mardi 4 juin 2013

நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரலாம்........!புகைபிடிப்பதனால் ஒருவர் இறக்க நேர்ந்தால்

புகைப்பிடித்தலின் மூலம் ஆண்டொன்றுக்கு இறக்க நேரிடுகின்ற இலங்கையர் தொகை 21600 ஆகும். 1988 இல் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினம் ஆரம்பிக்கப்படுகையில் உலகம் முழுதும் சிகரட் புகைத்தலினால் இறந்தவர்களின் தொகை 20 இலட்சமாகும்.

2012 ஆகும்போது,60 இலட்சமாக அது அதிகரித்துள்ளது.

சிகரட் மனித உயிர்களைக் காவு கொள்வதை மாத்திரமே செய்கின்றது. அதனை இல்லாதொழிப்பதே 'சுவர்ணஹங்ஸ' அமைப்பின் நோக்கம் என புண்ணியவர்தன குறிப்பிடுகிறார்.

ஆசியாவின் முதலாவது சிகரட்டுக்கான நட்டஈடு மாநாட்டின்போது, சட்டத்தரணி கனிஷ்க விதாரன குறிப்பிடும்போது, 'சிகரட் புகைப்பதன் மூலம் யாரேனும் இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பம் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியும்' என்று குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire