடுபட வேண்டும். குடியரசு நாட்டில் இந்த நிலையைப் போக்குவது பெரும் பான்மைச் சமூகத்தின் கடமை மட்டுமல்ல, தவறைத் திருத்திக் கொள்வதற்கான மகிழ்ச்சியான தருணம்.
இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக அரசியல் சட்ட ரீதியாகவும் பிரிவினைவாதத்தின் மூலமும் பிறகு பயங்கரவாதம் மூலமும் முயற்சி செய்து இனி தங்களுடைய பாதையைத் திருத்திக்கொள்ளவே முடியாது என்று கருதினர். அந்த நிலை மாறிவிட்டது. பேச்சு மூலம் மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சீர்திருத்தம் எப்படி வேலைசெய்யப் போகிறது என்று பார்த்துவிட்டு பிறகு தலைநீட்ட பழிவாங்கும் உணர்வு காத்திருக்கிறது. தேசிய ஒருமைபாட்டுக்கான இந்த அரசின் வெற்றியைத்தான் அனைவரும் பார்ப்பதற்குக் காத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டால் இனி இப்படியொரு வாய்ப்பு நேராது. சேரன்தீவு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இத் தீவு அப்படி நம்பிக்கையற்ற நிலைக்குப் போவதற்காக ஏற்பட்டதல்ல.
ஒரு தீவுக்கும் கண்டத்துக்கும் என்ன வேறுபாடு? தீவு என்பது சிறிய கண்டம், கண்டம் என்பது பெரிய தீவு. இலங்கையை வெறும் தீவு என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இருவேறு சமூகங்களுக்கு இடையே அரசியல் குழுக்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்த்துள்ளது. தான் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு என்னை விட நாடு பெரியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்கு இலக்கணமாக பல்லாண்டுகளாகத் திகழ்ந்த இலங்கை இப்போது நம்பிக்கைக்கான தீவாக மாறியிருக்கிறது. இது நம்பிக்கைக்கான கண்டமாக உருவெடுக்கப் போகிறது.
கோபால கிருஷ்ண காந்தி

இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச உள்ளார்.

மீன்பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி அவர்கள் அடிக்கடி சிங்கள கடற்படையினர் பிடித்து சென்று விடுகிறார்கள்.
சில வார சிறைவாசத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகளை இலங்கை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாடுகளின் கூட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா– இலங்கை நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், உயர் அதிகாரிகள், உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆணையத்தின் கூட்டம் வருகிற 5–ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5–ந்தேதி இலங்கை செல்கிறார்.
கூட்டு ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச உள்ளார். தமிழக மீனவர்கள் நலனை காப்பாற்ற அவர் இலங்கை அதிகாரிகளுடன் விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரனை சந்தித்து பேசவும் சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டுள்ளார்.
6–ந்தேதி சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணம் செல்கிறார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு அரங்கை திறந்து வைக்கிறார்.
அன்றே சுஷ்மா சுவராஜ் இந்தியா திரும்ப உள்ளார்.

samedi 23 janvier 2016

கொழும்பு துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்


Untitled-222இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ”ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
Untitled-132இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் மைசூர்’ என்ற நாசகாரி போர்க்கப்பலின் பாதுகாப்புடன், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நேற்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது, இலங்கை கடற்படையினரால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி உணவு


நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவு சாப்பிட்டதால் தான் அவர்கள் வயாதானாலும் சிறிதும் சக்தி குறையாமல் இருந்தனர். அப்படி அவர்கள் உண்ணும் உணவுகளில் ஒன்று பழைய சாதம்.
old_riceமுதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது.
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக அதிகரிக்கின்றது.
“காலை உணவாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் களைப்பின்றி, அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
இரவு தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் எட்டிப்பார்க்காது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்”.
இது உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தருவதனால் சளி உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நன்று.

சிங்கள தேசியவாதத்தின் முறையான வரலாற்றுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ

கலாநிதி.தயான் ஜயதிலக
dayan jayatilake-1“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”
மேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனைகள்’ என்பதில் பக்கம் 72ல்)
ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.
 தேசிய பிரச்சினை அல்லது தேசியவாதிகளின் பிரச்சினை என்பது என்ன? அது எங்கள் கலவைகளில் ஒன்றும் மற்றும் அரசியல் ரீதியாக எம்முடன் போட்டியிடும் கூட்டு அடையாளமும் ஆகும். இன்னும் அடிப்படையாக தற்போதுள்ள கேள்விகளுக்கு அது இன்றிமையாத ஒன்றாகிறது: ஸ்ரீலங்கா என்றால் என்ன. எப்படி ஒரு சிறந்த ஸ்ரீலங்காவாக அதனால் வரமுடியும்? ஸ்ரீலங்கவாசி என்கிற ஒழுங்குக்கு நாம் வருவதற்கு எப்படி அரசாங்கத்தை கட்டமைப்பு செய்;யவேண்டும்?
எல்லாவற்றையும் அவர் சரியாக புரிந்துகொள்ளாவிட்டாலும் (உதாரணமாக, ஜனாதிபதி முறைமையையும் மற்றும் சுனாமிக்கு பின்னான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பு (பி.ரி.ஓ.எம்.எஸ்) சார்ந்த அவரது பிரமைகள் என்பனவற்றையும் கூறமுடியும்) கூட ஜனாதிபதி சிறிசேன ஜனவரி, 9ல் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அரசியலமைப்பை மாற்றும் நடவடிக்கைகளில் ஆரம்பித்து, வடக்கு – தெற்கு பிரச்சினைக்கு தான் என்ன செய்துள்ளேன் என்பதை தெரிவிப்பதில்  ஒரு இராஜதந்திரிக்கு உள்ள தைரியத்தை காண்பித்தார். ஒரு மேட்டுக் குடி அல்லது பிரபுத்துவ தன்மையில் இல்லாது உள்நாட்டில் வளர்க்கப்பட்ட கரிமத் தன்மையானதைப் போல சிங்கள பௌத்த பன்மைத்தன்மையான – தாராண்மைவாதத்தை அவர் வெளிப்படுத்தினார், அதில் டி.எஸ் சேனநாயக்க, ஜனாதிபதி பிரேமதாஸ, மற்றும் விஜய குமாரதுங்க போன்றோரின் எதிரொலிகளும் மற்றும் பிரதிபலிப்புகளும் இடம் பெற்றிருந்தன. சில முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட்டால் இந்தப் பிரசங்கத்துக்கு பன்முக முற்போக்குவாதம் மற்றும் புதிய மையவாத கருத்தொருமிப்பும் மற்றும் ஒருங்கிணைவுக்கான ஒரு மேடை அமைந்திருக்க முடியும்.
பிரதமரின் உரைக்குப் பின் இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேனவின் பேச்சு, அதிக அந்தஸ்து, முதிர்ச்சி மற்றும் தீவிரம் என்பனவற்றை கொண்டுள்ள திரு.விக்கிரமசிங்காவைக் காட்டிலும் தான் முக்கியமானவர் என்பதை தெளிவாக விளக்கியது. வெகு புத்திசாலித்தனமாக உரையை ஆரம்பித்த பிரதமர், விரைவிலேயே பண்பு சார்ந்த குழப்பங்களையும் மற்றும் பிரதான விடயத்துக்கு அப்பாற்பட்ட மலிவான விடயங்களையும் பேசி அதைச் சிதைத்து விட்டார். மாறாக ஜனாதிபதி சிறிசேன அந்த செயல்திறனை வெளிப்படுத்தும்போது கடினமான முறையில் தார்மீக உயர் தன்மையை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் பேசாவிட்டாலும், (திரைக்குப் பின்னால் தலையீடுகளை மேற்கொண்ட) பிரதமரின் அரசியல் நடத்தை காரணமாக அரசியலமைப்பு முயற்சிகள் ஒரு கண்ணிவெடியினால் தாக்கப்படும் நிலையை அடைந்திருக்கும். சிறிசேனவின் பேச்சில், தவறவிட்ட வாய்ப்புக்களான பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் பற்றிய புலம்பல்களும் இருந்தன, அதன் மதிநுட்பமான உட்குறிப்பு நாங்கள் தமிழர் பிரச்சினைகளை கட்டாயம் தீர்க்கவேண்டும் என்பதாக இருந்தது, அதேவேளை திரு.சம்பந்தன் தமிழர் சமூகத்தின் அரசியல் தலைவராக உள்ளார்.
அப்படிச் சொல்வதுடன், பிரசங்கங்கள் முக்கியமாக உள்ள அதேவேளை ஜனாதிபதியின் நல்ல ஒரு பேச்சு நல்ல விளைவுகளைத்தான் ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல ஒரு பேச்சை பின்தொடரும் தீமையான அரசியல் மற்றும் கொள்கைகள் அந்தப் பேச்சைக்காட்டிலும் மோசமானதாக இருக்கும். சந்திரிகா ஓகஸ்ட் 2000 ல் பாரளுமன்றித்தில் ஆற்றிய உரையின்படி, அனுருந்த ரத்வத்த இயக்கிய இராணுவ வெற்றிக்கு உலகளாவிய ஆதரவை பெறும்படி லக்ஷ்மன் கதிர்காமரை ஈடுபடுத்தியதன் மூலமோ அல்லது கருணாவின் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அதைப் பின்பற்றியிருந்தால் அவரது கருத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். மாறாக விவேகமோ மற்றும் பகுத்தறிவோ இல்லாத வகையில் நோர்வேயினரையும் மற்றும் நோபல் பரிசு வெற்றியாளரான மார்ட்டி அதிசாரியையும் திருப்பி அனுப்பினார்.
ஜனாதிபதி சிறிசேன ஸ்ரீலங்காவில் உள்ள தேசியத்துவ பிரச்சினையின் ஒரு சுருக்கமான வரலாற்றை தேடியெடுத்துள்ளதுடன் அந்த பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் என தான் அடையாளம் கண்டு அதை பிரதானப்படுத்தியுள்ளார்: வடக்குக்கு ஒற்றையாட்சி என்றால் ஒவ்வாமை மற்றும் தெற்குக்கு சமஷ்டி என்கிற பதம் ஒவ்வாமை. இதற்கு நான்கு சாத்தியமான வழிகளுண்டு அவற்றில் இரண்டு ஆரம்பிக்கப்படாதவை. அந்த நான்கும் பின்வருபவவை:  (1) பெயரில் இல்லாமல் அனைத்திலும் சமஷ்டியான ஒரு முறை (2) பெயரில் இல்லாமல் அனைத்திலும் ஒற்றையாட்சி முறை (3) பெயரில் அல்லாது பாதி சமஷ்டி முறை (4) நியாயமான மாகாண சயாட்சியுடன் கூடிய ஒற்றையாட்சி. அரசின் குணாதிசயத்துக்கான வரைவிலக்கணத்தில் மௌனம் பாலிப்பது ஒரு ஐந்தாவது தெரிவு அல்ல, ஆனால் மேலே குறிப்பிட்ட நான்கு முறைகளில் இருந்து ஒன்றை பிரிப்பது ஆகும்.
யதார்த்தம் இரண்டு பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது: முதலாவது,  நகரங்களில் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்த சக்தி வாய்ந்த எல்லை கடந்த பிரிவினைவாத கிளர்ச்சியை, பலவந்தமான இராஜதந்திர முயற்சி மற்றும் 70,000 வலிமையான அமைதி காக்கும் படை என்பனவற்றை நிலைநிறுத்திய பிராந்திய வல்லரசினால் ஸ்ரீலங்காவை 13வது திருத்தத்துக்கு அப்பால் முன்தள்ள முடியவில்லை. இரண்டாவதாக மே 2009ல் பெற்ற தீர்க்கமான இராணுவ வெற்றி மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் என்பனவற்றால் கூட அதிகாரப் பரவலாக்கத்தை 13வது திருத்தத்துக்கு கீழேதான் இழுக்க முடிந்தது. இதில் உள்ள பாடம் என்னவென்றால் இந்த தீவின் சமூக அரசியல் அடிப்படைத் தட்டுகள் கட்டளையிடும் ஒரு தீர்வு என்னவென்றால் 13வது திருத்தத்தை மறு சீரமைப்பு அல்லது மறு கட்டமைப்பு செய்யவேண்டும் என்பதையே ஆனால் உள்நாட்டு உறுதியை குலைக்கும் வகையில் அதைத் தாண்டிச் செயல்பட முடியாது என்பதையே.
இது சித்தாந்த தத்துவங்களுக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். இதைத்தான் காரணம் எதுவுமின்றி மனித குலத்தின் இரண்டு ஆழ்ந்த சிந்தனையாளர்களான புத்தர் மற்றும் அரிஸ்ரோட்டில் ஆகியோர் முறையே மத்தியபாதை மற்றும் தங்கக் கருத்து என்னும் பதங்களால் வாதிட்டுள்ளார்கள். மத்தியபாதையானது சமஷ்டி மற்றும் ஒற்றiயாட்சி என்பனவற்றுக்கு இடைப்பட்ட கணிசமான அளவில் மாகாண சுயாட்சியுள்ள ஒரு ஒற்றையாட்சி அரசாங்கம். இதற்கான மாதிரிகளைக் காண்பதற்கு பிரதமர் சொன்ன ஒஸ்ரியாவுக்கு நாம் போகத் தேவையில்லை ஆனால் துல்லியமாக தென் ஆபிரிக்காவை பார்வையிடலாம் - அது சமஷ்டி அல்லாத (மண்டேலா அந்த முத்திரையை குத்த மறுத்துவிட்டார்) ஆனால் மாகாண சுயாட்சியை கொண்டது.
அரசியலமைப்பு மாற்றத்துக்கான நிலைப்பாடுகளின் நிபந்தனைகள் ஜனாதிபதி சிறிசேனவின் ஐதேக கூட்டாளிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தெற்கு – தெற்கு முரண்பாடுகளை விளைவிக்கக்கூடிய சமாந்தரமான முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி உள்ளபோது வடக்கு – தெற்கு நல்லிணக்கம் எப்படி உருவாகும். இராணுவ நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை புலிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் தவிர்க்க முடியாதபடி யுத்தக் குற்ற விசாரணைகள் பிரபலமான யுத்தம் மற்றும் பெரிய இராணுவம் என்பன இலக்கு வைக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளபோது சுயாட்சியின் அடிப்படையிலான நல்லிணக்க நடவடிக்கை சிங்கள தாராண்மைவாதத்தில் எப்படி வெற்றிபெற முடியும்? அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை அத்தகைய ஒரு எதிர்ப்பை  ஜனவரி 8 முகாமுக்கு கூட தூண்டியிருக்குமாயின், சர்வதேச சக்திகளுடன் கூடிய ஒரு விசேட நீதிமன்றம் (ஐநா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சியாட் அனுமதித்தது)  விசாரணை செய்யப்போகும் கசப்பான போர் அகழிகளைப் பற்றி சற்று கற்பனை செய்து பாருங்கள். யுத்தக் குற்றங்கள், தீர்ப்பாயங்கள் என்பனவற்றுக்காக வாக்களிக்கும் கட்சிகள் சமூகத்தினரின் அழுத்தங்கள் காரணமாக அடிப்படையிலேயே பிளவை எதிர்கொள்ள நேரிடும். தெற்கில் முன்னணி ஒன்று திறக்கப்படும் அதேவேளை வடக்கு – தெற்கு முன்னணியை எப்படி சமாதானப் படுத்துவது? அது எப்போதும் சுயாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் என்பனவற்றுக்கு இடையிலான தெரிவாக இருக்கும்.
ஜனாதிபதி சிறிசேனவின் மிதவாத சிங்கள பௌத்தம் கூட ரி.என்.ஏயினால் நிச்சயமாக இல்லாது ஒழிக்கப்படலாம். யாழ்ப்பாண ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ் சிறிதரன் வடக்கு கட்சிகளினதும் மற்றும் அதற்கு ஆதரவு தரும் வட்டாரங்களின் ஆட்டத் திட்டத்தை ஞ}யிறு வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்.
“…. ஆகவே இந்தச் சூழ்நிலையில் சமஷ்டி கட்டமைப்பு தமிழரின் இறையாண்மை என்பனவற்றின் அடிப்படையிலான தீர்வு ஒன்றை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் மற்றும் இந்தியா என்பன எங்கள் போராட்டத்தை நசுக்குவதில் பெரும் பங்கினை வகித்தன. அதனால் எங்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். அவர்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமற் போனால் நாங்கள் பிரிவதற்கான நிபந்தனைகளை அவர்கள் உருவாக்க வேண்டும் (வீரகேசரி, ஜனவரி 03, 2016)
ஜனாதிபதியின் முன்னோக்குகளின் பலவீனம் இலட்சிய வகையான தாராண்மை சீர்திருத்தத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. யதார்த்தமான தாரண்மை சீர்திருத்தவாதம் (உதாரணமாக: கிளின்டன், ஒபாமா, கெரி) வெற்றி பெற்றது, இலட்சிய தாராண்மை சீர்திருத்தவாதம் (உதாரணம்: காட்டர், விபி சிங்) தோல்வியடைந்தது. ஸ்ரீலங்காவில் உள்ள இன்றைய யதார்த்த தாராண்மை சீர்திருத்தவாதம் என்பதன் அர்த்தம்:
(1)அதிகார சமநிலைக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்கவைப்பது.
(2)தமிழ் நாட்டின் நிரந்தர பூகோள அரசியல் மற்றும் தற்போதுள்ள அச்சுறுத்தல் என்பனவற்றை அங்கீகரித்தல்.
(3)தமிழ் மற்றம் முஸ்லிம் சுயாட்சிக்கான அளவுருவின் சிவப்பு வரைகளை தெளிவாக வரைதல்.
(4)இராணுவம், போர் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தனிமைப் படுத்துதல், மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளினூடாக இராணுவம் - பிக்குகள் - கும்பல் அச்சு ஒன்றை உருவாவதை தவிர்த்தல்.
(5)புலம் பெயர்ந்தவர்கள் செல்வாக்கினைக் கொண்ட மேற்கினைச் சமப்படுத்தம் வகையில் இந்தியா – சீனா – யப்பான் – ரஷ்யா என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆசிய அடையாளம் ஒன்றுக்கு மாறுதல்.
ஜனாதிபதி ஜெயவர்தனாவினால் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியுடன் (1986 பி.பி.சி) மற்றும் இந்தியா (1984 – 1987)  மேற்கொண்ட தனது உடன்படிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் அவர் பிரதான நீரோட்டத்தில் உள்ள சிங்கள தேசியவாதத்தின் தலைவரான நாட்டின் முன்னாள் தலைவர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் வாக்குரிமையை பறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிளவு படுத்தினார் அதன் காரணமாக கெடுதல் நடவடிக்கையை தூண்டிவிட்டார். 1986ல் ஜே.ஆர், திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமையை மீள வழங்கியபோது நிலமை ஏற்கனவே உறதியற்றதாக மாறிவிட்டது. 1980ன் மறுசீரமைப்பு முழுவதும் திருமதி பண்டாரநாயக்காவின் அவசியத்தை நிலைநிறுத்தியது.
சிங்கள தேசியவாதத்தின் முறையான வரலாற்றுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸதான். எந்தவொரு நிலையான அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் தெற்கு தேசியவாதத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்துக்கு அவரது ஆதரவு முன்னிலையாக உள்ளது அல்லது தீங்கற்றதாக அவர் நடுநிலை வகிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அவர் நடை முறையில் ஒரு வீட்டோ அதிகாரம் கொண்டவராக உள்ளார். ஒரு யதார்த்த ஆய்வுக்கு பதிலாக அது அவரை ஒரு சீரற்ற அதிகார மையம் மற்றும் தவிர்க்கமுடியாத பேச்சு வார்த்தை பங்காளியாக அங்கீகரித்துள்ளது, ஆனால் அரசாங்கம் சரியாக எதிர்த்திசையில் துன்புறுத்தல் மற்றும் நகைப்பிற்குரிய அச்சுறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தகைய ஆத்திரமூட்டல்கள் ஆழ்ந்த எதிர் விளைவுகளைக் கொண்டவை. தெற்கு இல்லாமல் ஒரு தேசிய கருத்தொற்றுமை கிடையாது மற்றும் மகிந்த இல்லாமல் தெற்கில் ஒரு கருத்தொற்றுமை உருவாக வாய்ப்பில்லை.
திரு.சம்பந்தன் அறிவுநுட்பத்துடன் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவை கோரியுள்ளார், ஆனால் அது தீங்கற்ற ஒரு அழைப்பாகவும் இருக்கலாம். அது நியாயமான எல்லை, நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, கட்டமைப்பான கலந்துரையாடல்கள், சலுகைகள் மற்றும் வசதியான உடன்படிக்கைகள் என்பனவற்றை கொண்டிருக்க வேண்டும். ஒரு சர்வசன வாக்கெடுப்பில் சிங்களப் பெரும்பான்மை மகிந்த ராஜபக்ஸவின்  ஒப்பதல் இல்லாத ஒரு இன மறுசீரமைப்புக்கு வாக்களிக்கும் எனக் கணிப்பிடுவது அவரை எதிர்ப்பவர்கள் முட்டாள்தனமாக விளையாடும் ஆபத்தானதொரு சூதாட்டம். வடக்கு – தெற்கு நல்லெண்ணத்திற்கு தெற்கு – தெற்கு நல்லிணக்கம் அவசியம் அதன் அர்த்தம் தற்போதைய ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ ஆகியோரிடையே உண்மையான நல்லிணக்கம் அல்லது நீடித்த சமாதான சகவாழ்வு அவசியம் என்பதாகும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்             நன்றி

vendredi 22 janvier 2016

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தக தலைவர்கள், பிற உயர் அதிகாரிகள் என மொத்தம் 16,200 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு, வாழ்கை தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையில் ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டது.
டாப்-10 : இப்பட்டியலில் டாப்-10 வரிசையில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 மற்றும் 3வது இடங்கள் முறையே கனடாவும், இங்கிலாந்தும் வகிக்கின்றன. அமெரிக்காவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் சுவீடன்(5), ஆஸ்திரேலியா(6), ஜப்பான்(7), பிரான்ஸ்(8), நெதர்லாந்து(9), டென்மார்க்(10) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சீனாவுக்கு 17வது இடம் கிடைத்துள்ளது.
22வது இடத்தில் இந்தியா : இப்பட்டியலில் இந்தியா 22வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கல்வி தரத்தில் உயர்ந்துள்ள இந்தியா, தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் முக்கிய மையமாக உள்ளது. ஆனால் மக்கட்தொகை காரணமாக, வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் பின் தங்கியுள்ள இந்தியா, உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியை காட்டி ஏமாற்றிய அரசாங்கம்;ராஜபக்ச

mahinda.jpg
நாட்டைப் பாதுகாத்த ஸ்ரீலங்காப் படையினரை ஜெனீவா பிரேரணைக்கு அமைய தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு புதிய அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
இரத்தினபுரி - எஹெலியகொடை புளுகஹபிட்டிய ஸ்ரீ சுமண பிரிவென் விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து உயிர் அர்ப்பணிப்புச் செய்து எமது படையினர் பாதுகாத்தனர். ஆனால் இன்று இந்த அரசு அவர்களை நடத்தும் முறை கவலைக்குரியதாகவுள்ளது.
ஜெனீவா பிரேரணைக்கு அமைய எமது படையினரை தூக்கு மேடைக்கு அனுப்பி வைக்க அரசு தயாராகின்றது. எனவே மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்திலிருந்து மீட்டெடுத்த நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
எமது ஆட்சி மீது விருப்பமில்லாத மக்கள் புதிய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் புதிய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்ட மக்கள் இன்று விழிபிதுங்கிப் போயுள்ளனர். நாட்டில் ஸ்திரமில்லா நிலை தலைதூக்கியுள்ளது.
நல்லாட்சி என்ற பெயர் மட்டும் தான் உள்ளது. ஆனால் நாட்டின் பல பிரதேசங்களில் பாதாள உலக கோஷ்டிகளின் ஆட்சி நடக்கின்றது. நாட்டு மக்கள் மத்தியில் மாயையான நல்லாட்சியை காட்டி ஏமாற்றிய அரசாங்கம் தற்போது எவ்வாறு நடந்து கொள்கின்றது. என்பதை மக்கள் தமது கண்ணால் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
அப்பா, அக்கா, தங்கை என்ற பேதம் தெரியாத காட்டு மிராண்டி யுகம் தலைதூக்கியுள்ளது. கொள்ளைகள் கொலைகள், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எமது பௌத்த குருமாரை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் இடம்பெறும் “பாதாள உலக” நிர்வாகத்திற்கு எதிராக பெளத்த குருமார் போராட ஆயத்தமாகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்தவே பௌத்த குருமாரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது - என்றார்.

ஜான்சிராணி மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணி எம்எல்ஏ அப் பொறுப்பிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதை ஷாக்கிங் சர்ப்ரைஸ் என்றுதான் சொல்ல வேண்டும். சோனியா அம்மா, ராகுல்ஜி, ஷோபா உஷா, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மேலும் அவர் கூறுகையில், 'என் பாட்டி பொன்னம்மாள்தான் எனக்கு அரசியலில் ரோல் மாடல். அவரைப் பார்த்துப் பார்த்தே நான் என் அரசியல் பயணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியவர், அனைவருக்கும் பிடித்தமானவர். அவர் விட்ட இடத்தை கண்டிப்பாக நான் பிடிப்பேன். என் குடும்பம், கணவர் என்று அனைவருமே காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவர்கள்தான், அதனால், குடும்ப ஆதரவு முழுமையாக இருக்கிறது. நிச்சயமாக தலைமையின் வழிகாட்டுதலில் எதையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறேன். என்னை நம்பிக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன், அதன்படி செயல்படுவேன்
எனக் கூறினார்.

dimanche 17 janvier 2016

18 இலட்சம் மணித்தியாலங்கள் வீணடிப்பு : கடும் நடவடிக்கை

அரச ஊழியர்கள் தனது கையடக்கத் தொலைபேசியை முறையற்ற ரீதியில் பயன்படுத்துவதனால் ஒரு நாளைக்கு சேவையின் போது 18 இலட்சம் மணித்தியாலங்கள் வீணடிக்கப்படுவதாக அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரச துறையின் வினைத்திறனை முன்னேற்ற வேண்டுமாயின் இந்த நிலைமையை தொடர்பில் அரச நிருவாக அமைச்சு கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச தொழில் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரச நிறுவனங்களில் கையடக்க தொலைபேசி பயன்படுத்தல் தொடர்பாக கடும் அறிவுறுத்தல் ஒன்றை விடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் சாசனத்தால் பௌத்தம் பாதிக்கப்படாது' ரணில் உறுதி

பௌத்த மதத்துக்கு எந்த பாதிப்புகளும் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.புதிய அரசியல் சாசனத்துக்கு அனைத்து தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும் என்கிறார் ரணில்

நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் சாசனத்தின் மூலம் பௌத்த மதம் பாதிக்கப்படும் என சிலர் கூறிவந்த நிலையில், பிரதமரின் இந்த வாக்குறுதி வந்துள்ளது.
அதேபோல புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் கருத்துக்களும் உள்வாங்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
உரிய நேரத்தின் தமது கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்
நாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவதில் பொதுமக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உலகளவில் முதல் முறையாக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைக்கு, சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துக்கள் பெறப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பது என்பது தொடர்பில், தற்போதுள்ள அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்ததுக்கு அமையவே புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் 300 மில்லியன் டொலர்கள் அதை விட மற்றொரு மிகப்பெரிய நீல மாணிகக்கல் மாணிகக்கல்

மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்
நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300
மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார். அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலம் முலங்க எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மாலை அணிந்தார்

   எம்.ஜி.ஆரின் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து...... மரியாதை செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் மலரை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட, அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுலஇந்திரா  ஆகியோர் பெற்று கொண்டனர். அப்போது தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா இனிப்புகள் வழங்கினார்.இனிப்பு ஏன் வழங்கினார் என்பதைவிட மேலம் முலங்க எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மாலை அணித்து அதன்பின் இனிப்பு ஏன் வழங்கினார் என்பது அதிமுக தொன்டர்களுக்குத்தான் வெளிச்சம்

samedi 16 janvier 2016

சுற்றுலா கப்பல் சேவை இலங்கையில்

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷி தனதுங்க தெரிவித்துள்ளார்.
இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு நகரை பிரதான மையமாக கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கப்பல் சேவையானது கேந்திர முக்கியத்துவதற்கு அமைய காலி மாவட்டத்திற்கும் வழங்கப்படும் என்றும் திருகோணமலை துறைமுகத்தை புணரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அம்பாந்தோட்டையின் அபிவிருத்திக்கமைய, யால சரணாலயத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமகால இலங்கை அரசியல் அரங்கு பாரிஸ் -rue pierre lermite 75018 paris

சமகால இலங்கை அரசியல் மீதான ஆய்வரங்கு எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று பாரிஸ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடு சஞ்சிகையின் ஆதரவில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் இந்நிகழ்வினை எதிர்வரும் 17ம் திகதி ஞாயிறன்று இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
எம்.ஆர்.ஸ்டாலின்,இரஜாகரன்,உதயகுமார்,சந்தான போன்ற அரசியல் செயற்பட்டாளர்கள் முக்கிய உரையாற்றவுள்ளனர்.உரைகளைதொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. 

jeudi 14 janvier 2016

காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில் கண்டுபிடித்த தாய் எனது மகனை தருமாறு உரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறார்

போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டுகளுக்கு பலியாகாமல் உயிர் தப்பிய இளைஞர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். நீண்ட காலமாக அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்தன. அந்த சம்பவத்தில் காணாமல்போன தன் மகன் திரும்பி வருவானா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் ஒருவரின் உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்தது. அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது காணாமல்போன புதல்வன் பற்றிய தகவல்களை இங்கே பிரசுரிக்கிறேன்.


(இடது பக்க மூலையில் இருப்பவர்) 
அண்மையில் யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றன. அதில் சமூகமளித்த பல பெற்றோர், தமது பிள்ளைகள் எத்தகைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற விபரங்களை தெரிவித்தார்கள். எனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய தாய், குறிப்பிட்ட விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகனின் கதை, இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. 
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில், பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு காட்சி வாரும். அரை நிர்வாணமாக்கப் பட்ட நிலையில், சில இளைஞர்கள் மணலில் இருத்தி வைக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது கைகள் முதுகுப் புறமாக கட்டப் பட்டிருக்கும். அவர்களது பார்வைகள் வெறிச்சோடிப் போயிருக்கும். அருகில் இருந்த இராணுவத்தினர் பிற கைதிகளை சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வை கண்முன்னால் பார்ப்பது போன்றிருக்கும். இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆதாரமாக அது உள்ளது.
சனல் 4 ஆவணப்படத்தில், உயிருடன் இருப்பதாக காட்டிய காட்சியில், தனது மகனைக் கண்டதாக இந்தத் தாய் என்னிடம் தெரிவித்தார். (இங்கேயுள்ள படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்.) அந்த வீடியோவில் தனது மகனை இனம் காட்டும் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 
சனல் 4 காட்டிய படியால் சிலநேரம் தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்தத் தகவல் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றார். மேற்கொண்டு தேவையான விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.
மல்லாவி மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த தம் மகன், இறுதி யுத்த காலகட்டத்தில் புலிகளால் கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்லப் பட்டதை பெற்றோர் கண்டுள்ளனர். இராணுவம் புதுமாத்தளன் வரை முன்னேறி வந்த போது, பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஆனால் காணமல்போன புதல்வனும் இன்னும் பல இளைஞர்களும் அவர்களோடு செல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்.
முள்ளிவாய்க்காலில் காணாமல்போன மகன் பற்றிய விபரங்களை அவரது தாய் அனுப்பிய கடிதத்தில் உள்ள படியே இங்கே தருகின்றேன்:
"எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் காணாமல்போயுள்ளார். இவரை 20.04.2009 கடைசியாகக் கண்டேன். எனது பிள்ளை மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். இவரது கையில் பட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், கடைசியில் மகன் விலங்கிடப் பட்ட நிலையில் உள்ள படத்தை தான் காண முடிந்தது.

இடது பக்க மூலையில் இருப்பவர் 

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் சில காட்சிகளை, 15.03.2013 யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அப்போது தான் எனது மகனும் அந்தப் படங்களில் இருப்பதை கண்டுபிடித்தேன். அப்போது பாதுகாப்பின்மை காரணமாக அடையாளம் காட்ட முன்வரவில்லை. அந்த வீடியோக் காட்சிகளின் படி, எனது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன். எனது மகனைத் தேடித் தருமாறு உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."

அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது;சுமந்திரன்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
"ஆம் ஆண்டு மற்றும் 1978 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களில் தமிழ் மக்கள் தள்ளிவைக்கப்பட்டனர். இதனால் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டது.
இவற்றை நிவர்த்தி செய்வதிலிருந்து புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்படாத நாடு என்ற அடிப்படை சரியாக உணர்த்தப்படாமையால், சுதந்திரத்தின் பின்னர் இன்று வரை நாடு பல்வேறு வேறுபாடுகளை எதிர்கொண்டுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரவேண்டும் எனக் செயற்பட்டிருப்பது சிறிலங்காவின் வரலாற்றில் முதல்முறையாகும்.
எமது மக்கள் வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, சமூகப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நாளாந்தம் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் அவை அவர்களின் அடிப்படைப் பிரச்சினை அல்ல.
சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதன் மூலமே சகலரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்வார்கள்.
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் சமமான அதிகாரத்தை வழங்கக் கூடிய அரசியலமைப்பு ஒன்றே அவசியமானது.
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மொழி ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களிடத்தில் சரியாக கொண்டு சேர்த்தால் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும் "என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்னாசி தொப்பையைக் குறைக்கும் எல்லா வித நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது


இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.
pappleவைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும்.
பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும்.
உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் : பிரதமர் மோடி

 அரசியல் மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் : பிரதமர் மோடி பாராட்டு
இலங்கைக்கு, 2 நாள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பு நகரில் ஜனாதிபதி சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஜனாதிபதியிடம், ”கடந்த வாரம் நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இலங்கை மக்கள் மட்டும் அல்ல, டெல்லியில் நாங்களும் மிகவும் பாராட்டினோம்” என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஒற்றுமைக்காக சிறிசேனா அரசு கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் இந்தியாவுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து இலங்கை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், சிறிசேனா பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி சார்பில் இந்திய வெளியுறவு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் என்றும், இலங்கையின் ஒற்றுமைக்காக ஒரு சிறந்த அரசியல் மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் என்று மோடி பாராட்டியதாகவும் தெரிவித்தன.
அப்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, மறுகுடியேற்றம், ரயில்வே, மின்சக்தி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கு சிறிசேனா பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தனையும் கொழும்பு நகரில் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதித்தனர்.
இந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினை, மறுகுடியேற்ற நடவடிக்கை, வடக்கில் ராணுவம் நிலை கொண்டிருப்பது உள்ளிட்டவை பற்றி சம்பந்தன், இந்திய வெளியுறவு செயலாளரிடம் விரிவாக விவரித்தார்.
இவற்றை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறின.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை ஆந்திராவில் சேவல் சண்டைக்கட்டுக்கு தடை

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது போல ஆந்திராவின் சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் பொங்கல் பண்டிகையொட்டி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆனால் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டுவதால் மிருகவதை எனக் கூறி இதற்கும் தடை வாங்கிவிட்டனர் மிருக நல ஆர்வலர்கள்.
தற்போது தடையை மீறி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டைக்கான ஏற்பாடுகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேவல் சண்டையை நடத்துவதற்காக மத்திய அரசு அனுமதியை கோரி வருகின்றனர். ஏற்கனவே சேவல் சண்டை நடந்தால் மாவட்ட காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதனால் சேவல் சண்டைகளைத் தடுக்கவும், நடத்துவோரை கைது செய்யவும் அம்மாநில காவல்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களைப் போல ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களும் பதற்றத்தில் உள்ளன.ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி ஒன்றோடு ஒன்று மோதவிடும் சேவல் சண்டையில் ஏதாவது ஒரு சேவல் இறந்தாலோ அல்லது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு ரத்தகாயம் அடைந்தாலோ மட்டுமே போட்டி முடிவுக்கு வரும்.

mercredi 13 janvier 2016

உண்மையில் இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பொருத்தமற்றது?

      பொறியியலாளர்; எம்.சூரியசேகரம்
sea water         இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின் தேவை போன்றவற்றிற்கும் மேலதிகமான அளவில் நீர் உண்டு.

          எமக்கு போதுமான அளவு மழை வீழ்ச்சி உண்டு. எம்மிடம் வற்றாத நதிகள், நீரோடைகள், வாவிகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பாக நீர் வில்லைகள் உண்டு. தவறான நீர் நிர்வாகத்தால் மிக அதிக அளவிலான நன்னீர் வீணே கடலில் செல்ல விடப்படுகிறது. இதனால் தான் “சொர்க்கத்திலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் மனிதனால் பயன்படுத்தப்படாமல் கடலுக்கு செல்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.” என மன்னன் பராக்கிரமபாகு பிரகடனம் செய்தான்.

          நீர் நிலைகளை எண்ணை, கிறீஸ், இரசாயன உரம் போன்றவற்றால் மாசடையா வண்ணம் பாதுகாத்து ஏனைய உலக நாடுகளில் செய்வது போன்று மீள் விநியோகம் செய்தால் மிகவும் தட்டுப்படியான விலையின் தேவையான அளவு தரமான நீரை ஒவ்வொருவருக்கும் வழங்க முடியும்.

          இலங்கையில் போதுமான அளவு நன்னீர் வளம் மட்டுமல்ல அதனைக் கையாளத் தேவையான நிபுணத்துவம் உடைய குடிசார் பொறியியலாளர்கள், இயந்திர பொறியியலாளர்கள், மின் பொறியியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றோரும் உள்ளனர். இவர்க@டாக இயற்கையாய் அமைந்த நீர் வளத்தை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு இலங்கையர்களதும் நீர்த் தேவைகளை திருப்தி செய்ய முடியும். எமது நாட்டின் நீர்ப்பாசன நாகரிகம் உலகம் புகழ் வாய்ந்தது.

          துரதி~;டவசமாக எமது அரசியல் வாதிகள் இதுபற்றி அறியாமை உடையவர்களாகவும் அத்துடன் அறிய மறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் தான் கடல் நீரை சுத்திகரித்து குடி நீராக்கும் அமெரிக்க கம்பெனிகளின் வர்த்தக அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களால் வழங்கப்படும் தரகுப்பண எதிர்பார்ப்புடன் செயல்;படுகிறார்கள். அதாவது எஸ்கிமோவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி விற்க வந்துள்ளார்கள்.

1.   கடல் நீரை குடிநீராக்கும் செயற்பாடு செலவு கூடியது. இங்கு இரு வகையான வழிமுறைகள் கடல் நீர் உப்பை நீக்க பயன்படுத்தப்படுகிறன. ஒன்று சவ்வூடு பரவல் முறை, மற்றையது வடித்தல் முறை. இரு முறைகளிற்கும் மூலதனச் செலவும் இயங்க வைக்கும் செலவும் மிக அதிகம். ஒருமித்தபடி பார்க்கப் போனால் இம் முறைகள் 5 மடங்கு மேலதிகமான செலவை வேண்டி நிற்பவை. இந்த ஒரு காரணத்தினால் தான் உலகின் செல்வந்த நாடான அமெரிக்கா கூட இத் தொழில் நுட்பத்தை நிராகரித்துள்ளது. ஏன் இந்த தந்திரத்தில் ஈடுபடுகிறீர்கள்? என்று எமது அரசியல் வாதிகளைப்பார்த்து நாம் கேட்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான செலவை செலுத்தத் தயாரானால் நாம் ஏன் செலவைப்பற்றி கவலைப்பட வேண்டும்? என  TNA அரசியல் வாதி கேட்டார். சிறு பிள்ளைத் தனமாக, பொறுப்பற்ற விதத்தில் கேள்வி கேட்கும் இத்தகையோர் உணர்ந்து கொள்ள வேண்டிய  உண்மை என்னவெனில் இத்திட்டத்திற்கு செய்யப்படும் செலவு நேரடியாகவோ,     மறைமுகமாகவோ மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டவை மட்டுமேயாகும். இதற்கும் மேலாக மக்களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்படாத பல தேவைகள் இருக்கும் போது ஏன் இத்தகைய வளங்களை வீண் விரயஞ் செய்ய வேண்டும்?
கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யும் செயற்பாடு அதிக சக்தியில் தங்கி நிற்கிறது. இந்த சக்தி தேவைக்கு அதிக அளவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் தங்கி நிற்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய செயற்பாடு அல்ல. உப்பு நீரை நன்னீராக்க தேவையான சக்தியை பெற பெற்றோலிய எரிபொருளை பிரத்தியேகமாக பாவிக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் சூழலை மாசடையச் செய்து மேலும் ஓசோன் மண்டலத்தை வெறுமையாக்கி பச்சை வீட்டு விளைவால் வளிமண்டலம் வெப்பமடைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து மனிதன் வாழும் கரையோர வாழிடங்களை நீண்ட காலமாக இழந்து வருகிறோம். கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யப்படும் முறையானது நீடித்து நிலைத்து நின்று எமது நீர்த் தேவையை பாதுகாக்கும் ஒரு முறையல்ல. செலவு கூடியதும், குறுகிய கால நலன் சார்ந்ததுமான இத் திட்டத்தால் நீண்ட கால பேரிடரை உருவாக்கவுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்திலும், சக்தியிலும் என்றைக்குமே தங்கியிருக்கும் நிலையை அடைவோம். குடிக்கும் நீருக்கு கூட மற்றவர்களின் தயவை நாடியிருக்கும் நிலையை அடைவோம்.

2.   நீடித்து நிலைத்து நிற்றல்-இது தண்ணீர்த்தேவைக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு விடயத்திற்கும் அதாவது, வேலை, வாழ்வாதாரம், அபிவிருத்தி, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும் இத்தகைய விடயங்களில் குறுகிய கால நேரத்தை மட்டும் பார்க்கக் கூடாது. நீண்ட கால நோக்கும், கொள்கையும் தேவை. நாம் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வை ஒரு கொள்கையாக, ஒரு தேவையாக கருத வேண்டும். கடல் நீரை நன்னீராக்கும் செயல் நிச்சயமாக நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதல்ல.

3.   மாகாணங்களை ஆட்சி செய்யும் போது (இலங்கையை ஆட்சி செய்யும் போது கூட) சூழலியல் விடயங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். இது நீர் விநியோகம், மின் பிறப்பாக்கம், அபிவிருத்தி திண்மக் கழிவுகள் அகற்றல், கழிவு நீர் அகற்றல், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து முதலிய எல்லாத் துறைகளிலும் பிரயோகிக்கப்பட வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு துறைகளையும் பிழையாக நிர்வகித்தால் மிகப் பாரிய அளவில் சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். நான் இங்கு TNA ஜக் கூறவில்லை. ஆனால் TNA க்கு இத் தவறுகளை திருத்தும் அதிகாரம் உண்டு.
அத்துடன் மதி நுட்பமாக தமது அதிகாரத்தை விருத்தியடையச் செய்து நிலைமைகளை மாற்ற வேண்டும். இது வரைக்கும், எனது கருத்துப்படி TNA இத் தவறுகளை மாற்றவில்லை. அத்துடன் மிக மோசமான கொள்கைத் தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக இரணைமடுத் திட்டம், சுண்ணாகம் எண்ணை மாசு விடயம், மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

4.   நிறைந்த மழைவீழ்ச்சியாலும், வற்றாத ஆறுகளாலும், நீரோடைகளாலும் வடக்கில் நிலத்தடி நீர் வில்லைகளாலும் தேவைக்கு பொருத்தமான நல்ல நீரை, நல்ல சூழலை எந்தவித செலவும் இன்றி இயற்கை, இலங்கைக்கு அள்ளிக் கொடுத்துள்ள போது ஏன் நாம் செலவு கூடிய சுற்றாடலை பாதிக்கும், தங்கிநிற்கும், நீடித்து நிலைத்து நிற்காத, வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய தொழில் நுட்பத்திற்கு செல்ல வேண்டும்? இயற்கை எமக்கு அளித்த கொடையை நிராகரித்;து ஏன் செலவு கூடியதும், பராமரிக்க கடினமானதுமான செயற்கையான தீர்வுகளை முன்னெடுத்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும், அவர்களுடைய உள்@ர் ஊக்குவிப்பாளர்களிற்கும் பணத்தை வாரி இறைக்க வேண்டும்? நீருக்கு அதிக விலையை செலுத்துவதைத் தவிர வேறென்ன பயனை எமது மக்கள் பெற்றுவிடப் போகிறார்கள்? இதில் எந்த தர்க்கமும் ஒழுங்கும் இருப்பதாக தெரியவில்லை.

       எமக்கு உப்பு நீக்கும் தொழில் நுட்பத்தை விற்பதற்காக மற்றுமொரு பொய்யை அல்லது கட்டுக் கதையை ஆர்பரிப்புடன் பிரசாரம் செய்கிறார்கள். அதாவது நாம் தற்போது கொண்டு செல்லும் நீரிலும் பார்க்க உப்பு நீக்கம் செய்யப்பட்ட நீர் தூய்மையானது என்பதே அதுவாகும். உண்மையில் ர்2ழு குடிப்பதற்கு உகந்தது அல்ல. இது மோட்டார் வண்டி மின்கலத்திற்குதான் (பழைய வகை) உகந்தது. புதிய வகை மின்கலங்கள் பராமரிப்பற்று சேவையாற்றுபவை. ‘விஸ்கி’ க்கு பதிலாக துய மதுசாரத்தை யாரும் குடிக்க மாட்டார்கள். தூய உப்பு (சோடியம் குளோரைட்) உடலுக்கு நல்லதல்ல. அதனால்தான் உப்புடன் அயடினையும் சேர்க்கிறோம்.

        தூய்மை, கன்னித் தன்மை போன்ற பழைய கருதுகோள்கள் 21ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாதவை. குடிநீரில் நுண் கிருமிகள், பீடை கொல்லிகள், நைத்திரேற்றுக்கள், தொங்கும் அசுத்தங்கள், நாற்றம், நிறம் என்பவை இல்லாது இருக்க வேண்டும். ஆனால் தூய்மையாக இருக்கக் கூடாது. சில உப்புக்கள் விரும்பப்படுகின்றன. பற்கள் சிதைவடைவதை தடுக்க சில நாடுகள் நீரில் புளோரினை சேர்க்கின்றன.

        நாங்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக எந்த வித தீர்மானங்களும் எடுக்காதவர்களாகவே எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களது தீர்மானங்களில் விஞ்ஞானத்திலும் பார்க்க அறியாமையே ஆட்சி செலுத்துகிறது. மோசடிகளால் தங்களை வளப்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் இருக்கிறார்கள். பொறுப்பற்ற வகையில் செலவு செய்தல், வறுமையுடன் கூடிய பொருளாதார சார்பு நிலையை பேணல், கடன்களை உருவாக்குதல் போன்ற அபாயங்களுக்கு எதிராக எமது மக்களை காக்க தொடர்சியாக அறைகூவல் விடுவிக்க வேண்டும்.

       மழைவீழ்ச்சி, ஆறுகள், நீரோடைகள், நிலத்தடி நீர் போன்ற இயற்கை நீர் வளங்கள் அற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தூய நீர் வழங்க அமெரிக்க கம்பெனிகளால் உருவாக்கப்பட்டதே இந்த உப்பு நீக்கும் தொழில்நுட்பம்.

       அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தும் நாடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பெருந்தொகையான இலாபத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறும் இக் கம்பெனிகள், தற்போது எங்களை மயக்கி, தந்திரமாக எங்களுக்கு பொருத்தமற்ற இத் தொழில்நுட்பத்தை வாங்கும்படி செய்து பெரும் இலாபத்தை சம்பாதிக்க முயல்வதோடு எமது மக்களை வறுமையில் தள்ளி என்றுமே குடிநீருக்காக அவர்களில் தங்கி நிற்பவர்களாக மாற்ற முயல்கிறார்கள். நாம் முட்டாள்களாக இருந்தால் மட்டுமே எப்போதுமே உயிர் வாழ்தலில் அவர்களில் தங்கியிருக்கும் இப் பொறியில் சிக்குவோம். எமது மடமையை பயன்படுத்தி தங்களது வங்கிகள் நிரப்பப்படுவதை எண்ணி அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நகைத்துக் கொள்வார்கள்.

       சவுதி அரேபியாவிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலுமுள்ள உரிமம் பெற்ற அமெரிக்க கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்தும் எண்ணைக் கிணறுகளிலிருந்து பெருந்தொகையான இலாபத்தை பெற்று வருகின்றன. அது மட்டுமல்லாது மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதி அரேபியாவிலும் உள்ள எல்லா வகையான கட்டிடத் தொழில்கள், இராணுவ ஆயுத விநியோகங்கள், விவசாய நுண்நீர்ப்பாசனம், எனப் பல்வேறு துறைகளையும் இக் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கா உண்மையிலேயே ஒரு பொலிஸ்காரனைப் போல சவுதி அரேபியாவிலுள்ள உப்பு நீக்கும் தொழில்நுட்பத்தை ஆட்சி செய்கிறது. சவுதி அரேபியா இப்போது அமெரிக்காவின் ஒரு பொம்மை அரசு. எமக்கு வரப்போகும் பல தீமைகளுக்கு மைல் கல்லாக அமையப்போவது இந்த உப்பு நீக்கும் செயற்பாடே.

        நாம் எமது பிரதிநிதிகளை தெரிவு செய்தது, எமது மக்களிற்கு மட்டும் சேவை செய்யவே ஒழிய அமெரிக்க கம்பெனிகள், ஐக்கிய அமெரிக்க குடியரசிடம் இருந்து எந்த வகையான சுய இலாபங்களை பெறுவதற்கல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

ஆங்கிலம் வழியாக தமிழில்

இ.கிருஷ்ணகுமார்;

 -   சிந்தனைக் கூடம்

கோயில்களின் புனிதத்தை ஆடைகள் கெடுக்க முடியுமா ?

கோயில்களின் புனிதம் உள்ளுறை தெய்வங்களால் ஏற்பட்டதா? அந்த தெய்வங்களைக் கும்பிட வரும் மனிதர்களால் ஏற்பட்டதா? ஒரு புனிதமான கோயிலுக்குள் நூறு பாவங்களைச் செய்த பாவிகள் வருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கொடியவர்கள் வருகிறார்கள். பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் வருகிறார்கள். மனத்தில் இருளையும், செயல்களில் கயமையும் வைத்துள்ளவர்கள் வருகிறார்கள். அதனால் கெடாத கோயில்களின் புனிதம் பெண்கள் உடையால் ஆண்களின் அரைக் கால் சட்டைகளால் கெடுவதாகக் கூறுகிறீர்களே, நீங்கள் கடவுளின் புனிதம் குறித்தும் கடவுள் உறையும் கோயில்களின் புனிதம் குறித்தும் இவ்வளவுதான்உணர்ந்துள்ளீர்களா? ஆகவே, பெண்ணின் உடைக்குக் கட்டுப்பாடு போட்டு ஒழுக்கத்தைக் கொண்டுவரப் பார்ப்பது மாட்டுக்கு முன்னால் வண்டியைக் கட்டும் வேலை. இத்தகையசமூகம்முன்னேசெல்லாது.                                                                                                       வழக்கறிஞர்.  தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

mardi 12 janvier 2016

சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் ஆனால் தமிழ்த் தலைவர்களை நோக்கும் போது?


ms-mr1சிங்களத் தலைவர்கள்; தமிழ்த் தலைவர்கள் என்ற ஒரு ஒப்புநோக்குகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் அவர்களின் அரசியல் பணிகள் அனைத்தும் தமது இனம்; தமது மதம்; தமது நாடு என்ற அடிப்படையில் இருப்பதைக் காணமுடியும்.
ஆனால் தமிழ்த் தலைவர்களை நோக்கும் போது இவர்கள் தமது இனம்; தமது மக்கள்; தமது தாயகம் என்ற உணர்வுகளுக்கு அப்பால் தமது அரசியல் கட்சி, தமது அரசியல் இலாபம் என்பவற்றுக்கே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளனர்-கொடுத்து வருகின்றனர்.
தமிழ்த் தலைமையிடம் இருந்த இத்தகையதொரு பலவீனத்தை சிங்களத் தலைவர்கள் தமக்குச் சாத கமாக்கிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே தமிழ் மக்கள் இன்று வரை துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இத்தகையதொரு நிலைமைக்கு சமாந்தரபலம் கொண்ட இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கான களத்தை தமிழ் மக்கள் உருவாக்கத் தவறியமையாகும்.
Sirisena readsஅதாவது கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பதை அரசியல் கட்சி விடயத்தில் தமிழ் மக்கள் கவ னத்தில் கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் ஒரு கட்சி மட்டுமே பலம் பெற்ற கட்சியாகிப் போனது. இத்த கையதொரு நிலைமை தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் போன்ற உன்னதமான தமிழ்ப் பற்றாளர்கள் இருந்தபோது பிரச்சினையாகத் தெரியவில்லை.
அவர்கள் எது செய்தாலும் அது தமிழ் மக்களுக்கானதாகவே இருந்தது. ஆனால் இன்றைய நிலைமை அது அன்று. தமிழர்களின் அரசியல் கட்சி என்று ஏற் றுக் கொள்ளப்பட்ட கட்சியின் தலைமைக்குள் பலரும் புகுந்து விட்டனர். இதனால் யார் எந்தப் பக்கம் என்பதை புரிய முடியாமல் தமிழ் மக்கள் தத்தளிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிக்குள் இருக்கக்கூடியவர்களில் பலர் தமது அரசியல் இலாபம் பற்றியே சிந்திக்கி ன்றனர். ஆனால் சிங்களத் தலைவர்களின் நிலைமை அது அன்று.
விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் சர்வா திகாரப் போக்கில் நடந்த மகிந்த ராஜபக்­சவின் ஆட்சி க்கு முடிவு கட்டவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கூட்டாக முடிவெடுத்தனர்.
இதற்காக அவர்கள் சர்வதேச நாடுகளின் உதவியையும் தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப் பையும் பெற்றுக் கொண்டனர். சிறுபான்மைத் தமிழ் இனத்தின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் அதே சிறுபான்மைத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பதை காணமுடியும்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானால்- பிரதமராகினால் அது பற்றி சிங்கள மக்கள் எதுவும் கூறமாட்டார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் அது குறித்து சிங்கள மக்கள் குழப்பம் அடைவார்கள் என்று கூறுவது எந்தளவுக்கு நியாயமானது என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால், அவர்கள் அது பற்றி இம்மியும் உணரமாட் டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தமிழ் மக்களின் நலன் பற்றி எந்தக் கவனமும் கிடையாது. அவ்வாறானதொரு கவனம் இருந்திருக்குமாயின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை தமிழ்த் தலைவர்கள் முன்வைத்திருப்பர்.
அவ்வாறானதொரு நிபந்தனை முன்வைக்கப்பட்டிருக்குமாயின் மைத்திரி ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற கையோடு, சரத்பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் கொடுத்த அன்றே தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்க முடியும். என்ன செய்வது? எங்கள் தலைவிதி இது. ஆயினும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்களத் தலைவர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டு தங்கள் அரசியல் பாதை களை புதிப்பிக்க வேண்டும்.                                       ....சலசலப்பு

ஹிட்லரின் சுயசரிதை 70 ஆண்டுகளுக்குப் பின் சுயசரிதை மீண்டும்

​ஜெர்மனியில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிட்லரின் சுயசரிதை மீண்டும் வெளியீடு
ஹிட்லரின் சுயசரிதையான மெய்ன் கேம்ப் புத்தகம் 2ம் உலக போருக்கு பின் ஜெர்மனியில் முதன் முறையாக வெளியிடப்பட்டது.

ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 1918 -ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக போரில் தனி அணி அமைத்து  போரிட்டார். பின்னர் 1923 -ம் ஆண்டு ஜெர்மனியின் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுப்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்த போது தனது வாழ்க்கை குறிப்பை மெயின் கேம்ப் என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் 1925-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியானது.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஹிட்லரின் புத்தகத்தை வெளியிட ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டது. தற்போது புத்தகத்தின் காப்புரிமை காலாவதியாகி விட்ட நிலையில் ஜெர்மனி நாட்டின் வரலாற்று மையம் ஒன்று நேற்று மெயின் கேம்ப் புத்தகத்தை வெளியிட்டது.

இனங்களுக்கிடையில் சமத்துவமான முறையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் உரையாற்றினார் சுமந்திரன்


சிகரெட்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்

புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் உலகெங்கும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுமையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூபிடர் ஐ.ஓ.3 என்ற இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்துடன் வெளிவருகிறது. ஹெட்போனை போல் இ-சிகரெட்டு கருவியை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி அதிலுள்ள இ-சிகரெட்டிற்காகவும் இடம் பெற்றுள்ளது.

காபி, புதினா, சாக்லேட் என பல வாசனைகளில் திரவ கேட்ரிஜ்களுடன் கூடிய எலக்ட்ரானிக் சிகரெட் குச்சி இந்த போனுடன் தரப்படுகிறது. வேண்டிய நேரத்தில் இதை பொருத்தி புகைபிடித்துக் கொள்ளலாம். ஒரு கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும். இதற்கென தனியாக திரவ கேட்ரிஜ்ஜூகளும் உள்ளன. புகை பிடிப்பதன் மீதுள்ள மோகத்தை குறைக்கும் வகையில் வேப் எனும் அப்ளிகேஷனும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப் எத்தனை முறை புகை பிடிக்கிறோம் என்பதை கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறது. 3ஜி இண்டர்நெட் வசதியுடன் கூடிய போன் ரூ.20 ஆயிரத்திற்கும், 4ஜி வசதியுடன் கூடிய போன் ரூ.33 ஆயிரத்திற்கும் விற்பனைக்கு வருகிறது.

எனினும், வழக்கமான சிகரெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஏதாவது கதிர்வீச்சு பாதிப்புகளை உண்டாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது