dimanche 29 juillet 2012

"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ! "

எஸ்.எம்.எம்.பஷீர்

          

"
ஊரில் அக்கறை உள்ளவர் நடப்பாய்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
                                                             
கவிஞர் அனலக்தர்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் இவ்வருட ரமலான் மாதத்தில் அரசியல் நன்மைகளை கொள்ளை கொள்ள தங்களின் மாகான சபைத் தேர்தல் பணிகளை  பிள்ளையார் சுழி போட்டு மன்னிக்கவும்  786 போட்டு ( இந்த இலக்கம் எண்ணியல் படி இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதாக உள்ள அரபு சொற்றொடரான "பிஸ்மில்லா .. " எனும் சொற்றொடரின் எழுத்துக்களின்  எண் கூட்டுத் தொகையே  786 என்று கூறப்பட்டாலும் இது ஒரு பிழையான சமாச்சாரம் என்பது ஒருபுறமிருக்க ) தங்களின் தேர்தல் பணிகளை பூர்வாங்கமாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள் .    எதுவாயினும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிழையான சுயநல வியாபார அரசியலுக்கு பிழையானதே சரியானதுதான். 

கிழக்கு மாகாணத்தில் இப்போதெல்லாம்  கொளுத்தும் வெயிலில் நோன்பு அனுஷ்டித்து மாலையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வுகள்  அரசியல்  நிகழ்ச்சி நிரலாக  மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணத்துக்கான தலைமை வேட்பாளராக முஸ்லிம்  காங்கிரசின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமத் தன்னை கிழக்கில் அறிமுகம் செய்யும் ஆக்ரோஷமான கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார். இவர் அஸ்ரபின் அகால மரணத்தின் பின்னர் "அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் "  என்ற நிலையில் நடைபெற்ற உயர்பீட தலைமைத்துவப் போட்டியில் தலையை நுழைக்க முடியாமல் போனாலும் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் கட்சியிலிருந்து வெளியேறி தனக்கென " ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு "  (Democratic Unity alliance) என  ஒரு கட்சியை உருவாக்கி மேல் மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தினை கைகொள்ள முயற்சித்து அதில் சிறு அளவில் வெற்றியும் பெற்றவர். ஆனால முஸ்லிம் காங்கிரசில் அஸ்ரபின் மூலம் பல நிதி அனுகூலங்களை பெற்றவரில் இவரும்  ஒருவர் என்று பரவலாக சொல்லப்படுகிறது. அஸ்ரபின் மரணத்தின் பின்னரான தலைமத்துவப்போட்டியில் தலைமையகத்தைக் கபளீகரம் செய்ய நசீர் அஹமது முயன்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. ஆகவே அவர் அன்று தலைமைத்துவப் போட்டியில்  ஈடுபடவில்லை பேரியல் அஸ்ரபும் ,ஹக்கீமும்அதாவுல்லாவும் தலைமைத்துவத்துக்குள்ளும் வெளியேயும் தொப்பிச் சண்டை (குடும்பிச் சண்டைக்கு ஒத்த சொற்றொடர் ) போட்டு அங்கிருந்து நீங்கிய பின்னர் கட்சியின் தலைமையகமான "தாருஸ் ஸலாம் " கட்டடத்துள் நசீர் அஹமது நுழைந்து அஸ்ரபின் தலைமைச் செயலகம் தொடர்பான எழுத்திலுள்ள நம்பிக்கைப் பொறுப்பின் பிரதிநிதி நானே என்று கூறி கட்டடத்தின் அறைகளை பூட்டி கட்டடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர். .    

எது எப்படி இருப்பினும் அரசியலில் ஒருவர் நுழைந்தால் அதிலும் ஆளும் அரசில் அங்கத்துவம் வகித்தால் பண பலம் அதிகரிக்கும்என்பதற்கு முஸ்லிம் காங்கிரசும் விதி விலக்கல்ல. இதைக் குறிப்பிடும் போதுஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை சொல்லிவிட்டு இக் கட்டுரையினைத் தொடர்வோம்.
முஸ்லிம் காங்கிரசின் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஜிரோ வாகனத்தில் கல்முனைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதுஅவருக்காக முஸ்லிம் காங்கிரசுக்காக மாகாண சபைத் தேர்தலில் பணியாற்றிய மிக முக்கியமான ஆதரவாளர் ஒருவர் வீதிஅருகாமையில் நிற்பது கண்டு சேகு இஸ்ஸதீன் வாகனத்தினை நிற்பாட்டி சுகம் விசாரித்தார். எப்படி சுகமா என்று கேட்க அவர் சுகம் சொல்லிவிட்டு என்ன நிலைமைகள் என்று கேட்க. அந்த ஆதரவாளர். நிலைமைகள் என்ன எங்களுடன்  நீங்களும் சில நாட்களுக்கு முன்பு வரை சைக்கிளில் சென்றீர்கள் இப்போது குளு குளு பஜிரோவில் சாரதி உங்களை ஓட்டிச் செல்ல உங்களைப் காவலாளிகள் பாதுகாக்க பயணம் செய்கிறீர்கள். ஆனால் நான் அதே சைக்கிளுடன் அதே வீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் எங்களது  நிலைம என்று கூறி அரசியலில் அப்பாவி வாக்காளனுக்கும் அவனால் அந்தஸ்தும் வாழ்வும் வளமும் பெறும் தன்னையொத்த சாமான்ய மனிதனுக்கும் இடையே அரசியல் அந்தஸ்து உருவாக்கிய(உருவாக்கும்) பிரத்தியட்ச மாற்றத்தை சுட்டிக்காட்டினார்.
சரி நமது கிழக்கு மாகான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளாராக திடீரென்று முளைத்த ஹாபிஸ் நசீர் அஹமத் பற்றிய சங்கதிக்கு வருவோம்.
இவர் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் அல்ல ,முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சரானதும் இவர் அஸ்ரபுடன் நெருங்கி உறவாடியதன் மூலம் ,அஸ்ரபின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார் கட்சியின் சர்வதேச தொடர்பாடலுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார். ஏனெனில் ஸ்ரீ மு. காங்கிரஸின் தொடக்க கால உறுப்பினராகவிருந்த ஹக்கீமின் மிக நெருங்கிய குடும்ப உறவினரான   இனாமுல்லா மஸிஹுதீன் முஸ்லிம் காங்கிரசிலிருந்து சேகு இஸ்சதீனுடன்  விலகிச் செல்லும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச தொடர்பாடலுக்கு(சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர் ) பொறுப்பானவராக விருந்தவர் . சர்வதேச தொடர்பாடல் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் அரபு நாடுகளுடன் ஏற்படுத்தும் தொடர்புகளுக்காக அரபு மொழியாற்றல் உள்ளவர் என்ற வகையிலே கட்சியால் நியமிக்கப்படுபவர்களாகும் .இனாமுல்லா மஸிஹுதீன் சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர்விலகிச் சென்றதும் நிலவிய இடைவெளியை சவூதியில் கல்விகற்றநசீர் நிரப்பினார்.  இவர் எகிப்தில் உள்ள அல்- அஷ்கார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க மறைந்த மட்டக்களப்பு எம்.பீ யும் பிரதி அமைச்சருமான பாரீத்  மீராலேப்பை எம்.பீ மூலம் சந்தர்ப்பம் பெற்றவர் என்று கூறப்பட்டது பின்னர் அங்கிருந்தே அவர் சவூதி சென்று கல்வி கற்றார் என்று சொல்லப்படுகிறது நசீர் அரசியலில் குறிப்பிடக் கூடிய பின்னணியைக் கொண்டிருக்கவில்லை . ஆயினும் முன்னாள் மறைந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பரீத் மீராலேப்பையுடன் ,நெருக்கமான தொடர்புகளினைக் கொண்டிருந்தவர்.
அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வலைப்பின்னல் ஊடாக பெற்ற ஒப்பந்தங்கள் மூலம்  , விசேடமாக ஈரானிய கம்பனிகளினூடாக தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு  (Road Development Authority)  பித்மேனை ( bitumen- கார்பெட்-கம்பள - வீதி எனப்படும் வீதிகளுக்கு போடப்படும் பெற்றோலிய உப உற்பத்திப் பொருள்வழங்கும் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம்   தனது நிதி வளங்களில் ஒரு பகுதியினை நசீர் அஹமத் ஈட்டியுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. தனது முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனானநெருக்கத்தினூடாக கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைமையகத்தில் தனது வியாபார அலுவலகத்தை நடத்தி வந்தார்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்த நசீர் முஸ்லிம் தானே ஒரு கட்சியின் தலைவனாக வேண்டும் என்று விழைந்தார், அதில் வெற்றியும் பெற்றார். அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமை விமர்சிப்பதில் அரசியலில் முன்னணியும் வகித்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது துஆ  கட்சி சார்பில் அஜித் அராஜிகே  என்பவரை போட்டியிடச் செய்தார் . அவர் சுமார் ஐயாயிரம் வாக்குகளையே பெற்றார். அதனையடுத்து ஜனாதிபத்தி மஹிந்த ராஜபக்சவை நாடி அவரின் ஆலோசகர் பதவியைப் பெற்றார் . அவ்வாறு பதவி வகித்தபோது ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் ரவூப் ஹக்கீமையும் தாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார்.   

"ஸ்ரீ மு. காங்கிரஸின் யாப்பு அன்று நிலவிய  விந்தையான சூழ்நிலைக்குப் பொருந்துகின்றவாறு அஸ்ரபுக்காக உருவாக்கப்பட்டது . அதனை ரவூப் ஹக்கீம் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைவதற்காக பயன்படுத்தி (யாப்பை) துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஒருநாள் கட்சி உறுப்பினர்களை நீக்குகிறார்.  மறுநாள் ஒற்றுமைக்காக அழைப்பு விடுக்கிறார் " ( "The SLMC constitution was tailor-made for the late Mr. M.H.M. Ahsraf to suit the peculiar circumstances that prevailed then and Hakeem has abused the constitution using it to serve his own agenda." ) என்று ஹக்கீமிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னணியில் நின்றவர் நசீர்

யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் செய்யப்பட்டு பின்னர் பீ டோம் எனப்படும் சுனாமிக்கு பின்னரான புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான ஒப்பந்தம் ( Post-Tsunami Operational Management Structure (P-TOMS), பற்றி நசீர் அஹமத் குறிப்பிடுகையில்  ரவூப் ஹக்கீமின் துரோகத்தனமான செயற்பாட்டுத் தொடரில்  யுத்த நிறுத்தஒப்பந்தம் முதலாவதாகும்அதில் அவர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை விற்றார். அந்தக் குரூரச் செயலை  முஸ்லிம் சமூகம் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ  மாட்டாது . முஸ்லிம்களில் அநேகமானோர் ரவூப் ஹக்கீமை  யு என்,பீ யின் எடுபிடியாகவும் முஸ்லிம் சமூகத்தின் இலட்சியங்களை பதவி நலன்களுக்காக வியாபாரம் செய்து விட்டவராக காண்கிறார்கள்.

( The CFA agreement was the first in a series of treacherous acts by Rauf Hakeem in the history of Sri Lankan Muslims where he sold the Muslims' political rights and the Muslims would never ever forget or forgive this act of savagery. Nazeer Ahmed claimed that most Muslims see Rauf Hakeem as a stooge of the UNP and that he had traded the Muslims' cause for the plums of office.)

யூ என்.பீ மேற்குல சார்பானது என்றும் சியோனிஸ ஆதரவு தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறதென்றும்  இஸ்ரேலக்குக்கு அதன் பாலத்தீன மக்களின் இனச் சுத்திகரிப்பிற்கு இனப் படுகொலைகளுக்கு ஆதரவாக செயற்படும்  மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளின் கட்டளைப்படி செயற்படுகிறது”  என்று குறிப்பிட்டதை மிகஇலகுவாக மறந்துவிட்டு பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் சேர்ந்து எவ்வித சங்கோஜமுமில்லாமல்   சேர்ந்து பணியாற்றியவர்.


(‘UNP’s pro-West and pro-Zionist leadership has only worked to the dictates of its. Imperialist backers in the West who have supported Israel fully in its genocide and ethnic cleansing of the Palestinian people,’)
அதனையடுத்துவந்த , 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ,திடீரென்று கட்சி மாறி ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்தது மட்டுமல்ல  ,  விமல்வீரவன்சவின்  ஜாதிகநிதகஸ் பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் எம்.பீ முசம்மிலை முன்னாள் எம்.பீ மை ஓவன் முஸ்தாபாவுடன் சேர்ந்து கையூட்டு வழங்கி பொன்சேகா கட்சிக்கு மாற துணைபோனார். இந்த இலஞ்சக் குற்றச் சாட்டுக்கள் நீதிமன்ற விவகாரமாக மாற மை ஓவன் முஸ்தபா  நீதிமன்ற அழைபபானைக்குத் தப்பி நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். நசீர் வழக்கம்போல் அரசியல் நடவடிக்கைகளைமுன்னெடுத்து வந்த வேளையில் முஸ்லிம் காங்கிரசிற்கும் அவருக்குமிடையில் நிலவியதாக சொல்லப்படும்  கட்சி நிதிகட்சித் தலைமையைக அலுவலக ஆக்கிரமிப்பு என்ற சமாச்சாரங்கள் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளன. அதற்கு வெகுமதியாக முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர்கள் கட்சியின் உயர் அதிபீட ஜாம்பவான்கள் நிசாம் காரியப்பர் போன்ற பெரும் கட்சியின் முன்னணி பிருகிருதிகள் தவம் கிடக்க நசீர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நசீர் அஹமட்டுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் எந்த அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டது என்பது இதுவரை கட்சியின் கட்சி உறுப்பினர்களுக்கு ( "போராளிகளுக்கு" ) விளங்காத புதிர் . அதுபற்றி அவர்கள் கவலை கொள்ளப் போவதுமில்லை . நசீர் ஹாபீசை கட்சியில் சேர்ப்பதற்கு முன்னர் சேகு தாவூத் முஸ்லிம் கட்சிகளுடன்கூட்டணி அமைக்கப் போவதாக கட்டியம் கூறியிருந்தார்.

முஸ்லிம்களின் தவறும் தண்டனையும்
கிழக்கு மாகான சபைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை பெறுமளவு கட்சியில் உபதலைவராக சேர்ந்து சில மாதங்களுக்குள் தனது  அஸ்திரங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகான சபைத் தேர்தலில் குதித்து இஸ்லாமிய ஒற்றுமை மறைந்த தலைவரின் கனவுகள் உரிமைபோராட்டங்கள் என முழங்கி  ஹக்கீமுக்கு எதிராகமெலிதாகவும் ,  ஆசாத் சாலிக்கு எதிராக தீவிரமாகவும் எதிரணிகள் எழுப்பும் பிரதேசவாதத்திற்கும் உள்ளிடையான மாகான மட்டத்தில் நிலவும் ஊர் வாதத்திற்கும் எதிராக பிரச்சாரங்களை முடுக்கிவிடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் நசீர். தமிழர்களின் நண்பர் என்று ஹக்கீமைப் போல் பேச வேண்டும் தமிழர்களுக்கு அறிவுரை சொல் வேண்டும் தமிழர்களின் வாக்குகளை மிகச் சிறியஎண்ணிக்கையிலாயினும் பெற முயற்சிக்க வேண்டும் ஆல்லது ஆகக் குறைந்தது அவர்களின் நண்பர்களாக காட்டு வேண்டும் என்பதற்காய் சில முஸ்லிம்களின் தலைகளை உருட்ட வேண்டும்.  ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு மனிசனைக் கடிச்ச கதையாக இப்போது திடீரெண்டு தமிழர் போராட்டத்தைக் காட்டிகொடுத்த  சில முஸ்லிம்கள் உண்டு என்று கண்டு பிடித்து தமிழர் மனங்குளிரப் பேசி அரசியல் செய்ய முனைந்துள்ளார் நசீர். அண்மையில் அவர் 

"தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டும்முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம்களில் ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சமூகமும் அந்நாட்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது. வடக்கே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது உள்ளடங்களாக பல்வேறு காயங்கள் வரலாற்றில்அழிக்கமுடியாத வடுக்களாக இருக்கின்றன." என்று குற்றச்சாட்டு உண்டு என்று கூறி அக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் கைங்கரியத்தில் "ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக" என்று குற்றச்சாட்டை தனது "சுய நீதிமன்றில்"  நிரூபித்து  அதற்கான தண்டனையை ஒட்டு மொத்த சமூகமும் அனுபவித்தது என்பதையும் கூறி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனையும்  அந்த தண்டனைக்குள்உள்ளடக்கி விடுகிறார்.
கிழக்கு மாகான முஸ்லிம் தலைமை

வடக்கு மக்கள் குறிப்பாக யாழ்ப்பான மக்கள் வடக்கிலிருந்து வெளியேறி மீண்டும் யாழ் சென்று வாழ வேண்டும் என்று வெளியேற்றப்பட்டு ஏழாண்டின்  பின்னர் (1997)  கொழும்பில் கூடியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கே .பி .எஸ்.ஹமீது பஷீர் ஒஸ்மானியாக்கல்லூரியின் முன்னாள் அதிபர்களான அப்துல் குத்தூஸ் ஜிப்ரி ஹாமீம்கல்விப் பணிப்பாளர் மன்சூர்  ,எனப்பலர் கலந்து கொண்டு மேற்கொண்ட தீர்மானத்தில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று ஐ சி ஆர் சி மூலம் புலிகளின் முக்கியஸ்தர்களை கண்டு தமது நியாயபூர்வமான உரிமைகள் கிழக்கு மாகாணத் தலைமையை ஏற்றுவிட்டதாக தவறாக எண்ணிய புலிகளின் நிலைப்பாடு ,வாழக்கூடிய அமைதியான சூழல் பாதுகாப்பான எதிர்காலம் இழந்த சொத்துக்கள் அமைதியான தொழிற் சூழ் நிலைகள் குறித்தும் பேசுவது.

இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டியது புலிகள் தங்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கு காரணம் தாங்கள் கிழக்கு மாகான முஸ்லிம் தலைமையை - அஸ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை -  ஏற்றுவிட்ட தாக புலிகள் தப்பாக எண்ணி தங்களை வெளியேற்றி இருக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள் அது பற்றிஅவர்கள் புலிகளிடமும் நேரடியாக பேசவும் விரும்பினார்கள். புலிகள் ஏன் தங்களை வெளியேற்றினார்கள் என தாங்களாகவே ஊகித்த காரணத்தை -அனுமானத்தை- புலிகளிடம் கேட்டுவிடவேண்டும் என்று வெளியேற்றப்பட்ட மக்கள் நினைத்து தீர்மானம் மேற்கொண்ட சமபவம் ஒருபுறம் சாட்சியாய்ஏன் ஒரு  புதிராய் கூட தொக்கி நிற்க ,ஹாபிஸ் நசீர் அஹமது அதற்கான காரணத்தை புலிகளின் சார்பில்கண்டுபிடித்து முஸ்லிம்களில் ஒரு சிலர் தவறு செய்ததனால்தான் மொத்த சமூகமும் அதற்கான விலையை கொடுக்க வேண்டி நேரிட்டு விட்டதுபோல் காரண காரிய நியாயம் கற்பிக்கிறார். ஒரு சிலர் தவறு தவறு செய்தார்கள் அதாவது நசீரின்படி காட்டிக் கொடுத்தார்கள் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக் கொள்வோம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிப்பது யார் அந்த குற்றச்சாட்டை புலிகள் பகிரங்கமாக தங்களின் அஸ்தமனம் வரை வெளிப்படையாக சொல்லவில்லை ( அந்தரங்கமாக அவர்கள் முஸ்லிம்கள் பற்றிக் கொண்டிருந்த  நிலைப்பாடு  பற்றிய தகவல்கள் மிக அதிர்ச்சியூட்டுபவை -அவை பற்றி இங்கு நான் எழுதவில்லை) . ஆனால் நசீர் அஹமது யாரோ முகம் தெரியாத சிலரின் எழுத்தையும் கருத்தையும் வைத்துக் கொண்டு சில முகம் தெரியாத முஸ்லிம்களையும் சகட்டுமேனிக்கு குற்றவாளியாக்கி தனது அரசியலை செய்ய புறப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய அமைப்பிலான ஒரு சமுதாய அமைப்பு

"
இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும்." என்று நசீர் அஹமது கூறுகிறார். உண்மையில் இஸ்லாமிய அமைப்பிலான ஒரு சமுதாய அமைப்பு என்றால் என்ன அது எப்படி செயற்பட வேண்டும் என்றகேள்விகளுகெல்லாம் அப்பால் மிக முக்கிய கேள்வி இதுவரை காலமும் முஸ்லிம்  காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டடத்துக்குள் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு நசீர் விட்ட சவால் நீதிமன்றம் வரை சென்றதாக செய்தி அஸ்ரப் கட்சியின் இலட்சக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நசீர்அஹமதுவிடம் நம்பிக்கையின் படி விட்டு சென்றதான செய்தியின் உண்மைச் சங்கதி என்ன கட்சியின் பணத்தை அஸ்ரப் எப்படி ஒரு தனி மனிதனிடம் ஒப்படைக்க முடிந்தது. கடந்த தேர்தலில் முசம்மில் எம்'பீக்கு கொடுத்த இலஞ்சப் பணம் எப்படி பெறப்பட்டது. அதில் முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சரும் எம்.பியுமான மை ஒவன் முஸ்தபாவுடன் சென்று அப்பணத்தை முசம்மிலுக்கு கொடுத்ததில்  நசீரின் பங்கு என்ன ?
சுனாமியின் பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விமேம்பாட்டிற்காக அவர் நடத்திய சுனாமி பிள்ளைகளின் கல்வி நம்பிக்கைப் பொறுப்பு ( Tsunami Children Education Trust) உதவி நிறுவனம்பற்றிய நிதி செயற்பாடுகளை அவர் இங்கிலாந்து வரை வந்து அதற்காக சேகரித்த நிதி பற்றிய தகவல்களை வெளியிடுவாரா என்ற கேள்விகள் நியாயமானவையே. ஆக மொத்தத்தில் இஸ்லாமிய சமூகஅமைப்பினை ஏற்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அவசியமா என்பது மிக முக்கியமான கேள்வி. இஸ்லாமிய அமைப்பினை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கான நேர்மையும் தகுதியும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரிடம் மட்டுமல்ல கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னால்  அதிகாரங்களை பெற்று இன்று தனித்தனியாக கட்சிகளை அமைத்து மிகச் சிறிய சமூகத்துள் மிகக் கூடிய கட்சிகளையும் தலைவர்களையும் குடித்தொகை விழுக்காட்டுக்கு மேலாக கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலருக்கு இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.                                                                                                                      

நூற்றுக்கணக்கான தோட்டக் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன: புத்திரசிகாமணி


  நுவரெலியா மாவட்டத்தில் விமான நிலையம், இராணுவ முகாம், விசேட அதிரடிப்படை முகாம்கள் அமைக்க நூற்றுக்கணக்கான தோட்டக் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன.

மேலும் தோட்டப்புறங்களிலுள்ள தரிசு நிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் வெளியார் குடியேற்றப்படலாம். எனவே மலையக தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அரசுடனும் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நில அபகரிப்பை ஓரளவாவது தடுத்து நிறுத்த வேண்டுமென முன்னாள் பிரதி நீதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக ௭திர்காலத்தில் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடையலாம். முன்னொரு காலத்தில் ஆட்சியமைப்பது யார் ௭ன்பதை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் விளங்கினோம் இன்று அந்த நிலை இல்லை ௭ன்றார்..
 _

பெட்ரோலுக்கு பதில் தண்ணீரில் ஓடும் கார்: பாகிஸ்தான் பொறியாளர் சாதனை


இஸ்லாமாபாத், ஜூலை 28- உலகம் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

எனவே பெட்ரோலுக்கு பதில் வாகனங்கள் தண்ணீரில் ஓடினால் எப்படி இருக்கும் என்று அனைவரும் விளையாட்டாக சொல்வது உண்டு. அதை உண்மையாக்கும் வகையில் தண்ணீரில் கார் ஓட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.  

அனைவரின் கனவையும் நனவாக்கி அபார சாதனை படைத்தவர் பெயர் வாக்கர் அகமது. பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர். பொதுவாக வாகனங்களை பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் மூலம் இயக்க முடியும்.

ஆனால், அவற்றை தண்ணீர் மூலம் இயங்க வைக்க வாக்கர் அகமது தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் ஒன்றை தயாரித்தார்.

அதை பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் வெற்றிகரமாக ஓட்டி காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.  

இவர் வடிவமைத்த அந்த கார் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்க கூடியது. அதற்கு தகுந்தபடி கார் என்ஜினை மாற்றி அமைத்துள்ளார். அதற்குள் ஊற்றப்படும் தண்ணீர் கொதித்து அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு மூலம் கார் இயங்குகிறது.

ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 1000 சி.சி. திறன் கொண்ட கார் 40 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை 150 கி.மீட்டர் தூரம் இயக்க முடியும் என பொறியாளர் வாக்கர் அகமது தெரிவித்துள்ளார்.  

வாக்கர் அகமதுவின் இந்த கண்டுபிடிப்பு பாகிஸ்தானின் சுதந்திரதின விழா பரிசு என மத விவகாரங்கள் துறை அமைச்சர் சையத்குர்ஷித் அகமதுஷா தெரிவித்துள்ளார்.

அவருக்கு தங்களது அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கும் என உறுதி கூறினார். மேலும் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்



  பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி காஹர் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸின் அழைப்பை ஏற்றே இவர் இலங்கை வருகின்றார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரை இவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 ___

பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் நடத்துவதற்கு விரும்புவதாக கியூப ஜனாதிபதி அறிவிப்பு _

அமெரிக்காவுடன் பேச்சுவார் த்தை நடத் து வதற்கு விரும்புவ தாக கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். புரட்சி தின வைபவமொன்றில் வியாழ க் கி ழமை உரையாற்றுை க யி லேயே அவர் இவ் வாறு தெரிவி த்து ள் ளா ர்.

அவர் கடந்த இரு வருடங்களாக புரட்சி தின வைபவங்களின் உரையாற்றுவதை தவி ர் த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குவான்டனமோ மாகாண த் தில் இடம்பெற்ற வைபவத்தில் ராவுல் காஸ் ட்ரோ உரையாற்றுகையில், ‘‘ அமெரி க் காவு க்கும் கியூபாவுக்குமிடையிலான கலந் து ரை யாடல்களில் சமத்து வம் பேணப்படும் நிலையில் அமெரிக்காவு டன் பேச்சுவார்த் தைகளில் ஈடுபட விரும்பு வ தாக கூறினார்.

மேற்படி பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஏற்கனவே இராஜதந்திர ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதாக கூறிய ராவுல் காஸ் ட்ரே ா ஆனால் வரையறைக ளுக்கு அப்பால் பேச் சுவார் த்தைகளுக்கு இடமில்லை ௭ன்று தெரி வித் தார். ஜனநாயகம் மனித உரி மை கள் ௭ன்பன தொடர் பில் பேச்சுவார்த் தைக ளில் ஈடுபடு வத ற்கு தான் தயாரா கவுள்ள தாக தெரிவித்த ராவுல் காஸ்ட்ரோ, ‘‘ஆனால் நாம் ௭ந்த நாட்டினதும் காலனித்துவ நாடாக இல்லையென்பதால் சமத்துவ அடிப் படை யிலேயே பேச்சுவார் த் ை தகள் இடம் பெற வேண்டும்’’ ௭ன வலி யுறு த் தி ன ா ர்.

கியூபாவிலான மனித உரிமைகள் விவ கா ரம் தொடர்பான அமெரிக்காவின் குற்றச் சாட் டு தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்காவும் விவாதத்துக்கு தன்னை உட் படுத்திக் கொள்வதற்கு தயாரானால் அது தொடர்பான கலந்துரையாடலை மகி ழ்ச்சியுடன் ஏற்பதாக அவர் கூறினார். 
_

samedi 28 juillet 2012

வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிலிருந்து விலகி இன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது கூத்தமைப்பு


தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்றெல்லாம் கொள்கைகளை கூறி அரசியலில் குதித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இன்று தமது கொள்கைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மிகவும் கீழ்த்ரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனத்தில் இருந்து அகன்றுகொண்டு வருகின்றது. அதுவும் குறிப்பாக கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு  மிகக்குறுகிய காலத்தில் சரிவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடைய வழிப்படுத்தலில் தமது கொள்கைகளை சரிவரக் கடைப்பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அவாகள்இல்லாத சூழலில் தமது கொள்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதனை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.  அந்தவகையில் தமது பிரதான கொள்கையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிலிருந்து விலகி இன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது. 
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் செல்வாக்கு கிழக்கில் சரியத்தொடங்கியதனை எடுத்துக்காட்டுவதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை இங்கு முன்வைக்கமுடியும். அந்தவகையில் பிரதானமாக அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்தேசியக் கூட்டமைப்பு) வருடாந்த மாநாடு மற்றும் தற்போதைய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்முடியும்.
 
இலங்கை தமிழரசுக் கட்சி என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பிரதான தலைமைத்துவக் கட்சியாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியே பலமானதும் தலைமைத்துவத்தையும் கொண்ட கடசியாகும். இக்கட்சியினுடைய 14 வது வருடாந்த தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 300 பேர் வரையிலான ஆதரவாளாகளே கலந்து கொண்டிருந்தனர். அதிலும் அதிகமானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிழக்கில் சரியத்தொடங்கியுள்ளது என்பதற்கு மிகப் பொருத்தமான சான்றாகும். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது அரசியல் பலத்தை கிழக்கில் இழந்து வருவதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கூட பத்திரிகைளில் எழுதியிருந்தார்கள். இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே ஏற்கனவே தமது மாநாட்டிற்கு குறைந்த மக்களே வருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தமையினால்தான் சிறியதொரு திருமணமண்டபத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மிகப்பெரியளவில் மைதானத்தில் தமது முதலாவது தேசிய மாநாட்டை  கல்லடியில் நடாத்தினார்கள் 13000 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவற்றை ஒப்பிட்டு நோக்குகின்றபோது கிழக்குத் தமிழர்களின் மனங்களிலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது என்பது புலப்படுகின்றது.
 
தற்போது செப்டம்பர் 8 இல் இடம்பெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளும் அதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் அடுத்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு மிகவும் மந்த நிலையில் உள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. குறிப்பாக இதனை விளக்குவதற்கு நாம் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் படுவான் கரையிலும், சந்திவெளியிலும் நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்களை சான்றாகக் காட்டலாம். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வி.ஆர். மகேந்திரன் என்பவருக்காக படுவான் கரையில் 23.07.2012 முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் வி.ஆர் மகேந்திரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா, யோகேஸ்வரன், அரியனேந்திரன் ஆகிய மூவரும் பிரசாரத்திற்காக வந்திருந்தனர். இக்கூட்டத்தில் மொத்தமாக கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 16 பேராகும் இதில் பாராளுமன்ற உறுப்பினர் மூவர் மற்றும் வேட்பாளர் மகேந்திரன் தவிர்த்துப் பார்த்தால் 13 பேர் ஏனையோர் அதிலும் கூட ஆலயத்தில் பணிபுரியும் சேவகர்களும் அடங்கும். அந்தவகையில் இந்த கூட்டத்தில் மக்கள் துளியளவெனும் ஆதரவில்லை என்பதனை எடுத்துக்காட்டப் போதுமானதாகும். 
 
அத்துடன் அண்மையில் சந்திவெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வேட்பாளர் கிருஸ்ணப்பி;ளை சேயோன் என்பவருக்கான இடம்பெற்ற கூட்டத்திலும் இதே நிலைமையே காணப்பட்டது. குறிப்பாக 30 பேர் வரையிலானவர்களே கலந்து கொண்டனர். அதிலும் சுமார் 20 பேர் வேட்பாளளருடைய உறவினர்களாவார்கள்.
 
படுவான் கரைப்பிரதேசமோ அல்லது சந்திவெளிப்பிரதேசமோ தமிழ்மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களாகும். அது தவிர கடந்த போராட்ட காலத்தில் பல வீரர்களை தியாகம் செய்த பிரதேசங்களுமாகும். அத்தகைய பிரதேசங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை இக் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதனை விரும்பவில்லை என்றால் ஏனைய பிரதேசங்களைப் பற்றிச் சொல்ல வேணடியதில்லை. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பனர் தமிழர் மனங்களிலிருந்து அகற்றப்படுகின்றமைக்கு காரணமே அவர்களுடைய கொள்கை மாறிய அரசியலும் தடம்புரண்ட அரசியல் பாதையுமே ஆகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் சமூகமளிக்காத தன்மையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் தேர்தலில் அவர்களுக்கு படுதோல்வியை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டும் சான்றாதாரங்களாகும். 
 
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒரவர் கூறினார்' இத்தடவை இடம்பெறும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைவதை விட, தேர்தலில் நிற்காமலேயே விட்டிருக்கலாம். ஏனெனில் குறிப்பிட்டளவு செல்வாக்காவது மக்களிடத்தில் இருந்;திருக்கும். கொஞ்சம் கௌரவத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்.' என்று மிகவும் கவலையுடன் கூறினார். இது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி உறுதியாகி விட்டதனை எடுத்துக்காட்டுவதற்குரிய சான்றாகும். உண்மையில் இவ்வருட ஆரம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத்தலைவரும் முன்னாள் முதல்வருமான பிள்ளையான் அவர்கள் பேச்சுக்கு அழைத்தும் கூட ஒரு பதிலும் கூறவில்லை. பல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி சில இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டும் என கோரியிருந்தனர். எல்லாவற்றையும் உதாசீனம் செய்து மீண்டும் கிழக்கின் முதல்வராக ஆளப்போகும்  பிள்ளையான் அவர்கள் முதல்வராக வராமல் இருப்பதற்கே  நாம் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற இறுமாப்புடன் தேர்தலில் குதித்தவர்கள் இன்று தமது இருப்பிற்கே உலைவைக்கப்பட்டதனை உணர்ந்து கதிகலங்கிப் போயுள்ளனர் .
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் சில ஆதாரங்கள்

jeudi 26 juillet 2012

இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம்சிறிலங்கா வர்த்தக கண்காட்சிக்கு



சிறிலங்காவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 100இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில் பங்கேற்க இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளது.

இந்தியாவின் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்தக்குழுவுக்குத் தலைமையேற்று கொழும்பு வரவுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் 5வது பணக்காரரான சுனில் பாரதி மிட்டலும் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 105 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் – அதிர்ச்சியில் புதுடெல்லி

திருகோணமலை, சம்பூரில் அணுமின்நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்காவுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது. 

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஆதரவுடன், சிறிலங்காவில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும். 

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கடந்தவாரம் புதுடெல்லியில் இருந்தார். 

அவர், சிறிலங்காவில் பாகிஸ்தானின் அண்மைய நகர்வுகள் குறித்த விபரங்களை உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. 

கொழும்புடன் பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவாக்கவும் பாகிஸ்தான் முனைகிறது. 

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வைத்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் உள்ள தமது பங்காளிக்கட்சியின் எதிர்ப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் சத்தமின்றி சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ளது. 

அதேவேளை, பாகிஸ்தானின் உதவியுடன் ரி-55 டாங்குகளின் இயந்திரங்களை மறுசீரமைத்தல், மற்றும் டாங்குகளின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் சூட்டுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நவீனமயப்படுத்துவது குறித்தும் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது. 

கொழும்புக்கு எந்தவொரு பாதுகாப்பு உதவிகளையோ அல்லது தளபாடங்களையோ வழங்கக் கூடாது என்று சென்னைப் பங்காளிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைக்குள் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்துள்ளது. 

இந்த அழுத்தத்தினால் சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

அண்மையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தியா ருடே குறிப்பிட்டுள்ளது.

mercredi 25 juillet 2012

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல்: தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர் கைது


இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு கடல்மூலமாக ஆட்களைக் கடத்திச்செல்லும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகுகளில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான வெள்ளத்தம்பி சுரேஸ்குமார் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதாக காவல்துறை தெரிவிக்கின்றது.
சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுத் துறையினர், இவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகண தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 700 பேர்வரை இந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
இந்த மாதத்தில் மட்டும் சுமார் 380 பேர்வரை காவல் துறையினராலும் கடற்படையினராலும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் சுமார் 300பேர் கிழக்கு மாகாணத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

mardi 24 juillet 2012

மகிந்த ராஜபக்சவிடம் இருந்தே முதல் வாழ்த்து – கொழும்பு வருமாறும் அழைப்பு பிரணாப் முகர்ஜிக்கு

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதாக நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. 

அவரது வெற்றி அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அழைத்து, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மலர்க்கொத்து ஒன்றையும் அவரது வசிப்பிடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். 

அத்துடன் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்திய - சிறிலங்கா உறவுகளை ஊக்குவிப்பதில் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்களித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். 

மேலும் பிரணாப் முகர்ஜி நாளை இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதும் முறைப்படியான வாழ்த்து சிறிலங்கா அதிபரிடம் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. 
பிரணாப் முகர்ஜிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த முதலாவது வாழ்த்து சிறிலங்கா அதிபருடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி.

  இந்தியாவின் தேவைக்கேற்ப முதலமைச்சர் ஒருவரை கிழக்கில் நியமிப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது ௭னத் தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கிழக்கில் தலைதூக்கியுள்ள ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் கை பொம்மையாக செயற்படக் கூடியவர் ஒருவரை முதலமைச்சராக நியமித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் அதேவேளை தமிழர் தரப்பு தமிழரொருவரையும் முஸ்லிம் தர ப்பு முஸ்லிம் ஒருவரையும் முதலமைச்சராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இவ்வாறான இனவாத ரீதியான சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இனங்களிடை யே ஒற்றுமையை கட்டியெழுப்பும் விதத்தி ல் அனைத்தும் அமைய வேண்டும். அதே வேளை கிழக்கின் முதலமைச்சர் ௭மது நாட்டு மக்களின் விருப்பு வெறுப்பிற்கமை யவே தெரிவு செய்யப்பட வேண்டுமே தவிர இந்தியாவின் தேவைக்காக அல்ல ௭ன்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டு ம். அத்தோடு கிழக்கில் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி பலாத்காரங்களை மேற்கொள்ளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை கண்டறிந்து தடுப்பதற்காக விசேட குழுவொன்று கிழக்கிற்கு அனு ப்பி வைக்கப்படுமென்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டம் மீறல் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலநறுவை நகரங்களில் பாரிய கட்அவுட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுவரொட்டிகள், பொலித்தீன் அலங்காரங்கள் ௭ன அரச தரப்பு முன்னாள் முதலமைச்சர்களும் வேட்பாளர்களும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொலித்தீன் பாவனை, சுவரொட்டிகள் ஒட் டுதல், சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறு ம் செயலாகுமென அரசாங்கம் கூறுகிறது. தேர்தல்கள் நடைபெறாத காலங்களில் நாம் சுவரொட்டி ஒட்டினால் பொலித்தீன் அலங்காரங்களை மேற்கொண்டால் கிழித்தெறியப்படுகின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் அரசாங்கம் சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறி செயற்படுகிறது.

மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசின் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை ஏமாற்றும் அரசின் கபடத்தனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ௭ன்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமத்திய மாகாண வேட்பாளர் குழுத் தலைவர் வசந்த சமரசிங்க, கிழக்கு மாகாண வேட்பாளர் குழுத் தலைவர் வசந்த பிய திஸ்ஸ, சப்ரகமுவ மாகாண குழுத் தலை வர் காமினி ரத்னாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 _

lundi 23 juillet 2012

வெற்றிலைச் சின்னத்தில் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - பூ.பிரசாந்​தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகுச் சின்னம் எங்கே ? வெற்றிலைச் சின்னம் எம் தமிழர்களின் எதிரி. அதனால் நாம் வாக்களிக்க மாட்டோம் என பல தமிழர்கள் கூறுவார்கள். நேரடியாக முள்ளிவாய்க்காலில் தமிழர்களையும், இளைஞர்களையும் கொன்று குவித்ததாகக் கூறப்படும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவில்லையா? அவரது சின்னம் என்ன வீடா? இல்லையே அவரது சின்னம் அன்னம். அதற்கு அப்ப ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். அதற்கு வாக்களிக்க இயலும் என்றால் ஏன் செவெற்றிலைக்கு வாக்களிக்க முடியாது.அதிகூடியளவில் தமிழர் கொலைகளும், பல சூட்சுமங்களும் செய்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? தமிழர்களின் இரத்தக் கறைகளை நிலத்தில் படியவைத்த சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்டு ஆதரவு தெரிவிக்கவில்லையா?
இவ்வாறான துரோகத்தனங்களை புரிந்துவிட்டு இன்று கிழக்கில் தமிழரின் ஆட்சியினை இல்லாதாக்க முனைவது ஏன்? என்ற கேள்விக்கு மத்தியில்,எது எவ்வாறு இருப்பினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினை இன்னும் 01 தசாப்த காலத்திற்கு மேல் யாராலும் மாற்ற முடியாது. கிழக்கிலும் ஆட்சியமைக்கப் போவது ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தான். அத்தோடு தமிழர்கள் தனித்து ஆட்சியமைக்க முடியுமா என்றால் இல்லை. ஆளும் அரசுடன் இணைந்தால் மாத்திரமே ஆட்சியமைக்க முடியும். மாறாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால் எதனையும் செய்ய முடியுமா? இல்லை. நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் 05 வருடத்தில்  எம் பரம்பரை கொட்டாவி மட்டும் தான் விட முடியும்.இதனைத் தடுத்து ஆளும் அரசில் அதிக ஆசனங்களைப் பெறுமிடத்தே ஆட்சியினையும் பிடித்து உரிமை, அபிவிருத்தி என்று பேரம் பேசவும் முடியும். எம் தமிழ் இனத்தின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்பதற்காகவே ஆளும் அரசுடன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.