jeudi 20 juin 2013

அமெரிக்கா அறிவிப்பு;தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு தயார்

அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப் கானிஸ்தானில் பதுங்கினார். எனவே, அவரை பிடிக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு கடந்த 2001-ம் ஆண்டு முகாமிட்டன. அப்போது அங்கிருந்த தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாக போர் நடந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2014) ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் முழுவதும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நேற்று ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் அந்நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ படை ஒப்படைத்தது. அதற்குரிய முறைப்படியான விழா தலைநகர் காபூலில் அதிபர் கர்சாய் முன்னிலையில் நடந்தது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப தலிபான்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா நேற்று அறிவித்தது. அதற்கு தலிபான்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தலிபான்கள் தங்களது முதல் வெளிநாட்டு அலுவலகத்தை கத்தாரில் தொடங்கியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோகா நகரில் நாளை (20-ந்தேதி) தொடங்க உள்ளது. பேச்சு வார்த்தையில் சிறை கைதிகள் பரிமாற்றம் முக்கிய பிரச்சினையாக இடம் பெறுகிறது.
மேலும் தலிபான்களுடன் நடத்த உள்ள இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியும் பங்கேற்பார் என அந்நாட்டு அதிபர் கர்சாய் அறிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை சமசர முயற்சிக்கு முதல்படி என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சமரச பேச்சுவார்த் தைக்கான ஏற்பாடுகள் நடைபெறும் இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் 4 அமெரிக்க ராணுவ வீரர்களை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். காபூல் அருகே உள்ள பக்ராம் விமான படை தளத்தில் நடந்த தாக்குதலில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் அமெரிக்கா- தலிபான்களுக்கு இடை யேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire