dimanche 16 juin 2013

காவல்துறையினருக்கு உரிமையில்லை காதலர்களை தண்டிக்க;டலஸ் அழப்பெரும

 காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை – டலஸ் அழப்பெரும
காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமை கிடையாது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை – டலஸ் அழப்பெருமகைகளைக் கோர்த்துக் கொண்டு ஒரு குடையில் இருக்கும் காதல் ஜோடிகளை தண்டிக்க காவல்துறையினருக்கு அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை ஓர் பிழையாக தாம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மாத்தறையில் 80 இளம் காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குடையின் கீழ் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பது, கைகளைக் கோர்த்துக் கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களது கன்னங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை, ஆடையின்றி அநாகரீகமாக நடந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளுக்கு எதிரில் கதைத்துக் கொண்டிருந்தால் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் 400 ரூபாவிற்கு அறையொன்றை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், அவ்வாறு பணத்தை செலவிட முடியாத காரணத்தினால் இவர்கள் வெளியிடங்களில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் காவல்துறையினரின் பிள்ளைகளுக்கு இவ்வாறான பிரச்சினைகள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பாதாள உலகக் கோஷ்டியினர், சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் முழு இரவையும் இரவு நேரக் களியாட்ட விடுதிகளில் நேரத்தைக் கழிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire