jeudi 14 janvier 2016

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை ஆந்திராவில் சேவல் சண்டைக்கட்டுக்கு தடை

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது போல ஆந்திராவின் சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் பொங்கல் பண்டிகையொட்டி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆனால் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டுவதால் மிருகவதை எனக் கூறி இதற்கும் தடை வாங்கிவிட்டனர் மிருக நல ஆர்வலர்கள்.
தற்போது தடையை மீறி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டைக்கான ஏற்பாடுகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேவல் சண்டையை நடத்துவதற்காக மத்திய அரசு அனுமதியை கோரி வருகின்றனர். ஏற்கனவே சேவல் சண்டை நடந்தால் மாவட்ட காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதனால் சேவல் சண்டைகளைத் தடுக்கவும், நடத்துவோரை கைது செய்யவும் அம்மாநில காவல்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களைப் போல ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களும் பதற்றத்தில் உள்ளன.ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி ஒன்றோடு ஒன்று மோதவிடும் சேவல் சண்டையில் ஏதாவது ஒரு சேவல் இறந்தாலோ அல்லது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு ரத்தகாயம் அடைந்தாலோ மட்டுமே போட்டி முடிவுக்கு வரும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire