dimanche 30 juin 2013

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட வழக்கு நளினிக்கு சம்மன்

Naliniவேலூர்: ராஜீவ் கொலையாளி நளினிக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மனைவி நளினி, வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் சம்மன் அநுப்பியுள்ளது. இது வரை வெளி உலகிற்கு வராமல் சிறையில் இருந்து வரும் நளினி முதன்முறையாக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுவார் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1991 ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த காரணத்தை காட்டி நளினி தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோர் தரப்பில் தங்களின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிய வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வருகிறது. கருணை மனு காலம் தாழ்த்தியதை காரணமாக கொண்டு தங்களின் தூக்கை நிறுத்த வேண்டும் என கோருகின்றனர். இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடி வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2010 ஏப்ரல் ஏப்ரல் 29ம் தேதி வேலூர் பெண்கள் சிறையில் போலீசார் சோதனை நடத்தினர், இந்த சோதனையில் நளினியிடம் இருந்து 4 சிம்கார்டுகள், 2 மொபைல் போன் இருந்தது. இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மும்மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நளினி வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கான சம்மன் இன்று மதியம் நளினியிடம் வழங்கப்பட்டது.
நளினியை பொறுத்தவரை போலீசார் வெளியே எந்த ஒரு காரணத்திற்கும் அழைத்து வருவதில்லை. கடந்த முறை தன்னை விடுவிக்க கோரி இவர் தாக்கல் செய்த மனு மட்டுமே விசாரிக்கப்பட்டது. இதற்கு அரசு எவ்வித பதிலும் அளிக்காததால் இவரது சிறைவாசம் நீடிக்கிறது. இப்போது நளினியை வெளியே அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் போலீசாருடன் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
ராஜிவ் மகள் பிரியங்கா: நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் மகள் பிரியங்கா ராஜிவை கொன்றது ஏன் என நேரில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire