dimanche 30 juin 2013

சி.ஐ.ஏ.வின் ஏஜென்டுகள், கிழக்கு ஐரோப்பிய ஆயுத கறுப்புச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி, துருக்கி மற்றும் ஜோர்தானுக்குள் கொண்டுவந்தார்கள். இந்த ஆயுதங்கள்தான் போராளி அமைப்பினருக்கு முதல் கட்டமாக கொடுக்கப்பட்டன. இதில் ரஷ்யாவை கொதிப்படைய வைத்த விஷயம்


சிரியாவில் அரசு ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினருக்கு ஆயுதம் வழங்குவதாக அமெரிக்கா சொல்லி விட்டது. ஓரளவு ஆயுதங்களும் போராளி அமைப்பினரின் கைகளை சென்றடைந்து விட்டன. அப்படியிருந்தும், போராளி அமைப்பினர் ராணுவத்தை ஏன் ஓடஓட விரட்டியடிக்கவில்லை?

மாறாக, போராளி அமைப்பினரால் முன்பு பிடிக்கப்பட்ட பகுதிகளை ராணுவம் அல்லவா அடித்து கைப்பற்றுகிறது என்று செய்திகள் வருகின்றன!
இதை புரிந்து கொள்ள, சிரியா அரசும், ரஷ்யாவுமாக சேர்ந்து செய்யும் சில ராஜதந்திர விளையாட்டுகளையும், சிரியா ராணுவம் மேற்றொள்ளும் சில ராணுவ வியூகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கா போராளி அமைப்பினருக்கு ஆயுதம் கொடுத்த விவகாரத்தில், ரஷ்யாவை சீண்டும் விஷயம் ஒன்றும் இருந்தது பலருக்கு தெரியாது. அந்த விஷயம்தான் ரஷ்யாவை முதலில் கோபப்பட வைத்தது.
விவகாரம் என்னவென்றால், போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை கொடுத்தது அல்லவா? உலக அளவில் ஆயுதத் தயாரிப்பில் நெம்பர்-1 ஆகவுள்ள அமெரிக்கா, தமது தயாரிப்பு ஆயுதங்களைத்தான் கொடுத்திருப்பார்கள் என்றுதான் ஊகிப்பீர்கள்.
ஆனால், நடந்தது அதுவல்ல!
அமெரிக்கா இதில் ஒரு தந்திரம் செய்தது. உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் ஏஜென்டுகள், கிழக்கு ஐரோப்பிய ஆயுத கறுப்புச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி, துருக்கி மற்றும் ஜோர்தானுக்குள் கொண்டுவந்தார்கள். இந்த ஆயுதங்கள்தான் போராளி அமைப்பினருக்கு முதல் கட்டமாக கொடுக்கப்பட்டன.
இதில் ரஷ்யாவை கொதிப்படைய வைத்த விஷயம் என்னவென்றால், கிழக்கு ஐரோப்பிய ஆயுத கறுப்புச் சந்தையில் வாங்கப்பட்டவை அனைத்துமே, ரஷ்யாவில் இருந்து ‘எப்படியோ’ கடத்தி வந்து விற்கப்பட்ட ஆயுதங்கள். ஆம், அவை ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள்.
சிரியா ராணுவத்துக்கு ரஷ்யாதான் பிரதான ஆயுத சப்ளையாளர். இதனால், சிரியா ராணுவம் யுத்தம் புரிவது ரஷ்ய ஆயுதங்களை வைத்துதான். இப்போது, அந்த ராணுவத்தை எதிர்த்து நிற்கும் போராளி அமைப்பினர் யுத்தம் புரிய தொடங்கியுள்ளதும், ரஷ்ய ஆயுதங்களைதான்!
போராளி அமைப்பினருக்கு ஆயுதம் கொடுப்பதை ரஷ்யா எதிர்க்கிறது. ஆனால் அமெரிக்காவோ, “ஆயுதமும் கொடுப்போம். அதுவும், உங்கள் நாட்டு ஆயுதங்களையே எம்மால் கொடுக்க முடியும்” என்று செய்து காட்டி ரஷ்யாவை சீண்டியது.
இதில் வெகுண்டுபோன ரஷ்யா, விளையாட்டை வேறுவிதமாக விளையாடியதில், இப்போது போராளி அமைப்பினர் அடி மேல் அடி வாங்குகின்றனர்.
சிரியா வரைபடம்
சிரியா வரைபடம்அப்படி என்னதான் செய்தது ரஷ்யா? அருகிலுள்ள வரைபடத்தை பாருங்கள்.
சிரியாவின் வடக்கு எல்லையில் உள்ள துருக்கியிலும், தெற்கு எல்லையிலுள்ள ஜோர்தானிலும்தான் சி.ஐ.ஏ. ஆயுதங்களை கொண்டுபோய் இறக்கி வைத்திருக்க, அந்த எல்லைகளை கடந்து வரும் போராளி அமைப்பினர் ஆயுதங்களை பெற்று செல்கின்றனர்.
ரஷ்யா என்ன செய்தது என்றால், துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனுக்கு கொக்கி போட்டது. ரஷ்ய ஜனாதிபதி புடின், துருக்கி பிரதமர் எர்டோகனை எப்படி ‘வழிக்கு கொண்டுவந்தார்’ என்று தெரியவில்லை, ஆனால் எப்படியோ வழிக்கு கொண்டுவந்து விட்டார் என்று தெரியும்.
அதையடுத்து, தமது நாட்டுக்குள் வைத்து ஆயுத சப்பை செய்ய வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது துருக்கி.
சி.ஐ.ஏ.யால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார்கோ விமானம் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன், துருக்கியில் இறக்கி வைத்திருந்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு போய், ஜோர்தானில் இறக்கியிருக்கிறது. இதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை.
சரி. சிரியாவின் வடக்கு எல்லையில்தான் ஆயுத சப்ளை அடைபட்டு விட்டது, தெற்கு எல்லை வழியாக, அதாவது ஜோர்தான் வழியாக ஆயுதங்களை கொடுக்கலாமே? அதில் என்ன சிக்கல்?
அதில் சிக்கல் கிடையாது. ஆனால், அங்குதான் வருகிறது சிரியா ராணுவத்தின் வியூகம் ஒன்று.
மேலேயுள்ள வரைபடத்தை பாருங்கள். இப்போது நண்டை மும்மரமாக நடப்பது, சிரியாவின் வடக்கு நகரமான அலீபோவில். அமெரிக்கா கொடுக்கும் ஆயுதங்கள், தெற்கு எல்லையில் உள்ள போராளி அமைப்பினரின் கைகளில் போய் சேருகிறது.
சிரியா ராணுவம் என்ன செய்திருக்கிறது என்றால், தெற்கு எல்லைக்கு அருகேயுள்ள தலைநகர் ஜோர்தானுக்கு வடக்கேயுள்ள வேகப் பாதையை, போராளிகள் கையில் இருந்து கைப்பற்றி விட்டது. இப்போது அந்தப் பாதை, சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதனால், அதிகம் சண்டை நடக்காத தெற்கு நகரங்களில் போராளி அமைப்பினர் கை நிறைய ஆயுதங்களுடன் உள்ளார்கள். சண்டை நடக்கும் அலீபோ நகரில், போராளிகள் கைகளில் ஆயுதம் தட்டுப்பாடு. இங்கிருந்து ஆயுதங்களை அங்கே கொண்டுபோக முடியாதபடி, இடையே ராணுவம்!
இதனால், போராளிப் படையினர் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்தின் கைகளில் விழுகின்றன.
சில தினங்களுக்கு முன் சிரியா – லெபனான் எல்லை நகரமான அல்-குசையிர், போராளி அமைப்பினரிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 16 நாட்கள் நடந்த யுத்தத்தின் பின், போராளி அமைப்பினர் அந்த நகரத்தை இழந்து பின்வாங்கினர்.
இலீபோ நகரம் அவ்வளவு சுலபமாக விழாது. ஆனால், அங்குள்ள போராளி அமைப்பினருக்கு ஆயுத சப்ளை போய் சேராவிட்டால், 40-50 நாட்கள் யுத்தத்தின் பின் விழ சான்ஸ் உள்ளது.
ஜோர்த்தானில் அமெரிக்கப் படைகள் கொண்டுபோய் இறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஏவுகணைகளும் ரெடி. விமானப்படை விமானங்களும் உள்ளன. சி.ஐ.ஏ.வின் ஆயுத ஸ்டாக்கும் உள்ளது.
இந்த ஆயுதங்களை எப்படியாவது அலீபோ வரை எப்படி கொண்டு போய் கொடுப்பது என்பதே, அமெரிக்காவின் ஒரே கவலை. தெற்கில் இருந்து வடக்கே செல்லும் பாதைகளில் அமெரிக்க விமானப்படை தாக்கி கிளியர் செய்து வழி ஏற்படுத்த நினைக்கலாம்.
அதற்காகதான், மேற்கு எல்லையில் உள்ள மெடடரேனியன் கடலில், ரஷ்ய போர்க்கப்பல்கள் வந்து நிற்கின்றன.
எப்படி இந்த ராணுவ வியூகம்?
படித்தது பிடித்திருந்ததா? இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

embraer-phenom-300-light-executive-jet-20130629-1CEmbraer Executive Jets are entering the Chinese business jet market

Embraer Executive Jets are entering the Chinese business jet market. Embraer announced yesterday that a Phenom 300 light executive jet will join the fleet of China’s Erdos

தென்னாப்பிரிக்க மக்களின் சம உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய நெல்சன் மண்டேலா(94) 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையை ஒபாமா பார்வையிடுகிறார்


தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94). கறுப்பர் இன விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தற்போது இவர் உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.எனவே, அவர் கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் மகாஷிவே, மற்றும் ஷிண்ட்ஷி உள்பட உறவினர்கள் 16 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தான் இறந்ததும் தனது உடலை மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என மண்டேலா கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே அங்குதான் அவரது உடலை புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அந்த குக்கிராமம் பிரடோரியாவில் இருந்து 600 மைல் தொலைவில் ஒரு மலையோரம் உள்ளது.
இதற்கிடையே ஆப்பிரிக்கா கண்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தென் ஆப்பிரிக்கா வந்தார். ஜோகன்ஸ்பர்க் வந்த அவர் அதிபர் ஜேக்கப் ஷுவை சந்தித்து பேசினார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கோலத்தில் நெல்சன் மண்டேலாவை நேரில் பார்க்க அவர் விரும்பவில்லை. எனவே மண்டேலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொவேடோவில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டக்கார்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ராபென் தீவு சிறையை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்வையிடுகிறார். ஐ.நா. சபை உலக புகழ்பெற்ற நினைவு சின்னமாக அறிவித்துள்ள இந்த சிறையில் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை அரசியல் கைதியாக நெல்சன் மண்டேலா கழித்துள்ளார். மக்களின் விடுதலைக்காக போராடிய மண்டேலாவை கைது செய்த அரசு அவரை சங்கிலியால் கட்டி ராபென் தீவில் உள்ள இந்த சிறைக்கு ஓர் மரக்கலனில் எற்றி அனுப்பி வைத்தது.
கைதி எண் 466/64 என்ற அடையாளத்துடன் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்ட மண்டேலா, மிக குறுகிய சிறை கொட்டிலில் கட்டாந்தரையில் படுத்து உறங்கி, பகல் முழுவதும் பாறைகளை உடைத்து தண்டனை காலத்தை நிறைவு செய்தார்.
‘எனது பொதுவாழ்வுக்கு தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாதான் முன்னோடி’ என்று பலமுறை வெளிப்படையாக கூறிவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த 2006ம் ஆண்டின் போது ஓர் எம்.பி.யாக மட்டும் இருந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து நெல்சன் மண்டேலாவை சந்தித்தார். அப்போது, ராபென் தீவு சிறையையும் அவர் பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு தற்போது தென்னாப்பிரிக்கா வந்துள்ள ஒபாமா, மீண்டும் இரண்டாவது முறையாக நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிறையை இன்று பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

85 வயது செங்கல் பாட்டி!

85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த 85 வயதுடைய சரஸ்வதியின் கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

தற்போது தனிமையில் வசித்து வரும் சரஸ்வதி பாட்டி,அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது சாப்பாடே செங்கல் மட்டும் தான், இதனால் இவரை செங்கல் பாட்டி என்றே அழைக்கின்றனர்.

தினமும் 1 முதல் 3 வரையிலான செங்கல்லை சாப்பிடுகிறார். சிறுவயதில் செங்கலை சுவைக்க தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட தொடங்கி, தற்போது கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோரும், திருமணத்திற்கு பிறகு எனது கணவரும் என்னை திட்டினர். பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

தற்போது Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி இந்த குறும்படம் என்ன சொல்கின்றது என பார்கின்றீர்களா?

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட வழக்கு நளினிக்கு சம்மன்

Naliniவேலூர்: ராஜீவ் கொலையாளி நளினிக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மனைவி நளினி, வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் சம்மன் அநுப்பியுள்ளது. இது வரை வெளி உலகிற்கு வராமல் சிறையில் இருந்து வரும் நளினி முதன்முறையாக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுவார் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1991 ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த காரணத்தை காட்டி நளினி தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோர் தரப்பில் தங்களின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிய வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வருகிறது. கருணை மனு காலம் தாழ்த்தியதை காரணமாக கொண்டு தங்களின் தூக்கை நிறுத்த வேண்டும் என கோருகின்றனர். இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடி வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2010 ஏப்ரல் ஏப்ரல் 29ம் தேதி வேலூர் பெண்கள் சிறையில் போலீசார் சோதனை நடத்தினர், இந்த சோதனையில் நளினியிடம் இருந்து 4 சிம்கார்டுகள், 2 மொபைல் போன் இருந்தது. இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மும்மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நளினி வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கான சம்மன் இன்று மதியம் நளினியிடம் வழங்கப்பட்டது.
நளினியை பொறுத்தவரை போலீசார் வெளியே எந்த ஒரு காரணத்திற்கும் அழைத்து வருவதில்லை. கடந்த முறை தன்னை விடுவிக்க கோரி இவர் தாக்கல் செய்த மனு மட்டுமே விசாரிக்கப்பட்டது. இதற்கு அரசு எவ்வித பதிலும் அளிக்காததால் இவரது சிறைவாசம் நீடிக்கிறது. இப்போது நளினியை வெளியே அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் போலீசாருடன் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
ராஜிவ் மகள் பிரியங்கா: நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் மகள் பிரியங்கா ராஜிவை கொன்றது ஏன் என நேரில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நவிப்பிள்ளை விடாப்பிடி

news
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்திலும், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நவிப்பிள்ளை வலியுறுத்தி இருந்தார்.
 
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.
 
இந்த நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் போர்க்குற்ற விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்துத் தாம் அவதானிக்கவுள்ளதாகவும், தனது பயணத்தின் போது பாதிக்கப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் அவர் இந்த நேர் காணலின் போது கூறியுள்ளார். 

கோதபாய ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பு

பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது கைத்தொலைபேசி ஊடான உரையாடல்கள் திருட்டுத்தனமான முறையில் ஒட்டுக் கேட்கப்பட்டமை, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை சட்டவிரோதமான முறையில் அதனூடாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனத்திடம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டுத் தூதுவராலயம் மற்றும் பிரபலமான வெளிநாட்டு புலனாய்வுச் சேவை அமைப்பு ஒன்றினாலும் இந்த ஒட்டுக் கேட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனைவிட மேலும் பல முக்கியஸ்தர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமையும் இதற்காக நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

samedi 29 juin 2013

தமிழ் கட்சிகள் எடுக்காத பகிர‌ங்க முடிவுகள் சிங்கள கட்சிகள் . இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை: வாசு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில்இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சிமறுக்கப்பட்ட நிலையில் பாக்., ராணுவம் பயிற்சி அளிக்க அதிரடி முடிவு

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி : பாக்., அதிரடி முடிவுஇலங்கை ராணுவ அதிகாரிகளு்க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்க எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் பாக்.ராணுவம் பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் மீது தாக்குதல்: @@தமிழகத்தின்கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற பகுதிகளை சேர்நத மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் இந்தியகடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை கப்பல் ப‌டை‌ வீரர்கள்மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல்,மீன்களை பறிமுதல் செய்தல், படகுகளில் உள்ள நவீன உபகரணங்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், நீரில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் தொடர்நது ந‌டத்திவருகி்னறன.

ராணுவத்தினருக்கு பயிற்சி :@@மேற்கண்ட நிகழ்வுகள் தினந்தோறும் ந‌ைடெபற்றுக்கொண்டிருந்த போதிலும் இலங்கை ராணுவ வீரர்களுக்குஇந்தியாவில் பயிற்சி அளிக்கஇந்திய அரசு முடிவு செய்தது.இதனையடுத்து தமிழகத்தின் நீலகரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவபயிற்சி மையத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துபல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்துஇலங்கை ராணுவ வீரர்களுக்குவேறு மாநிலங்களில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாக்., ராணுவம் ஆதரவு: @@இந்தியாவில்இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சிமறுக்கப்பட்ட நிலையில் பாக்., ராணுவம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாககூறப்படுகிறது. இது குறித்துசீன நாட்டிற்கு சொந்தமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானை சேர்ந்தராணுவ தலைமை அதிகாரி அஸ்பக் பர்வேஸ் க‌‌யானி இலங்கைக்கு நல்லெண்ண பயணமாக மேற்கொண்டுள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை ராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜகத் ஜெயசூர்‌யாவைசந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ராணுவ ஒத்துழைப்புநல்குவது உட்பட ‌பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. 

மேலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தேவையான பயி்ற்சியை பாகிஸ்தானில் மேற்‌கொள்வது என முடிவானதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்தியாவில் பயிற்சி மறுக்கப்பட்ட நிலையில் நமது எதிரி நாடான பாக்,ராணுவம் பயிற்சிஅளிக்க முன்வந்திருப்பது நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

குழந்தை.மூன்று பேரின் மரபணுக்கள் உருவாக்க பிரிட்டன் அனுமதி

பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் பரிசோதனை கூடத்தில் கருக்கட்டச் செய்யும் ஐவிஎஃப் முறையில் மூன்றாவது நபரின் இழைமணியை சேர்ப்பதே புதிய முறை.மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப் தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐவிஃஎப் என்பது பெண்ணின் கரு முட்டையையும் ஆணின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே கருக்கட்டச் செய்து பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரச்செய்கின்ற தொழிநுட்பம்.இந்த தொழிநுட்பத்தில் மூன்றுபேரின் மரபணுக்களைச் சேர்க்கும் நவீன முறைக்கே பிரிட்டன் அரசு சம்மதித்துள்ளதது.
இந்த மூன்று-பேர் ஐவிஃஎப் தொழிநுட்பம் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு மாறும் நுண்ணிய இழைமணி சார்ந்த (Mitochondria) நோய்களை தவிர்க்கமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் Mitochondria எனப்படும் இழைமணி உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் நுண்ணுறுப்பாகும். அது தாயின் கரு முட்டையிலிருந்தே குழந்தையின் உடலுக்கு கடத்தப்படுகிறது.
நலிவடைந்த இழைமணி 6,500-இல் ஒரு குழந்தையை பாதிக்கிறது. உடல் நலிவடையவும் தசைகள் சோர்வடையவும் கண்கள் குருடாகவும் இருதயம் பலவீனமடையவும் இவை காரணமாகின்றன. உயிரழப்புகளுக்கும் வழி வகுக்கின்றன.
இதனால் இன்னொருவரின் கருமுட்டையிலிருந்து இழைமணியைப் பெற்றுக்கொள்வதன்மூலம் இவ்வகை நோய்களை தவிர்க்கமுடியும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஒரு குழந்தை உருவாகக் காரணமாகின்ற இரண்டு பேரின் டிஎன்ஏ மரபணுக்களில் எந்தவிதமான மாற்றத்தையும் இந்த தொழிநுட்பம் செய்துவிடாது. ஆனால் மூன்றாவது நபரின் மிக நுண்ணிய இழைமணி மரபணுவும் குழந்தையுடன் கலப்பதை தவிர்க்க முடியாது போகும்.
ஆனால் இந்த நடைமுறை மனித வாழ்வியல் விழுமியங்களுக்கு ஒத்துவராது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படையினருக்கு காணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை சிறிலங்காப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ள இந்தக் கிராமத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கவும் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

vendredi 28 juin 2013

அனைத்து ஈழபோராட்ட அமைப்புக்களும் மூடப்படாத கட்டத்தில். சுத்தமாக காட்டிக்கொடுத்து பல பெண்களை விதவையாக்கி விளியேறிய தமிழினி

Thamiliniதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி கடந்த புதன் அவசராவசரமாஅக விடுதலை செய்யப்பட்ட பின்னர் வடமாகாண தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது புலிகளின் முன்னை நாள் முக்கிய உறுப்பினராவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
தயா மாஸ்டர் எனப்படும் முன்னை நாள் புலிகளின் முக்கிய உறுப்பினர் வடக்கு தேர்தலில் போட்டியிடுகிறார் என உறுதியாகியுள்ளது.
தமிழினியின் கட்டளைக்கு உட்படுத்தப்பட்ட, அவரால் பயிற்சியளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சிறைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தயாமாஸ்டரால் வழி நடத்தப்பட்டவர்களில் பலர் எங்கே என்று தெரியாத நிலை உள்ளது.
பாசிச ராஜபக்ச அரச அதிகாரத்திற்கு எதிராகவும் இந்திய இலங்கை கூட்டுச் சதிக்கு எதிராகவும் அழிப்பவர்களோடு சமரசம் செய்து முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நான்கு வருடங்கள் கடந்து போயின.
இதன் வழியாக தமிழ்ப் பேசும் மக்கள் என்றும் இல்லாத ஒடுக்கு முறையையும் நில ஆக்கிரமிப்பு உட்பட இனச்சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கபடுகின்றனர்.
உலகின் நட்பு சக்திகளோடு இணைந்து மக்களின் ஜனநாயக முற்போக்கு போராட்டங்களுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. தான் இனிமேல் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட மாட்டேன் என ஒரு வருடம், வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கை கொண்டு நடத்த போவதாகவும் கடந்த காலங்களை மறந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, தனது தங்கையின் இரண்டு பிள்ளைகளுடன் மகிழச்சியாக வாழ்வதாகவும்  தேவையற்ற விடயங்களில் தலையிட போவதில்லை எனவும் எதிர்காலத்தில் சமூகத்திற்கு சிறந்த சேவையாற்ற எண்ணியுள்ளதாகவும் தமிழினி கூறியுள்ளார்  பலய பதிவு .

அன்று வந்ததும் இதே நிலா.... இன்று வந்ததும் அதே நிலா....அரசாங்கத்துடன் ..................... நடத்தத் தயார் : TNA

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிமை இரண்டாவது தடவையாக சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் தம்மை பிழையாக மீண்டும் வழிநடத்தி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது 13ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்கு முழு அளவில் யதார்த்தமான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அசராங்கம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை :
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதா இல்லை என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அறிவித்த பின்னர், தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்தியா சென்றிருந்த சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்;;த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், இந்திய எப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்-ஜே.வி.பி.எம்.பி. சுனில் ஹந்துன் நெத்தி

அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் வடக்கின் அதிகாரப்பகிர்வினைப் பற்றி மட்டும் பேசுகின்றனரே தவிர, வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி பேசுவதாக இல்லை. வடக்கில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பிரயோகிப்பதா இல்லையா என்பதை விட வடக்கின் தமிழர்களை (பாதுகாக்க அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நிப்பொன் ஹோட்டலில் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திற்கொள்ளாது வடக்கில் 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்வாதார
பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
இன்று வரையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி எவரும் கதைக்கவுமில்லை. இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் எந்தத் தீர்வும் எடுக்கப்படவும் இல்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது.
வடக்கில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாய், தந்தையரை இழந்தும் பிள்ளைகள், கணவனை இழந்தும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் உள்ள மீனவர்கள் தொடர்ந்தும் இதுவரையும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
மேலும், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு தமது மொழியிலேயே அவர்களின் கருமங்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று வரையிலும் அப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இன்றும் வட பகுதிகளில் கட்டுப்பாடுகள், பலாத்காரம், ஆட்கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவை தொடர்பில் அப் பகுதி கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த கல்வி முறைமைகள் இல்லாதுள்ளது.
யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட தமிழர்கள் இன்னமும் இராணுவக்கட்டுப்பாடுடனேயே உள்ளனர். இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இவ்வாறு அப்பதவி மக்களுக்கு பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதா? இனியாவது அரசாங்கம் இவை தொடர்பாக பேசுமா?
சிறுபான்மை மக்களுக்கு சேவைகளை வழங்க அவர்களைப் பாதுகாக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை அரசு தவறவிட்டுவிட்டது. ஆகவே, இனிமேலாவது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களை மதிக்கும் செயற்பாட்டினை அரசு செய்ய வேண்டும்.
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் வடக்கு மக்களை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமாகும்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பின் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாகுமென அரசாங்கம் நினைக்கின்றது. 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் எவை இருந்தும் பிரயோசனமற்றதே. முதலில் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான ஓர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மண்சரிவுகளில் சிக்கியவர்களில் மேலும் 3,000 பேர் உத்தராகண்ட் மாநிலத்தில்

மழைவெள்ளத்தாலும் மண்சரிவுகளாலும் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மலைப் பகுதிகளில் மேலும் 3,000 பேர் சிக்கியிருப்பதாக இந்திய வட  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அங்கு இதுவரை 800 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது உத்தராகண்ட் மாநிலத்தில் மீட்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக சென்றுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், பெரும்பாலானவர்கள் பத்ரிநாத் கோவில் நகரிலேயே சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 350 ஆக இருக்கலாம் என்று முன்னர் ஊகிக்கப்பட்டதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 3,000 வரை இருக்கலாம் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நிவாரண முகாம்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில், மேலும் 43 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த அழிவில் மாட்டிக்கொண்டவர்களில் இதுவரை ஒரு லட்சம் பேர் வரையில் மீட்புப் பணியாளர்களால் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
மலைப்பகுதிகளுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைத் தேடி விமானப்படையினர் தொடர்ந்தும் ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கு சென்றுவருகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தராகண்ட் சென்ற இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், கேதார்நாத் கோவில் நகரில் சிக்கியிருந்த எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 500 பேர்வரையில் தற்போது மீட்கப்பட்டுவருவதாக ஹார்சில் பகுதியிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும், மேலும் 2,500 பேர்வரையில் பத்ரிநாத் கோவில் நகரில் சிக்கியிருப்பதாகவும் கூறினார்.
காலநிலை ஒத்துழைத்தால் அவர்களும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

jeudi 27 juin 2013

13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான அமைச்சர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சி

புதல்வரை அரசியலில் களமிறக்க 13ம் திருத்ததிற்கு ஆதரவான அமைச்சர்களை சந்திரிக்கா பயன்படுத்த முயற்சி –புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் களமிறக்குவதற்காக 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான அமைச்சர்களை முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்து வருவதாக 
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்கு சந்திரிக்கா முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமஷ்டி, பிரிவினைவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி, எல்.எஸ்.எஸ்.பீ., சீ.பி.எஸ்.எல்., என்.எஸ்.எஸ்.பீ மற்றும் விஜய குமாரதுங்கவின் மஹஜன கட்சி ஆகியன 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு இந்தக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்த்து மீண்டு;ம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மகிந்தவிட சந்திரிகா பலமுள்ளவர் என்றால், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெட்கப்பட வேண்டியவர்;தேரர்

மகிந்த ராஜபக்ஷவை விட சந்திரிகா பலமுள்ளவர் ஆயின்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெட்கப்பட வேண்டியவர்நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அஞ்சி முன்னுக்கு வந்து குரல் கொடுக்காததன் மூலம் மகிந்த ராஜபக்ஷவை விட சந்திரிகா பலமுள்ளவர் என்பது தெளிவாகியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மகிந்தவிட சந்திரிகா பலமுள்ளவர் என்றால், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெட்கப்பட வேண்டியவர் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் தேசிய ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்தவின் நிலைப்பாட்டை சமூகமயப்படுத்துவதற்காக சாட்டையாளர்கள் சிலர் வெளியில் குதித்துள்ளனர். அவர்கள் அன்று எங்கிருந்தனர் என்பதை ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்.
தற்போது ராஜித, வாசு, பீரிஸ்  போன்றவர்கள் ரகசியமான முறையில் சந்திரிகாவை சந்திக்கின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்ஷவிடம் சென்று நாட்டை பிரிப்பதற்கான Nவைகளை இவ்வாறே செய்து வருகின்றனர் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார். 

13 பிளஸ் வழங்குவேன் என்றும் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடகம் ஆடுகிறார். அவரைப்போல் நடிகர் யாருமே இருக்க முடியாது : விக்கிரமபாகு

விக்கிரமபாகுநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்துவோம் என்றும் 13 பிளஸ் வழங்குவேன் என்றும் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று 13 பிளஸ் என்றால் என்ன? நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை என்றால் என்ன? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடகம் ஆடுகிறார். அவரைப்போல் நடிகர் யாருமே இருக்க முடியாது என்று நவசமசமாஜயக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பு, பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பினர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், இலங்கைக்கு தேவையில்லையென்று விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் கூறுகின்றார்கள், ஆனால் இந்தியாவினால் இந்து நாட்டுக்குள் பௌத்த மதம் வந்தது என்பதை அவர்கள் அறியவில்லையா, பௌத்தத்தை போற்றி காக்கும் அவர்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இந்தியா உள்நாட்டு பிரச்சினையில் தலையீடு செய்யக்கூடாது என கூறுகிறார்களே, உண்மையில் அப்பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் வேறு யார் தலையீடு செய்வார்கள்? இந்தியாவில் 80 வீதம் இந்துக்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். அந்த மக்கள் இந்த நாட்டில் அநீதியாக நடத்தப்பட்டால் இந்தியா தலையீடு செய்யும், செய்யத்தான் வேண்டும்.
இந்தியாவிலிருந்து அசோக சக்கவர்த்தி காலத்தில் சங்கமித்தை வெள்ளரச மரக் கிளையை கொண்டு வந்ததோடு பௌத்தத்தைத் தழுவினால் நன்மை என்றுதான் கூறினார்கள். ஆனால் தேவ நம்பியதீசன் உடனே பௌத்தத்திற்கு மாறினான். அவரை பின்பற்றிய மக்களும் மாறினார். இன்று தேவ நம்பிய தீசனை உயர்ந்த இடத்தில் வைத்து போற்றுபவர்கள் அதே இந்தியாவின் தலைமையில் வந்த 13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டுகமென கோருவது கேளிக்கையாகவுள்ளது.
13 ஆவது திருத்தம் என்பது உண்மையில் இந்தியாவினால் இங்கு கொண்டு வரப்பட்டதல்ல, அது வட்ட மேசை மாநாட்டின்போதே முன்வைக்கப்பட்ட ஒரு அம்சம், அது தமிழ்- சிங்கள தலைமைகளின் பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு இணக்கம், அதற்கு முன்னர் இதுபோல பல ஒப்பந்தங்கள் தமிழ், சிங்கள தலைமைகளுக்கு இடையே ஏற்படுவதற்கான முயற்சிகள் எடுத்தும் இறுதியில் டட்லி, பண்டாரநாயக்க ஆகியோர்
செல்வநாயகத்துடன் செய்து கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தமையாலேயே ஜே.ஆர். ஜெயவர்தன அவ்வாறு செய்துவிட கூடாது என்பதற்காகவே, இந்தியா முன்னின்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தியது. அது இந்த நாட்டுக்கு தேவையான ஒன்று, அதனை இல்லாது செய்ய முயற்சிப்பது அநீதியான துரோக செயல் என்பதை அரசாங்கமும் அரசில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளும் உணர வேண்டும்.
ஒரு பெண்ணை ஆணுக்கு திருமண பொருத்தம் பார்த்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தேனிலவுக்கு சென்ற பின்னர் மீண்டும் பொருத்தம் பார்க்க வேண்டும் என மணப் பெண்ணின் அப்பா கூறுவதுபோலவே மஹிந்த ராஜபக்ஷவின் செயல் 13 ஆம் திருத்தம் தொடர்பில் உள்ளது. இது மிக வேடிக்கையான முட்டாள்தனமான செயலாகும், எனவும் அவர் தெரிவித்தார்.

விலகிக்கொள் தனது அதிகாரத்திற்கு தனது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள்;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது.இதேவேளை தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டடு உள்ளனர்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும் என்ற போதிலும்,ஆளும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு அனைவரும் இணங்க வேண்டும்.
கடந்த தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அனைவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக எவரும் செயற்பட முடியாது அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிஸ்-பிரான்ஸ் 30 யூன் 2013 4.00 மணிக்கு 23வது தியாகிகள் தினம்


பூமியைப் போலவே இருக்கும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள்கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் உண்மையான பிரச்சிணைகளை மூடி மறைக்கவுமே அரசாங்கம் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக் குழு ; ரில்வின் சில்வா

news
அரசியல் தீர்வு விவகாரத்தையும் தமிழர்களின் உண்மையான பிரச்சிணைகளை மூடி மறைக்கவுமே அரசாங்கம் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்துள்ளது ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதத்தை தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் அரசாங்கம் தூண்டி விட்டுள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும். கடந்த நான்கு வருடத்தில் அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமையினால் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் கைவிட்டுப் போயுள்ளது.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான முட்டாள் தனமான நடவடிக்கைகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கட்டாய யோசனைகளையும் ஜே. வி. பி முன் வைக்கவுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி கலந்துக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=416672130427625579#sthash.mj1bhNB3.dpuf

mercredi 26 juin 2013

தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.

தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

கறுப்பர்களின் மகாத்மாவாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா;தெ.ஆப்ரிக்காவில் குழந்தைகள் கண்ணீர் பிரார்த் தனை

கறுப்பு இன மக்களின் உரிமைக்காக போராடி 27ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கறுப்பர்களின் மகாத்மாவாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா கடந்த 10நாட்களுக்கும் மேலாக நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு போராடிய நிலையில் பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இழப்பு ஏற்க முடியாத அளவுக்கு இந்நாட்டு மக்கள் இவர் மீது பாசம் வைத்துள்ளனர். இவர் உயிர் பிரியக்கூடாது என்றும் இவருக்கும் இன்னும் ஆயுள் கொடு என்றும் மக்கள் பல தரப்பினரும்,ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மண்டேலா வீடு மற்றும் அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பாக பள்ளி சிறுவர்,சிறுமிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.பிரார்த்தனை பாடல்கள் பாடியும்,வண்ண பலூன்கள் பறக்கவிட்டும் ஆங்காங்கே சிறார்கள் குழுமியுள்ளனர். நகர முக்கிய வீதிகளில் இவரது உருவபடங்கள் தொங்க விடப்பட்டுள்ளன,
மண்டேலா இந்நாட்டின் விடுதலைக்கு பின்னர் முதல் கறுப்பர் இன அதிபர் ஆனவர்.27ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து 1990ல் விடுதலை செய்யப்பட்டார்.தொடர்ந்து 1994ல் அந்நாட்டின் முதல் அதிபர் ஆன கறுப்பர் இனத்தவர்.இவரது போராட்டம் ஒரு இன போராட்டமாக இருந்து வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்.இதனால் இந்நாட்டு மக்கள் இவரை தந்தையாக பாவிக்கின்றனர். இவருக்கு தற்போது வயது (94).
அதிபர் ஷூமா தகவல்:தற்போதைய அந்நாட்டு அதிபர் ஷூமா மண்டேலா நலம் குறித்து ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார்.பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,மண்டேலா விரைவில் குணமடைவார்.நமது இனிய தலைவருக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வதன் மூலம் மக்கள் அவரோடு இருக்கின்றனர் என்றார்

இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்கா மோசமடையக் காரணம்

இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்காவுடனான உறவுகள் மோசமடையக் காரணம் என்று இந்தியாவின் முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங் குற்றம்சாட்டியுள்ளார். 

புதுடெல்லியில் இன்று சியாம் பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘தேசிய அடையாளம் மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் அங்கு உரையாற்றும்போது, 

“இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்காவுடனான உறவுகள் மோசமடைந்ததற்குக் காரணம். 

இந்தியா ஊக்குவித்த விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே, சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையினரைப் போரிட வைத்தது,எமது மோசமான அனுபவத்துக்கு ஒரு உதாரணம். 

எல்லை விவகாரங்களில் சீனா, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தவறான வெளிவிவகாரக் கொள்கைக்கு உதாரணமாகும். 

சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்திக் கொண்டிருந்த போது, உலகில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதே நேருவின் முதல் கவலையாக இருந்தது. 

பெரும் பிரதேசத்தைக் கொண்ட, ஆனால் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளின் பின்னரும் இன்னமும் தெளிவாக எல்லைகளை வரையறுக்காத உலகின் ஒரே நாடாக இந்தியாவே இருக்கிறது. 

2002ம் ஆண்டு வரை இந்தியாவுக்குச் சொந்தமாக எத்தனை தீவுகள் உள்ளன என்ற விபரமே தெரியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜஸ்வந்த்சிங், 1998ம் அண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை இந்தியாவில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில், வெளிவிவகார, நிதி, பாதுகாப்பு அமைச்சர் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது

abdul kareem
வூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது. எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார். இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.

69 வயதான முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப் இப்போது வீட்டுக் காவலில் வழக்கில் முஷாரப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை

பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை இரண்டு தடவை மீறியுள்ள முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப், தம் மீதான தேசத்துரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.இந்தத் தகவல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். இதுகுறித்து ஷெரீப் நாடாளுமன்றத்தின் கீழவையில் திங்கள்கிழமை கூறியதாவது:  முஷாரப்பின் கடந்த கால நடவடிக்கைகள் தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் வருகின்றன. 69 வயதான முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப் இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடந்த கால நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்லி ஆக வேண்டும். தன் மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என ஷெரீப் தெரிவித்தார். இவரது இந்த கருத்துக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி, தெஹ்ரிக்-இ-இன்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையே, முஷாரப் மீதான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கு தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்த அறிக்கையை அட்டர்னி ஜெனரல் முனிர் மாலிக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தினால் அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் எனத் தெரிகிறது. ஏனென்றால், முன்னாள் ராணுவத் தளபதியான முஷாரப் தண்டிக்கப்படுவதை ராணுவம் விரும்பாது என்று கூறப்படுகிறது.

mardi 25 juin 2013

13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் -தலைவர் ரி.எம்.வி.பி.

13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதே வேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதல் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தாh.;
சி. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியலில் மிகவும் பேசப்படுகின்ற ஓர் முக்கிய அம்சமாக 13ஆவது திருத்தச் சட்டம் திகழ்கிறது. அதாவது 13ஆவது திருத்த சட்டத்தினை முற்றாக அகற்றுதல் அல்லது; அதனுடைய முக்கிய சரத்துக்களை நீக்குதல் என்கின்ற பிரச்சினை பல விமர்சனங்களைக் கொண்டமைந்திருக்கின்றன. இது தொடர்பில் பல அரசியல் வாதிகளும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக இதற்கு எதிராக ஒரு சில பொறுப்புமிக்க ஆளுங்கட்சி அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவன் மற்றும் அரசின் பங்காளி கட்சிகளில் ஒன்றின் தலைவன் என்ற வகையிலும் மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறான கருத்தானது உண்மையில் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைத் தேசத்தின் சமூக நல்லிணக்கத்தோடு கூடிய அபிவிருத்திற்கு தடையாக அமைவதோடு ஆரோக்கியமற்றதொன்றாகவும் அது காணப்படுகிறது.
அரசுடன் ஓர் பங்காளி கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில்  எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம். அதேவேளை தென்னிலங்கையிலிருந்து கொண்டு இனவாத விசத்தை கக்குகின்றவர்களுக்கு எதிராகவும் எமது சிறுபான்மை மக்களது அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்ற உண்மையான உள்ளங் கொண்ட அரசியல் தலைவர்களுடன் இணைந்து கரம் கோர்த்து செயற்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது என்ற செய்தியையும் இந் நன்னாளிலே தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சடைகின்றேன் எனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்களங்களின் பொறியியலாளர் ஞானப்பிரகாசம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான புவி, ஞானமுத்து, நடராஜா, மற்றும் கிரான் கூட்டுறவு திணைக்களத்தின் பிரதிநிதிகள், முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள், ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
குறிப்பு:- ரெஜி என்பவர் கருணா அம்மானின் சொந்த அண்ணன். இவர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.

தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21 அல்லது 28 இல் ! தேர்தல்கள் ஆணையாளர்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று திங்கட்கிழமை (24) அறிவித்துள்ளார்.

தற்போது மாகாணசபை வேட்பாளரகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் சார்பாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரவூப் ஹக்கீம், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை?

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாதபடியாலேயே சிங்கள கடும்போக்கு கட்சிகள் மாகாணசபை முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறுவதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள்
இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர்.
அவர்கள் கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்கள் மாகாணசபை முறையை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்துக்கு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான வாசுதேவ நாணயகக்கார, ராஜித்த சேனாரத்ன, திஸ்ஸ வித்தாரண, டியு குணசேகர, சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த ஊடக சந்திப்பில் பேசினார்கள்.
இவர்களோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் முன்னர் ஊடகவியலாளர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகிறதா?

'ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரங்களை தமிழர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக கடந்த காலங்களில் சிலர் கூறினார்கள். எல்டிடி இருக்கிறபடியால் தான் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருக்கும்போது அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் புலிகள் நாட்டை பிரித்துவிடுவாரகள் என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்போது புலிகள் இல்லை. ஏன் அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்று அதே நபர்கள் இன்று கூறுகிறார்கள்' என்றார் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன.
உலகில் பல நாடுகளில் பிரிவினைக் கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்ட பின்னர் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையையும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்கள்.
தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத் தரப்பால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர்கள் கூறினார்கள்.
'காணி அதிகாரம் கொடுத்துவி்ட்டு பின்னர் காணிகள் ஆணைக்குழு மூலம் ஜனாதிபதி ஜேஆர் அதனைப் பறித்துக்கொண்டார். பொலிஸ் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு பொலிஸ் ஆணைக்குழு மூலம் அதனையும் பறித்துவிட்டார்' என்றும் அமைச்சர் ராஜித்த கூறினார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பறித்துவிட வேண்டும் என்றும் ஆளும் சுதந்திரக்கூட்டமைப்பு அரசிலுள்ள விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கடும்போக்கு பௌத்தவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.