vendredi 7 juin 2013

பல நோய்கள் ஏற்படும் அபாயம்: பிரித்தானிய ஆய்வில் தகவல்.தவறான அளவுகளில் மார்பு கச்சை அணிவதால்

பெண்கள் தவறான அளவுகளில் உள்ளாடை அணிவதால் உடல்நிலையில் பல மோசமான விளைவுகளை சந்திப்பதாக பிரித்தானிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பெண்கள் அணியும் உள்ளாடைகளால் முக்கியமாக தவறான அளவைக் கொண்ட மார்பு கச்சைகளை அணிவதால்  IBS, rashes, hernia and tendonitis  போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என அந்த ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பொதுவாக உலகில் 80 சதவிகித பெண்களுக்கு தங்களுடை சரியான அளவில் உள்ளாடையை தேர்ந்தெடுக்க தெரிவதில்லை எனவும், அதனால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர் எனவும் ஆய்வு கூறுகிறது.
மோசமான மார்பு கச்சையை அணிவதால் தோல் உபாதை உள்ளிட்ட உடலின் உள்பாகங்களிலும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் பிரிட்டனில் உள்ள 62 வயது Shirley Brailey தொடர்ந்து முப்பது வருடங்களாக தவறான மார்பு கச்சையை அணிந்ததால் hiatus hernia and heartburn போன்ற நோய்களால தாக்கப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்தது.
சரியான மார்பு கச்சையை அணிவதால் மார்பகங்கள் கவர்ச்சியாக தெரிவது மட்டுமின்றி உடல்நலத்திற்கு நலம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து ஊடகங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire