dimanche 30 juin 2013

கோதபாய ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பு

பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது கைத்தொலைபேசி ஊடான உரையாடல்கள் திருட்டுத்தனமான முறையில் ஒட்டுக் கேட்கப்பட்டமை, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை சட்டவிரோதமான முறையில் அதனூடாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனத்திடம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டுத் தூதுவராலயம் மற்றும் பிரபலமான வெளிநாட்டு புலனாய்வுச் சேவை அமைப்பு ஒன்றினாலும் இந்த ஒட்டுக் கேட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனைவிட மேலும் பல முக்கியஸ்தர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமையும் இதற்காக நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire