dimanche 1 juillet 2012

யாழ் நீதவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ‘உதயன்’ பத்திராதிபர் !


உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு யாழ் நீதிவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர். யாழ் ஊடகவியலாளர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில் நடந்திருந்தது. யாழ் நீதிவான் திரு மா.கணேசராஜா அவர்களை அவமதிக்கும் நோக்கில், அவர் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியதாக உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டமைக்காக இன்று யாழ் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரே மேற்படி தவறை ஏற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன் ‘உதயன்’ பத்திரிகை உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தனக்கு பல சட்டத்தரணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளை பெயர் குறிப்பிட்டு நீதவான் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்திருந்தபோது அவர் பதிலேதும் கூறாமல் மௌனமாயிருந்ததன் மூலம் அக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நீதிமன்றின் இன்றைய இந்த நடவடிக்கைகளின்போது ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளரும் கோடீஸ்வரருமான திரு சப்றா சரவணபவானும் பிரசன்னமாகியிருந்தார். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களினதும், ஓய்வூதியர்களினதும் ஆயுட்கால சேமிப்பான கோடிக்கணக்கான பணத்தை கையாடியிருந்தார் என இவருக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால்கூட பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டிந்தது ஏற்கனவே தெரிந்ததே. இவரது குடும்பத்தின் ‘சப்றா’ நிதி நிறுவனத்தில்  இவரிடம் பணத்தை பறிகொடுத்திருந்த சில குடும்பங்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் கூட பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. பொலிஸ் உத்தியோகத்தரான இவரது தந்தையார் யாழ் பொது நூலக எரிப்புச் சம்பவத்துடனும் சம்பந்தப்பட்டிருந்தார் என பரவலாக குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.
பொதுவாக தேர்தல்களில் ஏழை மக்கள் போட்டியாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று வாக்களிப்பார்கள், ஆனால் இவரது விடயத்தில் இவருக்கு பணத்தையும் கொடுத்து மக்கள் தமது வாக்கையும் அளித்திருந்தார்கள் என பேசப்பட்டிருந்தது,
ஏறத்தாழ இரண்டு மணிநேரம் யாழ் நீதிமன்றில் நடைபெற்றிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் மீதான விசாரணையின் இறுதியில் உண்மைக்குப புறமபான செய்திகளை பிரசுரித்தமைக்காக ‘உதயன்’ பத்திராதிபர் பகிரங்க மன்னப்புக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, நாளைய ‘உதயன்’ நாளிதழிலும் பகிரங்க மன்னிப்பை வெளியிடவேண்டுமென கட்டளையிட்ட யாழ் நீதவான், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர முடியாது எனக் காரணம் காட்டுமாறு கட்டளையட்டு அவர்மீதான விசாரணையை வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire