samedi 30 novembre 2013

இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது.இதில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள்

இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு கோடியே 51 லட்சத்து 73820 பேர் சிங்கள மக்களாவர்.

31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள்

18 லட்சத்து 69820 பேர் சோனகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

33061 பேர் பர்கர் இனத்தவர்கள். 40189 பேர் மலே இனத்தவர்கள்.

2011 � 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சனத் தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளது. மதிப்பீடு நடவடிக்கைகளுக்காக 99000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலகங்களும், புள்ளி விபரத் திணைக்களமும் இணைந்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை முற்கொண்டுள்ளன.

பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடிய 42 லட்சத்து 21 ஆயிரத்து 844 ஆகும்.

இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54ஆயிரத்து 606 ஆகும்.

முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 227 ஆகும் என புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 9 ஆயிரத்து 606 என அறிவித்துள்ளது.

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏! மக்களைக் கேடயமாக்காமல் மக்களுக்குக் கேடயமாக இருந்து போராடி வழிகாட்ட வேண்டும்.

-வடபுலத்தான்
suresh-Pவடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்ப மாகாணசபையின் அதிகாரம் யாருடைய கையில் உள்ளது? என்று கேட்கிறார்கள்.

அப்படியென்றால் என்னதான் சொல்கிறார்கள்?

உண்மையில் மாகாணசபையின் அதிகாரம் மக்களுடைய கைகளில்தான் இருக்க வேணும்.

மக்களுடைய கைகளில் அந்த அதிகாரம் இருந்தால்தான் எல்லோரும் பயப்படுவார்கள். காரியங்களும் ஒழுங்காக நடக்கும்.

மக்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்திருந்தால் இப்பொழுது விக்கினேஸ்வரனின் காதுக்குள் கம்பியை விட்டுக் கவர்னர் கிண்ட முடியாது.

சுரேசுக்கும் கொதிப்போ வருத்தமோ ஏற்பட்டிருக்காது.

ஆனால் தேர்தலின்போதும் தேர்தல் நடக்காமல் இருக்கின்ற போதும் அந்த அதிகாரத்தை மக்களிடமிருந்து பறித்தெடுத்து விடுகிறார்கள்.

பின்பு ஆளுக்காள் அடிபடுகிறார்கள்.

சட்டத்தையும் விதிமுறைகளையும் நம்புவதை விட மக்களை நம்புங்கள் மக்களுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள் என்றால் யாருமே கேட்கிறார்களில்லை.

மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றாலோ அல்லது முதல்வரின் அதிகாரங்களைக் கவர்னர் கொள்ளையடிக்கிறார் என்றாலோ அதற்கு மருந்து கொடுக்க வேண்டியவர்களே இப்படிக் குய்யோ முறையோ என்று கத்துவதும் குழறுவதும் பொருத்தமானதல்ல.

பதிலாக மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு இந்த அநீதி(?)களுக்கு எதிராகப் போராட வேண்டும்.

சில நாட்களுக்கு முன் சில போராட்டங்கள் நடந்தன.

பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூனும் சனல் 4 தொலைக்காட்சிக்காரர்களும் வருகிறார்கள் என்பதற்காக காணாமற்போனோரை ஏற்றிக் கொண்டு வந்து விட்டு ஒரு போராட்டம்.

அதேநேரத்தில் வலி வடக்கில் மீள்குடியேற்றத்தைக் கோரியும் நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஒரு உண்ணாவிரதம்.

கூலிக்கு மாரடிக்கிறதைப்போல இப்படி வெளியில் இருந்து யாராவது வந்தால் உடனே அவர்களுக்காக இப்படி ஒரு 'செற்றப் கேம்ஸ்' கணக்கில் திடீர்ப்போராட்டங்கள்.

வெளியாட்களின் விசுவாசிகளாக இருந்தால் அப்படித்தான் செய்யத்தோன்றும். அவர்களுக்குக் கணக்குக் காட்டுவதற்காக.

இப்படித்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திலிருந்து நவநீதம்பிள்ளை வரும்போதும் 'செற்றப் கேம்ஸ்'கள் நடந்தன.
ராஜவிசுவாசம் என்பது சாதாரணமானதல்ல. அது அடித்தனத்தை உணர வைப்பதில்லை.

ஆனால் என்னதான் கஸ்ரப்பட்டு அழகாகச் 'செற்றப் கேம்ஸ்'களைக் காட்டினாலும் வருகின்றவர்களுக்கு எல்லாம் தெரியும்.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அவர்கள் ஒண்டும் தெரியாதவர்களைப் போல நடிக்கிறார்கள் நடந்து கொள்கிறார்கள்.

சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவைக்கும் சிறிதரனுக்கும் சரவணபவனுக்கும் அரியநேத்திரனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும்தான் சர்வதேச அரசியலைப்பற்றி விளங்காதென்றால். சு. பிரேமச்சந்திரக்குமா அதைப்பற்றித் தெரியாமல் போய்விட்டது?

அல்லது பன்றியோடு திரியும் கன்றும் கழிவைத் தின்னும் என்ற மாதிரி தமிழரசுக்காரரின் பாணியிலேயே சு.பிரேமச்சந்திரனும் சிந்திக்கிறாரா? அல்லது தனக்கும் ஒன்றுமே தெரியாததைப்போல நாடகம் ஆடுகிறாரா?

எந்தப் பிரச்சினையென்றாலும் அந்தப் பிரச்சினைக்காக போராட வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு அறிக்கை விடுவதும் புலம்புவதும் நல்லதல்ல. அதில் பிரயோசனமும் இல்லை.

ஆனால் எடுத்தெற்கெல்லாம் மக்களைக் கண்ட பாட்டுக்கு அலைக்கழிக்கக் கூடாது.

தங்களுக்காக போராடுவார்கள் தங்களுக்கு நன்மைகளைச் செய்வார்கள் என்றே இவர்களுக்கு மக்கள் வாக்களித்து. வசதிகளையும் சலுகைகளையும் சம்பளத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஆனால் மக்களுக்கு அந்தச் சலுகைகளும் வருவாயும் சம்பளமும் கிடைப்பதில்லை.

ஆகவே மக்களின் பெயரால் மாகாணசபை உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள்தான் முதலில் போராட வேண்டும்.

மாகாணசபையின் அதிகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமல்ல அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவும் காணிகளை மீட்பதற்காகவும் என எல்லாத்துக்குமாகப் போராட வேண்டும்.

மக்களைக் கேடயமாக்காமல் மக்களுக்குக் கேடயமாக இருந்து போராடி வழிகாட்ட வேண்டும்.

vendredi 29 novembre 2013

வெளிநாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்த எமது விமானிகளுக்கு உத்தரவு!சீனா


புதிதாக அறிவித்துள்ள வான் பாதுகாப்பு எல்லைப் பகுதிக்குள் பறக்கும் எந்தவொரு வெளிநாட்டு விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் என இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. எந்த ஒரு நாடும் சாதாரணமாக விடுக்கும் அறிவிப்பு அல்லவா இது? இதில் வேறு ஏதாவது விசேஷம் உள்ளதா?
ஆம், உள்ளது. இவர்கள் குறிப்பிடும் பகுதி, கிழக்கு சீன கடலின் பெரும்பகுதிக்கு மேலே உள்ள வான்பகுதி. ஜப்பான் உரிமைகோரும் தீவு இருப்பதும் அங்குதான் என்பதே இந்த அறிவிப்பில் உள்ள விசேஷம்.
கடநத வாரம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் முதலாவது வான் பாதுகாப்பு எல்லைப் பகுதி (ADIZ – Air Defence Identification Zone) என இந்த வான்பகுதியை அறிவித்தது. இங்குள்ள தீவுப் பகுதி தம்முடையது என உரிமை கோரும் ஜப்பான், தமது விமானப்படையின் போர் விமானங்களை தீவின் மேலே பறப்பதற்கு அவ்வப்போது அனுப்புவது வழக்கம்.
சீனாவின் இந்த அறிவிப்பின் பின், ஜப்பானிய விமானங்கள் ‘தமது பகுதிக்குள்’ பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் விமானப்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குயேயோ லியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை ஜப்பான் மட்டுமல்ல, அமெரிக்காவும் மிக சீரியசாக எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
காரணம், அமெரிக்காவின் பசுபிக் தள போர்விமானங்கள், மற்றும் உளவு பார்க்கும் விமானங்கள் இந்தக் கடலின்மேல் பறப்பது வழக்கம். சில வருடங்களுக்கு முன், அமெரிக்க உளவு விமானம் ஒன்றை சீன போர் விமானங்கள் பலவந்தமாக தரையிறக்கிய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்போது, அமெரிக்க உளவு விமானம் பறந்துகொண்டிருந்த வான் பகுதியும், கிழக்கு சீன கடலின் மேலுள்ள பகுதிதான்!
சீனா தமது வான் பகுதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டபின், அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. நேற்று முன்தினம் தமது B-52 குண்டு வீச்சு விமானங்களை அந்த வான் பகுதியில் இப்படியும், அப்படியுமாக பறக்க விட்டுக்கொண்டு இருந்தார்கள்!
அமெரிக்க விமானங்கள் பறந்தபின் இன்று, மேஜர் ஜெனரல் குயேயோ லியாங் சீன அரசு வானொலிக்கு வழங்கிய பேட்டியில், “இந்த வான் பகுதியில் எந்தவொரு வெளிநாட்டு விமானம் பறப்பதை எமது போர் விமானிகள் கண்டாலும் சுட்டு வீழ்த்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானத்தை கண்டால் எமது விமானிகள், தரையில் இருந்து அனுமதி பெற வேண்டியதில்லை. உடனடியாக சுட்டு விடலாம்” என்றார்.
அடுத்த சில தினங்களுக்கு இந்த வான்பகுதியில் நடக்கக்கூடிய சம்பவங்கள், சில முறுகல்களை நிச்சயம் ஏற்படுத்ததான் போகின்றன.
இது ஒரு சுவாரசியமான விவகாரம். சற்று ஆழமாக தெரிந்துகொள்ள விரும்பினால், நாம் இணைத்துள்ள போட்டோக்களை பாருங்கள்.
1-வது போட்டோ, சீனா புதிதாக அறிவித்துள்ள வான் பகுதியை காட்டுகிறது. 2-வது போட்டோவில் உள்ளதுதான், ஜப்பான் உரிமைகோரும் தீவுகள். 3-வது போட்டோவில் அந்தப் பகுதியில் பறக்கும் போர் விமானங்கள். 4-வது போட்டோவில், தீவு அருகே வரும் சீன கப்பல்களை ஜப்பானியக் கப்பல் தண்ணீர் அபிஷேகம் செய்து துரத்துவதையும், 5-வது போட்டோவில், இரு ஜப்பானியக் கப்பல்கள், சீனக் கப்பலை சிறைப்பிடித்து இருப்பதையும் பாருங்கள்.

போராடி உயிர் நீத்த பிரபாகரன் என்றல்லவா பேசி தொலைத்திருக்கிறார் அந்த ஸ்ரீதரன் எம்.பி.!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என தமது கட்சி எம்.பி. கூறியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல” என்று தெரிவித்துள்ளார், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம் முடிந்தபின் தேர்தல் காலங்களில் மட்டும் விடுதலைப் புலிகளை சிலாகிப்பது இக் கட்சியின் சமீபகால வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், “எமது கட்சி எம்.பி., பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு உணர்ச்சி வசப்பட்டு கருத்து வெளியிட்டிருக்கக் கூடும். ஆனால், எமது கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல.
கடந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை (அடேங்கப்பா!).
எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படியான கருத்தை தெரிவிக்கப்போகிறார் என்று முன்கூட்டியே எமக்கு தெரியவந்திருந்தால், இப்படியான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னங்க இது?
தமிழகத்தில் பழ.நெடுமாறன் நேற்று, “அடுத்த யுத்தத்துக்கு தலைமை தாங்க வருகிறார் பிரபாகரன்” என்கிறார்.
இலங்கையில் பெரிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று, “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என்பது எமது கட்சியின் கருத்து அல்ல” என்கிறார்.
பழ.நெடுமாறன் அய்யாவுக்கு இந்த விவகாரத்தில் உள்ள பெரிய சிக்கல் என்ன தெரியுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் அதற்காக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதந்திர போராட்ட வீரர் என்று சொன்ன அக்கட்சியின் ஸ்ரீதரன் எம்.பி.க்கு பாராட்டு தெரிவிக்க முடியாது.
“போராடி உயிர் நீத்த பிரபாகரன்” என்றல்லவா பேசி தொலைத்திருக்கிறார் அந்த ஸ்ரீதரன் எம்.பி.!
இதைத்தான் ஆங்கிலத்தில் Triangle Trouble (முக்கோண சிக்கல்) என்பார்கள்! ஒரு காலத்தில் எப்படி இருந்த இயக்கமுங்க அது… ஹூம்!

mercredi 27 novembre 2013

சுட்டுக் கொலை; நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர்  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னலையில் நடத்தப்பட்டது.

இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
எனினும், பிடறி பகுதியில் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

37 பேர் சுட்டுக்கொலை நைஜீரியாவில்

நைஜீரியாவில் வடக்கு பகுதியில் முஸ்லிம்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்கள் புலானி மற்றும் பெரூம் இனம் என்றழைக்கப்படுகின்றனர்.பிளாட்டியூ மாகாணத்தில் இந்த இரு பிரிவினரும் சம அளவில் இருப்பதால் இங்கு அடிக்கடி மத கலவரம் நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பிளாட்டியூ மகாணத்தில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் 4 கிராமங்களில் ஒரு கும்பல் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 37 பேர் பலியாகினர்.
அவர்களில் கது கபாங் கிராமத்தில் 13 பேரும், டாரனில் 8 பேரும், துல்கிராமத்தில் 9 பேரும், ராவுருவில் 7 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெரூம் இனத்தை சேர்ந்தவர்கள்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புலானி இனத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரியில் ஆரம்பமாகும் வட அதிவேக நெடுஞ்சாலை

குருநாகல், தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களை கொழும்புடன் இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கு பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகுமென அமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

இந்த நெடுஞ்சாலை சீனாவின் நிதி உதவியுடன் மூன்று கட்;டங்களில் அமைக்கப்படுமென்றும் அவர் கூறினார். முதல் கட்டத்தில் கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை எதரமுல்லை, மீரிகம ஊடாக குருநாகலுடன் தொடுக்கப்படும், பின்னர் இது கண்டி, கட்டுகஸ்தோட்டைவரை கொண்டு செல்லப்படும்.இறுதிக்கட்டத்தில் இது தம்புள்ளையுடன் இணையும்.
தென் அதிவேக நெடுஞ்சாலை காலியிலிருந்து மாத்தறைவரை நீடிக்கப்படுவதுடன் இந்த நெடுஞ்சாலை ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த வீதி திறக்கப்படும் தினத்தில் நாம் இந்த வீதியை ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லும் வேலையை தொடங்குவோமென செயத்திட்ட அமைச்சர் கொத்தலாவல கூறினார்.

தமிழ்த் தலைவர்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்த பிரபாகரனை விடுதலைப் போராளியென சித்தரிக்க வேண்டாம்!

அரசியல் நோக்கில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படவில்லை. 109 வருடங்களின் பின்னர் ஜனநாயகத்தை அனுபவிக்கும் அவகாசத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் தலைவர்களையும் வட பகுதி மக்களையும் கொலைசெய்த பிரபாகரனை சுதந்திர போராளி என்று விபரிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது :- பிரபாகரனை சுதந்திர போராளி எனவும் வீரர் எனவும் குறிப்பிட்ட ஸ்ரீதரன் எம். பி., பிரபாகரன் பயங்கர வாதியல்ல என்றும் சபையில் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் இவ்வாறு கூறுவதன் மூலம் வடக்கில் ஏன் இன்னும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சரியான பதில் கிடைக்கும். தமிழ் தலைவர்களை கொலைசெய்த ஒருவரை ஸ்ரீதரன் எம்.பி. தேசிய தலைவராக விபரிக்கிறார். இந்த நிலையில் வடக்கில் இராணுவத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
வடக்கில் மீள்குடியேற்றமோ எதுவித அபிவிருத்தியோ இடம்பெறவில்லை என்று ஸ்ரீதரன் எம்.பி. வாய்கூசாமல் கூறுவதை ஏற்க முடியாது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மக்கள் எங்கே என அவர் கேள்வி எழுப்பினார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை பிரபாகரன் தடுத்து நிறுத்த முற்பட்டார். அதனையும் மீறிச் சென்றவர்களை பிரபாகரனின் ஆட்கள் சுட்டனர். பிரபாகரனின் சகாக்களின் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்பிய இளைஞர் ஒருவரே பிரபாகரன் இருக்குமிடத்தை கூறினார்.
வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை சுட்டுக்கொன்றது குறித்து பிரபாகரனிடமே கேட்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாண சபை 6 மாதங்களே இயங்கியது. மாகாண சபை முறையை பிரபாகரன் எதிர்த்தார். பிரேமதாஸ புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து போசித்தார்.
1905 முதல் 109 வருடங்களாக மக்கள் பெற்றிராத ஜனநாயகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயிலான எமது அரசாங்கமே வழங்கியது. வட பகுதி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பர் என்று தெரிந்தும் வட மாகாண சபைத் தேர்தலை நாம் நடத்தினோம். ஒரு கள்ள வாக்காவது இத்தேர்தலில் இடப்படவில்லை.
வட பகுதி மக்களின் நகை நட்டுக்களை பிரபாகரன் பறித்துச் செல்லவில்லையா? கப்பம் பெறவில்லையா? சிறுபிள்ளைகளை கடத்தி படையில் இணைக்கவில்லையா? இவரைத் தானா சுதந்திரத்திற்கான போராளி என்கிaர்கள்.
109 வருடங்களின் பின்னர் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை அனுபவிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்ததை மறந்து பேசாதீர்கள்.
பல்கலைக்கழக மாணவர்களை பிரபாகரன் கடத்திச் சென்று கொன்றார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் வட பகுதி மாணவர்களுக்கு நன்மை ஏற்படவில்லையா? இதற்கு இராணுவமே பங்களித்தது.
நாம் அனைவரும் இலங்கையர் என்பதை உணர்ந்து செயற்பட பழக வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் நிலை உருவாக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம். எனவே இனவாதத்தை தூண்ட வேண்டாமென கோருகிறேன்.
கிளிநொச்சியில் சிங்கள பாடசாலையொன்று முன்னர் இருந்தது. அங்கிருந்த சிங்கள மக்கள் மீள கிளிநொச்சிக்கு செல்லவில்லை.
எனவே சர்வதேச சமூகத்துக்காக தவறான பிரசாரம் செய்யாதீர்கள்.
வடக்கில் மக்களின் சனத்தொகை பெருமளவு குறைந்தது. இன விகிதாசார அடிப்படையிலே பல்கலைக்கழக கோட்டா வழங்கப்படுகிறது. சனத்தொகை கணிப்பீட்டின் மூலம் வடக்கில் சனத்தொகை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழக கோட்டாவும் குறைந்தது. எதிர்காலத்தில் வடக்கில் பாராளுமன்ற தெரிவும் குறைவடையும். அரசியல் நோக்கத்தில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாவது குறைக்கப் படவில்லை. நாம் இனவாத ரீதியில் செயற்பட்டால் யாழ். பல்கலைக் கழகத்தையோ கிழக்கு பல்கலைக்கழகத்தை யோ முன்னேற்றியிருக்க மாட்டோம்.
பிரேமதாஸ, லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்களை புலிகள் கொன்றதைப் பற்றி இல்லாமல் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களை கொன்றதைப் பற்றியே பேசுகிறோம்.
எனவே, வட பகுதி தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று கோருகிறேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரேஇனமாக ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் விரும்புகிறது.

mardi 26 novembre 2013

புலிகளை அழிப்பது மட்டுமல்ல ஏனைய தமிழ் இயக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது: கோட்டபாய ராஜபக்ஷ!

விடுதலை புலிகள் இயக்கத்தை மட்டும் தடை செய்வதோ அழிப்பது மட்டுமல்ல. அரசிற்கு எதிராக ஆயுதம் தூக்கிய ஏனைய தமிழ் இயக்கங்களான புளொட், ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசிற்கு இருந்தது என்று பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

dimanche 24 novembre 2013

ஆயுதங்கள் இலங்கைக்கு விற்பனை செய்தமை குறித்து கமரூன் விளக்கமளிக்க வேண்டும்

இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயந்திரத் துப்பாக்கிகளும் ஏனைய துப்பாக்கிகளையும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய ஏன் பிரித்தானிய அரசாங்கம் அனுமதியளித்தது என்பது குறிப்பிடப்பட வேண்டுமென ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் சேர் ஜோன் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.எட்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து ஆயுதங்களும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியுள்ளன. ஆயுத விற்பனை தொடர்பில் பிரதமரும் அமைச்சர்களும் விளக்கம் அளிக்க வேண்டுமென சேர் ஜோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வெறெனினும், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளுக்காக பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பூரண ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

samedi 23 novembre 2013

உங்கள் கடைகள் வீடுகள் அனைத்துவிதமான உள்புற வெளிப்புற வேலைகளுக்கும் IPTS மரம்.இரும்பு.அலுமினியம்.வெளிப்புற போட்.கர்லாஸ் .பாக்கை.பிளக்கோ.பெயின்ட்.கிச்சின்பிற்றிங்.வயறிங். காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து தர IPTS தொடர்புகளுக்கு வரதன் 033751267075/0033651267075/ E-mail ;contact@ipts.fr /2.rue georges politzer 93120 la courneuve

உங்கள் கடைகள் வீடுகள் அனைத்துவிதமான  உள்புற வெளிப்புற   வேலைகளுக்கும் IPTS    மரம்.இரும்பு.அலுமினியம்.வெளிப்புற போட்.கர்லாஸ் .பாக்கை.பிளக்கோ.பெயின்ட்.கிச்சின்பிற்றிங்.வயறிங். காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து  தர IPTS தொடர்புகளுக்கு வரதன் 033751267075/0033651267075/ E-mail ;contact@ipts.fr  /2.rue georges politzer 93120 la courneuve   

உங்கள் கண்களை பாதுகாக்க காது குத்துங்க!!!!

‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன எங்களுக்கே காது குத்துகிறீர்களா? ’’ என்று கேட்காதீர்கள் எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும் ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். 

இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கின்றார்.

இவர்களது இந்த முடிவை தைவான் மருத்துவக் குழுவும் உறுதி செய்துள்ளது. 

காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம் மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். 

ஆகவே,உங்கள் கண்களை பாதுகாக்க காது குத்துங்க!!!!

நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு, மும்பைக்கு இரு போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன்!

ஈரானிய கடற்படையின் 28-வது படைப்பிரிவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஆசிய கடல் பகுதிக்கு வருவதற்காக கிளம்பியுள்ளது. இரு போர்க் கப்பல்களின் பாதுகாப்புடன் வந்துகொண்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவின் மும்பை, இலங்கையின் கொழும்பு துறைமுகங்களுக்கு வரும் என ஈரானிய அரசு செய்திச்சேவை ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய கடற்படையின் யூனுஸ் என்ற எடை கூடிய தாரிக் ரக நீர்மூழ்கிக் கப்பல் (ultra-heavy Tareq-class submarine) எதற்காக ஆசியாவரை வருகிறது என்பதற்கு சரியான விளக்கம் சொல்லப்படவில்லை.
ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சிக்கு தகவல் தெரிவித்த ஈரானிய கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் அட்மிரல் சியாவாஷ் ஜரே, ஆசியா செல்லும் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்புக்காக அல்போர்ஸ், பந்தர் அப்பாஸ் ஆகிய இரு போர்க்கப்பல்களும் செல்கின்றன என குறிப்பிட்டார்.
ஈரானிய கடற்படை குறிப்புகளில் இருந்து, அல்போர்ஸ் கப்பல், நாசகாரி ரக (destroyer) போர்க்கப்பல். பந்தர் அப்பாஸ், ஹெலிகாப்டர் தாங்கி போர்க்கப்பல் (helicopter-carrier warship).
இந்த மூன்று கப்பல்களும் இரு தினங்களுக்கு முன் (புதன்கிழமை) பெயர் குறிப்பிடப்படாத ஈரானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.
பொதுவாக போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுவதே வழக்கம். இங்கு தலைகீழாக, நீர்மூழ்கி கப்பலுக்கு பாதுகாப்பாக போர்க்கப்பல்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் முறுகல் நிலையில் உள்ள ஈரான், தமது முக்கிய கப்பல்களை எதற்காக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் அனுப்புகின்றன என்பது புரியவில்லை. ஈரானிய கடற்படையின் அதிமுக்கிய பயணம் (“crucially important extraterritorial mission of the Iranian Navy”) என்கிறார், அட்மிரல் சியாவாஷ் ஜரே.
‘அதிமுக்கிய’ விஷயம் என்னவென்று அமெரிக்காவிடம்தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது!

jeudi 21 novembre 2013

பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது?

பிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது? 

அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? 

உடலங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பவை யாவும் தெரிந்த ஒரே ஒரு நபர்ரும் இவை அனைத்துக்கும் உடந்தையாகவிருந்த குற்றவாளியுமே ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன். 


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, யுத்த குற்றங்களை முன்வைத்து மெல்போர்ன் நீதிமன்றத்தில் அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையொருவர் வழக்கு தாக்கல் செய்த சம்பவத்தை சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளும், ஏ.பி.சி. தொலைக்காட்சியும் மேற்கோள்காட்டி, செய்திகளை வெளியிட்டுள்ளன. 

இங்கு அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையாக அருணாசலம் ஜெகதீஸ்வரன் காணப்படுகின்றார். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை, தான் கண்டதாக இவர், தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட போர் காலத்தில் வன்னியில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் தொண்டராக அருணாசலம் ஜெகதீஸ்வரன் கடமையாற்றினார் என்றும் தனது வழக்கு தாக்கல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் இவர் பற்றிய பின்னணி, இவர் ஒரு பயங்கர வாதி என்பதை சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கின்றது. ஜெகன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அருணாசலம் ஜெகதீஸ்வரன், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு முக்கிய எல்ரிரிஈ உறுப்பினராக செயற்பாட்டு பின்நாட்களில் வன்னி வந்து பிரபாகரனுடனின் பயங்கரவாத செயல்களுடன் தன்னை நேரடியாக இணைத்துக்கொண்டவர். 

அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒருங்கமைப்பு குழுவின் சிட்னி கிளைக்கான முன்னாள் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். ரி.சி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ் ஒருங்கமைப்பு குழுவானது, எல்ரிரிஈ இயக்கத்தின் முன்னணி ஆதரவு நிருவகமாக இருந்து வந்துள்ளது. 

இந்த குழுவினூடாக அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டி, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்கிய இந்த குழுவின் சில முக்கிய அங்கத்தவர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு, அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர். 

தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் நிதியை முகாமைத்துவப்படுத்தும் ரஜீவன் எனும் கணக்காளர் தீய நோக்கத்துடன் பயங்கரவாத நிறுவனத்தின் அங்கத்தவராக செயற்பட்டமை, எல்ரிரிஈ பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு மற்றும் வளங்களை வழங்கியமை மற்றும் அந்த இயக்கத்திற்காக சொத்துகளை சேகரித்துக்கொடுத்தமை போன்ற காரணங்களுக்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால், குற்றம் சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர், இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் லண்டன் நகரில் பிரித்தானிய எல்ரிரிஈ வலயமைப்பில் முக்கிய நபராக செயற்பட்டு, எல்ரிரிஈ யினருக்கு பல உதவிகளை வழங்கிய காரணத்திற்காக, இரண்டு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்ட அருணாசலம் கிறிஷாந்த குமார் (சாந்தன்) என்பவர், ஜெகனின் இளைய சகோதரராவார். 
 
அரசாங்கத்திற்கும், எல்ரிரிஈ யிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதும், எல்ரிரிஈ யினர் சர்வதேச ரீதியாக செயற்பட்டு வந்த முக்கிய எல்ரிரிஈ உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்தனர். வன்னிக்கு அழைக்கப்பட்ட எல்ரிரிஈ செயற்பாட்டாளர்களில் ஒருவரே, இந்த ஜெகன் ஆவார். 

இலங்கை ராணுவம் கிளிநொச்சி நோக்கி நகர்வுகளை மேற்கொண்ட போது, வன்னி பிரதேசத்தில் தங்கியிருந்த தொண்டுநிறுவனங்களை வெளியேறுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சகல தொண்டு நிறுவனங்களும் வெளியேறின, ஆனால் ஜெகன் புலிகளின் தலைமையுடன் இணைந்திருந்து புலித்தலைமைக்கு தேவையான உதவிகளை செய்ததாக படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றுவெளியேறியுள்ள முன்னாள் புலிகள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் வன்னியிலிருந்து மக்கள் புலிகளை நிராகரித்து வெளியேறியபோது அம்மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர், அவ்வாறன சந்தர்பங்களில் முன்னணியில் நின்று வெளியேறும் மக்களுக்கு தீங்குகளை இவர் செய்ததாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் எனும் உலக பயங்கரவாதிக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெகன் எனப்படுகின்ற அருணாச்சலம் ஜெகதீஸ்வரன், இறுதி நாட்களில் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததாகவும், பிரபாகரனின் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு இவரிடமே வழங்கப்பட்டிருந்தாகவும், பிரபாகரனின் பெற்றோரை பத்திரமாக அழைத்துவந்து இராணுவத்தினரிடம் இவரே ஒப்படைத்தாகவும் தெரியவருகின்றது. வன்னியில் ஆயிரக்கணக்கான புலிகள் இருந்தும் பிரபாகரன் தனது பெற்றோரை இவரிடம் ஒப்படைத்திருக்கின்றார் என்றால் ஜெகனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான நெருக்கத்தை எடைபோட வேறு எந்த மானியும் தேவைப்படாது. 

மேலும் வன்னியில் புலிகளின் இராணுவத்தளங்களுக்கான கட்டவேலைகள் உட்பட பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் மாளிகை மற்றும் நீச்சல் தாடாகங்கள் என்பன ஜெகனாலேயே வடிவமைக்கப்பட்டதாகவும், வன்னியில் இவரது உதவியாளராக செயற்பட்ட ஒருவர் தெரிவிக்கின்றார். 

இதில் மிக முக்கியமான விடயம் யாதெனில் பிரபாகரனுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு பங்கர்கள், நிலக்கீழ் பாதுகாப்பு மாளிகை மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை கட்டுவதற்கு சிறைக்கைதிகளும் சில போராளிகளும் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் இத்தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இப்படுபாதக கொலையின் பின்னணியில் ஜெகனே உள்ளதாகவும் மேற்படி வேலைகள் முடிந்தபின்னர் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் என்ற முன்மொழிவை பிரபாகரனுக்கு ஜெகனே முன்வைத்திருந்தாகவும் மேற்படி அவரது உதவியாளர் தெரிவிக்கின்றார். 

இவ்வாறு ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு நேரடிப்பொறுப்பாளியாக குற்றஞ்சுமத்தப்படக்கூடிய ஜெகன் இடைத்தங்கல் முகாமிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பது மிகவிரைவில் வெளிப்படுத்தப்படும். 

அவை வெளிப்படுத்தப்படும்போது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எவ்வாறு பயங்கரவாதிகளையும் கொலைக்குற்றவாளிகளையும் பாதுகாக்கின்றது என்ற விடயங்கள் அம்பலமாகும். 

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து அரசுக்கு எதிராக செயற்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றுடன் இணைந்து செயற்பட்டமை, பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும். 

ஜெகனின் பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளுக்கு, அவுஸ்திரேலிய ஊடகம் முன்னுரிமை வழங்கி வருகிறது. 

வன்னியில் புலிகளின் அவலங்களை காட்டி புலம்பெயர் நாடுகளில் வசூலிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி ஜெகனின் குடும்ப அங்கத்தவர்கள் கைகளில் உள்ளது. புலிகளால் சிதைக்கப்பட்ட வன்னியில் உள்ள குடிமனைகள் அரச கட்டிடங்கள், சமய ஸ்தலங்கள் எனபவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு இவர்களிடமுள்ள பணமும் சொத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்குகள் தொரப்படுவேண்டும்.

முழுப் பைத்தியக்காரன்கூட அப்படிச் சொல்ல மாட்டான்.இணையத் தள செய்திகளுக்கு கட்டுப்பாடு அவசியம்!- வீ. ஆனந்தசங்கரி


a.sangary8விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிப் போரில் புலிகள்தான் அப்பாவி மக்களை கொன்றார்கள் என்றும், அரச படைகள் கொலைகளில் சம்பந்தப்படவில்லை என்றும் நான் கூறியதாக சில இணைய ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும். புதுரக ஆயுதங்களை வைத்து இருசாராரும் கடும் சமர்புரியும்போது ஒரு சாரார் மக்களைக் கொன்றார்கள் என்றும் மறுபகுதியினர் கைகட்டி நின்றார்கள் என்றும் கூறுவதற்கு நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல. ஏன் முழுப் பைத்தியக்காரன்கூட அப்படிச் சொல்ல மாட்டான். இது சம்பந்தமாக நான் யாருக்கும் பேட்டி கொடுத்ததும் கிடையாது.
கொழும்பில் மாநாடு நடந்துகொண்டிருந்த வேளை எனக்கே உரித்தான கடமையுணர்வோடு சில பத்திரங்களைத் தயாரித்து மகாநாட்டுக்கு வருகைதந்த தலைவர்களுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன். இம்மாதம் 12ஆம் திகதி மகாநாட்டுக்கு வருகைதந்த பல்வேறு நாட்டுதலைவர்களுக்கு நாட்டுநிலைமையை விளக்கியும் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 53 நாட்டுத் தலைவர்கள் மீண்டும் கூடுவது 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் சார்க் மாநாட்டின்போது தவறவிட்ட சந்தர்ப்பத்தைப்போல் அல்லாமல் அம்மாநாடு  7 நாட்டு தலைவர்கள். இப்போது வந்திருப்பது 53 நாடுகளின் தலைவர்களும், முக்கிய பிரதிநிதிகளும் எனவும் இந்தியாவையும், கனடாவையும் உள்ளடக்கி இம்மாநாடு நடைபெற உதவுமாறும் கேட்டிருந்தேன்.
அதன்பின் 14.11.2013 தேதியிட்டு சகல பிரதிநிதிகளுக்கும் நாட்டு நிலைமையை விளக்கி வேறு ஒரு கடிதம் எழுதி, அத்துடன் என்னால் ஜனாதிபதிக்கு 4.3.2013, 21.2.2013, 9.11.2012, 17.04.2012 ஆகிய திகதிகளில் அனுப்பிய கடிதங்களுடன் பொருத்தமாக 23.01.2013, 19.07.2012 ஆகிய திகதிகளில் கொடுக்கப்பட்ட இரு அறிக்கைகள் உள்ளடக்கி மொத்தாக 9 ஆவணங்களையும் அனுப்பியிருந்தேன். இந்த நாட்களில் நடந்த கவன ஈர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் போனதற்கு இதுவே காரணமாகும். காலத்திற்குக் காலம் சில இணையத்தளங்களும், ஊடகங்களும் என்னைப்பற்றி வசை பாடுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிகழ்வும் அதைப்போல ஒன்றுதான். தேவையிருக்கின்ற சிலர் இப்படிச் செய்கிறார்கள். அரசு போட்டாலென்ன ஆண்டவன் போட்டாலென்ன செய்தியைப் போட்டவர்கள் போடுவதற்கு முன் எனது வயதையும் அனுபவத்தையும் இன ஒற்றுமையையும் கவனத்திலெடுத்து ஒரு சொல் கேட்டுவிட்டுப் போட்டிருக்கலாம். இககூட்டை யார் குழப்பகிறார்கள் ஏன் குழப்புகிறார்கள் என்று ஊகித்துக்கொண்டு செய்தியை பிரசுரிக்காது விட்டிருக்கலாம். மூன்று வருடங்களாக நான் படும் அவமானத்திற்கு விரைவில் ஓர் முடிவு வரவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்!.
பொதுநலவாய மாநாட்டை உரிய முறையில் எமது பிரச்சனைகள் அனைத்தையும் தழுவக்கூடிய வகையில் நாம் செயற்படத் தவறிவிட்டோம் என்ற கவலை எனக்குண்டு. இனிமேலும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவதை கவனத்திலெடுக்க வேண்டும். தலைவர்களுக்கு கொடுத்த ஆவணங்களோடு 16ஆந்திகதி டேவிட் கமரோனுக்கும், நம்நாட்டு ஜனாதிபதிக்கும் அவசர அவசரமாக எழுதிய கடிதங்களையும் கூடிய விரைவில் வெளியிட உள்ளேன்.
இணையத்தளங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கிய பங்கினை வகிக்கின்றன. சிலர் இதை முறையற்ற விதத்தில் தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு இதுதான் வாழ்வாதாரம். சிலருக்கு பொழுதுபோக்கு! சிலருக்கு வரைவிலக்கணமின்றி எல்லோர் தலையிலும் குட்டிப் பார்ப்பது! சிலர் இவற்றை உபயோகித்து சிலரை தூக்கி வைப்பதும், வேறு சிலரை காலில் போட்டு மிதிப்பதும் வழக்கமாகிவிட்டது. சுய மகிழ்ச்சிக்காக ஒருவர் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்களை துன்பப்படுத்துவது நியாயமற்றதாகும். மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மமாகும்,

mercredi 20 novembre 2013

லைக்காமொபைல் நிறுவனத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளை உடனடியாக விசரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட கமெரூன் தெரிவிப்பு

லைக்காமொபைல் நிறுவனத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளை உடனடியாக விசரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட கமெரூன் தெரிவித்துளார்.
பிரித்தானிய அரசிற்கு வரிகள் செலுத்தாது வரி மோசடிகள் செய்ததோடு அதனை ஈடுகட்டகோரி கட்சிக்கு £420000 கையூட்டை நன்கொடை என்று வழங்கியதையும் உடளடியாக விசாரிக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ஆணையிட்டுள்ளார்.
Huffington post பத்திரிகையக்குச் செவ்வி வழங்கிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் டொம் பிளெங்கின்சொப் “பிரதமர் தனது கட்சி £420000 பணத்தை இராஜபக்ச அரசுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள லைக்காமொபைல் வழங்கி உள்ளது.
இருப்பினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சிறீலங்காவிற்குச் செல்வதைத் தவிர்த்திருந்தனர். இதையெல்லாம் தாண்டிப் பிரதமர் உடனடியான விசாரணைகளை லைக்காமொபைல் மீது மேற்கொள்ள வேண்டும்” எனத் தொரிவித்தள்ளார்.
லைக்கா குழுமத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளும் இராஜபக்ச குடுமபத்தினருடனான பணப்பரிமாற்றமும் பிரித்தானிய அரசால் வெளிக்கொணரப்படுமா?

mardi 19 novembre 2013

இலங்கை விஜயம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் பிரதமர் டேவிட் கமரோன்!

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதிரடி

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப் போவதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், பொதுநலவாய செயலகத்தின் மனிதஉரிமை பிரிவின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் டிசெம்பர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே முதலில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதனையே பொதுநலவாயம் நம்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் தேசிய ரீதியிலான விசாரணைகளை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா திடீர் வலியுறுத்தல்,இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை அதன் நட்பு நாடான சீனா திடீரென்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கைப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்திய நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சீனா உறுப்பு நாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தெரிகிறது.
"இலங்கைப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சர்வதேச விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கின் கெங் கூறியதாவது:
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என்று கின் கெங் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளை மீறிய இலங்கையை கண்டிக்கக் கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சீனா வாக்களித்தது. அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இலங்கை போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானம் கொண்டு வந்தால், ஆணையத்தில் உறுப்பு நாடான சீனா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சீனா நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் போர் குற்றங்களை வெளிப்படுத்தும் சனல் 4 காணொளிகள் உண்மையானவை-தயான் ஜயதிலக

இலங்கை அரசின் போர் குற்றங்களை வெளிப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் காணொலிகள் உண்மையானவை என போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசை பிரதிநிதித்துவம் செய்த முக்கிய ராஜதந்திரி ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் ஒளிப்பரப்பிய போரின் இறுதிக்கட்டத்தில் அரச படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமை பயங்கரமான குற்றச் செயல் என தயான் ஜயதிலக கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தாது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றிய தயான் ஜயதிலக்க இந்திய ஊடகம் ஒன்றிடம் நேற்று முன்தினம் இதனை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்வது இலங்கை இராணுவத்தின் கொள்கை அல்ல. இந்த கொலைகள் சில இராணுவத்தினர் அல்லது சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
இப்படியான செயல்கள் போர் குற்றங்கள் என்று கருதப்படும் என்ற காரணத்தினால், கைது செய்யப்பட்ட எதிரிகளை கொலை செய்யும் கொள்கைகளை உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்த இராணுவமும் கொண்டிருப்பதில்லை.
இவ்வாறான குற்றச் செயலுக்கு கட்டளையிட்ட மற்றும் அதனை செயற்படுத்திய படையினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனனயை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.
உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். பங்களாதேஷ், கம்போடியா, கௌதமாலா, அர்ஜன்டீனா போன்ற நாடுகளில் நடைபெற்றது போன்று பல வருடங்களின் பின்னராவது நியாயம் கிடைக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பின் உப தலைவராக கருணாரத்ன ஹங்கவத்த தெரிவு

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக இலங்கை பிரதிநிதி பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 37 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது அவர் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரின்போது பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த உரையாற்றியுள்ளார்.

dimanche 17 novembre 2013

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என ஐ.நா சபை ஆய்வில் கணிப்பீடு

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசியாவை சேர்ந்த வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, இலங்கை என 6 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
சிறுமியை பலாத்காரம் அதிக போதையில் அல்லது அதிகமாக குடித்திருக்கும்போது, ஒரு பெண் அல்லது சிறுமி, அவள் விரும்புகிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிவிக்க இயலாத நிலையில், நீங்கள் செக்சில் ஈடுபட்டதுண்டா? என மற்றொரு கேள்வி இருந்தது. இக்கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில், பப்புவா நியூ கினியாவை சேர்ந்த 10ல் 6 பேர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை செக்சிற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இது வங்காளதேசத்தின் நகர்ப்புறங்களில் மிக குறைந்த அளவாக 10ல் ஒருவருக்கும் கீழ் என்றும் இலங்கையில் 10ல் ஒருவருக்கு மேல் என்றும் உள்ளனர். அதுவே, கம்போடியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் 5ல் ஒருவர் என்ற அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆய்வில் 24 சதவீதத்தினர் நெருங்கிய உறவுகளை பலாத்காரமாக ஈடுபடுவதாகவும், இது வங்காளதேசத்தில் 13 சதவீதமாகவும் மற்றும் பப்புவா நியூ கினியாவில் 59 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நெருங்கிய உறவுகள் என கருதப்படும் மனைவி மற்றும் பெண் தோழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 4ல் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.    நன்றி - தமிழ்சி

புலிகள் ஒரு சிறந்த விடுதலைப் போராளிள் என்றால், கடைசிக்கட்ட போரில் மக்களை விடுவித்துவிட்டு.. அவர்கள் போராடி மடிந்திருக்க வேண்டும் –கருணா அம்மான் (“பேட்டி”- வீடியோ இணைப்பு)

புலிகள் ஒரு சிறந்த விடுதலைப் போராளிள் என்றால், கடைசிக்கட்ட போரில் மக்களை விடுவித்துவிட்டு.. அவர்கள் போராடி மடிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களையும் அழித்து, தாங்களும் அழிந்தார்கள். இவர்கள் வரலாற்றில் பதியப்பட மாட்டார்கள் 

கிளிநொச்சி தனி மாவட்டமாக மாற நான்தான் காரணம்;வீ. ஆனந்தசங்கரி

  • கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நீங்கள் தோல்வியைத் தழுவ அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் காரணம் எனக் கூறி வருகிறீர்கள். எதனை வைத்து அப்படிக் கூறுகிறீர்கள்?
v.a.sangaryஆம், அவர்கள் எனக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். என்னை ஏதோ எதிராளி போல நடத்தினர். ஒரே அணியில் போட்டியிடுகிறோம் எனத் துளியளவும் எண்ணவில்லை. என்னைத் தோற்கடிப்பதிலேயே குறியாக இருந்தனர். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். இவற்றைக் கண்ணால் பார்த்துக் காதால் கேட்டவன் நான். சிரேஸ்ட அரசியல்வாதியான என்னை நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் புறக்கணித்தனர்.
  • இவ்வாறு அவர்கள் செய்ய நிச்சயம் ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும். அது என்ன என்று ஆராய்ந்து பார்க்க நீங்கள் முனையவில்லையா?
அதுதான் எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அனைவருமே நேரில் காணும்போது என்னுடன் தேன் ஒழுக அன்பாகவும், மரியாதை தரும் விதத்திலும் கதைப்பார்கள். மறைவில் இந்த மாதிரியான செயலையே செய்தனர்.
  • தமிழ்க் கூட்டமைப்பினரை விடுங்கள். கிளிநொச்சி தனி மாவட்டமாக மாறத் தாங்களே காரணம். அதனால் அன்று முதல் தங்களுக்கு அங்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. அப்படியிருந்தும் மக்கள் நிராகரிக்கக் காரணம் என்ன?
நீங்கள் கூறியது உண்மையே. முன்னர் கிளிநொச்சியில் இருந்தவர்கள் இருந்திருந்தால் நீங்கள் சொன்னது போல எனக்கே வெற்றி. ஆனால் இப்போது உள்ள பலருக்கும் கிளிநொச்சி தனி மாவட்டமாக மாற நான்தான் காரணம் என்பது தெரியாது. பிரபாகரனே காரணம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள். அதனால் மக்கள் செல்வாக்கு என்பதை விடவும் பிரசாரமே இம்முறை அங்கு முக்கியமானதாக இருந்தது. அதனை அங்குள்ள தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எனக்கு எதிராகச் செய்தார்.
  • நீங்கள் மறைமுகமாகக் கூறுவது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனையா அல்லது வேறு எவரையாவதா?
ஆம், அவர்தான். அதே சிறிதரன்தான். முழுக்காரணமும். மறைமுகமாகக் கூறவில்லை. நேரடியாகவே கூறினேன். அவர் தன்னை நிகழ்காலப் பிரபாகரன் என நினைத்துக் கொண்டிருக்கிறார். வன்னிக்குத் தான்தான் தலைவர் என்ற இறுமாப்பில் செயற்பட்டு வருகிறார். ஆனால் எம். பி பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் பல விளையாட்டு;க்கள் எனக்கு மட்டுமல்ல கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும்.
  • அது என்ன விளையாட்டுக்கள் என்பதை எங்களுக்கும் சொல்லுங்களேன்?
அவற்றை வெளிப்படையாகச் சொன்னால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும். அவரைப் போன்று என்னைத் தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால்சரியான தருணம் வரும்போது அதனை நிச்சயம் போட்டுடைப்பேன்.
  • பிரசார வேளையில் ஒரே அணியில் போட்டியிடும் உங்களுக்கு எதிராக அவர் செயற்பட்டபோது அதனைத் தெரிந்து கொண்ட நீங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் முறையிட்டிருக்கலாமே?
இந்த விடயத்தில் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். யாரை யாரிடம் போய் முறையிடுவது. தமிழரசுக் கட்சிக் காரர்களிடம் ஒரு குணம் இருந்தது. அதாவது தங்களது கட்சி வேட்பாளர்களைத் தவிர ஏனைய கூட்டுக் கட்சியிலிருந்து எவரும் வெற்றி பெறக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். அதனால் அவ்வேளையில் எதனைக் கூறினாலும் எடுபட்டிருக்காது.
  • ஆனாலும் ரெலோ சிவாஜpலிங்கம், புளொட் சித்தார்த்தன், ஈ.பி.ஆர். எல். எப். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரன் சர்வேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனரே?
அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடைய+றுகளை ஏற்படுத்தினர். எனினும் அவர்கள் தமது முன்னாள் எம். பி பதவிகளை வைத்தும், சுரேஸ் தனது இந்நாள் பதவியை வைத்தும் ஒருவாறு வென்றுவிட்டனர். வென்ற பின்னர் அமைச்சர் பதவிகளைக் காட்டி அவர்களைத் தமிழரசுக் கட்சியினர் பிரித்துக் கூறு போட்டு விட்டனரே. இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றனர். உள்ளே பகை வெளியே நடிப்பான நட்பு என்பதாகப் பழகி வருகின்றனர்.
  • அமைச்சுப் பதவிகள் விடயத்தில் அவற்றை முழுமையாகக் கையாண்டது முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றுதானே கூறுகிறார்கள். அப்படியிருக்க நீங்கள் தமிழரசுக் கட்சியினரைக் குற்றம் சாட்டுகிறீர்களே?
அவ்வாறுதான் மக்களும் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் நம்பும்படியாக உங்களை ஏமாற்றியுள்ளார்கள். அதுவல்ல உண்மை. தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜh, சுமந்திரன் ஆகியோரின் கருத்துக்களையே முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைக்கிறார். முடிவெடுப்பது, தீர்மானிப்பது, அமுல்படுத்தவது எல்லாமே சம்பந்தனும், மாவையும், சுமந்திரனும்தான். முதலைமச்சர் பொம்மையாகவே உள்ளார். இது பலருக்கும் தெரியாத விடயம். ஆனால் அதுவே உண்மையான விடயம்.
  • அப்படியானால் முதலமைச்சர் திறமையில்லாதவர் என்று கூற வருகிறீர்களா?
அப்படி நான் கூறவில்லை. அவர் திறமையானவர். நீதியரசராக இருந்தவர். உண்மையில் கட்சியை விடவும் அவருக்காக தனிப்பட்ட முறையில் கிடைத்த வாக்குகளே அதிகம். அரசியல் அனுபவம் இல்லாவிடினும் ஆளுமை அவரிடம் உள்ளதாக நான் நம்புகிறேன். அதனால் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமைக்கும், அடுத்த தலைமைப் பதவிக் கனவில் இருப்போருக்கும் அதிருப்தியுடன் ஒருவிதமான மனப்பயமும் உள்ளது. அதனை வெளிக்காட்டாது அவரை அடக்கி வைத்துள்ளார்கள்.
  • தலைவர் சம்பந்தன் ஓர் மூத்த அரசியல்வாதி. அரசியலில் பழுத்த அனுபவம் மிக்க தலைவர். அவர் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வார் என்பதை நம்ப முடியாது உள்ளதே?
நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான், உண்மைதான். நம்பமுடியாதுதான். ஆனால் நம்பியே ஆக வேண்டும். அவர் இப்போது தமிழரசுக் கட்சியில் புதிதாக அதுவும் தேர்தலில் போட்டியிடாது வெறுமனே போனஸ் ஆசனம் பெற்ற சில அரசியல் பால்குடிகளின் கைப்பொம்மையாக மாறியுள்ளார். அவருக்குப் பின்னர் அதாவது அடுத்ததாகத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகும் எண்ணம் கொண்ட இதுபோன்ற நேற்று அரசியலுக்கு வந்த சிலர் ஆளுமை உள்ள அவரை ஆட்டிப் படைக்கின்றனர். ஆனந்தசங்கரி அதிக வாக்குகளைப் பெற றால் தமது மானம், மரியாதை எல்லாமே காற்றில் பறந்துவிடும், தலைவராகும் தமது எண்ணம் தவிடுபொடியாகிவிடும் என்ற பயம் இவர்களது மனதில் இருக்கிறது.
  • ஆனாலும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர்கள் கூறியதை கிளிநொச்சி மக்களும் ஏற்று நடந்துள்ளனரே?
உண்மையில் வன்னி மக்களில் பலர் இன்னமும் இந்தத் தமிழரசுக் கட்சியினரின் புலிக் கதையை நம்புவதையே காணக் கூடியதாக உள்ளது. அவர்கள் தேர்தல் காலத்தில் செய்த பிரசாரம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? புலி வரும், தலைவர் வருவார், அவரிடம் ஆசி பெறுவோம் என எத்தனை கதைகளை அவிழ்த்து விட்டிருந்தார்கள். சனம் இவ்வளவு பட்டும் இன்னமும் திருந்துவதாக இல்லை.
  • சரி, அதற்கும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமைக்கும் என்ன தொடர்பு? நீங்களும் அவர்கள் பிரசாரம் செய்த அதே கட்சியின் வேட்பாளர்தானே?
அதே கட்சி என்றாலும் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். என்னை அவர்கள் ஒதுக்கி தமது தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களையே முன்னி லைப்படுத்தி பிரசாரம் செய்தனர். நான் கிளிநொச்சியில் அமோக வெற்றி பெற்றால் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவேன். அவ்வாறு போட்டியிடும்போது எனக்கு நிச்சயம வெற்றி; கிடைக்கும். அவ்வேளையில் சிறிதரன் இருந்த இடம் தெரியாது போய்விடுவார். அதனைத் தடுப்பதே சிறி தரனின் நோக்கம். இது நீண்ட காலத் திட்டம்.
  • இவ்வளவு விடயங்களும் தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுடன் கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிட்டது மட்டுமல்லாது இப்போதும் அவர்களுடன் கூட்டு வைத்துள்ளீர்களே?
எனக்கு முதலே இவர்களைப் பற்றி நன்கு தெரியும். நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் இவர்களை யாருமே மிஞ்ச முடியாது. ஆனாலும் சமாளித்துச் செல்வோம் என்றுதான் சேர்ந்து போனேன். ஆனால் இந்தத் தேர்த்லில்தான் அவர்கள் ஒவ்வொருவரினதும் உண்மையான சுயரூபங்கள் தெரிந்தன. இவ்வளவு மோசமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
  • இப்போது எல்லாமே தெளிவாகத் தெரிந்துவிட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அவர்களைத் திருத்த வேண்டும். திருத்தியே ஆக வேண்டும். அதற்காக கூட்டுக் கட்சிக்குள்ளேயே ஒருவனாக தொடர்ந்தும் இருப்பேன். தம்மைத் தட்டிக் கேட்டு பிழைகளைச் சுட்டிக் காட்ட நான் ஒருவனாவது இருக்கிறேன் என்ற பயத்திலா வது அவர்கள் திருந்துவார்கள் அல்லது தவறிழைப்பதைக் குறைத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். நம்பி வாக்களித்த மக்களுக்காக நான் இதனை நிச்சயம் செய்வேன்.
  • பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் நீங்கள் அவருக்குப் பல கடிதங்களை எழுதினீர்கள். அது தொடர்பாக தமிழரசுக் கட்சியினருக்கு ஏதாவது மனஸ்தாபம் இருந்து உங்களை இப்போது பழி வாங்குவதாக நீங்கள் நினைத்ததுண்டா?
நான் பிரபாகரனுக்கு மட்டுமல்ல இந்நாட்டின் மூன்று ஜனாதிபதிகளுக்கும் கடிதங்களை எழுதினேன். அதனைக் கேட்க இவர்கள் யார்? இவர்களுக்கு அருகதையும் கிடையாது. ஏனெனில் பிரபாகரன் செய்த பல கொடு மைகளைத் தட்டிக் கேட்கத் துப்பற்றவர்களாகவே இவர்கள் வாய்மூடி இருந்தனர். இப்போது பிரபாகரன்; இல்லையென்றதும் நீலிக்கண்ணீர் வடித்து அவருக்கு வக்காளத்து வாங்குகின்றனர். இருந்தபோது ஒரு வார்த்தையாவது கூறியிருப்பார்களா? முடிந்தால் கூறட்டும் பார்ப்போம். அத்துடன் பிரபாகரனுக்கு நான் புத்திமதி கூறினேனே தவிர அவரை இவர்களைப் போன்று முன்னால் கதைத்துவிட்டுப் பின்னால் வந்து நையாண்டி செய்யவில்லை.
  • நீங்கள் எழுதிய கடிதங்களைப் பிரபாகரன் பார்த்ததாக அல்லது வாசித்ததாக நீங்கள் அறிந்து கொண்டீர்களா? ஏதாவது ஒரு கடிதத்திற்காகவது அவரிடமிருந்து பதில் வந்ததா?
பிரபாகரனைப் பற்றி உலகிற்கே தெரியும். அவர் கடிதங்களை அலட்சியம் செய்வது போலப் பாசாங்கு செய்து எறிவது போல மற்றவர்கள் முன்பாக கசக்கி எறிவார். ஒருபோதும் கிழித்து எறிய மாட்டார். அது அவரது குணம். இவர் யார் எனக்குக் கடிதம் எழுதுவது என்பதாக நடிப்பார். எனது கடிதத்தை மட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதி கடிதம் எழுதியிருந்தால்கூட இதே நிலைதான். ஆனால் பின்னாலேயே இரகசியமாக தனது ஆட்களை வைத்து அதே கடிதத்தை எடுத்துத் தனியாக இருந்து படிப்பார்.
  • உங்களது இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் எடுத்துரைக்கலாமே?
அவரால் என்ன செய்ய முடியும். அவரே இவர்களது பிடியில் சிக்கிக் கிடக்கிறார். நான் விரைவில் நல்லதொரு முடிவினை எடுக்கவுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு நிச்சயம் நல்லதொரு விடிவினைத் தரும். அதுவரை பொறுத்திருங்கள்.
  • இறுதியாக மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்குத் தாங்கள் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தீர்கள். பதில் ஏதாவது வந்ததா?
நான் அவரை ஒரு நேர்மையான, துணிச்சலான, பக்கச் சார்பற்ற ஒரு மதத் தலைவராக எண்ணியே கடிதத்தை எழுதி யிருந்தேன். அத்துடன் அவர் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் நல்லுறவைக் கொண்டவர். அதனாலேயே அவருக்கு நடுநிலையாக நின்று நியாயம் கூறுமாறு எழுதினேன். அவரிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் போலும். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
  • தங்களது கடிதம் கிடைத்து என்றாவது ஆண்டகை அவர்கள் அறிவித்தாரா? ஏனெனில் தாங்கள் கடிதம் அனுப்பி மூன்று வாரங்களாகிவிட்டதே. அதனால்தான் கேட்கிறேன்?
கிடைத்ததாகக் கூறவில்லை. ஆனால் நிச்சயம் கிடைத்திருக்கும். பத்திரிகைகளில் கூட அக்கடிதத்தினை முழுமையாகப் பிரசுரித்திருந்தார்கள். பார்ப்போம். ஆயருக்கும் பல சோலிகள். அதில் இதுவும் ஒன்று. எனக்கு இது முக்கியமானதொன்று. அவருக்கு அவரது பணிகளுக்கு மத்தியில் இதுவும் ஒன்று.
  • பத்திரிகைகள் என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. தேர்தல் காலத்தில் பிராந்திய மற்றும் தேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் ஒருதலைப் பட்சமாக தமிழ்க் கூட்டமைப்பிற்கே தமது ஆதரவை வழங்கியிருந்தன. அவை உங்களுக்கு வழங்கிய முக்கியத்துவம் எப்படி?
நல்ல கேள்வி. நானே கூற வேண்டும் என்றிருந்தேன். உண்மையில் தமிழ் ஊடகங்கள் பலவும் இன்று பாரிய தவ றினை இழைத்து வருகின்றன. நான் எந்த ஊடகத்தையும் விழித்துக் கூறவில்லை. (பிறகு அவர்கள் எனது செய்திகளைப் போடமாட்டார்கள்) இந்தச் சில தமிழ் ஊடகங்கள் பொய்யைக் கூறினால்தான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அல்லது ஏதாவது புலிக் கதையைக் கூற வேண்டும். இதனால்தான் நான் கூறும் உண்மைகளை இந்தச் சில தமிழ் ஊடகங்கள் கவனத்திற் கொள்வதே இல்லை. நானும் பொய்யாக புலித் தலைவர் வருவார், அவரது தலைமையில் மாகாண ஆட்சி நடத்துவோம் என்று நான்கு வீரவசனங்களைப் பேசியிருந்தால் ஒவ்வொரு நாளும் முன்பக்கத்தில் கலர் படத்தோடு செய்திகளைப் போட்டிருப்பார்கள். மக்களும் அதை உண்மையென நம்பி வாக்களித்திருப்பார்கள். நானும் வென்றிருப்பேன். ஆனால் இப்போலி நாடகத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. இனியும் தயாரில்லை. இதனைத் தமிழ் ஊடகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அன்று பொய்ச் செய்திகளைப் போட்டு வெற்றி பெற வைத்தீர்கள். இன்று வென்ற உடனேயே பதவிச் சண்டை போட்டு பல துருவங்களாகி வாக்களித்த மக்களைமறந்து நிற்கிறார்கள். அதனை ஏன் மூடி மறைக்கிறீர்கள்.
நேர்கண்டவர்: வாயுபுத்திரன்

கூட்டுத் திருட்டை ஒழிக்கவே முடியாது.உலகத் திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் இனம்காண்போம்

உலக நாடுகளுக்கு எல்லாம் வியாபாரம் செய்வதற்கு என்று புறப்பட்டு பின்பு அந்நாட்டு மக்களை தமது அடிமைகளாக்கிய பிரித்தானியா இன்று பொதுநலவாய மகாநாடு என்று இலங்கைக்கும் வந்திருக்கின்றது. மாகாராஜ என்று ஒருவர் ஒரு புறம். இவர் காதலித்தவளை மறைத்து விட்டு கௌரவத்திற்காக அழகியை கரம் பிடித்தவர். இவர் பின்பு கரம் பிடித்தவளுடன் தானும் வாழாமல் அவளையும் வாழவிடாது மரணத்திற்குள் தள்ளிய வரலாற்றைக் கொண்டவர். மறுபுறம் அண்மைக்காலம் வரை ஐரிஸ் மக்களின் விடுதலையை மறுத்த கூட்டத்தின் தலைவர் பிரித்தானிய ஆளும்வர்கத்தின் எடுபிடி. உலகம் முழுவதையும் தமது குடையின் கீழ் கொண்டுவந்து? சுரண்டி சும்மா இருந்து சாப்பிட்டு ஏப்பம் விட்ட கூட்டத்தின் தலைவர். இதற்காக தம்மால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள இனங்களுக்கிடையில் பிரித்தாளும் கொள்கைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவர். இதன் அறுவடைகள்தான் இன்றுவரை உலகின் பலநாடுகளிலும் அந்நாடுகளில் வாழும் தேசிய இனங்களுக்கிடையேயான பிரிவுகளும், உழைக்கும் வர்க்கங்கள் இடையேயான தனித்து நிற்று பலவீனப்பட்டிருக்கும் நிலமைகளும் ஆகும். இன்றுவரை உள்நாடுகளில் பரவி இருக்கும் இன முரண்பாடுகளும், இதன் தொடர்ச்சியான  உள்நாட்டுச் சண்டைகளும், யுத்தங்களும், அழிவுகளும். இன்று நீலிக்கண்ணீர் வடித்த வண்ணம் கறுப்புக் கண்ணாடி அணிந்து சமாதானத் தூதுவர்களாகவும், மனித உரிமைவாதிகளாகவும், நியாயம் கூறுபவர்களாகவும் தம்மைக் காட்டிக்கொண்டு வேஷம்போடும் செயற்பாடுகளும், அறிக்கைகளும் வலிகாமத்து மக்களின் மீள்குடியேற்றம்பற்றிய பேச்சுக்களும் வெறும் வேஷங்களே ஆகும். முதலில் இவர்கள் செய்யவேண்டியது எல்லாம் இவர்களின் மூதாதையர்கள் எங்கள் மூன்றாம் உலகநாடுகளில் கொழுத்திப் போட்டுவிட்டு போன பிரித்தாளும் வெடிகளால் ஏற்பட்ட யுத்தங்களுக்கும், பிரிவுகளுக்கும், அழிவுகளுக்கும் தாமே காரணம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாகும். இதன்பின்பு தமக்கு இருக்கும் பலத்தை பாவித்து முடியமாயின் உள்நாடுகளில் உள்ள அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்வேண்டி தமது தார்மீக ஆதரவுகளையும், செல்வாக்குகளையும் பயன்படுத்துவதாகும். இதனை இவர்கள் செய்வார்களா? என்றால்..... இல்லை என்பதே பதிலாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் இன்று வரை இவர்கள் பிரித்தாளும் கொள்கைகளினால் சுரண்டலை தொடர்ந்தும் நவகாலத்துவ முறைப்படி செய்துகொண்டு, தமது ஆயுத வியாபாரங்களை செய்யவும் இவர்கள் விரும்புவதே காரணம் ஆகும். அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்று வியாபாரத்தையும் செய்து பின்பு போலிச் சமாதானத்தை ஏற்படுத்தி புனர்நிர்மாணம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இதே நாடுகளில் கொத்தராத்துக்கள் மூலம் சுரண்டலைத் தொடரும் சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தும் திருடர்கள் இவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இச் சர்வதேச திருடர்களும்  உள்ளுர் திருடர்களும் பங்காளிகளாக இருப்பது இவர்களுக்கு வாய்பாக இருக்கின்றது. எனவே இந்த சர்வதேச திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் வர்க்க உடன்பாட்டுடன் இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது எமது கடமை அல்லவா? மாறாக இனக் கூறுகளாக நாம் பிரிந்து நின்றால் இக் கூட்டுத் திருட்டை ஒழிக்கவே முடியாது.

samedi 16 novembre 2013

இந்திய அரசியல்வாதி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர் - அதிர்ச்சி தரும் வீடியோ!!

இந்தியாவில் அ.தி.மு க பிரமுகரான பாஸ்கரன் என்பவர் கடந்த 11 ஆம் திகதி உணவு அருந்தி விட்டு, தன் மனைவி மகன் மற்றும் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டி ருந்த வேளை, உள்ளே வெட்டுக் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், குறித்த அ.தி.மு க பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். குறித்த சம்பவத்திலிருந்துமயிரிழை யில் தப்பித்த குறித்த அரசியல் வாதி சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளரர்.

jeudi 14 novembre 2013

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் இலங்கையில்;லீனா மணிமேகலை

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலையை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை வான் கதைகள் ஆவணப்படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
சனல 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரானவர்களையும் மாற்று கொள்கைகளை கொண்டுள்ளவர்களை கடத்திச் செல்வதற்காக வெள்ளை வான்களை பயன்படுத்துகிறது.
விசாரணைக்காக கடத்திச் செல்லப்படுவோர் மீண்டும் திரும்புவதில்லை. கடத்திச் செல்லப்பட்டவர் மீண்டும் திரும்பினர் என்ற செய்திகள் இல்லை.
வெள்ளை வான்களில் வந்து விசாரணைக்காக கடத்தப்பட்டவர்கள் மீண்டும் திரும்ப போவதில்லை என்பதை அறிந்திருப்பார்கள்.
போர் முடிந்து விட்ட எனக் கூறிய போதும், பாதுகாப்பு நிலைமைகளால் அங்கு அச்சம், மன அழுத்தங்கள் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

lundi 11 novembre 2013

சர்ச்சைக்குரிய மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இலங்கையில்

இலங்கையை சென்றடைந்த கலம் மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் :செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேவிற்கு இலங்கையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலம் மக்ரே, இன்றைய தினம் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நோ பயர் ஸோன், கில்லிங் பீல்ட் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாது, படையினர் மீது மட்டும் செனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்து விமான நிலையத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதாகைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்ரேவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். செனல்4 ஊடகவியலாளரை நாட்டுக்குள் அனுமதித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.